Sign in to follow this  
ampanai

தோனியின் காலம் முடிந்து விட்டது - சுனில் கவாஸ்கர்

Recommended Posts

மகேந்திர சிங் தோனியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், அவருக்கு அடுத்ததாக இருக்கும் ரிஷாத் பந்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

sunil-gavaskar1-jpg_710x400xt.jpg

உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக தோனியின் துடுப்பாட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே நடந்துவரும் இருபதுக்கு 20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்திய அணியில் முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர்,

தோனியின் காலம் முடிந்துவிட்டது. இனிமேல் தோனிக்கு அடுத்த இடத்தில் யாரைக் கொண்டுவருவது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். என்னுடைய கருத்து அடுத்த ஆண்டு நடக்கும் இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிக்கு ரிஷப் பந்தை தயார் செய்ய வேண்டும்.

ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும்.

அடுத்து நடக்கும் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் கூட தோனியைத் தேர்வு செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அவருகுப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கலாம்.

ஒருவேளை ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம். சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்றார்.

https://www.virakesari.lk/article/65192

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை  விடுவிக்கப்படவுள்ளன.  படையினர் வசமிருந்து விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு நாளை அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. நாளை காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவிக்கின்றது.     படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் அண்மையில் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டபோது, மேலும் சில காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை விடுவிக்கப்பட ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தெரிவித்திருந்தார்.   நாளை கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள இராணுவ தளபதி, குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பான ஆவணங்களைக் கையளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/67098
  • (எம்.நியூட்டன், ஆர். யசி) யாழப்பாணத்தில் சர்வதேச விமானநிலையத்தை அமைத்து உலகத்தரத்துடன் இணைத்தது போன்று நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புத் தரவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டியில் 70 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை குறிப்பாக அரசியல் தீர்வுகள் ஏற்படவில்லை இப்போது தேர்தல் காலம் என்பதால் அதைப் பற்றி பேச விருப்பவில்லை எவ்வளவு விரைவாக எவ்வளவு ஆற்றல் திறனுடன் இந்த நாட்டின் அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவின் பணிப்பில் இயங்கும் செயலாளர்கள் ஊழியர்கள் பணிப்பாளர்கள் திறம்பட விரைவா இயங்கி இந்த விமாநிலையத்தை உலகத்துடன் இணைக்க சேவையாற்றியது போல இந்த மக்களின் துன்ப துயரங்களையும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் ஒரு அரசியல் தீர்வைத் அடைவதற்கு எல்லோரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பல்வேறு அபிவிருத்திகள் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மயிலிட்டித் துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளபோதும் அப்பகுதி மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. பலாலி விமானத்தளத்திற்கு கிழக்கு புறமாக இருக்கும் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இரண்டாயிரம் குடும்பங்கள் இப்போதும் அகதிகளாக நிலமற்றவர்களாக இருக்கிறார்கள் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார். https://www.virakesari.lk/article/67111
  • "ஜனாதிபதி வேட்பாளர் எவருக்கு தமது ஆதரவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்காத நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் இந்த பரப்புரை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்." இதுவும் ஆயிரத்தில் ஒரு தேர்தல் வன்முறையாக கடந்து போகும்.
  • நீங்கள் எதையும் தலைகீழாக தான் வாசித்து புரிந்து கொள்வீர்கள். மதபோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக தடை உள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கவில்லை என கூறியிருந்தேன். மற்றும்படி ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கு அனுமதி தேவை. அனுமதியில்லாமல் கண்டபடி யாரும் மதபோதனை செய்ய முடியாது. நீங்கள் தான் தமிழை படிக்க வேண்டும். உங்களுக்கு தான் தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.
  • Airlines and destinations[edit] Passenger[edit] Airlines Destinations Air Senok Charter: Colombo–Ratmalana Alliance Air Chennai[32] FitsAir Charter: Colombo–Ratmalana, Trincomalee Helitours Colombo–Ratmalana, Trincomalee Millennium Airlines Charter: Colombo–Bandaranaike, Colombo–Ratmalana SriLankan Airlines operated by Cinnamon Air Charter: Colombo–Bandaranaike