சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • உலகில் நமக்கு யாருமே இல்லை என்று நாம் சொல்லிக்கொள்ள நாமே தான் காரணம். ஒன்றில்.. ஹிந்தியாவை நம்புவோம். இல்லை அகதியாய் போய்க்குந்தின.. மேற்குலகை நம்புவோம். எல்லாரும் கைவிட்டால்.. அடிச்சு உதைக்கிற சிங்களவனே தஞ்சம் என்று ஆவோம். இது தான் எங்களுக்கு உலகில் யாருமில்லை என்பதற்கான காரணம். பலஸ்தீனர்கள் அப்படியல்ல. அவர்கள் உலகில் எல்லாப் பகுதிகளிலும் தமது நேச சக்திகளைக் கொண்டிருக்க பிரச்சாரங்களையும் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். பாகிஸ்தானும் அவர்களுக்கு ஆதரவு.. இந்திரா காந்தியின் ஹிந்தியாவும் அவர்களுக்கு ஆதரவு. பிரேசிலும் ஆதரவு.. ஆர்ஜன்டீனாவும் ஆதரவு. சீனாவும் ஆதரவு ரஷ்சியாவும் ஆதரவு. இந்த அணுகுமுறையே.. பின்னர் மேற்குலகும் அவர்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. நாம் என்ன செய்கிறோம்.. ஒன்றில்.. ஹிந்தியா.. இல்லை அமெரிக்கா. இந்த இரண்டுமே எமக்கான நேச சக்தி கிடையாது. அது பிராந்திய நலன் விரும்பிகள் அவ்வளவே. எமது விடுதலைப் போராட்டத்தை இலகுவாக பயங்கரவாதம் என்று சொல்லி நசுக்க... நாம்.. சர்வதேச மயப்படாமையும் ஒரு காரணம். நாம் மேற்குலக மயமானதை சர்வதேச மயம் என்று தப்புக் கணக்குப் போட்டதன் விளைவு இது. மேலும்.. கோத்தா சிவாஜி கத்தித்தான்.. மாவீரர் தினத்தை தடுப்பார் என்றில்லை. மகிந்தவே தடுத்தவர் தான். ரணில் அனுமதித்த போதும் கடுமையாக எதிர்த்தவர்கள் மகிந்த கும்பல். எனவே சிவாஜின் எதிர்பார்ப்பு ஒன்றும் தவறல்ல. கோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேன் என்றவர் சிவாஜி. ஆனால்.. கோத்தாவை எதிர்த்தவர்களாக காட்டிக்கொண்ட.. சம் சும் கும்பல்.. ஆனந்த சங்கரி.. போன்ற காட்டிக்கொடுப்பாளர்கள்.. ஓடிப்போய் வாழ்த்தி விட்டார்கள். இப்ப என்ன மலையகத்தில் தமிழன் மீது அடி உதை.  இதுக்காகவா வாழ்த்தினீர்கள். மகிந்த கும்பலைப் பற்றிய சரியான புரிதல் இன்மையே.. சிவாஜி மீதான அவதூறு என்றே நான் கருதுகிறேன். அதற்காக சிவாஜி தூய்மையான அரசியல்வாதி என்று சொல்லவில்லை. அவர் எதை எதிர்த்தாரோ.. அது அப்படியே நிகழ் வாய்ப்பு இருக்கிறது வெளிப்படை. ஆனால்.. எம்மில் சிலர்.. கோத்தா மறந்து போய் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிப்பார் என்று கனவு காண்பது தான் சிவாஜியின் கூத்தை விட மோசமாக உள்ளது. 
