Sign in to follow this  
கிருபன்

“அரசியலாய்ப் பார்க்காது தமிழர்களின் அடையாளமாக எழுக தமிழைப் பாருங்கள்”

Recommended Posts

“அரசியலாய்ப் பார்க்காது தமிழர்களின் அடையாளமாக எழுக தமிழைப் பாருங்கள்”

ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அடையாளமாக தமிழ் மக்களின் இருப்புக்காண பிரதிபலிப்பாக எழுக தமிழை பாருங்கள் என மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 16 ஆம் திகதி யாழ்பாணத்தில் இடம் பெறவுள்ள எழுக தமிழ் பற்றி இன்று (14.09.2019) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாரும் அரசியல் இலாபம் கருதியோ மக்களை திசை திருப்பும் நோக்கிலோ எழுக தமிழ் நிகழ்வை பார்ப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது.

தொடர்ச்சியாக எமது தமிழ் மக்களின் இருப்பை இவ்வாறான நிகழ்வுகள் போராட்டங்கள் புறக்கணிப்புக்கள் மாத்திரமே சர்வதேச ரீதியில் கொண்டு சேர்க்கின்றது.

எமக்குள் இருக்கும் பிரிவுகளை ஒரு கணம் மறந்து சர்வதேசத்திற்கு மாத்திரம் அல்ல எமது நாட்டு அரசியல் தலைமைகளுக்கும் எமது இருப்பை காட்ட  வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே எமக்குள் ஆயிரம் ஆயிரம் மனக் கசப்புகள் இருக்களாம். ஆனாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக எமது கரங்கோர்த்து எழுக தமிழ் எழிச்சி நிகழ்வுக்கு ஒன்று திரண்டு ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார். 

20.jpg

 

https://www.virakesari.lk/article/64756

Share this post


Link to post
Share on other sites

வந்த நிழல் படங்களை வைத்து பார்க்கையில், சம்பந்தர் ஐயா 'எழுக தமிழ்' நிகழ்வை 'புறக்கணித்தார்' என்றே பார்க்கலாம்.

ஆனால், கூட்டமைப்பினர் 'உத்தியோக பூர்வ' அழைப்பு கிடைக்கவில்லை என்பார்கள்.   

தொடரும் எமது ஒற்றுமை இன்மையே எதிரிகளுக்கு நாம் தரும் முதல் படி.

Share this post


Link to post
Share on other sites
On 9/16/2019 at 7:24 PM, ampanai said:

தொடரும் எமது ஒற்றுமை இன்மையே எதிரிகளுக்கு நாம் தரும் முதல் படி.

இதுக்குள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கும்பலின்டை சேட்டைகள் எக்கச்சக்கம்!

On 9/16/2019 at 7:24 PM, ampanai said:

வந்த நிழல் படங்களை வைத்து பார்க்கையில், சம்பந்தர் ஐயா 'எழுக தமிழ்' நிகழ்வை 'புறக்கணித்தார்' என்றே பார்க்கலாம்.

சம்பந்தர் தன்ரை சொந்தக்காரர்களுக்கு நன்மை இல்லை என்டா எதையாவது ஓடிஓடிச் செய்ததா சரித்திரம் இருக்கா?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this