Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம்

தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப நாள் நிகழ்வுகள் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும். 16.09.2019 – 25.09.2019 ஆம் திகதி வரையான நிகழ்வுகள் தினமும் காலை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம் தேசத்திற்காக மெழுகாய் தன்னை உருக்கி தன்னுயிரை இம் மண்ணுக்காய் ஈகம் செய்த மாவீரனை நினைவு கூரும் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.இறுதி நாள் நிகழ்வுகள் 26.09.2019 ஆம் திகதி தியாக தீபம் வீரச்சாவடைந்த நல்லூரின் வடக்கு வீதியில் காலை 10.48 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-நல்லூரில்-தியாக-தீப/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.


He passed away in full view of
a hundred thousand or more
pairs of tear-filled eyes,


Fasting in steadfast defiance
of violence of seventy thousand
misguided gun-toting guys,

Consuming not even water
for eleven whole days, not just his rice,

Bettering the Gandhian device
to recapture human liberty
through self-sacrifice.

His nation had tried for forty years
not once, not twice, not thrice
but umpteen times to entice
the oppressors with compromise plans, interim pacts, sensible advice,
but all these were frozen like inert ice.
Thileepan’s was pacifism against vice,
with arms withheld as a last resort,
as the ultimate face in the political dice.
He exhaled national fire in slow breaths
and passed vigour and fierce velocity to Tamil cubs,
once timid and shy as mice,
And now lives as the sinew and blood
of armies of pouncing tigers
pursuing national pride and peace and a national paradise.
- by Professor Kopan Mahadeva

 


தியாகி திலீபன் பற்றி சிங்களக் கவிஞர் சுனந்த கார்தியவசம் எழுதிய கவிதை...!
தமிழில் : ஃபஹீமாஜஹான்

"திலீபன்"

அனேகமானோர் கடந்து செல்வர்
காரியுமிழ்ந்து தூர வீசியெறியப்பட்ட
உனது நினைவுகளை

யாருக்கும் தெரியாமல்
அவற்றைப்
பொறுக்கிக் கொள்கிறேன்

உன்னதமெனப் போற்றும்
கொள்கையொன்றுக்காக
மனிதனொருவனால்
வாழ்வினை
உதறியெறிந்திட முடியுமா
வீரன்தான் அவன்
என்றுமே எனக்கு

பெயர் , ஊர்
அடையாளஅட்டை
எதுவும் தேவையில்லை
'தேசப் பிரேமி'களின்
கல்வீச்சுக்கள் எனை வந்து சேர முன்னர்
திலீபன்...

இன்றைய இராப்பொழுதும்
உனது நினைவுகளை
உள்ளத்தினுள்ளேயே
சிறைப்படுத்திக் கொள்கிறேன்
யாருமறியாமல்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை.

வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)!

அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள்.

 

இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்தடம் பதித்து அளப்பரிய சேவை செய்தவர்கள் தாம் நேசித்த மக்களுக்காக ஈகத்துக்கு தயாராக இருந்தவர்கள்.

இந்த திலீபன் மருத்துவமனையின் உதவி மருத்துவர்கள் (AMPs-Assistant Medical Practitioners) அனைவரும் தமை அப்பணிக்கத் தயாரான போராளிகள் என்பது அதன் தனிச்சிற்ப்பு ஆகும் !🗝

8D7D7E81-5D71-4D0B-A91A-CE1FDDD4F624.jpeg?resize=696%2C522&ssl=1

வனத்தாய்மடியில் தாலாட்டப்படும் ஐயங்குளம் கிராமத்தில் உள்ள தியாக தீபம் திலீபன் மருத்துவமனையை படத்தில் காண்கிறீர்கள்!

நோர்வேயின் ‘பேச்சு வார்த்தை நாடக அரங்கேற்றம்’ நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவில் வாழும் தமிழ் வைத்திய நிபுணர் ஒருவரால் இந்த அழகிய மருத்துவமனைக் கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டது.

 

போர்ச்சுமை நடுவிலும் தமிழர் நிழல் அரசு நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம்!