  • உயிருக்கு போராடிய காகமும், காப்பாற்றிய மனிதரும் - நெருங்கிய நண்பர்களானது எப்படி? நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக 39 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க Image captionசெல்வராஜ் மற்றும் அவரது நண்பரான காகம் ஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன? நம்பும்படியாக இல்லையா? இக்கட்டுரையை படியுங்கள். புதுச்சேரியில் உள்ள ரிக்ஷா ஓட்டுநர் செல்வராஜ்தான் அந்தக் காகத்தின் நெருங்கிய நண்பர். புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம் அருகில் சுமார் 50 ஆண்டுகளாக ஒரு சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்ட் இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றலா பயணிகள் இங்கிருக்கும் சைக்கிள் ரிக்ஷாவில் சவாரி செய்து புதுச்சேரியை சுற்றி பார்க்க பெரிதும் விரும்புவர். இதே சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள 56 வயது செல்வராஜ் இந்த சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலை அவரது தந்தை ஆறுமுகம் அவர்களை தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக செய்துவருகிறார். இந்த ரிக்ஷா ஸ்டாண்ட் அருகில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காகம் ஒன்று அடிபட்டு பறக்க முடியாமல் தவித்து வந்தது. இதைக் கண்ட சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி செல்வராஜ் காகத்திற்கு தண்ணீர் கொடுத்து அருகே உள்ள நாய் பூனை போன்ற பிராணிகளால் காகத்திற்கு தொல்லையேதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் காகத்தை வைத்துப் பாதுகாத்தார். உடல் நலம் பெற்று பறந்து சென்ற காகம் அடுத்த நாள் முதல் செல்வராஜ் இருக்கும் இடத்திற்கு அருகில் செல்வதும் அவரை சுற்றி சுற்றி பறந்து திரிவதுமாய் இருந்தது. காகம் தன்னை சுற்றி வருவதை கண்ட செல்வராஜ் அதற்கு உணவு கொடுத்தார். நாட்கள் செல்ல செல்ல காகம் அவரிடம் நெருக்கமாக தொடங்கியது, வேறு இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து அந்த சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்ட் அருகாமையில் உள்ள மரத்திலே தனது கூட்டையும் கட்டியது காகம். ரிக்ஷா வண்டியில் செல்வராஜ் அமர்ந்திருக்கும் போது அவர் அருகில் சென்று கரைவது, அவர் மேலே உட்காருவது, அவர் சாப்பிடும் நேரங்கில் அவருடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவில் செல்வராஜுடன் காகம் நெருங்கி பழகியது. தினமும் காலை, மதியம் என இரு வேளைகளிலும் செல்வராஜுடன் சாப்பிடும் காகம், சாப்பிட்ட பிறகு அவரிடம் உணவை வாங்கி சென்று தனது குஞ்சுகளுக்கும் ஊட்டிவிட்டு வரும். இப்படி கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து வரும் இவர்களது நட்பு அங்கே உள்ள சக ரிக்ஷா வண்டி தொழிலாளர்களின் மத்தியில் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. "செல்வராஜை தவிர வேறுயார் அருகிலும் அது செல்லாது என்றும் வேறுயார் உணவு கொடுத்தாலும் அதை சாப்பிடவும் செய்யாது என்றும் சக ரிக்ஷா தொழிலாளிகள் சொல்கின்றனர்". மனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது? 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது? இது குறித்து செல்வராஜ் சொல்லும்போது, "கடவுள் கொடுத்த பாக்கியத்தால் தான் இப்படிப்பட்ட காகத்தின் நட்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காகத்தை எனது குடும்பத்தில் ஒருவனாக பார்க்கிறேன். நான் கொண்டுவரும் உணவுகளில் மீன், பூரி, முட்டை, தோசை போன்றவற்றை விரும்பி சாப்பிடும். சாப்பிடும்போது விளையாட்டாக வேறு காகத்திற்கு உணவை கொடுத்தால் கோபம் வந்து என்னை கொத்தவும் செய்யும். என்மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் நான் இல்லாத நேரங்களில் எனது ரிக்ஷா நிற்கும் இடத்தில் வந்து கரைத்துக்கொண்டே