• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ArumugaNavalar

திருக்குறள் பொது நூலா?

Recommended Posts

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்பது முதலிய திருக்குறள்களால் மனத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

என்ற திருக்குறளால் வாக்காற் செய்யப்படும் வழிபட்டையும்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின். 2

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 9

என்ற திருக்குறள்களாற் காயத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும் கூறுதலானும்,

Share this post


Link to post
Share on other sites

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய். 359

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். 360

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

என்ற திருக்குறள்களால் பிறவி(பெத்த) நீக்கமும் முத்திப் பயனுங் கூறுதலானும்,

Share this post


Link to post
Share on other sites

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186

என்ற திருக்குறளால் முத்தியிலும் முப்பொருளும் முதல்வன் உபகாரமும் உண்டென்று கூறுதலானும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்ற திருக்குறள்களால் அடிசேர் முத்தியாகிய சித்தாந்த முத்தியைக் கூறுதலானும், 'திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவர்' என்பது தேற்றம்.

முற்றும்

திருச்சிற்றம்பலம்

thiruvana.jpg

Share this post


Link to post
Share on other sites

திருக்குறள் பொது நூலா?

ஆதியறிய முடியாத மிகத் தொன்மையான சைவ (இந்து) சமயத்தின், நீதி நூலகில் ஓன்று தான் - திருக்குறள்.

சில அந்நிய மத சதிகாரர்கள், அவர்களின் கைக்கூலிகள், கொலைஞர் கருணாநிதி போன்ற போலித் திராவிடர்கள் இந்த நூலை சர்ச்சைக்கு உள்ளாக முற்பட்டு வந்துள்ளனர்.

இது உலக மக்கள் அனைவருக்குமான போது நீதியைக் கூறும் இந்து சமய நூல்.

Share this post


Link to post
Share on other sites
On 6/1/2007 at 5:03 PM, ArumugaNavalar said:

இனி வள்ளுவரை வைணவர் எனலாமோ எனின் அதுவும் பொருந்தாது. ஏனெனில் வைணவ ஆகமங்களில் விண்டுவிற்கு எட்டுக் குணங்கள் கூறப்படவில்லை. அன்றியும் வள்ளுவர் காமத்துப் பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரத்துள்

 

தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள்

தாமரைக் கண்ணா னுலகு (1103)

 

என்று வைகுண்டத்தைக் காட்டிலும் மொன்றொட்டுயில் இனிது என்று கூறுமாற்றான் வைகுண்டத்தைத் தாழ்த்திக் காட்டினார். வைணவராயின் அவ்வாறு கூறியிருக்கமாட்டார். எனவே வள்ளுவர் வைணவராகார் என்பது பெறப்படும்.

 

இனி எண்குணம் என்பதை அணிமாவை முதலாக வுடையன வெனவும் உரைபாருமுளர் என்று பரிமேலழகர் காட்டியுள்ளார். அணிமா முதலிய எட்டாவன:- அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. அணிமா முதலியன மக்களாலும் முயன்று பெறப்படுதலின் குணமாக முடியாது. ஏனெனில் குணமாவது குணியோடு ஒற்றித்து. நிற்பதாகலின் அவ்வாறு ஒற்றித்து நில்லாது முயன்று பெறப்படும் சித்தியாகலின் அவற்றைக் குணமெனக் கொள்ள இயலாது.

தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள்
தாமரைக் கண்ணா னுலகு

இந்தக் குறளின் பொருள் பலரும் சரியாக புரியாது மெலெழுந்தவாரியாகச் சொல்லிச் செல்கின்றனர்.

வள்ளுவர் தமிழில் தோய்ந்தவரும் தாமரைக் கண்ணனை பல இடங்களிலு சுட்டுவதாலும், அதன் பொருள் இவ்வாறு கொள்ள வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

ஏன் எனில் இந்த குறள் பால் அதிகாரத்தில் வருகிறது. புணர்ச்சியில் துய்த்தால் அது சிற்றின்பமேயன்றி பேரின்பமாக இருக்காது. இருக்க முடியாது. வள்ளுவன் சிற்றின்பத்தை தூக்கிப் பிடிப்பவன் அல்ல. அவன் நோக்கும் அதுவல்ல என்பது சாலத் தெரிந்த ஒன்று.

