Jump to content

‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:40

 

மூன்றாவது  ‘எழுக தமிழ்’ப் பேரணி, திங்கட்கிழமை (16)  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ‘எழுக தமிழ்’ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை மக்களின் பங்கேற்பு என்பது, கணிசமாகக் குறைந்திருக்கின்றது. 

ஓர் அரசியல் கட்சி, தன்னுடைய கூட்டங்களுக்குத் தொண்டர்களைத் திரட்டுவதற்கும்,  எழுச்சிப் போராட்டங்களில் மக்களைப் பங்கேற்க வைப்பதற்கும் இடையில், நிறைய வித்தியாசங்கள் உண்டு. 

அரசியல் கட்சியின் தொண்டர்களுக்கு, கட்சி நலன் மாத்திரமல்ல, தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த சுயநல விடயங்களும் முக்கியம் பெறும். அதன்சார்பில், கட்சிக் கூட்டங்களை நோக்கித் திரள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 

ஆனால், எழுச்சிப் போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சி என்பது, சுயநல அடிப்படைகள் சார்ந்ததாக அமைவதில்லை. அது, இன- சமூக விடுதலை, அரசியல் உரிமை, நீதி உள்ளிட்ட விடயங்களை முதன்மைப்படுத்தி நிகழ்வன. 

சுயநலத்தைத் தாண்டிய கடப்பாட்டை, ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கான நம்பிக்கையை அந்தப் போராட்டங்களும், அதற்கான காரணங்களும் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அந்தப் போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தரப்புகள், அதற்கான அர்ப்பணிப்பைச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதுதான், போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சியை அதிகப்படுத்தும்.

‘எழுக தமிழ்’ப் பேரணியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தின் இறுதிப் பகுதி, “...எமது மக்களின் தொடர் போராட்டங்களையும் எழுச்சிகளையும் நமது தேசத்தின் பலமாக மாற்றுவது தொடர்பாக, நாம் காத்திரமான யோசனைகளை முன்வைத்துச் செயற்பட வேண்டியுள்ளது. அந்தவகையில், இந்த ‘எழுக தமிழ்’ப் பரப்புரையின்போது, நாம் சந்தித்த மக்கள், பொது அமைப்புகளுடனான உரையாடல்களின்போது, அவர்கள் முன்வைத்த கருத்துகளை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தில், அதற்கான காத்திரமான செயற்றிட்டங்களை முன்வைத்து, எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என உறுதி பூணுவோமாக....”  என்று கூறுகிறது.

போராட்ட வடிவமொன்று, வெற்றிபெறுவதற்கும் தோற்றுப்போவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு போராட்ட வடிவத்தை, வழிமுறையை ஏற்படுத்திய தரப்புகளே, அந்தப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்து, மக்களை விலகிப்போக வைப்பது என்பது, என்றைக்குமே ஜீரணிக்க முடியாதது.  

தமிழ் மக்கள் பேரவை மீதான ஆதரவு, எதிர்ப்பு மனநிலைகளுக்கு அப்பால் நின்று, ‘எழுக தமிழ்’ப் பேரணியை நோக்கி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் திரண்ட போது, அந்தப் போராட்ட வடிவம், அடுத்த கட்டங்களை நோக்கிப் பயணப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்தது. 

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, கானல் வெளியைக் கடக்கும் கட்டங்களில், சிவில்- புலமைத் தரப்பின் பங்களிப்பு என்பது, தவிர்க்க முடியாதது.  அப்படியான நிலையில், பேரவை போன்ற அமைப்பின் தேவை, உண்மையிலேயே தவிர்க்க முடியாதது. ஆனால், அதைப் பேரவை உணர்ந்து செயற்பட்டிருந்தால், ‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்வியின் காரணங்களைப் பற்றி, யாரும் பேச வேண்டி ஏற்பட்டிருக்காது.

‘எழுக தமிழ்’ப் பேரணியின் தோல்வி என்பது, ‘எழுக தமிழ்’ என்ற ஒன்றை வடிவத்தின் தோல்வி மாத்திரமல்ல; அது, மக்கள் போராட்டங்களின் தோல்வி. ஏனெனில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், காணி விடுவிப்புப் போராட்டம், போர்க்குற்ற விசாரணைகளுக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், அரசியல் தீர்வுக்கான போராட்டம் என்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமை, நீதிக் கோரிக்கைப் போராட்டங்களின் அனைத்து வடிவங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்ட போராட்ட வடிவமாகவே, ‘எழுக தமிழ்’ போராட்ட நிகழ்வைப் பேரவை முன்னிறுத்தியது.

இது, ‘பொங்கு தமிழ்’ போராட்டத்தின் இன்னொரு வடிவமாக இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, பல கடப்பாடுகளை, ‘எழுக தமிழ்’ கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கடப்பாடுகளை, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவதிலிருந்து தவறிவிட்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிப் பிரகடனத்திலும், “மக்களின் கருத்துகளை அறிவோம்; மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற வெற்று வார்த்தைகளில், விடயங்களைக் கடக்க நினைப்பதை எவ்வாறு எதிர்கொள்வது?

image_991e3236bb.jpg

முதலாவது, ‘எழுக தமிழ்’ப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக, பேரவை செயற்பட ஆரம்பித்து இருந்தாலே, பேரவை தவிர்க்க முடியாத மக்கள் இயக்கமாக வளர்ந்து இருக்கும்.ஆனால் பேரவை, “மக்கள் சந்திப்புகளை நடத்துவோம்; கருத்துகளை அறிவோம்; அதன்பால் இயங்குவோம்” என்று, சி.வி.விக்னேஸ்வரனை வைத்து அறிக்கைகளை வெளியிட்டதைத் தவிர, செயற்பாட்டு வடிவத்தில் எதையும் செய்திருக்கவில்லை. 

