Sign in to follow this  
ampanai

’வட- கிழக்கு இணைப்பை மீளவும் கொண்டுவருவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்’

Recommended Posts

-செல்வநாயகம் ரவிசாந்

வட- கிழக்கு இணைப்பை மீளவும் கொண்டுவருவதில்  இந்திய அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

எழுக தமிழ்ப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போன்று வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகமென்பது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டு 18 வருட காலம் வட- கிழக்கு இணைந்த ஒரு மாநிலமிருந்தது. அந்த மாநிலம் மீள உருவாக்கப்பட்டால் தான் தமிழ்மக்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள். வட- கிழக்கு இணைப்பு ஒருதலைப்பட்சமாகத் தற்போது மறுதலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் புராதன இடங்களான கன்னியா வெந்நீரூற்று, முல்லைத்தீவு நீராவியடிப்பிட்டிப் பிள்ளையார் ஆலயம், நெடுங்கேணி வெடுக்குநாறிமலை போன்ற தமிழ்மக்களின் புராதன இடங்களெல்லாம் பெளத்த பிக்குகளால் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு புதிய புதிய புத்தர் சிலைகள், பெளத்த விகாரைகள் அமைப்பது மாத்திரமல்ல. அதனைச் சுற்றி சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்படுகின்றன. இதன்மூலமாகத் தமிழ்மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் விடயம் மிகத் தீவிரமாகத் தற்போது வடக்குமாகாணத்தில் இடம்பெற்று வருகிறது. இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நடைபெறுகின்றன.

இதன்மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய வடக்கு மாகாணத்தில் அவர்களைச் சிறுபான்மையாக மாற்றி அவர்களின் அடையாளங்களை அழித்து தேசிய இனமென்ற நிலையிலிருந்து மாற்றித் தமிழர்களை இல்லாதொழிப்பதற்கான முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ளன.

இவையெல்லாம் அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனப்படுகொலையாகவே, எம்மால் கருத முடிகிறது. இவ்வாறான இனப்படுகொலையிலிருந்து தமிழ்மக்களையும், மண்ணையும் காப்பாற்ற வேண்டும், தமிழ்மக்களின் புராதன சின்னங்கள், கலாசாரங்கள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரம் தான் தமிழ்மக்கள் இந்த மண்ணில் ஒரு தேசிய இனமாக தலைநிமிர்ந்து வாழ முடியும். அந்த அடிப்படையில் தான் தமிழ்மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள எழுகதமிழ் பேரணியில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் இவ்வாறான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம் ஜெனீவாவில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்தவிடங்களில் மீளக் குடியமர்த்துவதாகவும் கூறினார்கள். ஆனால், அவர்கள் கூறிய நான்கு விடயங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை

சர்வதேச சக்திகள் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு ஆதரவாகவிருந்தது. எமது ஆயுதப் போராட்டம் தமிழ்மக்களின் பாதுகாப்பிற்கான போராட்டம். இந்நிலையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டமாக இலங்கை அரசாங்கத்தால் கொச்சைப்படுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்பின்னரான தற்போதைய நிலைமையை நோக்கினால் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களும் ஓர் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையிலிருந்து தமிழ்த்தேசிய இனம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்மக்கள் சுதந்திரமாக, நிம்மதியாக, கெளரவமாகத் தமது மண்ணில் வாழ வேண்டும். தமிழ்மக்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர் வேண்டுகோள் விடுத்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வட-கிழக்கு-இணைப்பை-மீளவும்-கொண்டுவருவதில்-இந்தியா-கவனம்-செலுத்த-வேண்டும்/71-238646

Share this post


Link to post
Share on other sites
46 minutes ago, ampanai said:

வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகமென்பது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டு 18 வருட காலம் வட- கிழக்கு இணைந்த ஒரு மாநிலமிருந்தது. அந்த மாநிலம் மீள உருவாக்கப்பட்டால் தான் தமிழ்மக்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள். வட- கிழக்கு இணைப்பு ஒருதலைப்பட்சமாகத் தற்போது மறுதலிக்கப்பட்டுள்ளது

தமிழர் தாயகம் நிலைக்க, வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமா?

அப்படி வேண்டும் என்றால் அதை பெற நாம் இந்தியாவை தான் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டுமா?   இதற்கு வேறு மாற்றம் தற்பொழுது தமிழர் தரப்பிடம் உள்ளதா? 

Share this post


Link to post
Share on other sites

அந்நாளில் காஸ்மீர் ராஜா ஒரு இந்துவாக இருந்ததனால் நான் எனது நாட்டை இந்தியாவுடன் இணைக்கிறேன் எனச்சொல்லி காஸ்மீருடன் இணைக்கும்போது இந்தியர்கள் எனக்கூறப்படும் வடக்கத்தையார் அப்பிரதேசத்துக்கு சில வரைமுறைகள் கொண்டுவந்து சிறப்பு அந்தஸ்தைக்கொடுத்தனர் காஸ்மீர் பிரச்சனை இப்போது கொழுந்துவிட்டு கனல்வதை அவதானிப்பவர்களுக்கு அது என்ன சிறப்பு அந்தஸ்து எனத் தெரியும் அவுரிமையை லட்சக்கணக்கான இராணுவம் புலனாய்வு மற்றும் வேட்டைப்படைகளைக் கமிறக்கியும் அங்குள்ள அரசியல்வாதிகளை வகைதொகையில்லாது வீட்டுக்கவலில் வைத்தும் பாடசாலைகள் அனைத்தையும் மூடியும் தவிர தொடர்பாடல்கள் அனைத்தையும்ம் தடைசெய்தும் அச்சிறப்புச்சட்டம் உள்ளடக்கிய எழுபத்து ஓராம் சட்ட ஒப்பந்த நகலை முரட்டுத்தனமாக காஸ்மீரிய மக்களிடமிருந்து புடுங்கியெடுத்து அதை பாராளுமன்றத்தில் தீர்மானமாக்கி ஜனாதிபதியின் கையெளுத்து வாங்கிய மையின் ஈரம் காய்வதற்குள் சுரேஸ்பிரேமச்சந்திரன் இப்படிக்குறுகிறார். 