அப்படி இருக்க இதன் பொருள் தாழ்வீழ்வார் என்பது வைகுண்டத்தை அடைந்த ஒரு ஆத்மா(இங்கே ஆத்மா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தாமரைக் கண்ணனின் தாளை அடைந்தார்க்கு வைகுண்டப் ப்ராப்தியே மிகும் என்பதால் ஆத்மா என கொள்ளப்பட்டது) எப்படி பேரின்பத்தில் துய்க்குமோ அதைப் போல என கலவியற்கு சிற்றின்பம் எனச் சொல்கிறார் எனப் பொருள் கொள்வதே சாலச் சிறந்ததாகும். அதாவது கலவியற்கு சிற்றின்பமே பேரின்பம் என்றாகும் எனக் குறிப்பிடுகிறார் இங்கே. எனவே அவர் திருமாலை குறைத்து மதிப்பிட்டார் எனவே வைணவர் சம்மந்தம் இல்லைனெக் கொள்வது சரியான நோக்காகது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது -மனோ கணேசன் சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு கொளுத்தி,பாற்சோறு பகிர்ந்து கொண்டாட விட்டு, சில தினங்களில் அதை இடைநிறுத்த அமைச்சரவையில் தீர்மானிப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோர செயலாகும்.இதற்கு பதில் இப்படி அவசரப்பட்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த இடை நிறுத்தலுக்கு உள்ளே இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யார் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும்பதவிக்கு வந்த உடன் அது நாட்டு மக்கள் அனைவரினதும் அரசாங்கம்தான். அப்படித்தானே, சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கூறினார் என பல திடீர் தேசபக்தர்கள் குதூகலமாக சொல்லி கொண்டாடினார்கள்.இதன்மூலம் இந்த அரசு ஒரு சிங்கள பௌத்த அரசு நிறுவனம் மட்டுமே என மீண்டும் உறுதியாகியுள்ளது. அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டார்கள். அவர்களை நேரில் அழைத்து இப்படி பேசாதீர்கள் என நான் கூறினேன்.எது எப்படி இருந்தாலும், ஒரு அரசாங்கம் என்கின்ற போது அதற்கு பொறுப்பு அதிகம். ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என அரசாங்கம் காரியமாற்ற முடியாது.தமிழ், முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம் என இந்த அரசாங்கம் கூறமுடியாது என சாய்ந்தமருது நகர சபை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவை இடை நிறுத்தியமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/சாய்ந்தமருது-நகர-சபை-விவ/
    • மொழி அழிந்தால் இனம் அழியும்.! தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர். பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர். ஈழத் தீவுக்குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல  மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர். பல ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது. கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது. ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர். தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய் மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தனது பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும். தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள். தமிழீழ அரசானது தமிழ் மொழியில் அழகியதொரு தேசத்தைப் படைத்தது. அரச கட்டமைப்புக்கள் மற்றும் போரியல் கட்டமைப்புக்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் துவக்கம், நடைமுறையில் தூய தமிழ் மொழியிலான வாழ்வொன்றை சாத்தியப்படுத்தினர். மாந்தர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல், பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என விடுதலைப் புலிகளின் மொழித்துறை நிர்வாக கட்டமைப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றளவும் உலகால் வியப்புடன் நோக்கப்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களும் ஒட்டுமொத்த நிலமும் தமிழ் அமைந்திருந்தது. ஈழத் தமிழினம் மொழி மறுப்பாலும் மொழியழிப்பாலுமே ஆயுதம் ஏந்தியது. உலகின் செழுமையான