ampanai

மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி

Recommended Posts

மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தியும், தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், யாழ்ப்­பா­ணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.70043473_533343250541932_887615126414504

தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் "எழுக தமிழ்" பேரணிக்கு மக்கள் பூரண ஆரவை வழங்கியுள்ளனர்.

இதனால், யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து இடம்பெறவில்லை.70992404_2355866351342667_34893698108217

குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பொது சந்தைகள் எதுவும் திறக்கப்படவில்லை.

அத்தோடு, பாடசாலைகள் வழக்கம் போல், கல்வி செயற்பாட்டுக்காக திறக்கப்படடுமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதும், மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை. 

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ரனை இணைத் தலை­வ­ராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் இந்த எழுக தமிழ் பேரணி நடைபெறுகின்றது.


70964033_2409916045964864_26230082020814

அர­சியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை விரும்பும் தமிழ் மக்­களின் வலி­மையைக் காண்­பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என்று, தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரான சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்திருந்தார்.70774994_493419901480815_467927367249664

இந்த எழுக தமிழ் பேர­ணியில் 35 இற்கு மேற்­பட்ட, அமைப்­புகள் மற்றும் கட்­சிகள் பங்­கேற்­கவுள்ளன.

 

70685735_937803056570379_280542276029199

யாழ்ப்­பா­ணத்தில் இன்று நடைபெறும் எழுக தமிழ் பேர­ணியில் பங்­கேற்க, வவு­னியா, அம்­பாறை, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, மன்னார் ஆகிய இடங்­களில் இருந்து பொது­மக்­களை ஏற்றி வரு­வ­தற்­காக 35 இற்கும் அதி­க­மான பேருந்­துகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

15 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான மக்கள் இதில் பங்­கேற்­பார்கள் என்று எதிர்­பார்ப்­ப­தா­க, சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.70581887_510281363131746_170793209501738

தமிழர் தாய­கத்தில் சிங்­கள குடி­யேற்­றங்­களை நிறுத்து,  சிறி­லங்கா போர்க்­குற்­ற­வா­ளி­களை அனைத்­து­லக நீதி­மன்­றத்தில் நிறுத்து, எல்லா அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக பக்­க­சார்­பற்ற அனைத்­து­லக விசா­ர­ணையை நடத்து, தமிழ்ப் பகு­தி­களில் இரா­ணுவ மய­மாக்­கலை நிறுத்து, போரினால் இடம்­பெ­யர்ந்த அனை­வ­ரையும் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­ய­மர்த்து ஆகிய ஆறு பிர­தான கோரிக்­கை­களை முன்­வைத்து இந்த எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.70476323_1083216695402496_91170686413412

இன்று காலை நல்லூர் கந்­த­சு­வாமி ஆலய முன்­றிலில் இருந்தும், யாழ். பல்­க­லைக்­க­ழக வாயிலில் இருந்தும், இரண்டு இடங்­களில் இருந்து ஆரம்­பித்த பேரணி யாழ். கோட்டை அரு­கே­யுள்ள முற்­ற­வெளி திடலில் முடி­வ­டையும்.

அங்கு எழுக தமிழ் பிர­க­டனம் வாசிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­படும். அத்­துடன் பொது­அ­மைப்­பு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் பிர­மு­கர்கள் உரை­யாற்­ற­வுள்­ளனர்.70419482_749316642164397_120178648569977

இன்று நடை­பெ­றும் எழுக தமிழ் பேர­ணிக்கு, யாழ்ப்­பாண ஆசி­ரியர் சங்கம், யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம், கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம், யாழ். பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்கம், உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­களும் இந்தப் பேர­ணிக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.70409048_736457760152968_243940444044106

அதே­வேளை, தமிழ் மக்கள் பேர­வை­யுடன் இணைந்து செயற்­படும் தமிழ் மக்கள் கூட்­டணி, ஈ.பி­.ஆ.ர்­எல்.எவ். ஆகிய கட்­சிகள் இந்தப் பேரணி ஒழுங்­க­மைப்பில் ஈடு­பட்­டுள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களில் ஒன்­றான ரெலோவும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியும் எழுக தமிழ் பேர­ணிக்கு ஆத­ரவு அளிப்­ப­தாக கூறி­யுள்­ளது.


70244066_599136503825994_228915250430843

இத­னி­டையே எழுக தமிழ் பேர­ணியில் தமது கட்­சியின் பெயரோ, சின்­னமோ பயன்­ப­டுத்­தப்­ப­டாது என்றும், தமிழ் மக்­களின் நலன்­களை முன்­னி­றுத்­தியே இந்த பேரணி நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் சார்பின்றி அனைவரும் இதில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.70185998_2429721097317139_31233027473869

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டித்து போராட்டத்தை நடத்தி, இந்த நிகழ்வை வலுப்படுத்துமாறு தமிழ் மக்கள் பேரவை கோரியிருக்கிறது.70172698_377773516234558_451262198785979

 

https://www.virakesari.lk/article/64856

Share this post


Link to post
Share on other sites

 

யாழில் 'எழுக தமிழ்' பேரணி

image_ba83550390.jpg

-எம்.றொசாந்த், செல்வநாயகம் ரவிசாந்

தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச சமுகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில் இன்று (16) எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையில் ஏற்பாட்டில், இன்று காலை, நல்லூர், யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, யாழ். கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளியை சென்றடைந்தது.