சுதந்திரம் கிடைக்கும் காலத்திலே தன்னுடைய நாட்டுடன் வலிந்து இணைக்கப்பட்ட ஒரு நாட்டின் சிறப்பு அந்தஸ்து எனும் உரிமையை பறித்த இந்தியாவிடம் இவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்

Edited by Elugnajiru

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மக்கள் தாயகத்தில் பலவேறு பிரச்சினைளுக்கு முகம்கொடுத்த உள்ளார்கள். போர்க்குற்ற விசாரணை, காணி வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மத சுதந்திரம், குடியேற்றம், வேலை வாய்ப்பு, கல்வி, மொழி என அடுக்கியவண்ணம் போகலாம்.

இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் இந்த பிரச்சனைகளுக்கு என்ன அரசியல் தீர்வு என்றோ இல்லை இதுதான் அரசியல் தீர்விற்கான பாதை என்றோ ஒரு தெளிவான நிலையில் இல்லை; ஒற்றுமையும் இல்லை.

இங்கே இன்றைய இருப்பை தக்க வைத்தால் மட்டுமே நாளை பற்றி நாம் எதையும் யோசிக்க முடியும் என்ற அவசர நிலை. அதற்கு, வடக்கும் கிழக்கும்  இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதுசார்ந்த இந்தியாவின் உறுதிமொழி அடிப்படையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.   

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவை நம்பி பயனில்லை என்றால், வேறு என்ன தெரிவுகள் உள்ளன?

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, ampanai said:

தமிழ் மக்கள் தாயகத்தில் பலவேறு பிரச்சினைளுக்கு முகம்கொடுத்த உள்ளார்கள். போர்க்குற்ற விசாரணை, காணி வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மத சுதந்திரம், குடியேற்றம், வேலை வாய்ப்பு, கல்வி, மொழி என அடுக்கியவண்ணம் போகலாம்.

இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் இந்த பிரச்சனைகளுக்கு என்ன அரசியல் தீர்வு என்றோ இல்லை இதுதான் அரசியல் தீர்விற்கான பாதை என்றோ ஒரு தெளிவான நிலையில் இல்லை; ஒற்றுமையும் இல்லை.

இங்கே இன்றைய இருப்பை தக்க வைத்தால் மட்டுமே நாளை பற்றி நாம் எதையும் யோசிக்க முடியும் என்ற அவசர நிலை. அதற்கு, வடக்கும் கிழக்கும்  இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதுசார்ந்த இந்தியாவின் உறுதிமொழி அடிப்படையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.   

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவை நம்பி பயனில்லை என்றால், வேறு என்ன தெரிவுகள் உள்ளன?

 விரும்பியோ விரும்பாமலோ புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப யதார்த்தமான அரசியல் காய் நகர்தலை தமிழர் தரப்பு செய்யவேண்டும்.அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று இருந்தால் ஆரும் உதவி இல்லாத ஈழ தமிழரை யார் காப்பது .
ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்.

Share this post


Link to post
Share on other sites

இலங்கை எழுக தமிழ் பேரணி: தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் - விக்னேஸ்வரன் வேண்டுகோள்

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் என இலங்கைத் தமிழர்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் இணைந்துக் கொண்டு கருத்து தெரித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களுக்கு தமிழ் நாட்டு உறவுகள் தமது ஆதரவை தெரிவித்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை இனப் பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி, தமிழ் மக்களின் இருப்பையும், அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களை வலியுறுத்திய 'எழுக தமிழ்" பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள் சுற்று வட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து இருவேறு பேரணிகள் ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்திற்கு வந்து சேர்ந்தன.

யுத்தக் குற்ற விசாரணைகள் சர்வதேசத்தின் தலையீட்டில் நடைபெற வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும், இடம்பெயர்ந்தோர் உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரேமசந்திரன், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் காலத்துக்கு காலம் ஏற்பட்ட வெளிநாட்டு தலையீடுகளாலோ, சமரச முயற்சிகளாலோ மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை சர்வதேச ரீதியில் ஒரு பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக்கள் தொடர்வதாகவும் குறிப்பட்டிருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கான இன இருப்பை இல்லாது செய்யும் வகையில் அரச இயந்திரமொன்று முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான இன அடக்குமுறைகளை இல்லாது செய்யும் வகையிலேயே எழுக தமிழ் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுத் திட்டத்தை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பான பகுதிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49718787

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, ampanai said:

தமிழர் தாயகம் நிலைக்க, வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமா?

அப்படி வேண்டும் என்றால் அதை பெற நாம் இந்தியாவை தான் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டுமா?   இதற்கு வேறு மாற்றம் தற்பொழுது தமிழர் தரப்பிடம் உள்ளதா? 

யாருமே இல்லாத கடையில் , யாருக்கப்பா டீ ஆத்துறீங்க ....?😂😂😂

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, ampanai said:

வட- கிழக்கு இணைப்பை மீளவும் கொண்டுவருவதில்  இந்திய அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த காதால அப்புடியே நீங்க கேட்டுட்டாலும்..  😄

kol.png

 

Share this post


Link to post
Share on other sites

கையாலாகாத இந்தியனிட்டை கையேந்திறதை எப்பதான் நிப்பாட்டுவீங்களோ தெரியலை?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this