பி.ப 3 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு

sri-lanka-cabinet-300x200.jpg

 

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே, இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்து, அமைச்சரவையின் ஒப்புதலைக் கோருவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த திருத்த வரைவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்தால், வரும் 24ஆம் நாள் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிபர் பதவியை ஒழிப்பதற்காக திருத்தச்சட்ட வரைவு அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/09/19/news/40098