Sign in to follow this  
ampanai

கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் சமரசம் கிடையாது: கர்நாடக முதல்வர் எடியூரப்பா டுவிட்

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Sep_13__344463527202607.jpg

 

பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில்  விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி  இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை  ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான்.

எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார். இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம்.   ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட   இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார்.

அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு   தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது. அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில்  சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526449

Share this post


Link to post
Share on other sites

இந்த கன்னடர்கள், பா.ஜ.க. வில் இருந்தாலும் மொழி என்று வரும்பொழுது .... தமிழர்கள் இவர்களை விரும்பாவிட்டாலும் இந்த விடயத்தில் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.  

“கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா?

https://www.ndtv.com/tamil/yediyurappa-says-committed-to-kannada-after-amit-shahs-hindi-push-2101827?pfrom=home-topscroll

 

Share this post


Link to post
Share on other sites

ரஜினிகாந்த்: இந்தி திணிப்பு வேண்டாம், ஆனால், பொதுமொழி நல்லது

இந்தி திணிப்பு வேண்டாம். ஆனால், பொதுமொழி ஒன்று இருப்பது நல்லதென நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்றார்.

அவர், "தமிழ்நாடு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம் நாட்டுக்கு பொது மொழி ஒன்று கொண்டு வரமுடியாது" என்றார்.

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. குறிப்பாக இந்தியைத் திணித்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏன் வட இந்தியாவிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார்.

தனது ரசிகர்களைப் பேனர் வைக்க வேண்டாமென தாம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-49738654

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this