Jump to content

10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..


Recommended Posts

அன்பு உறவுகளுக்கு வணக்கம்..

எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன்.

இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன்.

தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன்.

படத்தலைப்பு - சொர்க்கத்தின் இருள் நாட்கள் (Dark days of heaven)

கதைச் சுருக்கம் - இறுதி யுத்த காலத்தில் ஒரு காணிக்குள் மாட்டுப்பட்டுள்ள ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டம்

படத்துக்குரிய செலவு - 28 இலட்சத்து 50 ஆயிரமாகும்.

ஒரு பங்கின் பெறுமதி 1000 இலங்கை ரூபாயாகும். (மிக மிக குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பணம் மீளளிப்பிற்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது) இம்முயற்சிக்கு தற்போது உங்களால் இணைய முடியாவிட்டாலும் உங்கள் நண்பர்களுக்காவது இத்தகவலை அறிமுகப்படுத்தி விடும்படி அன்போடு வேண்டி நிற்கிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்

மதிசுதா

 

70485212_2406268776160125_62101116773508

 

ஒப்பந்த விபரம் இத் தொடுப்பில் உள்ளது

https://drive.google.com/open?id=1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1

இதுவரை நான் செய்த குறும்படங்கள் சில....

 

1) பாதுகை

 

2) தாத்தா

 

 

 

  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ம.தி.சுதா

அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறு

ம.தி.சுதா

அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது. யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் ய

நிழலி

வணக்கம் மதிசுதா, என்னால் முதலில் 4 பங்குகள் தலா 10 அமெரிக்க டொலர் படி (இன்றைய மதிப்பின் படி 53.3 கனடிய டொலர்கள் ) இவ் வார இறுதியில் வாங்க முடியும். பணம் அனுப்பும் விவரங்களை சுருக்கமாக தரமுடியுமா?

வணக்கம் மதிசுதா,

என்னால் முதலில் 4 பங்குகள் தலா 10 அமெரிக்க டொலர் படி (இன்றைய மதிப்பின் படி 53.3 கனடிய டொலர்கள் ) இவ் வார இறுதியில் வாங்க முடியும். பணம் அனுப்பும் விவரங்களை சுருக்கமாக தரமுடியுமா?

லைகா போன்ற பெரும் முதலீட்டாளர்கள் தமிழக சினிமாவுக்கு மாத்திரமே உதவிக் கொண்டு இருக்கையில் எமக்கான, எமக்கே எமக்கான ஈழத் தமிழர் சினிமாவை வளர்த்தெடுக்க முனையும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

வணக்கம் மதிசுதா,

என்னால் முதலில் 4 பங்குகள் தலா 10 அமெரிக்க டொலர் படி (இன்றைய மதிப்பின் படி 53.3 கனடிய டொலர்கள் ) இவ் வார இறுதியில் வாங்க முடியும். பணம் அனுப்பும் விவரங்களை சுருக்கமாக தரமுடியுமா?

லைகா போன்ற பெரும் முதலீட்டாளர்கள் தமிழக சினிமாவுக்கு மாத்திரமே உதவிக் கொண்டு இருக்கையில் எமக்கான, எமக்கே எமக்கான ஈழத் தமிழர் சினிமாவை வளர்த்தெடுக்க முனையும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நன்றி   நிழலி

நான்  ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளேன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வணக்கம் மதிசுதா,

என்னால் முதலில் 4 பங்குகள் தலா 10 அமெரிக்க டொலர் படி (இன்றைய மதிப்பின் படி 53.3 கனடிய டொலர்கள் ) இவ் வார இறுதியில் வாங்க முடியும். பணம் அனுப்பும் விவரங்களை சுருக்கமாக தரமுடியுமா?

லைகா போன்ற பெரும் முதலீட்டாளர்கள் தமிழக சினிமாவுக்கு மாத்திரமே உதவிக் கொண்டு இருக்கையில் எமக்கான, எமக்கே எமக்கான ஈழத் தமிழர் சினிமாவை வளர்த்தெடுக்க முனையும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

https://drive.google.com/file/d/1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1/view

இந்த இணைப்பில் தொலைபேசி, ஈமெயில் விபரங்கள் போட்டிருக்கு நிழலி அண்ணா.