இருக்கும் என்கிறார்". காகம் மனிதனிடம் இவ்வளவு நெருக்கமாக பழகுவது எப்படி என்று விலங்குகள் மற்றும் பறவைகள் நல ஆர்வலர் கார்த்திக் பிரபுவிடம் விளக்கம் கேட்டபோது "பொதுவாக அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இரு வகையானப் பழக்க முறைகள் மனிதர்களால் பின்பற்றப்படுகிறது. ஒன்று பாசமாகப் பழகும் முறை. இதில் உணவு கொடுப்பது, இரக்கம் காட்டுவது, அதன்மேல் அக்கறை எடுத்துக்கொள்வது போன்றது. மற்றொன்று பயம் ஏற்படுத்திப் பழகும்முறை. இதில் மிரட்டுவது, கற்களால் அடிப்பது, கம்பிகளால் குத்துவது போன்றவை. பொதுவாக விலங்கு மற்றும் பறவைகள் போன்ற பிராணிகளிடத்தில் சிறிய வயதிலிருந்து அவைகளிடம் அன்பாக பழகுவதால் மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் உணர்வு இந்த பிராணிகளுக்கு ஏற்படுகிறது. காகத்தைப் பொறுத்தவரை இந்த பறவை நகர்ப் புறத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் என்பதால் காகத்திற்கு மனிதர்களின் மேல் பயம் இல்லாத உணர்வு பொதுவாகவே இருக்கும். ஆனால் இந்த காகமானது அடிபட்டிருந்த நேரத்தில் பாதுகாத்து, உணவு கொடுத்த பிறகு இவரிடத்தில் பழகியது. ஆகவே இவரிடத்தில் நமக்கு தேவையான உணவும் கிடைப்பதாலும், அவர் பாசமாகப் பழகுவதை தெரிந்துக்கொண்டு காகம் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு எங்கையும் செல்லாமல் அந்த இடத்தையும் அவரையும் சுற்றி வருகிறது " என்கிறார். https://www.bbc.com/tamil/india-50452981
  • சில விடயங்கள் உண்மை தானோ? இந்தாள காமடியனா பாக்கிறதால நம்பவும் முடியல!
  • தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல் ராஜபக்‌ஷ அறிக்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்களை பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை தான் அவதானித்ததாகவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்? இலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா? குறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ததையும் அவர் தனது அறிக்கையில் நினைவூட்டினார். இந்த விஜயத்தின் போது குறித்த குழுவினர் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சிநேகப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK இந்த விஜயத்தில் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டிருந்த அதேவேளை, தமது நிலைப்பாட்டையும் அவர் தெளிவுற அறிந்துக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறு தமது நிலைப்பாட்டை அறிந்து தொல்.திருமாவளவன் இன்று இவ்வாறு சந்தர்ப்பாத அறிக்கையை விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ கூறுகின்றார். தமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படும் என அவர் உறுதியளித்துள்ளார். இலங்கையின் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது என நாமல் ராஜபக்ஷ அனைத்து தமிழக அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தான் தமிழக அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-50469958
  • கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா? அகிலன் கதிர்காமர்அரசியல் பொருளியலாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (கட்டுரையில் இடம் பெற்றிருப்பது கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல.) இலங்கை அதன் அரசியலைப் பொறுத்தவரை ஒருபோதும் தனித் தீவாக இருந்ததில்லை. பொருளாதாரப் பிரச்சனை, 'பயங்கரவாதம் மீதான யுத்தம்', இஸ்லாமிய வெறுப்பு போன்ற உலகலாவிய போக்குகள் இங்கும் தாக்கம் செலுத்தியே வந்திருக்கின்றன. உலகம் முழுவதும் ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்படும் சர்வாதிகார அரசுகள் தோன்றுவதுபோலவே இங்கும் நடக்கிறது. இப்படியான சர்வதேசப் போக்குகள் இலங்கை அரசியலை