Sign in to follow this  
ampanai

`என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்!’ - தாலிகட்டியதும் மனைவியுடன் படித்த பள்ளிக்குச் சென்ற மணமகன்!

Recommended Posts

கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபுக்கும், கண்ணகிக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் காட்டுநாவலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

கண்ணகியை கரம்பிடித்த பிரபு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலில் வீட்டுக்குச் செல்லாமல், தான் படித்த காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மனைவியை கையோடு அழைத்துச் சென்றார். திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வருவதை ஆசிரியர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆசிரியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பிரபு, தான் படிக்கும்போது நடந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, மாணவர்களின் படிப்புக்காக, வெண்பலகை ஒன்றை ஆசிரியர்களிடம் அன்பளிப்பாக மணமக்கள் இருவரும் சேர்ந்து கொடுத்தனர்.

மாணவரà¯à®à®³à¯à®à¯à®à¯ வà¯à®£à¯à®¤à®¿à®°à¯ பலà®à¯ வழà®à¯à®à®¿à®¯ தமà¯à®ªà®¤à®¿

தொடர்ந்து, பள்ளிக்கூடத்துக்கு வந்ததன் நினைவாக மரக்கன்றுகளையும் நட்டுவிட்டுச் சென்றனர். மணமக்களின் இந்தச் செயலைக் கண்டு நெகிழ்ந்த ஆசிரியர்கள் மணமக்களை வாழ்த்தினர். இதுபற்றி பேசிய பிரபு,  ``பள்ளிக்கூடமும் ஒரு கோயில்தான். அதான், வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி கோயிலுக்கு வந்திட்டோம். நான் சிங்கப்பூரில் இருக்கும்போது, என்னோட தம்பி பள்ளிக்கூடத்துக்கு ஒரு வெண்திரை பலகை தேவைப்படுகிறதா சொன்னாரு.

மரà®à¯à®à®©à¯à®±à¯ நà®à¯à®®à¯ பà¯à®¤à¯à®®à®£à®¤à¯ தமà¯à®ªà®¤à®¿

என்னால முடிஞ்ச உதவியைப் பள்ளிக்குச் செய்யணும்னு அடிக்கடி நினைப்பேன். என்னோட கல்யாணத்து அன்னைக்கு, வெண்திரை பலகையை பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக வாங்கிக்கிட்டுப் போய் கொடுக்கணும்னு நெனச்சேன். அது நடந்திருச்சு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. தொடர்ந்து, இதேபோன்று, இந்தப்பள்ளிக்கூடத்துக்கு என்னால முயன்ற உதவிகளைச் செய்யணும்" என்றார்.

https://www.vikatan.com/news/education/a-newly-married-couple-provided-school-equipment

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this