Sign in to follow this  
தமிழ் சிறி

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை

Recommended Posts

police-1.jpg

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்:  சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

கல்வியங்காடு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு, வழிபாட்டுக்குச் சென்ற பெண் ஒருவரின் சுமார் 98 ஆயிரம் பெறுமதியுடைய தங்க நகைகளைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

அவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, பொலிஸ் உத்தியோகத்தர் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

பின்னர் சந்தேகநபருடன் பேசுவதற்காக அருகில் சென்ற போது, பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அவர் அறைந்தார். அத்துடன் உமிழ் நீரை பொலிஸ் உத்தியோகத்தரின் மீது துப்பினார்.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடமிருந்து விலகிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் அவரை முற்படுத்தி முதல் அறிக்கையை முன்வைத்தார்.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 30 திகதி நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பொலிஸ்-உத்தியோகத்தர்-மீ-2/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சர்வதேச செய்தி நிறுவனம் இலங்கை ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ' தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர் ' என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.   அத்தோடு இன்று வியாழக்கிழமை கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய கடிதம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை ஆயுத படைகளுக்கும் LTTE பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் இன ஒழிப்புக்கு கடந்த 17 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவே பொறுப்பு கூறக் கூடிய இராணுவத்தலைவர் என குறித்த செய்திச்சேவை விமர்சித்தமைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். உண்மையில் இறுதி யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்கினார்கள். இதே போல் இலங்கை ஆயுத படைகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பி.பி;.சி பல தடவைகள் வெளியிட்டு வந்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பாதுகாக்கும் வகையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றோம்   (எம்.மனோசித்ரா) https://www.virakesari.lk/article/69447
  • ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கேள்வி:- இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து சென்றிருப்பது குறித்தும் இந்த சந்திப்பின் பின்னர் கோத்தாபய இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன? பதில்:- ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டு. அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளது. அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசுக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும். தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையுங் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். ஆகவே, இறுதி தீர்வு தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும். ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசிடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம் – என்றுள்ளது. https://www.virakesari.lk/article/69442
  • அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது. டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலியா, துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. ஆஷஸ் தொடரில் 3 சதம், 3 அரைசதம் உட்பட 774 ஓட்டங்கள் குவித்து வியப்பூட்டிய ஸ்டீவன் ஸ்மித் அந்த அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்டில் விளையாட உள்ளார். அவருடன் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சேன், ஜோ பர்ன்ஸ் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். பிரிஸ்பேனில் 1988ஆம் ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணி ஒரு போதும் தோற்றது கிடையாது. அதன் பிறகு 30 டெஸ்ட்களில் ஆடியுள்ள அவுஸ்திரேலியா 23இல் வெற்றியும், 7இல் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதும் குறிப்பிடத்தக்கது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம், இமாம் உல்-ஹக், ஹாரிஸ் சோகைல், ஷான் மசூட் என்று திறமையான துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். ஆனால் அவுஸ்திரேலிய பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. ஸ்டீவன் ஸ்மித்தை கட்டுப்படுத்தினால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் – ஹக் நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியில் ‘ஸ்டீவன் ஸ்மித் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவதற்கு சில திட்டங்கள் வைத்துள்ளோம். ஓப்-ஸ்டம்புக்கு சற்று மேல்வாக்கில் பந்து செல்லும் வகையில் அவருக்கு பந்து வீச வேண்டும். அதுவும் இடைவிடாது ஒரே பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் அவருக்கு நெருக்கடி உருவாகி, தவறிழைக்க வாய்ப்பு உண்டு. இந்த வியூகத்தை எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் அலைவரிசை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. https://www.thinakaran.lk/2019/11/21/விளையாட்டு/44172/அவுஸ்திரேலியா-பாகிஸ்தான்-முதல்-டெஸ்ட்-இன்று-ஆரம்பம்
  • Thursday, November 21, 2019 - 6:00am அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என கமல் கூறினார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என கூறினார். ரஜினி - கமல் இணைப்பு குறித்து அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் நிருபர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை. மேலும் ஒன்றும் ஜீரோவும் சேர்ந்தால் தான் எண், ஆனால் இங்கு யார் ஒன்று என நான் கூறவிரும்பவில்லை என்றார். https://www.thinakaran.lk/2019/11/21/இந்தியா/44194/முட்டையும்-முட்டையும்-சேர்ந்தால்-முட்டைதான்
  • ரணில் Twitter இல் இதை பகிர்ந்துள்ளார்.