Sign in to follow this  
கிருபன்

‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு

Recommended Posts

‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:40

 

மூன்றாவது  ‘எழுக தமிழ்’ப் பேரணி, திங்கட்கிழமை (16)  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ‘எழுக தமிழ்’ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை மக்களின் பங்கேற்பு என்பது, கணிசமாகக் குறைந்திருக்கின்றது. 

ஓர் அரசியல் கட்சி, தன்னுடைய கூட்டங்களுக்குத் தொண்டர்களைத் திரட்டுவதற்கும்,  எழுச்சிப் போராட்டங்களில் மக்களைப் பங்கேற்க வைப்பதற்கும் இடையில், நிறைய வித்தியாசங்கள் உண்டு. 

அரசியல் கட்சியின் தொண்டர்களுக்கு, கட்சி நலன் மாத்திரமல்ல, தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த சுயநல விடயங்களும் முக்கியம் பெறும். அதன்சார்பில், கட்சிக் கூட்டங்களை நோக்கித் திரள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 

ஆனால், எழுச்சிப் போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சி என்பது, சுயநல அடிப்படைகள் சார்ந்ததாக அமைவதில்லை. அது, இன- சமூக விடுதலை, அரசியல் உரிமை, நீதி உள்ளிட்ட விடயங்களை முதன்மைப்படுத்தி நிகழ்வன. 

சுயநலத்தைத் தாண்டிய கடப்பாட்டை, ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கான நம்பிக்கையை அந்தப் போராட்டங்களும், அதற்கான காரணங்களும் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அந்தப் போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தரப்புகள், அதற்கான அர்ப்பணிப்பைச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதுதான், போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சியை அதிகப்படுத்தும்.

‘எழுக தமிழ்’ப் பேரணியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தின் இறுதிப் பகுதி, “...எமது மக்களின் தொடர் போராட்டங்களையும் எழுச்சிகளையும் நமது தேசத்தின் பலமாக மாற்றுவது தொடர்பாக, நாம் காத்திரமான யோசனைகளை முன்வைத்துச் செயற்பட வேண்டியுள்ளது. அந்தவகையில், இந்த ‘எழுக தமிழ்’ப் பரப்புரையின்போது, நாம் சந்தித்த மக்கள், பொது அமைப்புகளுடனான உரையாடல்களின்போது, அவர்கள் முன்வைத்த கருத்துகளை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தில், அதற்கான காத்திரமான செயற்றிட்டங்களை முன்வைத்து, எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என உறுதி பூணுவோமாக....”  என்று கூறுகிறது.

போராட்ட வடிவமொன்று, வெற்றிபெறுவதற்கும் தோற்றுப்போவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு போராட்ட வடிவத்தை, வழிமுறையை ஏற்படுத்திய தரப்புகளே, அந்தப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்து, மக்களை விலகிப்போக வைப்பது என்பது, என்றைக்குமே ஜீரணிக்க முடியாதது.  

தமிழ் மக்கள் பேரவை மீதான ஆதரவு, எதிர்ப்பு மனநிலைகளுக்கு அப்பால் நின்று, ‘எழுக தமிழ்’ப் பேரணியை நோக்கி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் திரண்ட போது, அந்தப் போராட்ட வடிவம், அடுத்த கட்டங்களை நோக்கிப் பயணப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்தது. 

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, கானல் வெளியைக் கடக்கும் கட்டங்களில், சிவில்- புலமைத் தரப்பின் பங்களிப்பு என்பது, தவிர்க்க முடியாதது.  அப்படியான நிலையில், பேரவை போன்ற அமைப்பின் தேவை, உண்மையிலேயே தவிர்க்க முடியாதது. ஆனால், அதைப் பேரவை உணர்ந்து செயற்பட்டிருந்தால், ‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்வியின் காரணங்களைப் பற்றி, யாரும் பேச வேண்டி ஏற்பட்டிருக்காது.

‘எழுக தமிழ்’ப் பேரணியின் தோல்வி என்பது, ‘எழுக தமிழ்’ என்ற ஒன்றை வடிவத்தின் தோல்வி மாத்திரமல்ல; அது, மக்கள் போராட்டங்களின் தோல்வி. ஏனெனில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், காணி விடுவிப்புப் போராட்டம், போர்க்குற்ற விசாரணைகளுக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், அரசியல் தீர்வுக்கான போராட்டம் என்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமை, நீதிக் கோரிக்கைப் போராட்டங்களின் அனைத்து வடிவங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்ட போராட்ட வடிவமாகவே, ‘எழுக தமிழ்’ போராட்ட நிகழ்வைப் பேரவை முன்னிறுத்தியது.