எமது மக்களுக்கான அரும்பெரும் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வந்த இந்த திலீபன் வைத்தியசாலைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தவர் Dr பத்மலோஜினி கரிகாலன் அவர்கள்.

 

BD45609D-8429-4300-9A87-7AB76A423335.jpe


1956 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் இடைக்காட்டில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் Dr பத்மலோஜினி அவதரித்தார்.

உயர்தரக் கல்வியை அந்நாட்களில் புகழ்பூத்து விளங்கிய யா/புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் கற்றார். பெற்றாரும் உறவுகளும் பெருமை கொள்ளத்தக்க வகையிலே க/பொ/த உயர்தரச் சோதனையில் சாதனை படைத்தது பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பீடத்துக்கு தெரிவானார்.

1985ஆம் ஆண்டு MBBS பட்டம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு பரிபூரண வைத்தியராக வெளியேறினார்.

வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்தவர். அக்காலகட்டத்தில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச வன்முறையைக் கண்டு கொதித்து
அரச உத்தியோகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விடுதலைப் போரில் குதித்தவர். மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஓர் வைத்தியராக இருந்த இந்த வைத்தியரும் கணவரான திரு. கரிகாலன் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர்.

http://vayavan.com/?p=8597&fbclid=IwAR3kyp-VaH8pbhyfYKNV4HSqomw2OB95aOCQWQEXox_eT2BypL8_ROFcUH4

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்-நல்லூரில் இன்று ஆரம்பம்

தியாகதீபம் திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாவும் யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும்.

19446.jpg

அந்த வகையில் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் இடம்பெறும்.

எனவே அஞ்சலி செலுத்த வரும் அனைவரும் காலை 9 மணியளவில்  நினைவுத்தூபி முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வின் நினைவுச் சுடரை மாவீரர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஏற்றுவார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் அஞ்சலிகளை செலுத்துவர்.

மேற்படி உணர்வுபூர்வமான ஆரம்ப நினைவு நாள் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக அணிதிரண்டு நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்போமாக என யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் பகிரங்க அழைப்பு விடுத்தார். 
 

http://valampurii.lk/valampurii/content.php?id=19446&ctype=news

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

-கே.தயா, எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா, எம்.றொசாந்த்

அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலிபனின் 32வது நினைவு தினம், இன்று  (15) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

image_0bef383b15.jpg

image_bf88f4b935.jpg

image_59a346a7e8.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நினைவு-தினம்/46-238520

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®©à¯à®±à¯ à®à®²à¯à®²à®¤à¯ à®à®¤à®±à¯à®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® நபரà¯à®à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à®°à¯

 

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

 

"ஒன்றைத் தெளிவாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று எமக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையை, அடக்குமுறை நிலையை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் தவறினால் நாளை எமது வரலாறு மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கும்"

மருத்துவக் கல்லூரி மணவன் திலீபன் .

Edited by ampanai
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்ணா விரதம் ஆரம்பித்த நாள் இன்று

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 32வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று (15) யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நினைவுகள் ஆரம்பமானது.

தியா஠தà¯à®ªà®®à¯ திலà¯à®ªà®©à®¿à®©à¯ 32 à®à®µà®¤à¯ நினà¯à®µà¯à®¤à®¿à®©à®®à¯-Thileepan's 32nd Remembrance-Nallur-Jaffna

 

பொதுச் சுடரினை மாவீரர்லெப்டினன் தேவானந்தனின்  தாயார்  திருமதி ச. ஏகநாதன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் தியாக சுடரேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சொலமன் சூ சிறில், செ. செல்வராஜா, மாவீரர்களின் உறவுகள், உணர்வாளர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

தியா஠தà¯à®ªà®®à¯ திலà¯à®ªà®©à®¿à®©à¯ 32 à®à®µà®¤à¯ நினà¯à®µà¯à®¤à®¿à®©à®®à¯-Thileepan's 32nd Remembrance-Nallur-Jaffna

தியா஠தà¯à®ªà®®à¯ திலà¯à®ªà®©à®¿à®©à¯ 32 à®à®µà®¤à¯ நினà¯à®µà¯à®¤à®¿à®©à®®à¯-Thileepan's 32nd Remembrance-Nallur-Jaffna

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா, யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன், நிதர்சன் வினோத்)

https://www.thinakaran.lk/2019/09/15/உள்நாடு/40330/தியாக-தீபம்-திலீபனின்-32-ஆவது-நினைவுதினம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனை நினைந்துருகுவோம்

2019-09-15 12:47:24

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நாள் இன்று.