மொழி தமிழ். அந்த செழுமையுடன் இன்றளவும் வாழ்வையும் பேசும் மொழியையும் கொண்டவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அதனை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றளவும் குறியாக இருக்கிறது சிங்கள அரசு. மொழியையும் இனத்தையும் அழிக்க வரலாறு முழுதும் இனப்படுகொலைகளை செய்த பின்னரும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை செய்த பின்னரும் சிங்கள அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? இன்றும் இலங்கை அரசின் அலுவலகங்களில், அரசு வடக்கு கிழக்கில் நடும் பெயர்பலகைகளில் எங்கள் தாய் மொழி கொலை செய்யப்படுகிறது. பொலிஸ் நிலையங்களில் சிங்களத்தில்தான் முறைப்பாடு பதிவு செய்யப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கு வரும் பல சுற்று நிரூபங்கள் சிங்களத்தில்தான் உள்ளன. தென் பகுதியில் பிரதான அலுவலகங்களுக்குச் சென்று தமிழிலில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வடக்கு கிழக்கில் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் தெரியாத வைத்தியர்களிடம் எங்கள் மக்கள் நோளை சொல்கிறார்கள். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களிடையே தாய் மொழி, மற்றும் தமிழ் மொழி குறித்தான பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தாய் மொழி தினத்தை ஈழத் தமிழர்கள் கொண்டாட வேண்டும். மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை இந்த நாளில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு எல்லா நாட்களிலும் பயனாக விளைய வேண்டும்.  உலகில் தாய் மொழி அழிக்கப்படும் அனைத்து இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தாய் மொழியை திட்டமிட்டு அழிக்க ஒடுக்கப்படும் அத்தனை இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். இனம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வை அழிப்பது மிகவும் கொடியது. கடந்த நூறு ஆண்டுகளாக நாங்கள் இத் தீவில் அனுபவித்து வரும் கொடிய சரித்திரம் இதுவே. தாய் மொழியை பேண, தமிழ் மரபை பேண, தமிழ் இனத்தின் இருப்பை பேண எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. மொழி அழிந்தால், இனம் அழியும் என்பதையும் அவ்வாறு அழிந்த இனங்களையும் மொழிகளையும் நாம் நினைவில்  கொள்ள வேண்டும். -தீபச்செல்வன். எழுத்தாளர் கவிஞர் மற்றும் ஊடகவியலாளர். http://www.vanakkamlondon.com/theepachelvan-21-02-2020/
    • எங்கட ஊரில இந்தியாக்காரன் விட்டால் தான் வெள்ளைக்காரன் மூச்சே விடலாம். இங்க அப்பக்கடையிலும் இட்டிலிக்கடையிலும் வரிசையில் நிற்கும் தமிழனிடம் கேட்காமல் வெள்ளைக்காரன் எதுவும் செய்வதில்லை. எங்கட ஊர் எங்கை தமிழ்நாட்டிலேயோ எண்டு கேட்டு ஏமாறக்கூடாது. எங்கட ஊர்  உள்ள இடம் கலிபோர்னியா. இங்கே சுந்தர் பிச்சையை தெரியாத நாய் கூட இல்லை. தெருவுக்கு பெயர் வைக்கும் வீண் வேலையில் தமிழனோ இந்தியாக்காரரோ சீனரோ மினக்கடுவதில்லை. இங்கே தெரு கூட்டுபவர் வெள்ளைக்காரர். தெருவிலே விலை கூடின காரில் போறவர் இந்தியாக்காரர்.
    • எங்கே கலந்துகொள்ளப்போகிறார்। நகுலேஸ்வரத்திலா , திருக்கேதீஸ்வரத்திலா? 
    • As Just Security’s Ryan Goodman previously noted: “[N]ot only was [Rajapaska] the self-proclaimed mastermind of the military’s actions and thus criminally liable under well-settled international rules of command responsibility; there is also prima facie evidence in the public record that he ordered the execution of political leaders and their families upon their surrender, that he directed the systematic bombing of civilian hospitals, and that he repeatedly suggested that he could target and deliberately kill innocent civilians in order to win the war against the LTTE. That’s just the public record.”