கிருபன்

பலாலியில் நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்

Recommended Posts

பலாலியில் நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்

by in செய்திகள்

palaly-runway-3-300x175.jpg

 

பலாலி விமான நிலையத்துக்காக, நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

இந்த நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், 300 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க முன்வைத்திருந்தார்.

அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக, பலாலி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் விமான நிலையத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்போது, துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

 

 

http://www.puthinappalakai.net/2019/09/17/news/40076

Share this post


Link to post
Share on other sites

விமான நிலையத்திற்கு கட்டுபாட்டு கோபுரம் தேவை என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டார்களா?

Share this post


Link to post
Share on other sites

அந்த  விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை, ஏன் நிரந்தரமாக அமைக்க முடியவில்லை?

தேர்தல் முடிந்த பின்....நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை,
சிங்கள பகுதிக்கு,  கொண்டு சென்று விடுவார்கள் என நினைக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, vanangaamudi said:

விமான நிலையத்திற்கு கட்டுபாட்டு கோபுரம் தேவை என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டார்களா?

காணி பிடிக்க அவிட்டுவிட்ட வாய்ச்சவடால்...விமான நிலையம் இயங்காது என்பதே உண்மை...

Share this post


Link to post
Share on other sites

நிரந்தர கோபுரம் அமைக்க இடமில்லை! நிலம் தாங்கோ என்று கேப்பாங்களோ?!

Share this post


Link to post
Share on other sites

அதென்ன நடமாடும் கோபுரம்? எனக்கு துண்டற விளங்கேல்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.