Jump to content

மிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.jpg

மிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை!

தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப்பெரிய போராக வெடிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது குறை கூறி வரும் நாடுகள், தாக்குதல் மிரட்டல் விடுத்து வருகின்றன.

அவ்வாறு எங்கள் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டால் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க மாட்டோம். அந்தத் தாக்குதல் முழுமையான, மிகப் பெரிய போராக வெடிக்கும்’ என கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவின் அப்காய்க் பகுதியிலுள்ள மசகு எண்ணெய் ஆலையிலும், குராயிஸ் பகுதியிலுள்ள எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக குறித்த ஆலைகளில் தீப்பிடித்தது.

இந்தத் தாக்குதலுக்கு யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

யேமனில் தங்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், அந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மிகப்பெரிய-போர்-வெடிக்கு/

Link to comment
Share on other sites

அரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்

ஜனா­தி­பதி ட்ரம்ப் சீனா­வுடன் வர்த்­த­கப்­போரை உரு­வாக்­கினார். ஆனால் நிஜ­மான நீண்­ட­கா­லத்தில் தீமை பயக்கும் போர்­களை ஏற்­ப­டுத்­து­வதில் தயங்­கி­ய­வ­ராக காணப்­ப­டு­கிறார். அமெ­ரிக்க முன்னாள் பாது­காப்பு உதவி அமைச்சர் நில­வரம் பற்றி ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிக்­கையில் அமெ­ரிக்கா, யேமனில் நடை­பெறும் உள்­நாட்டு யுத்­தத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என்றார். ஜனா­தி­பதி ட்ரம்ப் உரத்­துப்­பே­சுவார் வார்த்தை ஜாலங்­களை அள்ளி வீசுவார். ஆனால் யுத்­தங்­களை ஆரம்­பிக்க தயங்­குவார். கூறி­ய­வற்றை நிறை­வேற்­ற­மாட்டார் எனவும் அவர் கூறினார்.

அமெ­ரிக்­காவில் 2020 இல் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட விரும்பும் ஜன­நா­யகக் கட்சி செனட்டர் சாண்டால் ஈரா­னுடன் மோது­தலை தவிர்க்க வேண்டும் என்றார். ஜனா­தி­பதி யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்த முடி­யாது. அமெ­ரிக்க பாரா­ளு­மன்­ற­மான காங்­கிரஸ் மட்­டுமே யுத்தப் பிர­க­டனம் செய்யும் அதி­கா­ர­மு­டைய நிறு­வ­ன­மாகும் எனக் கூறினார். சர்­வா­தி­கார சவூதி அர­சாங்­கத்தின் கொடு­மை­க­ளுக்கு அமெ­ரிக்கா துணை போகக்­கூ­டாது என்றும் மத்­திய கிழக்கில் இன்­னு­மொரு யுத்­தத்தை ஆரம்­பிக்­கக்­கூ­டாது எனவும் தெரி­வித்தார். ஈரான், அமெ­ரிக்கா தக­ராறு மத்­திய கிழக்கில் இன்­னு­மொரு யுத்­தத்தை தோற்­று­விக்­குமா என்­பது உலகம் பூராவும் பல ஊட­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

https://www.virakesari.lk/article/65280

Link to comment
Share on other sites

செளதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: “பதிலடி கொடுக்கப்படும் ” - வெளியுறவுத் துறை அமைச்சர்

கடந்த வாரம் செளதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகத் தேவையான நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுக்கப்படும் என செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னால் இரான் இருப்பதாக அந்நாடு மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளது.
 

செளதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அடெல் அல் ஜுபேர், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இரான் நாட்டை சேர்ந்தது என்றும், விரைவில் விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தனக்கும் இந்த தாக்குதலுக்கு எந்த தொடர்பும் இல்லை என இரான் தெரிவித்துள்ளது.

முன்னதாக, செளதி அரேபியாவுக்குப் படைகளை அனுப்புவதாக அமெரிக்க அறிவித்திருந்த நிலையில், இரானின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், தாக்குதல் தொடுக்க வரும் யாரையும் அழிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

செப்டம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இதற்குப் பொறுப்பேற்றனர்.

அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே இருந்து வந்த பதற்றம், இரானின் அணு ஆயுத செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்கா வெளியேறி, இரான் மீது மீண்டும் தடைகளை விதித்திலிருந்து அதிகரித்தது.

ரியாதில் செய்தியாளர்களிடம் பேசிய ஜுபேர், செளதி அரசு தங்களின் கூட்டணி நாடுகளுடன் ஆலோசித்து வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை.

மேலும் இந்த தாக்குதல்கள், அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் குராசிஸ் எண்ணெய் வயலில் நடத்தப்பட்ட தாக்குதல் வடக்கு திசையிலிருந்து வந்ததாகவும், ஏமனிலிருந்து வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அது எங்கிருந்து நடத்தப்பட்டிருக்கும் என்று குறிப்பாக கூறவில்லை.

மேலும் சர்வதேச நாடுகள் இது குறித்து ஒரு தரப்பை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கு உள்ளது என்றும், சர்வதேச பொருளாதாரத்தை அச்சுறுத்திய இந்த தாக்குதலுக்கு திடமான மற்றும் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, ட்ரோனின் மிச்சங்கள், மற்றும் ஏவுகணைகள் காண்பித்து இது இரானின் செயல்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது என்றும் கூறியது.

இந்த தாக்குதலுக்கு இரான் தான் காரணம் என அமெரிக்காவும் குற்றம் சுமத்தியிருந்தது. பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தாக்குதல்க இரானின் தெற்கு பகுதியில் இருந்து நடத்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வெள்ளியன்று பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் செளதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கப் படைகளை அனுப்புவதாக தெரிவித்தார்.

அதன்பின் இரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் இரான் மீது புதிய தடைகளை விதித்தார். நாட்டின் மத்திய வங்கி மற்றும் இரானின் முதலீட்டு நிதியத்தை இலக்கு வைத்து இந்த தடை விதிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49785747

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.