Sign in to follow this  
தமிழ் சிறி

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

Recommended Posts

sumanthiran.jpg

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தொடர்பாக நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது.

இது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத செயற்பாடாகும். கடந்த கால் நூறாண்டுகாலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையையே கண்டுவருகின்றோம்.

எவ்வாறாயினும் கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.

http://athavannews.com/நல்லாட்சியை-நடத்தியவர்க/

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, தமிழ் சிறி said:

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

இதைச் சொல்வதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கு.

Share this post

Link to post
Share on other sites

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதைச் சொல்வதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கு.

1 hour ago, goshan_che said:

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

சுமந்திரன் இப்ப வாயை திறந்தது  பயங்கர அரசியல் ராசதந்திரமாம்.ரணில் பிள்ளை நல்லாய் திக்குமுக்காடப்படப்போறாராம்.சர்வதேசத்துக்கு ரணில் பதில் சொல்லியே ஆகோணுமாம்.இந்தியாவும் சிங்களத்தின்ரை கழுத்தை புடிச்சு திருகுமாம்.🤣

# எண்டு ஊர் உலகத்திலை கதைக்கினம்

  • Haha 4

Share this post

Link to post
Share on other sites
55 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரன் இப்ப வாயை திறந்தது  பயங்கர அரசியல் ராசதந்திரமாம்.ரணில் பிள்ளை நல்லாய் திக்குமுக்காடப்படப்போறாராம்.சர்வதேசத்துக்கு ரணில் பதில் சொல்லியே ஆகோணுமாம்.இந்தியாவும் சிங்களத்தின்ரை கழுத்தை புடிச்சு திருகுமாம்.🤣

# எண்டு ஊர் உலகத்திலை கதைக்கினம்

😂. அவங்க அப்பவே அப்படிதான், நாந்தான் பெரிசா எதிர்பாத்திட்டன்😂.

ஆனாலும் இன்னமும் நாங்கள் செய்ததுதான் ராசதந்திரம் எண்டு மீசையை வழிச்சு, மண்ணையும் துடைச்சுபோட்டு திரியேல்ல எண்ட மட்டில் சந்தோசம்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, goshan_che said:

😂. அவங்க அப்பவே அப்படிதான், நாந்தான் பெரிசா எதிர்பாத்திட்டன்😂.

ஆனாலும் இன்னமும் நாங்கள் செய்ததுதான் ராசதந்திரம் எண்டு மீசையை வழிச்சு, மண்ணையும் துடைச்சுபோட்டு திரியேல்ல எண்ட மட்டில் சந்தோசம்.

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

செல்வம் அடைக்கலநாதன் தீர்வு தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லி பல ஆண்டுகள் ஓடிவிட்டத்தையும் மறவாதையுங்கோ!

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, தமிழ் சிறி said:

இது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத செயற்பாடாகும். கடந்த கால் நூறாண்டுகாலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையையே கண்டுவருகின்றோம்.

பிறகெப்படி நிம்மல்  2015 இலிருந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் விட்டால்  தீபாவழி என்று  புதுப்புது தீர்வு படமாக ரிலீஸ் பண்றான் ...நம்மள்  வாயில நல்லா வர்றான்  ஆனால் நிம்மல் திட்டினால் அந்த திட்டிற்கு மரியாதை இல்லை அதனால் நம்மள்  இப்படியே விட்றான்    

Edited by அக்னியஷ்த்ரா

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

போன பொங்கலுக்கு கலப்பை மம்பெட்டி தூக்கினவர்தானே? அண்ணர் ஒருபோதும் பேச்சு தவறார்.

5 hours ago, puthalvan said:

செல்வம் அடைக்கலநாதன் தீர்வு தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லி பல ஆண்டுகள் ஓடிவிட்டத்தையும் மறவாதையுங்கோ!

இது ஒரு எழுத்து பிழையால் ஏற்பட்ட மயக்கம். அவர் சொன்னது உண்ணும் விரதம். அதை ஆள் இன்னும் வலு இறுக்கமாக கைக்கொள்வதை அவரின் பருமனை வைத்தே அறியலாம்.

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, goshan_che said:

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

இதிலும்  நாம்  ஒரே கருத்துடன்  இருப்பது  மகிழ்வு  தருகிறது

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On ‎9‎/‎19‎/‎2019 at 1:19 PM, தமிழ் சிறி said:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல். எனவே, கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்லவேண்டிய தேவை.

எதை மக்களை சொல்வது? தங்களுக்கு தேவையானதை கூறி மக்களை நம்ப வைக்க வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு அவர்கள் தயார்படுத்தும் ஒரு யுக்தியாக 'சனாதிபதி ஆட்சி முறை, நல்லாட்சி' என தவறுகளை மற்றையவர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டார்கள்.

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, ampanai said:

தேர்தல். எனவே, கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்லவேண்டிய தேவை.

எதை மக்களை சொல்வது? தங்களுக்கு தேவையானதை கூறி மக்களை நம்ப வைக்க வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு அவர்கள் தயார்படுத்தும் ஒரு யுக்தியாக 'சனாதிபதி ஆட்சி முறை, நல்லாட்சி' என தவறுகளை மற்றையவர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டார்கள்.

roflphotos-dot-com-photo-comments-20190705171814.jpg

அதானே... எலி,  ஏன்.... "யங்கி"   போட்டுக் கொண்டு, ஓடுது என்று, யோதித்தேன். :grin:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this