Sign in to follow this  
கிருபன்

மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினை வேந்தல்…

Recommended Posts

மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினை வேந்தல்…

September 15, 2019

மன்னார் நிருபர்
(15-09-2019)

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (15.09.19) காலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டின், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வின் போது தீபச்சுடரினை மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தியாக தீபம் திலீபனின் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார். மேலும் அங்கு வந்திருந்தவர்களும் திலீபனின் நினைவு படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத்தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் உயிரிழந்த போராளிகளின் உறவுகள், என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0148.jpg?resize=800%2C533DSC_0151.jpg?resize=800%2C533DSC_0154.jpg?resize=800%2C533DSC_0158.jpg?resize=800%2C533

 

 

http://globaltamilnews.net/2019/130528/

Share this post


Link to post
Share on other sites

தியாகி தீலீபனின் நினைவு தினம்

 

-க. அகரன்

தியாகி திலீபனின் 32ஆவது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது தியாகி திலீபன் தொடர்பான நினைவுரையை உலக தமிழர் தேசிய கட்சியின் செயலாளர்  யோகறாணி நிகழ்தியதுடன்,  ஈகை சுடரும் ஏற்றபட்டது.

image_6920965ab6.jpg

நிகழ்வில் அருட்தந்தை ஜோன்வோல், புதுக்குளம் பாடசாலை அதிபர் கணேஸ்வரன், வட மாகாண இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/தியாகி-தீலீபனின்-நினைவு-தினம்/72-238524

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this