இது, ‘பொங்கு தமிழ்’ போராட்டத்தின் இன்னொரு வடிவமாக இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, பல கடப்பாடுகளை, ‘எழுக தமிழ்’ கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கடப்பாடுகளை, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவதிலிருந்து தவறிவிட்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிப் பிரகடனத்திலும், “மக்களின் கருத்துகளை அறிவோம்; மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற வெற்று வார்த்தைகளில், விடயங்களைக் கடக்க நினைப்பதை எவ்வாறு எதிர்கொள்வது?

image_991e3236bb.jpg

முதலாவது, ‘எழுக தமிழ்’ப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக, பேரவை செயற்பட ஆரம்பித்து இருந்தாலே, பேரவை தவிர்க்க முடியாத மக்கள் இயக்கமாக வளர்ந்து இருக்கும்.ஆனால் பேரவை, “மக்கள் சந்திப்புகளை நடத்துவோம்; கருத்துகளை அறிவோம்; அதன்பால் இயங்குவோம்” என்று, சி.வி.விக்னேஸ்வரனை வைத்து அறிக்கைகளை வெளியிட்டதைத் தவிர, செயற்பாட்டு வடிவத்தில் எதையும் செய்திருக்கவில்லை. 

அத்தோடு, தேர்தல் அரசியல் சார்ந்து, தன்னுடைய நிலைப்பாடுகளின் பக்கத்தில் இயங்கியதன் விளைவாலேயே, ஒட்டுமொத்தமான நம்பிக்கையீனங்களையும் சந்தித்து நின்றது. தங்களுக்குள் பிளவுபட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் திட்டித் தீர்க்கும் கட்டத்தையும் எட்டியது. தேர்தல் அரசியல் என்பது, தீர்க்கமாகத் தாக்கம் செலுத்தும் சூழலில், அது தொடர்பில் பேசுவதோ, செயற்படுவதோ தவறில்லை. ஆனால், அதில், குறைந்தபட்ச நேர்மையாவது இருந்திருக்க வேண்டும். 

ஓர் அமைப்பு, தனியொரு மனிதனில் தங்கியிருக்கும் சூழல் ஏற்படுவதென்பது, எவ்வளவு அபத்தமானது? அதைத்தான், விக்னேஸ்வரன் பேரில், பேரவை செய்தது. அது, இன்றைக்கு பேரவையை மாத்திரமல்ல, எழுச்சிப் போராட்டங்களையும் தோல்வியின் கட்டங்களுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.

தேர்தல், வாக்கு என்ற அரசியல் சிந்தனைகளோடு இயங்கும் கட்சிகளிடமும் தரப்புகளிடமும் ‘பொறுக்கித்தனங்கள்’ நிறைந்திருக்கும். அதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் கூட விதிவிலக்கானவை அல்ல. அ.இ.த.கா, தமிழரசுக் கட்சி தொடங்கி, த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.கூ என்று யாருமே விதிவிலக்கு அல்ல. 

முதலாவது ‘எழுக தமிழ்’ப் பேரணியைத் தமக்கான அச்சுறுத்தலாக உணர்ந்த தமிழரசுக் கட்சி, அதற்கு எதிரான கைங்கரியங்களில் ஈடுபட்டது. ஆனால், மக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டங்களின் அவசியத்தை உணர்ந்து பங்கேற்றார்கள். ஆனால், மூன்று வருடங்களுக்குள், ‘எழுக தமிழ்’ நிகழ்வை எதிர்க்கும் கட்டங்களில் இருந்து, தமிழரசுக் கட்சி விலகிவிட்டது; அமைதியாக வெளியில் இருந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டது. 

ஆனால், மூன்றாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வைப் பேரவைக்குள் இருந்த தரப்புகளே எதிர்த்து, விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன. அதனை, ஓர் அறமாக, அந்தத் தரப்புகள் கருதின.

