Jump to content

ஒரே லேப்டாப்பில் 3 ஸ்கிரீன்கள்!


Recommended Posts

Dkn_Tamil_News_2019_Sep_13__551510035991669.jpg

நன்றி குங்குமம் முத்தாரம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு கூடுதல் திரையை எப்படி ஒட்ட வைக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர். அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இரு திரைகளைக் கொண்ட லேப்டாப்பை வடிவமைத்தனர். அதற்கு ‘டூயோ’ என்று பெயர். ஆனால், மூன்று திரை இருந்தால் நன்றாக இருக்குமே... என வாடிக்கையாளர்களும், லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களும் விரும்பின. லேப்டாப்பின் திரையின் வலது புறத்தில் ஒன்றும், இடது புறத்தில் ஒன்றும் பொருத்தி சோதனை செய்தார்கள் விஞ்ஞானிகள். மூன்று திரைக்கும் ஒரேயொரு பிராசஸர், இயங்குதளம்தான்.

சோதனை வெற்றி பெறவே முத்திரை லேப்டாப்புக்கு ‘ட்ரையோ’ என்று பெயர் வைத்துவிட்டனர்.எடிட்டிங் துறையில் இருப்பவர்கள், கேம் பிரியர்கள், கலந்துரையாடல் நிகழ்வுகளில் புரொஜெக்‌ஷன் செய்பவர்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு முத்திரை லேப்டாப் பேருதவியாக இருக்கும். இதை மடித்து வைத்துக்கொள்ளவும் முடியும். அதனால் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். 1080 ரெசல்யூசனுடன் 14 இன்ச் மற்றும் 12.5 இன்ச் டிஸ்பிளேவில் இது கிடைக்கும். 2020க்குள் முத்திரை லேப்டாப் விற்பனைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். விலை நாற்பதாயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526417

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.