அங்கு எழுக தமிழ் கூட்டம் நடைபெற்று, பிரகடனம் வாசிக்கப்பட்டது. 

image_1143ff1091.jpgimage_2afbe9279b.jpgimage_4316a21176.jpgimage_4910eda94d.jpgimage_71065b043c.jpgimage_eed9423bf6.jpgimage_f786fe5a99.jpgimage_559384b1dd.jpgimage_eae9ca18ba.jpgimage_8bf114891e.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/யாழில்-எழுக-தமிழ்-பேரணி/46-238584

Share this post


Link to post
Share on other sites

image_4910eda94d.jpg

எழுகவுக்கு.. எழக.. என்று எழுதி இருக்கியளே.

தமிழ் கொலையோடு.. எப்படி ஐயா தமிழ் எழும்..???! 😊

image_f786fe5a99.jpg

Share this post


Link to post
Share on other sites
25 minutes ago, nedukkalapoovan said:

எழுகவுக்கு.. எழக.. என்று எழுதி இருக்கியளே.

தமிழ் கொலையோடு.. எப்படி ஐயா தமிழ் எழும்..???! 😊

எழுக என்பதிலுள்ள ழு க்கும் தமிழ் என்பதிலுள்ள ழ் க்கும் சிறு வேறுபாடு உள்ளதை படத்தில் காணலாம்.

எனவே ழு க்கு பதிலாக ழ என எழுதவில்லை.

ஆனாலும் ழ போன்று ஆரம்பித்து ழு ஆக முடியும் இவ் எழுத்துருவை யார் உருவாக்கினார்களோ. 🤔

Share this post


Link to post
Share on other sites

நிறையப் பேர் கடைகளை பூட்டி விட்டு வீட்டில் நன்றாக ஓய்வெடுத்து எடுத்துள்ளனர் போலும். 2500 பேர் அளவில் தான் ஊர்வலத்தில் / கூட்டத்தில் கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது. முன்னர் இடம்பெற்ற எழுக தமிழ் / பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பற்றி இருந்தனர்,.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் (கஜேந்திரகுமாரின் கோஷ்டியில் இருப்பவர்கள்) விக்கினேஸ்வரனின் அரசியல் தோல்வியடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் உடனே கொக்கரிக்க ஆரம்பித்து விட்டனர்.

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

4580-C5-D9-AE34-4-F77-991-D-B1-A39-E5-E3

நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை முன்பு நடந்த எழுக தமிழ் நிகழ்வில் நுhறு பேர் வரை கலந்து கொண்டனர்.

பழைய பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டு சிறிய உரையும் ஆற்றியிருந்தார்.

கனடாவிலிருந்து ஒரு பேரூந்தில் வந்திருந்தார்கள்.அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

Edited by ஈழப்பிரியன்

Share this post


Link to post
Share on other sites

தமிழீழ சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.. 💐

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகளில் நியாயம் உள்ளது - ஜே.வி.பி. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி  இதனைக் குறிப்பிட்டார்.  வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்  ஆகவே அதனை எமக்கு தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவு வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கை தனி அலகாக அங்கீகரிக்க முடியாது.  எனினும் தமிழர் தரப்பு முன்வைத்த  பல கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. வடக்கின் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமாது.இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது அதனை நாமும் எதிர்கின்றோம்.  மேலும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/67307
    • "யுத்த நிலைமைகள் தொடர்ந்திருந்த முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் நாட்டின் இனங்களுக்கிடையில் சந்தேகமும், அச்ச உணர்வுமே மேலோங்கி இருந்தன. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகவே போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் படிமுறையாகவே ஆயுதப் போராட்டம் கிளர்ந்திருந்தது. அந்த அரசியல் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்த ஆட்சியாளர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டதாகக் கொண்டாடினார்கள். இன்னும் கொண்டாடுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலிலும் கூட அந்தக் கொண்டாட்டத்தையே பிரசாரப் பொருளாகக் கொண்டிருக்கின்றார்கள்" சிங்களத்திடம் வேறு எதுவுமே இல்லை, முதலீடாக மக்கள் முன்னிலையில் வைப்பதற்கு 😞 
    • "அடுத்த மாதம் இந்த தேர்தலின் முடிவு  இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கும்." அமெரிக்க - இந்திய ஆதரவுடன் கோத்தா வென்று, சீனாவுடன் கைகோத்து, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தின் போக்கை தீர்மானிப்பார். இதை ஏன் உன்னிப்பாக பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை 🤣