குறிப்பாக, பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகளில், ‘தேசம், சுயநிர்யணம்’ என்கிற வார்த்தைகளைச் சேர்க்கக் கூடாது என, விக்னேஸ்வரன் எதிர்த்தார் என்கிற விடயத்தை, ஒரு பிரசாரமாகத் த.தே.ம.மு, ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு எதிராக முன்னெடுத்தது. 

கடந்த வாரம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வாறு விக்னேஸ்வரன் செய்த திருத்தங்களின் ‘மின்பிரதி’யை வெளிப்படுத்தினார். அந்தப் பிரதியை, விக்னேஸ்வரன், கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, வெளியிட்டிருந்தால், மக்களுக்கு இன்னும் தெளிவு கிடைத்திருக்கும் அல்லவா? 

அதனையெல்லாம் செய்யாமல், தேசத்தை எதிர்த்த விக்னேஸ்வரனோடு, இரண்டாவது, ‘எழுக தமிழ்’ மேடையில் ஏறியதும், விக்னேஸ்வரனைக் கட்சித் தலைமையாக ஏற்க விரும்பியதும், தேசியத் தலைவராக முழங்கியதும் கஜேந்திரகுமாரினதும், அவரின் தொண்டர்களினதும் எவ்வாறான நிலைப்பாடு? இது இரட்டை நிலைப்பாடு இல்லையா?

இன்னொரு பக்கம், விக்னேஸ்வரன் என்கிற தனிமனிதனை நோக்கி, பேரவையின் அடையாளத்தை வரைந்துவிட்டது, யாழ். மய்யவாத அரசியல் ஆய்வாளர்களும் புலமைத் தரப்புகளும்தான். அதன்பின்னால், கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளும் படையெடுத்தன. 

என்றைக்குமே, தன்னுடைய ஆளுமையை நிரூபிக்காத, அதனை நிரூபிப்பதற்காக உழைக்காத ஒருவரை நோக்கி, மேட்டுக்குடிச் சிந்தனைகளின் போக்கில், ஜனவசிய கற்பனைக் கதைகளை எழுதிய தரப்புகள் எல்லாமும் சேர்ந்துதான், பேரவையின் தோல்வியையும் எழுதின. 

போராட்டமே, ஈழத் தமிழ் மக்களின் அடையாளம்; அதுவே, அவர்களின் அரசியல் கருவி. அப்படிப்பட்ட மக்களிடம், போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துவதும், மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல் கற்பனைக் கதைகளில் உழல்வதும், தோல்வியின் கட்டங்களையே அதிகப்படுத்தும். பேரவையும் ‘எழுக தமிழ்’ நிகழ்வும் அதன் சாட்சிகளாக, இன்று மாறி நிற்கின்றன.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எழுக-தமிழ்-நிகழ்வின்-தோல்விக்குப்-பேரவையே-பொறுப்பு/91-238742