அத்தோடு, தேர்தல் அரசியல் சார்ந்து, தன்னுடைய நிலைப்பாடுகளின் பக்கத்தில் இயங்கியதன் விளைவாலேயே, ஒட்டுமொத்தமான நம்பிக்கையீனங்களையும் சந்தித்து நின்றது. தங்களுக்குள் பிளவுபட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் திட்டித் தீர்க்கும் கட்டத்தையும் எட்டியது. தேர்தல் அரசியல் என்பது, தீர்க்கமாகத் தாக்கம் செலுத்தும் சூழலில், அது தொடர்பில் பேசுவதோ, செயற்படுவதோ தவறில்லை. ஆனால், அதில், குறைந்தபட்ச நேர்மையாவது இருந்திருக்க வேண்டும். 

ஓர் அமைப்பு, தனியொரு மனிதனில் தங்கியிருக்கும் சூழல் ஏற்படுவதென்பது, எவ்வளவு அபத்தமானது? அதைத்தான், விக்னேஸ்வரன் பேரில், பேரவை செய்தது. அது, இன்றைக்கு பேரவையை மாத்திரமல்ல, எழுச்சிப் போராட்டங்களையும் தோல்வியின் கட்டங்களுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.

தேர்தல், வாக்கு என்ற அரசியல் சிந்தனைகளோடு இயங்கும் கட்சிகளிடமும் தரப்புகளிடமும் ‘பொறுக்கித்தனங்கள்’ நிறைந்திருக்கும். அதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் கூட விதிவிலக்கானவை அல்ல. அ.இ.த.கா, தமிழரசுக் கட்சி தொடங்கி, த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.கூ என்று யாருமே விதிவிலக்கு அல்ல. 

முதலாவது ‘எழுக தமிழ்’ப் பேரணியைத் தமக்கான அச்சுறுத்தலாக உணர்ந்த தமிழரசுக் கட்சி, அதற்கு எதிரான கைங்கரியங்களில் ஈடுபட்டது. ஆனால், மக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டங்களின் அவசியத்தை உணர்ந்து பங்கேற்றார்கள். ஆனால், மூன்று வருடங்களுக்குள், ‘எழுக தமிழ்’ நிகழ்வை எதிர்க்கும் கட்டங்களில் இருந்து, தமிழரசுக் கட்சி விலகிவிட்டது; அமைதியாக வெளியில் இருந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டது. 

ஆனால், மூன்றாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வைப் பேரவைக்குள் இருந்த தரப்புகளே எதிர்த்து, விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன. அதனை, ஓர் அறமாக, அந்தத் தரப்புகள் கருதின.

குறிப்பாக, பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகளில், ‘தேசம், சுயநிர்யணம்’ என்கிற வார்த்தைகளைச் சேர்க்கக் கூடாது என, விக்னேஸ்வரன் எதிர்த்தார் என்கிற விடயத்தை, ஒரு பிரசாரமாகத் த.தே.ம.மு, ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு எதிராக முன்னெடுத்தது. 

கடந்த வாரம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வாறு விக்னேஸ்வரன் செய்த திருத்தங்களின் ‘மின்பிரதி’யை வெளிப்படுத்தினார். அந்தப் பிரதியை, விக்னேஸ்வரன், கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, வெளியிட்டிருந்தால், மக்களுக்கு இன்னும் தெளிவு கிடைத்திருக்கும் அல்லவா? 

அதனையெல்லாம் செய்யாமல், தேசத்தை எதிர்த்த விக்னேஸ்வரனோடு, இரண்டாவது, ‘எழுக தமிழ்’ மேடையில் ஏறியதும், விக்னேஸ்வரனைக் கட்சித் தலைமையாக ஏற்க விரும்பியதும், தேசியத் தலைவராக முழங்கியதும் கஜேந்திரகுமாரினதும், அவரின் தொண்டர்களினதும் எவ்வாறான நிலைப்பாடு? இது இரட்டை நிலைப்பாடு இல்லையா?

இன்னொரு பக்கம், விக்னேஸ்வரன் என்கிற தனிமனிதனை நோக்கி, பேரவையின் அடையாளத்தை வரைந்துவிட்டது, யாழ். மய்யவாத அரசியல் ஆய்வாளர்களும் புலமைத் தரப்புகளும்தான். அதன்பின்னால், கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளும் படையெடுத்தன. 

என்றைக்குமே, தன்னுடைய ஆளுமையை நிரூபிக்காத, அதனை நிரூபிப்பதற்காக உழைக்காத ஒருவரை நோக்கி, மேட்டுக்குடிச் சிந்தனைகளின் போக்கில், ஜனவசிய கற்பனைக் கதைகளை எழுதிய தரப்புகள் எல்லாமும் சேர்ந்துதான், பேரவையின் தோல்வியையும் எழுதின. 

போராட்டமே, ஈழத் தமிழ் மக்களின் அடையாளம்; அதுவே, அவர்களின் அரசியல் கருவி. அப்படிப்பட்ட மக்களிடம், போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துவதும், மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல் கற்பனைக் கதைகளில் உழல்வதும், தோல்வியின் கட்டங்களையே அதிகப்படுத்தும். பேரவையும் ‘எழுக தமிழ்’ நிகழ்வும் அதன் சாட்சிகளாக, இன்று மாறி நிற்கின்றன.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எழுக-தமிழ்-நிகழ்வின்-தோல்விக்குப்-பேரவையே-பொறுப்பு/91-238742

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.