  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

https://drive.google.com/file/d/1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1/view

இந்த இணைப்பில் தொலைபேசி, ஈமெயில் விபரங்கள் போட்டிருக்கு நிழலி அண்ணா.

மின்னஞ்சலும், தொலைபேசி இலக்கமும் தான் காணப்படுகின்றன? வங்கி கணக்கு இலக்கம் அல்லது பேபால் போன்ற வசதி இருப்பின் மிகவும் இலகு.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஐந்து பங்குகள் வாஙுகுகிறேன்...!

பே பால் மூலம் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா என்பதை அறியத்தரவும்.....!

  • Thanks 1
Link to comment
Share on other sites

என்னாலும் பங்களிக்க முடியும்.  எப்படி பணம் அனுப்புவது போன்ற விபரங்களை மதிசுதா தருவார் என எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், பத்து பங்குகளை வாங்குகின்றேன்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... மதி சுதா.
மேலுள்ள காணொளிகளை பார்த்தேன்... நன்றாக உள்ளது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களின் படைப்புத்திறன் வெளியே வரவேண்டும். நான் ஐந்து பங்குகள் வாங்கமுடியும்.

பேபால் மூலம் பணம் செலுத்தி பங்குகளை வாங்குவது இலகுவானது என்று நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.  பேபால் மூலம் பங்களிப்புச் செய்வது இலகு. முடிந்தால் பகிரவும்.  எனது பங்களிப்பை செய்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உங்களது ஆக்கங்கள் மிக நன்றாக உள்ளது.... !  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் என்னாலும் பங்களிக்க முடியும்.  எப்படி பணம் அனுப்புவது போன்ற விபரங்களை எதிர்பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

முதலில் இவ் யாழ் களத்திற்கு பெரு நன்றியுடன் பதிலை ஆரம்பிக்கிறேன். காரணம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக முயற்சித்து  என்னால் 129 பேரையே இணைக்க முடிந்தது. ஆனால் யாழ் களத்தில் ஒரு நாளில் இத்தனை பேரை அடையாளம் கண்டிருக்கிறேன் என்பதே எனக்கு பெரு மகிழ்ச்சியாக உள்ளது.

இப் பணச் சேகரிப்புக்கு என ஒரு பொதுக் கணக்கு வைத்திருக்கிறேன். அதைப் பகிர்கிறேன். பணமிடுபவர் பகிரங்கத்திலோ தனிமடலிலோ தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.
crowedfunding என்ற முயற்சியானது ஒட்டு மொத்த இலங்கையில் கூட இன்னும் வெற்றியடையவில்லை. அதனால் இம் முதல் முயற்சி எவ்வித அப்பழுக்கற்றதாக முடித்து வெற்றி அடைந்து எல்லாப் படைப்பாளிகளுக்குமான ஒரு பாதையை திறக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே சில நிபந்தனைகளை இடுகிறேன் யாரும் அதைத் தப்பாக எடுத்து விட வேண்டாம்.

இலங்கைக்கு தனித் தனியே பணம் அனுப்புவது பரிமாற்றச் செலவை அதிகரிக்கும். உங்கள் உங்கள் நாடுகளைத் தெரியப்படுத்தினாலும் பணச் சேகரிப்புக்கு உள்ள எனது நண்பர்களை தொடர்புபடுத்தி விடுகிறேன்.

என்னில் நம்பிக்கை வைத்து இக்குழு உழைப்புக்குள் கால் பதிக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு பெரு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

thillaiampalam suthakaran

account number
1000036907 (current account)
commercial bank
nelliady.

குறிப்பு - இதில் ஆர்வ முள்ள உங்கள் நண்பர்கள் யாருக்காவது இம்முயற்சி பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரியப்படுத்தி விட முடியுமா ?
அடுத்த இரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் காரணம் நவம்பர் 16 க்கு பின் வரும் ஆட்சியாளர் எப்படியோ தெரியாது.

தற்போதுள்ள நல்லாட்சி அரசு (அப்படிச் சொல்லிக் கொள்ளும்) படப்பிடிப்புக்கான அனுமதியை சட்டரீதியாகத் தந்துள்ளது. ஆனால் இனி வரும் அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்குமோ தெரியாது.