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது. சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை. இலங்கை அமைச்சரவை துறை அமைச்சர் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை, நகர அபிவிருத்தி, நீர்பாசனம், வீட்டு வசதி மற்றும் புத்த சாசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றம், மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு நிமல் சிறிபால டி சில்வா சமூக வலுவூட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் ஆறுமுகன் தொண்டமான் வெளிநாட்டு தொடர்புகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு, திறன் அபிவிருத்தி தினேஷ் குணவர்தன மகளிர், சிறுவர் விவகாரம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், சுதேச மருத்துவம் பவித்ரா வன்னியாராச்சி கடல் தொழில் மற்றும் நீரியல் வளம் டக்ளஸ் தேவானந்தா தகவல், தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புதிய உற்பத்திகள் அபிவிருத்தி பந்துல குணவர்தன அரச நிர்வாக, உள்விவகாரம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ஜனக்க பண்டார தென்னக்கோன் விவசாயம், பெருந்தோட்டம், மகாவலி கிராமிய அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகாரம் சமல் ராஜபக்ஷ வீதி, பெருந்தெருக்கல், துறைமுகம் மற்றும் கடற்சார் விவகாரம் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் டளஸ் அழகபெரும சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முமைத்துவம் விமல் வீரவங்ச பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி , மின்வலு மஹிந்த அமரவீர காணி, காணி மறுசீரமைப்பு, சுற்றாடல், வனஜீவராசிகள் எஸ்.எம்.சந்திரசேன பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாயம் ரமேஷ் பத்திரண சுற்றுலாத்துறை, விமான சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு https://www.bbc.com/tamil/sri-lanka-50514076 பிரசன்ன ரணதுங்க
    • மனிதக் கழிவுகளை உரமாக்குவது எப்படி? - மாற்று கழிப்பறைக்காக போராடும் விஷ்ணுப்ரியா #iamthechange விஷ்ணுப்ரியா ராஜசேகர்பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க   'கழிப்பறையில் தயாராகும் உரம்' (Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 15வது அத்தியாயம் இது.) "கழிப்பறை என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது பலருக்கு நாம் நினைப்பதுபோல் எளிதாக கிடைக்கும் ஒரு விஷயமாக இருப்பதில்லை." என்கிறார் விஷ்ணுப்ரியா. பல இடங்களில் கழிப்பறையை சரியாக பயன்படுத்த முடியாமைக்கு ஒரு முக்கிய காரணம் நீர் பற்றாக்குறை. எனவே குறைந்த நீர் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் கழிப்பறை வடிவமைக்கப்பட்டு, அது பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறார். வெளிநாட்டில் கட்டடக் கலை பயின்ற விஷ்ணுப்ரியாவுக்கு நிறைய சம்பாதித்து அங்கேயே ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சராசரியான கனவுதான் இருந்துள்ளது. ஆனால் அவரின் அந்த கனவை மாற்றியது அவரின் குக்கு காட்டுப் பள்ளி என்ற மாற்று பள்ளிக்கான பயணம்தான். அங்கு மண் கட்டடம் ஒன்றை கட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை கேட்டு அங்கு சென்றுள்ளார் விஷ்ணுப்ரியா. ஆனால் அங்கு கேட்ட கதை தன் வாழ்க்கை பயணத்தின் பாதையை மாற்றியமைக்கும் என்று அவர் அப்போது யோசிக்கவில்லை. குக்கு காட்டுப்பள்ளியை சேர்ந்த சிவராஜ் என்பவர், பள்ளி மாணவி ஒருவர் கழிப்பறை இல்லாத காரணத்தால் உயிரிழந்த கதையை கூற கேட்டுள்ளார் விஷ்ணுப்ரியா. "பள்ளியிலும் கழிப்பறை இல்லை, வீட்டிலும் கழிப்பறை இல்லை எனவே அந்த மாணவி மலத்தை அடக்கி அடக்கி கடைசியில் அவரின் திசுக்களில் அது சேர்ந்து அவர் இறந்துள்ளார் என்ற அந்த கதையை கேட்ட எனக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன," என்கிறார் விஷ்ணுப்ரியா. முற்றிலுமாக நகர சூழலில் வாழ்ந்த தனக்கு கழிவறை இல்லாத காரணத்தால் ஒரு பெண் இறந்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகவே