Jump to content

எனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் - காலநிலை மாற்ற பேரணியில் பத்து வயது மாணவன்- அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்


Recommended Posts

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன.

clic5.jpg

அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணிகளிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

மேலும் தங்கள் பணியாளர்களிற்கு விடுப்பினை வழங்கியுள்ளனர்.

clic4.jpg

காலநிலை குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மெல்பேர்ன் சிட்னி பிரிஸ்பேர்ன் போன்ற நகரங்கள் மத்திய பகுதிகள் செயலிழந்துள்ளன.

மெல்பேர்னில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் சுமார் 150,000ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் 80,000 பேரும்,பிரிஸ்பேர்னில் 35,000 பேரும் கலந்துகொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்ட பத்து வயது மாணவன் பார்க்கர் ரென்சோ நான் எனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளான்.

cli_c1.jpg

நான் பாடசாலைக்கு செல்லவேவிரும்புகின்றேன் ஆனால் இது அங்கிருப்பதற்கான தருணமல்ல அரசாங்கம் எங்களை இங்கு வரச்செய்துள்ளது என மாணவன் தெரிவித்துள்ளான்.

எனது கல்வி முக்கியம் அதனை விட உலகம் முக்கியம் என அந்த மாணவன் தெரிவித்துள்ளான்.

நாங்கள் இதனை நிறுத்தவேண்டும் என்பதால் நான் இங்கு வந்துள்ளேன் என அடிலெய்ட் பேரணியில் கலந்துகொண்ட மாணவன் ஒருவன் தெரிவித்துள்ளான்.

காலநிலைமாற்றம் மிக வேகமாக இடம்பெறுகின்றது நாங்கள் அதனை சரிசெய்யாவிட்டால் எவரும் அதனை செய்யமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

In Canberra and Kabul, Cape Town and Berlin, and across the globe, hundreds of thousands of people took the streets Friday to demand that leaders tackle climate change in the run-up to a U.N. summit.

Many were children who skipped school to take part in the second "Global Climate Strike," following a similar event in March that drew large crowds.

Events kicked off in Australia, where protesters marched in 110 towns and cities, including Sydney and the national capital, Canberra. Demonstrators called for their country, the world's largest exporter of coal and liquid natural gas, to take more drastic action to reduce greenhouse gas emissions.

"Even though we ourselves aren't sick, the planet which we live on is, and we are protesting and fighting for it," said Siobhan Sutton, a 15-year-old student at Perth Modern School.

https://www.france24.com/en/20190920-australia-global-climate-strike-greta-thunberg-united-nations-youth-summit

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றம் சம்பந்தமாக ஜேர்மனியில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று இன்று நாடு தழுவிய போராட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
 சீனாவில் முதலீடு செய்வதையும்....அந்த நாட்டின் தயாரிப்புகளை வாங்குவதை நிறுத்தினாலுமே பூமியின் அரைப்பங்கு காலநிலை சீரழிவை நிறுத்தமுடியும்.

Link to comment
Share on other sites

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகலாவிய போராட்டம் - நாமும் இணைவோம்!

 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 6 பà¯à®°à¯, à®à¯à®à¯à®à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

 

 

 

காலநிலை கவனயீர்ப்பு - 80000 மக்கள் திரண்டனர் சிட்னியி்ல்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®©à¯à®±à¯ à®à®²à¯à®²à®¤à¯ à®à®¤à®±à¯à®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® நபரà¯à®à®³à¯, à®à¯à®à¯à®à®®à¯, வானமà¯, மரம௠மறà¯à®±à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.