• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • 2019 ஜனாதிபதி தேர்தல் உணர்த்திய – வராற்றுச் சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. விட்டுக் கொடுப்புக்கு இடமில்லாத – அதிகாரப் பகிர்வுக்கு சம்மதிக்காத ஒருவரை சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து எதிர்த்ததன் மூலம் – அடிப்படை அனைவருக்குமான பொதுத் தேவை அதிகாரப் பகிர்வு என்பதையே உணர்த்தியுள்ளது. எனவே, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் தலைமைகளும் தனி நலன்களைத் துறந்து ஒன்றிணைவதன் மூலம், அனைத்து இனங்களும் சரிநிகர் சமானமாக – உரிமைகள் பெற்றவர்களாக தலைநிமிர்ந்து வாழமுடியும். இதுபற்றி சாத்தியப்பாடுகள் – ஏற்பாடுகள் உடனடியாக நிகழ்ந்து விட முடியாது என்பது யதார்த்தம். ஆனால், இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால் சிறுபான்மை இனங்கள் எவற்றுக்கும் தீர்வு என்பதே கிடையாது. அரசுக்கு முட்டுக் கொடுக்கும் இனங்கள் – தலைமைகள் சலுகைகளை – சுகபோகங்களை அனுபவிக்க முடியுமே தவிர உரிமைகளையோ – சுதந்திரத்தையோ அனுபவிக்க முடியாது. இதேபோன்று, இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம். வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…? -தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –  
    • இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்ற வழக்கிலிருந்து விடுதலை 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ (கோப்புப்படம்) பாரிய நிதி மோசடி தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளிலிருந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிக்க மேல் மாகாண மூவரடங்கிய விசேட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.ஏ.ராஜபக்ஷ் நினைவுஅருங்காட்சியகம் நிர்மாணிப்பதில் மூன்று கோடியே 39 லட்சம் ரூபா அரசாங்கத்திற்கு சொந்தமான நிதி கடந்த மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சிக் காலத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு, கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட 7 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக கோட்டாபய ராஜபக்ஷ் பெயரிடப்பட்டிருந்தார். இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணைகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தொடர முடியாது என சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான அரச பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதன்படி, இந்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை அந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கமைய, இந்த வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிணை கையெழுத்திட்டவர்களையும் அதிலிருந்து விடுவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 சந்தேகநபர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த நீதிமன்றத்தை தெளிவூட்டுமாறு நீதிபதிகள குழாம், சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவின் கடவூச்சீட்டை மீள அவருக்கு வழக்குமாறும் மேல்நீதிமன்ற பதிவாளருக்கு விசேட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/india-50499370
    • SAG செல்லும் மெய்வல்லுனர்களுக்கு விசேட உடற்தகுதி பரிசோதனை By Mohammed Rishad -   நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து இலங்கை மெய்வல்லுனர்களுக்கும் விசேட உடற்தகுதி பரிசோதனையொன்றை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.  அத்துடன், வீரர்களினது போட்டித் திறனை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் விசேட போட்டித் தொடரொன்றையும், அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான சுவட்டை தீர்மானிப்பதற்கான போட்டியொன்றும் இதன்போது நடைபெறவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இந்த விசேட பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தெரிவாகியுள்ள அனைத்து மெய்வல்லுனர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச விளையாட்டு விழாவொன்றை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர்களுக்கு வழங்கப்படுகின்ற முதலாவது உடற்தகுதி பரிசோதனையாக இது வரலாற்றில் இடம்பெறவுள்ளது. இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் அதிக பதக்கங்களை வெல்கின்ற போட்டி நிகழ்ச்சியாக கருதப்படுகின்ற மெய்வல்லுனரில் 34 வீரர்களும், 24 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.  அத்துடன் இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் முதல்தடவையாக தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் தெரிவாகிய 66 வீரர்களில் 58 பேரை மாத்திரம் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு அழைத்துச் செல்ல இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தெரிவாகியுள்ள அனைத்து மெய்வல்லுனர்களும் தற்போது கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு மற்றும் டொரின்டன் மைதானத்தில் தமது பயிற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்கள் மாத்திரம் தியத்தலாவையில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேநேரம், தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மெய்வல்லுனர் குழாம் எதிர்வரும் 28ஆம் திகதி நேபாளம் நோக்கி பயணமாகவுள்ளது. http://www.thepapare.com/compulsory-fitness-test-for-the-sri-lankan-sag-squad-translation-tamil/