இருந்தது என்கிறார் அவர். எனவே கட்டடக் கலை படித்த என்னால் இதற்கு ஏதேனும் வழி கண்டறிய முடியும் என்ற எண்ணம் தோன்றவே அது குறித்த ஆய்வில் ஈடுபட்டேன் என்று தன் பணியின் தொடக்கத்தை விவரிக்கிறார் விஷ்ணுப்ரியா. மாற்று கழிப்பறை "பெண்கள் பலர் பூப்பெய்தியவுடன் பள்ளிக்கு வருவதை நிறுத்த முக்கிய காரணமாக கழிப்பறை உள்ளது; பல பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாததற்கு காரணம் தண்ணீர். எனவே குறைந்த தண்ணீரே பிடிக்கும் அளவிற்கு ஒரு கழிப்பறையை வடிவமைக்க வேண்டும் என எண்ணினேன்; பின் அது குறித்த ஆய்வில் ஈடுபட்ட போது Eco san கழிப்பறை என்ற ஒன்று ஏற்கனவே உள்ளது என்றும் அது தமிழகத்தில் முசிறி என்ற இடத்தில் பெரிதளவில் பயன்பாட்டில் உள்ளதையும் கண்டு அங்கு பயணித்தேன்" என்கிறார் விஷ்ணுப்ரியா. முந்தைய அத்தியாயங்களை படிக்க: ப்ரியா பாபு: திருநங்கைகளின் கல்விக்காக போராடும் பெண்ணின் கதை #iamthechange விலங்குகளின் துயர் துடைக்கும் பெண்ணின் கதை #iamthechange பிரசவத்திற்கு மட்டுமல்ல... அனைத்து பெண்களுக்கும் இந்த ஆட்டோ இலவசம்தான்! #Iamthechange Eco san கழிப்பறை என்பது மலத்தை உரமாக்குவது. அதாவது நம்மை சுத்தம் செய்து கொள்ள மட்டும்தான் தண்ணீர் தேவைப்படும். கழிப்பறை அமைப்பில் மலத்துக்கான குழிக்குள் மலம் சென்றுவிட்ட பின் அதன் மேல் ஒரு பிடி சாம்பலை போட்டுவிட்டு நம்மை சுத்தம் செய்து கொள்ள மட்டும் தண்ணீரை பயன்பட்டுத்திக் கொள்ள வேண்டும். சிறிது காலம் கழித்து குழியிலிருந்து கீழே சென்ற மலம் உரமாகிவிடுகிறது. தான் அப்படி ஒரு கழிப்பறையை வடிவமைக்க எண்ணி முசிறிக்கு பயணித்த விஷ்ணுப்ரியாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது; "அப்படி ஒரு கழிப்பறையை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை; அங்கு சிறிதளவும் துர்நாற்றம் என்பதை நான் கண்டறியவில்லை." என்கிறார் அவர். தனது அந்த பயணத்தில் முசிறியில் செய்துவரும் 'குப்பைகளை முறையாக கையாளுதல்' குறித்தும் தெரியவந்துள்ளது விஷ்ணுப்ரியாவுக்கு. முசிறியில் மக்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என்று பிரித்தளிப்பதும், அதன்பின் அது பெருமளவில் உரமாக்கப்படுவதையும் அவர் தெரிந்துகொண்டுள்ளார். முசிறியில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறைகளை மாதிரியாக வைத்து கழிப்பறை ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று பயணித்த விஷ்ணுப்ரியா முதலில் அதை ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அங்கு தொடங்கியதுதான் 'மீள்' என்னும் ஆவணப்படும். 'மீள்' ஆவணப்படம் "முசிறியில் தொடங்கிய மீள் ஆவணப்படத்துக்கான பயணம், இந்தியா முழுவதுமான பயணமாக மாறியது. இந்தியாவில் ஈக்கோ சான் என்ற கழிப்பறை முறை வேறெங்கெல்லாம் பயன்படுத்துப்படுகிறது என்பதை தேடித்தேடி ஆவணப்படுத்தினோம்." என்கிறார் விஷ்ணுப்ரியா. மேலும், மீள் ஆவணப்படம் ஒரு பிரச்சனை குறித்த படமாக மட்டும் இல்லாமல் அது தீர்வை சொல்லும் படமாகவும் இருக்க வேண்டும் என்று, ஈக்கோ சான் கழிப்பறை குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிற, வேலூர் ஸ்ரீனிவாசன், பால் கோவால்ட் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் ஆராய்ச்சிகள் குறித்தும் பணிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் கைநிறைய சம்பாதித்து கொண்டிருந்த அந்த பணியை முழுவதுமாக விட்டுவிட்டு மீள் ஆவணப்படத்துக்காக பணியாற்ற தொடங்கிய விஷ்ணுப்ரியா, பல பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளார். பின் நண்பர்களின் உதவியுடன்(crowd funding) படம் இயக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். 