Jump to content

தமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா?

Editorial / 2019 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை, பி.ப. 06:54 Comments - 0

image_1909c59829.jpg

ஜனாதிபதித் தேர்தலுக்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன; சில அறிவிக்கவில்லை. சில பிற கட்சிகளின், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுகின்றன. தேர்தலைச் சுற்றி, மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பேசுபொருளாகியுள்ளது.   

தமிழர்கள், வாக்களித்தும் புறக்கணித்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், தமிழர்களின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் வண்ணம், மாற்றங்கள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை, நாம் இப்போது கேட்டாக வேண்டும். 

‘சமாதானப் புறா’ சந்திரிக்கா அம்மையார் முதற்கொண்டு, ‘நல்லாட்சி’யின் நாயகன் சிரிசேன வரை, எமது தேர்தல் தெரிவுகள், எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாமறிவோம். 

இந்தப் பின்புலத்திலேயே, இன்னொரு ஜனாதிபதித் தேர்தலைத் தமிழர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.   

ஜனநாயகத்தின் அடிப்படை, தேர்தல்கள் என்று சொல்லப்பட்டாலும் தேர்தல்களே, ஜனநாயக மறுப்பை நியாயப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைவதை, இலங்கையில் கண்டுள்ளோம். 

ஜனநாயகத் தேர்தல்களின் வழி தெரிவானோரே, ஜனநாயக மறுப்பாளர்களாகவும் ஏதேச்சாதிகாரத்ததைப் பயன்படுத்துவோராகவும் இருக்கிறார்கள். 

இதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வலுச்சேர்க்கிறது. அவ்வாறானதொரு நபரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், சாதிக்கப்போவது என்ன என்பதைப் பற்றி, யாரும் பேசக் காணோம்.   

இன்று, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலும் அந்நியக் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கின்றது. இதைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் குறித்த உரையாடல்கள், எங்கும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. 

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில், வேட்பாளர்களின் நிலைப்பாடுகள், நழுவல் போக்குடையவையாகவே உள்ளன. இலங்கையின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான இனப்பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டாத, தீர்வை முன்வைக்காத வேட்பாளர்களுக்கு
இடையிலான தேர்தலால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?    

இப்போது, இலங்கையர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது கவனம் குவியா வண்ணம், பார்த்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் கவனத்தைத் திருப்பி, வாக்காளர்களை இலக்கு வைத்துப் பேரினவாத, குறுந்தேசிய உணர்வுகளைக் கிளறும் பொறுப்பற்ற கதைகள் பெருகுகின்றன. நாடாளுமன்ற அரசியல்வாதிகளின் நம்பகம் வீழ்கையில், அதிகாரத்தின் மீதும்  பதவியின் மீதும் சொத்துகளின் மீதும் கொண்ட ஆவலால் உந்தப்படும் அரசியல்வாதிகளின் பச்சையான சந்தர்ப்பவாதம் காரணமாக, அவர்கள் மீது மக்களின் வெறுப்புக் கூட்டியுள்ளது.   

இத்தகையதோர் அரசியல் குழப்பச் சூழலில், உண்மையாகவே மக்களை நோக்கிய சாத்தியமானதோர் அரசியல் மாற்று இருப்பின், அது வலியதொரு வெகுசன இயக்கத்தின் தோற்றத்துக்கும் மக்களின் நலனுக்கான அடிப்படை அரசியல் மாற்றத்துக்கும் வழிகோலும். ஆனால் அதற்கான வாய்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.   

அனைத்துத் தேசிய இனங்களினதும் சமத்துவத்தினதும் அதிகாரப் பரவலாக்கலினதும் சுயநிர்ணய உரிமையினதும் அடிப்படையில், தேசிய இனப்பிரச்சினையை விளிப்பதும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்பதுமான ஓர் அயற்கொள்கையைக் கடைப்பிடிப்பதுமான ஒரு தேர்தல் கொள்கைப் பிரகடனத்துடன் ஒரு வேட்பாளரை அடையாளம் காண முடியுமா என்பதே, இத்தேர்தலின் பெரிய சவால். அவ்வாறான ஒரு வேட்பாளரைத் தெரியும் வரை அமைதி காப்பது நலம்.   

குறித்தவொரு வேட்பாளருக்குத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருவோரிடம், தமிழ் மக்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள் என்ன? அவற்றுக்கான பதில்களைப் பெற்ற பின்னர், தேர்தல் குறித்தும் வக்களிப்பது குறித்தும் சிந்திக்க வியலும்.   

1. இலங்கை இனப்பிரச்சினை குறித்து, வேட்பாளரின் நிலைப்பாடு என்ன?  

2. இலங்கையின் தேசிய இனங்கள் அனைத்துக்குமான சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கத் தயாரா?  

இவ்விரண்டு கேள்விகளுடனும் தொடங்கலாம். இலங்கையில் ஏனைய சிறுபான்மையினரின் உரிமைகள் வழங்கப்படும் வரை, தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்போவதில்லை. எனவே, இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினரினதும் உரிமைகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்படும் வரை, தமிழ் மக்களுக்கு எதிர்காலம் கேள்விக்குறியே என்பதை நினைவில் வைத்திருப்பது நலம்.   

தேர்தல்கள் அதிகாரத்துக்கான ஆவலின் விளைவால் உந்தப்படுபவை. அவை, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை; இனியும் அவ்வாறு இருக்கப்போவதில்லை.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-தலைவிதியை-தேர்தல்கள்-தீர்மானிக்குமா/91-238895

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.