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் நாள் தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

இன்று 32 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

காந்தி தேசத்திடம் நீதி கேட்டு காந்திய வழியில் தியாகி திலீபன் நடத்திய வேள்வி உலகில் எங்கும் காணமுடியாத அகிம்சைப் பேராட்டத்தின் உச்சம் எனலாம். எனினும் அந்த அகிம்சையின் உச்சத்தை நினைப்பது கூட நம்மண்ணில் ஆகாது என்ற நிலைமையே இருக்கிறது எனில் எங்களின் அடிமைத்தனம் நீங்கிவிட்டது என்று எப்படிக் கூற முடியும்.

எங்களுக்கென்று ஒரு நாடு, எங்களுக் கென்று ஒரு தேசம் இருக்குமாயின் தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்டம் எங்கள் பாடப் புத்தகத்தில் பதிவிடப்பட்டிருக்கும். ஆனால் தியாகம் நடந்தது தமிழினத்தில், உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தவர் ஒரு தமிழ் மகன். எனவே அவரின் தியாகத்தை வருங்கால சந்ததி அறிவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப் படாத இறுக்கமான நிலைமையே நம் மண்ணில் உள்ளது.

இந்த உண்மையை நம் அரசியல்வாதிகள் கூட உணர்ந்திலர். பதவி நிலையில் இருக்கக் கூடிய தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் வீரமும் தியாகமும் தேர்தல் பிரசாரங்களுக்கான வாசங்களேயன்றி வேறில்லை.

எங்கள் நிலத்தில் நடந்த ஒரு பெரும் மண் மீட்புப் போராட்டத்தை, அதில் நம் இளைஞர்கள் செய்த உயிர்த்தியாகத்தை, தியாகி திலீபன் மேற்கொண்ட உண்ணாநோன்பு யாகத்தை எங்கள் இளம் சந்ததி அறிய வேண்டும். அவை வரலாறாக எங்களோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அரசியல்வாதிகளிடம் அறவே இல்லை.

அப்படியானதொரு எண்ணம் நம் அரசியல் தலைமைக்கு இருந்திருந்தால், அவர்கள் நிச்சயம் ஆட்சியாளர்களைக் காப்பாற்றுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் எம் இனத்துக்கு நீ தருவது என்ன என்று கேட்டிருப்பர். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தும் தம் சுய இலாபங்களுக்காக ஆக்கப் பட்டதேயன்றி தமிழினத்துக்கானதாக ஆக்கப்படவில்லை.

ஓ! தியாகி திலீபன் உண்ணாநோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்த மண்ணில் இன்று நடப்பது என்ன என்பதை நினைக்கும்போது இதயம் கருகிக் கொள்கிறது.

அகிம்சை வழியிலும் ஆயுதப் போராட்ட வழியிலும் ஒரு பெரும் தியாகம் நடந்த மண் இது.

தமிழ் இனம் வாழ்வதற்காக, தமிழன் வாழ்வதற்காக தன்னுயிரை ஈகை செய்த மறவர் கள் வாழ்ந்த மண்ணில் இப்போது ஏதோவெல்லாம் நடக்கிறது.

இதை நாம் வெறுமனே பார்த்திருப்பது பாவச் செயலன்றே. தமிழினம் வாழ்வதற்காக பசி இருந்து தன் உயிர் துறந்த பார்த்தீபன்  செய்த தியாகத்தை நினைந்துருகுவோம். 

திலீபனின் தியாகத்தை உலகம் பாடமாய் படிக்க வகை செய்வோம்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19448&ctype=news

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.