Jump to content

எழுக தமிழில் பங்கேற்க சம்பந்தனுக்கு அழைப்பு – வருவார் என விக்கி நம்பிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழில் பங்கேற்க சம்பந்தனுக்கு அழைப்பு – வருவார் என விக்கி நம்பிக்கை

by in செய்திகள்

ezhuka-tamil-2019-2-300x200.jpg

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத போதும், அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும், அரசியல் சார்பின்றி இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுக தமிழ் நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடவோ, அல்லது ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. எனினும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ மாத்திரம், இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், “ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனை இந்த நிகழ்வில் பார்க்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இன்னமும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களில் ஒருவரான சிவஞானம் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.net/2019/09/15/news/40015

Link to comment
Share on other sites

சம்பந்தர் ஐயாவை விக்கி அவர்கள் அழைத்தது - விக்கி அவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 

சம்பந்தர் ஐயா வரவேண்டியது காலத்தின் கடமை. ஆனால், அவருக்குள் இருக்கும் அகந்தை இந்த விடயத்தில் வெல்லும் என எண்ணத்தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ampanai said:

சம்பந்தர் ஐயாவை விக்கி அவர்கள் அழைத்தது - விக்கி அவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 

சம்பந்தர் ஐயா வரவேண்டியது காலத்தின் கடமை. ஆனால், அவருக்குள் இருக்கும் அகந்தை இந்த விடயத்தில் வெல்லும் என எண்ணத்தோன்றுகின்றது. 

சுமந்திரன் விடை கொடுத்தால் வருவாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.