Jump to content

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை


ampanai

Recommended Posts

இந்துசமுத்திர பகுதியில்  சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது.

சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.

இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன.

இந்த கண்காணிப்பு விமானங்கள் தொடர்ச்சியாக சீனாவின் கடற்படை கலங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றன.

தற்போது சீனாவின் ஏழு யுத்தகப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நடமாடுகின்றன என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவித்து சீனா கடற்படை இந்த கப்பல்களை இந்துசமுத்திரத்தில் இயக்குகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

16navy.jpg

இவ்வாறான ஒரு கப்பலை அவதானித்துள்ளதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

எனினும் சீனா கடற்படையின் முக்கிய நோக்கம் இந்து சமுத்திரத்தில் தனது வலிமையை வெளிப்படுத்துவதே என தெரிவித்துள்ள இந்திய கடற்படை வட்டாரங்கள் இந்து சமுத்திர பகுதியில் சீனா தனது கடற்படையின் பிரசன்னத்தை விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளன.

தொலைதூர கடற்பகுதிகளிற்கு பயன்படுத்துவதற்காக சீனா தனது விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி வருகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/64909

Link to comment
Share on other sites

இந்தியாவுடனான போர் என்பது சாத்தியம்தான் : இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பின்னர் டெல்லியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுமில்லை. வழக்கமான போருக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஆதரவு தேட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இம்ரான் கான் இந்தியாவுடனான போர் என்பது சாத்தியம் என்று நம்புவதாக கூறியுள்ளார். 

மேலும் “நான் ஒரு சமாதானவாதி, நான் போருக்கு எதிரானவன், போர்கள் எந்தவொரு பிரச்னையையும் தீர்க்காது என்று நம்புகிறேன்” என்று அவர் செய்தி சேனலான அல் ஜசீராவிடம் கூறினார். 

இரண்டு அணு ஆயுத நாடுகள் சண்டையிடும்போது அவர்கள் ஒரு வழக்கமான போர் என்பதை கடந்து அது அணுசக்தி யுத்தமாக முடிவடையும் சாத்தியம் உள்ளது. நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்று அவர் கூறினார்.  

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து விட்ட நிலையில் இனியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய வகையில் காஷ்மீரை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. 

இத்தகைய சூழலில் இந்தியாவுடனான நேரடி போருக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அவ்வாறு நேரடி போரினால் பாகிஸ்தான் பின்னடைவை சந்திக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் சரணடைவதைக் காட்டிலும் சுதந்திரத்துக்காக நாங்கள் சாகும் வரை போரிடுவோம்.

பாகிஸ்தான் எந்த சூழலிலும் போரை முதலில் தொடங்காது என்று கூறினார். ஜம்மு -காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்றும் அதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று இந்திய ஐ.நா கூட்டத்தில் தெரிவித்து விட்டது.  
 
Link to comment
Share on other sites

2ஆம் உலக மகா யுத்தத்தின் பின்னர் சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவானது. இந்த நாடு பல நாடுகளை உள்ளடக்கி உருவானது. 1990இல் அந்த சாம்ராஜ்யம் 15 நாடுகளாக பிரிந்தது.

1947இல் உருவானது இந்தியா. அதுவும் பல நாடுகளை கொண்ட நாடு. ஒரு நாள் இந்தியாவும்  உடையலாம். நாடுகள் பிறக்கலாம். 

அதில் நன்மைகளும் தீமைகளும் இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.