'தேவைகளை குறைப்பது அவசியம்' மீள் படத்தின் மூலம், ஈக்கோ சான் கழிவறை குறித்தும், குப்பைகளை கையாளுதல் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் விஷ்ணுப்ரியா, குப்பையை கையாளுதல் என்பதில் அதிகப்படியான குப்பையை சேர்க்காமல் இருப்பதும் அடங்கும் என்கிறார். கடந்த காலங்களை போல் அல்லாமல் நாம் இன்று தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்குவதுதான் அதிகப்படியான குப்பைகள் சேருவதற்கான காரணம். எனவே நாம் ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியமான ஒன்றா என்றும், இதை மறுசுழற்சியோ அல்லது மறு பயன்பாடு செய்ய முடியுமோ என்றும் நாம் யோசிக்க வேண்டும் என்கிறார் அவர். "இன்றைய சூழலில் நாம் மலை மலையாக பொருட்களை வாங்கி குவிக்க தொடங்கிவிடுகிறோம். மாற்றம் என்பது என்னில் இருந்து தொடங்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். எனவே எனது தேவைகளை குறைக்க தொடங்கினேன்; சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை தவிர்த்து, பயித்தமாவு, சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தினேன். முடிந்த அளவுக்கு பாக்கெட்டில் வரும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து தற்போது எனது வீட்டில் சேரும் குப்பையின் அளவை பெருமளவு குறைத்திருக்கிறேன்" என்கிறார் விஷ்ணுப்ரியா. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஈக்கோ சான் கழிவறை குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறும் விஷ்ணுப்ரியா அது குறித்தும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். "மாற்றம் என்பது குழந்தை பருவத்திலேயே தொடங்க வேண்டும். பள்ளி மாணவர்களிடத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது அது அவர்கள் வீடுகளில் பிரதிபலிக்கிறது. மாற்றம் என்பது நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். குழந்தைகளில் மனதில் அதை பதிய வைக்க வேண்டும்." என்கிறார் விஷ்ணுப்ரியா. https://www.bbc.com/tamil/india-50509564
    • விதவைகள் பெறும். ஒவ்வொரு பிள்ளைக்கும், அந்த பிள்ளை 21 வயதை அடையும்வரை மாதம் 10,000 அனுப்புவோம் என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், சில பத்து ஆண்டுகளிலேயே தமிழர் மீண்டும் முதலாவது சிறுபான்மையாகி விடுவர். சர்வதேச நாடுகளில் காணப்படும் தனித்தாய் ஆதரவு (single mother support) திட்டங்கள் போன்றதாக இந்த திட்டம் அமையும்.
    • எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட அவர்கள் ஏதோ ஒன்றை செய்து தமிழ் மக்களை சந்ததிகளை ஊக்குவிக்கின்றார்கள். அதை பாராட்டத்தான் வேண்டும்.  பெரும்பாலும் எதிர்மறையாகவே சிந்திக்கின்றோம். அது தப்பு. நிழலி  சொல்வதுபோல்  5000 ரூபா ஒரு வாரத்துக்கு காணாதுதான். ஆனால் அங்கு ஒரு ஆளின் ஒருநாள் சம்பளம் சாப்பாடு தேநீருடன் குறைந்தது 1500 ரூபாவுக்கு அதிகம்.(அதுக்கும் ஆள் கிடைப்பது கஷ்டம்). சராசரி 20,000 ரூபா மாதம் உழைத்தால் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் தாராளமாய் ஒரு குடும்பம் வாழ முடியும். "பாலன் பஞ்சம் பத்து வயது வரை" என்று அது பின்பு அந்த குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும். அன்று (இந்த யுத்தகாலங்களுக்கு முன்பு) நாங்கள் எல்லாம் அறுசுவை உண்டியும் பாயாசமும் சாப்பிட்டா வளர்ந்தனாங்கள். சுற்றி வர இருக்கும் அயலில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு பிள்ளைகள்.எல்லோரும் செத்தா போனார்கள். இங்கு (பிரான்சில்) மூன்று பிள்ளைகளுக்கு மேல்தான் சரியான உதவித் தொகை,மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். அதுக்காக அரசாங்கம் தரும் அந்தப் பணம் பிள்ளைகளை வளர்க்க தாராளமாய் காணும்.ஆனால் நாங்கள் வீட்டுக்கும், காருக்கும் கடன் வாங்கி அதைக் கட்ட இரவு பகல் பாராமல் நாய் பேயாய் உழைக்க வேண்டி இருக்கு.அப்படி இருந்தும் சில பல  பெற்றோர்களின் சண்டைகளால் பிள்ளைகளை அரசாங்கம் எடுத்து வளர்த்து வருகிறது. இங்கு செய்யும் உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ஊரில் செய்தால்கூட போதும் சராசரி வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு. ஏனைய இனங்கள் எல்லாம் வருமானத்தைப் பார்த்தா பிள்ளைகளை பெறுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிழைகளை பெற்று விட்டால்  பின் ஏதோ ஒரு வகையில் வருமானம் வரும்......!  🤔