Jump to content

10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ம.தி. சுதா,

உங்கள் திரைப்பட தயாரிப்பு திட்டத்திற்கு எமது உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் ஊடகங்கள் எப்படியான ஆதரவை இதுவரை தந்துள்ளன?

அண்மைக்காலமாக யூரியூப் தளத்தில் மிகவும் தரமான பல்வேறு நகைச்சுவை மற்றும் பொதுவிடயங்கள் பற்றிய வீடியோக்களை இலங்கையில் உள்ளவர்கள் தயாரித்து வெளியீடு செய்கின்றார்கள். சிமார்ட் போன் வருகை உள்ளூர் மக்களின் திறமைகளை வெளியில் கொண்டு செல்வதற்கு நல்லதோர் தளத்தை கொடுத்து உள்ளது. இவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தாலே பல முன்னேற்றங்களை காணமுடியும் என நான் நினைக்கின்றேன்.

இருபத்து நான்கு சொச்சம் உங்களைப்போன்ற பல சினிமா தயாரிப்பு கலைஞர்கள் உள்ளார்கள் என தெரிவித்தீர்கள். எல்லாரையும் இணைத்து ஏதாவது அமைப்பு உள்ளதா? இது அனைவரினதும் பொதுவான நலன்களை கவனிக்கவும், தயாரிப்பு, வெளியீடுகளை இலகுபடுத்தவும் எதிர்காலத்தில் உதவலாம்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • Replies 52
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ம.தி.சுதா

அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறு

ம.தி.சுதா

அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது. யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் ய

நிழலி

வணக்கம் மதிசுதா, என்னால் முதலில் 4 பங்குகள் தலா 10 அமெரிக்க டொலர் படி (இன்றைய மதிப்பின் படி 53.3 கனடிய டொலர்கள் ) இவ் வார இறுதியில் வாங்க முடியும். பணம் அனுப்பும் விவரங்களை சுருக்கமாக தரமுடியுமா?

அன்பு உறவுகளுக்கு நன்றியும் வணக்கமும்.
எனது திரைப்பட முயற்சியின் வரலாற்றுப் பதிவில் இணைந்து கொண்ட அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் வணக்கம்.

திரைப்படம் தற்போது விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

தங்களது முதலீட்டுக்குரிய பற்றுச்சீட்டுக்கள் அனுப்பி வைத்திருந்தேன். அவை கிடைக்காத யாராவது இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளும்படி அன்போடு வேண்டி நிற்கின்றேன்.

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன் மதிசுதா

  • Like 1
Link to comment
Share on other sites

On 19/9/2021 at 01:18, நியாயத்தை கதைப்போம் said:

வணக்கம் ம.தி. சுதா,

உங்கள் திரைப்பட தயாரிப்பு திட்டத்திற்கு எமது உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் ஊடகங்கள் எப்படியான ஆதரவை இதுவரை தந்துள்ளன?

அண்மைக்காலமாக யூரியூப் தளத்தில் மிகவும் தரமான பல்வேறு நகைச்சுவை மற்றும் பொதுவிடயங்கள் பற்றிய வீடியோக்களை இலங்கையில் உள்ளவர்கள் தயாரித்து வெளியீடு செய்கின்றார்கள். சிமார்ட் போன் வருகை உள்ளூர் மக்களின் திறமைகளை வெளியில் கொண்டு செல்வதற்கு நல்லதோர் தளத்தை கொடுத்து உள்ளது. இவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தாலே பல முன்னேற்றங்களை காணமுடியும் என நான் நினைக்கின்றேன்.

இருபத்து நான்கு சொச்சம் உங்களைப்போன்ற பல சினிமா தயாரிப்பு கலைஞர்கள் உள்ளார்கள் என தெரிவித்தீர்கள். எல்லாரையும் இணைத்து ஏதாவது அமைப்பு உள்ளதா? இது அனைவரினதும் பொதுவான நலன்களை கவனிக்கவும், தயாரிப்பு, வெளியீடுகளை இலகுபடுத்தவும் எதிர்காலத்தில் உதவலாம்.

மிக்க நன்றிகள்

நான் தனியே தான் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் முழுமையாக ஊடகங்களை அணுக முடியவில்லை. சிலர் மட்டும் தாமாகவே செய்தி சேகரித்து பிரசுரிக்கின்றார்கள்.
இங்கு சரியான அமைப்புக்கள் கட்டமைக்கப்படவில்லை. அது உடனே உருவாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. காரணம் அவற்றுக்கான பக்குவநிலையை ஒருமிக்க எல்லோரும் அடைய வேண்டும்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.