 

71219561_1664192167039244_10569762645412

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதி சுதா நானும் பத்து பங்குகளை வாங்குகிறேன். பேபால் மூலமாக பணம் அனுப்புவது இலகுவாக இருக்கும் அதற்கான வசதியை ஏற்படுத்தித் தாருங்கள்

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான முயற்சி, என்னாலும் 10 பங்குகள் வாங்க முடியும், இங்கு மற்றவர்கள் குறிப்பிட்டது போல paypal இலகுவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்குகளும் நிச்சயம் உண்டு. பேபால் விரும்பத்தக்கது.

Link to comment
Share on other sites

அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.

உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது.

யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் யாழ் களத்தின் பலம் என நினைக்கிறேன்.

இலங்கைக்கு paypal பரிமாற்றம் பூரண சேவை வழங்கலில் இல்லை, வெளிநாட்டில் உள்ள ஒருவரை ஒழுங்குபடுத்து விட்டு அவரை இணைத்து விடட்டுமா ?

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ம.தி.சுதா said:

அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.

உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது.

யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் யாழ் களத்தின் பலம் என நினைக்கிறேன்.

இலங்கைக்கு paypal பரிமாற்றம் பூரண சேவை வழங்கலில் இல்லை, வெளிநாட்டில் உள்ள ஒருவரை ஒழுங்குபடுத்து விட்டு அவரை இணைத்து விடட்டுமா ?

 

யாழுக்கும்  சரி

அதன் கள  உறவுகளுக்கும் சரி

ஒரு இலக்குண்டு

அதற்காகவே இங்கே  வருகிறார்கள்

நேரத்தை  செலவளிக்கிறார்கள்

அந்த  குறிக்கோளுக்கு  உடந்தையான  எதையும் ஆதரிப்பார்கள்

பங்களிப்பார்கள்

இது  பலமுறை இங்கே  நிரூபிக்கப்பட்டஉண்மை

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கைக்கு paypal பரிமாற்றம் பூரண சேவை வழங்கலில் இல்லை, வெளிநாட்டில் உள்ள ஒருவரை ஒழுங்குபடுத்து விட்டு அவரை இணைத்து விடட்டுமா ?"  

இணைத்துவிடுங்கள், 

 paypal இலகுவானது

Link to comment
Share on other sites

On ‎9‎/‎20‎/‎2019 at 1:21 PM, ம.தி.சுதா said:

 

இலங்கைக்கு paypal பரிமாற்றம் பூரண சேவை வழங்கலில் இல்லை, வெளிநாட்டில் உள்ள ஒருவரை ஒழுங்குபடுத்து விட்டு அவரை இணைத்து விடட்டுமா ?

மதி, அப்படி ஒருவரை  விடுங்கள்..

கனடாவில் இருந்து இதில் பங்களிக்க விருப்பம் செய்கின்றவர்களுக்கு,

மதியால் அவ்வாறு பேபால் மூலம் அனுப்பும் ஒருவரை இணைக்க முடியாமல் போனால், தனித்தனியாக பணத்தை அனுப்பாமல், ஒருவருக்கு பங்களிப்பை அனுப்ப அவர் பொறுப்பெடுத்து பணம் அனுப்பினால் நல்லம் என நினைக்கின்றேன். 

நான் வரும் புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை பணம் அனுப்ப நினைத்து இருக்கின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முடிவெடுத்திருக்கிறியள்????

எப்படி அனுப்புவது????

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றியுடன்

மதிசுதா

paypal.me/mathisutha

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ம.தி.சுதா said:

அனைவருக்கும் வணக்கம்,

இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றியுடன்

மதிசுதா

paypal.me/mathisutha

பேபால் ஊடாக அனுப்ப முயற்சித்தபோது email/phone number கேட்கின்றது. இந்தக் கணக்கிற்கான email ஐ பகிரமுடியுமா?

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

பேபால் ஊடாக அனுப்ப முயற்சித்தபோது email/phone number கேட்கின்றது. இந்தக் கணக்கிற்கான email ஐ பகிரமுடியுமா?

நன்றிகள்

இதன் மின்னஞ்சல்

mathisutha56@gmail.com

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி சுதா உங்கள் பேபாலுக்கு எனது பங்களிப்பை அனுப்பி வைத்துள்ளேன். சரி பார்க்கவும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.