முன்னகர்த்திச் சென்றாலும் உள்ளூர் பிரச்சனைகளும் அரசியல் பொருளாதாரமும்தான் கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள அரசுகளை இயக்குகின்றன. பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போர் இலங்கையை கிழித்துப்போட்டிருந்த நிலையில், போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் மதவாத சக்திகள் நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் சமூகத்தை பிளவுபடுத்தியிருக்கின்றன. உலகம் முழுவதும் நடந்துவரும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்' ஒரு பகுதி என்ற பெயரில்தான் உள்நாட்டு யுத்தத்திற்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு பெறப்பட்டது. புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஆதிக்க சக்திகள் இஸ்லாமியர்களைப் புதிய எதிரியாகக் கட்டமைத்து, அதன் மூலம் தங்களுக்கான புதிய சமூக அடித்தளத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி நடந்த ஈஸ்டர் தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பதத்தை பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவலாக்கியிருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு தேசம் முழவதும் பரவியிருந்த அச்சமும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களும் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வர்த்தக யுத்தமும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையும், ஈஸ்டர் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியிருக்கின்றன. இம்மாதிரியான பாதுகாப்புக் கவலைகள், பொருளாதார மந்த நிலை ஆகியவற்றுக்கான தீர்வை பலர் ஒரு வலுவான தலைவரிடம் தேடுகிறார்கள். சமீப காலமாக உலகம் முழுவதுமே ஏற்பட்டிருக்கும் ஒரு போக்கு இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வாய்ப்புகளைப் பயன்படுத்திய ராஜபக்ஷ இம்மாதிரியான உலகளாவிய சூழல்களால் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றிபெற, அரசியல்ரீதியான அணிதிரட்டலும் தேவைபடும். 2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது புலிகள் இயக்கம் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னதையடுத்து, மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். இந்த வெற்றி புலிகள் இயக்கத்திற்கு ஒரு தற்கொலையாக முடிந்துபோனது. யுத்தத்தின் பிற்பகுதியின்போது மஹிந்தவின் ஆட்சி அரசையும் சமூகத்தையும் தனக்கு ஆதரவாக ஒன்று திரட்டியது. ஆனாலும் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு, 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்த ஆட்சியைத் தோற்கடித்தது. தேசிய அளவில் தோற்கடிக்கப்பட்டு, சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ராஜபக்ஷ குடும்பத்தினர், இடைவிடாமல் பணியாற்றினர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி)என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கவும் செய்தனர். சிங்கள கிராமப்புற மக்கள், கீழ் மத்திய தர வர்க்கத்தினரிடம் தொடர்ந்து ஊடாடி, தங்கள் அடிப்படை வாக்குவங்கியை மீண்டும் கட்டமைத்து, அதனை வலுப்படுத்தினர். மோசமாகிவரும் பொருளாதாரச் சூழலாலும் நீண்டகாலம் நீடித்த வறட்சியாலும் அதிருப்தி அடைந்திருந்த மக்களிடம் அவர்கள் உரையாடினர். ராஜபக்ஷ ஆட்சியின் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் தொடர்பான புகார்கள், அவர்களது பிம்பத்தைக் கடுமையாகப் பாதித்திருந்த நிலையில், அதே போன்ற ஊழல் புகார்களை தற்போதைய அரசு மீது முன்வைத்தனர். நல்லாட்சி தருவதாகக்கூறி ஆட்சிக்குவந்த அரசு, மத்திய வங்கி பிணை முறி ஊழலில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினர். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்? சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு 2018 பிப்ரவரியில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தங்கள் பலத்தைச் சோதித்துப்பார்த்தது ராஜபக்ஷ தரப்பு. அந்தத் தேர்தலில் அவர்கள் புதிதாக உருவாக்கியிருந்த கட்சிக் கட்டமைப்பு, அவர்களுக்கு தென்பகுதித் தொகுதிகளில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்திருந்ததால் மிகப் பெரிய நம்பிக்கை அவர்களுக்கு உருவானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றின் மூலம் பாராளுமன்றத்தைக் கொதிநிலையிலேயே வைத்திருந்த ராஜபக்ஷ தரப்பு, ஆட்சி நடத்துவதையே மிகச் சிக்கலான காரியமாக்கியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலம் மஹிந்தவை பிரதமராக அறிவிக்கச் செய்து, பாராளுமன்றத்தில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பிற்கும் முயன்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லையென்றால், கொடூரமான ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியுமென பிரதமரும் ஜனாதிபதியும் மாற்றிமாற்றி குற்றம்சாட்டிக்கொண்டிருந்த நிலையில், தங்களால் மட்டுமே தேசியப் பாதுகாப்பை நிலைநிறுத்த முடியுமென ராஜபக்ஷே தரப்பினர் திரும்பத் திரும்பக் கூறினர். கடந்த நான்கு ஆண்டுகளில் அரசைத் தாக்குதவதற்கான ஒரு வாய்ப்பைக்கூட அவர்கள் விட்டுவிடவில்லை. அதேநேரம், களத்தில் தொடர்ந்து தங்களது தளத்தை உறுதிப்படுத்தியபடியே இருந்தனர். அதிருப்தியில் இருந்த கிராமப்புற சிங்கள மக்கள், ராஜபக்ஷவுக்குக் கீழ் செயல்படுவதில் சௌகர்யமாக உணர்ந்த அதிகாரவர்க்கம், ராஜபக்ஷவின் பொருளாதாரக் கொள்கைகளால் லாபமடைந்த தொழில்துறையினர், மதவாத, சமூக இயக்கங்கள் ஆகியவை இதற்கு உதவின. இந்தக் காரியங்களையெல்லாம் ஒருபக்கம் செய்துகொண்டிருந்தபோது, ஆட்சி மீதிருந்து தங்கள் பார்வையை அகற்றாமல் இருந்தனர் ராஜபக்ஷ குடும்பத்தினர். இப்போது ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்திருக்கும் நிலையில், நீண்டகால நோக்கில் அவர்களால் அதிகாரத்தை தற்போது திரட்ட முடியும். தாராளவாத ஜனநாயகம் வெற்றிபெறாதது ஏன்? ராஜபக்ஷவுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் சிறிசேன - ரணில் அரசின் தோல்வி என்பதுதான் உண்மை. மக்களின் பொருளாதார கவலைகளை பின்தள்ளிவிட்டு, வெளிநாட்டு முதலீடுகளுக்காகவும் வர்த்தக தாராளமயமாக்கத்திற்காகவும் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களில் கவனம் செலுத்தியது சிறிசேன அரசு. கூட்டணி ஆட்சிக்குள் இருந்த உட்கட்சிப் பூசல்கள் ஒருபுறமிருக்க, அரசியல் தலைமைகளும் மக்களிடமிருந்து விலகியே இருந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகளாவிய வர்த்தக யுத்தம் அதிகரித்துவந்த நிலையில், இவர்கள் தொடர்ந்து தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகத்தைப் பற்றிப்பேசினர். பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் நிலவியபோது, ஈஸ்டர் தாக்குதல் போன்ற மிக மோசமான தாக்குதல் நிகழ அனுமதிக்கும்வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்திருந்தன. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக குரல்கள் எழுந்த நிலையில், முஸ்லிம்களை புதிய எதிரிகளாகக் கட்டமைத்து மதவாத சக்திகள் சிங்கள வாக்குகளைத் திரட்டுவதை நிறுத்த அரசு எதுவுமே செய்யவில்லை. இதனால்தான், 2015ல் உருவான மகத்தான தாராளவாத ஜனநாயக பரிசோதனை முயற்சி, ஜனரஞ்சமான சர்வாதிகாரத்தால் வெற்றி கொள்ளப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான தாராளவாதிகள் பொருளாதாரத்தில் கோட்டை விட்டார்கள். மற்றொரு பக்கம், ராணுவமயமாக்கமும் கண்காணிப்பும் நாடு முழுவதும் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் குறைக்கப்பட்டன. போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டது. வடக்கில் ராணுவத்தின் வசம் இருந்த நிலங்கள், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நீதித்துறை தன் சுதந்திரத்தைத் திரும்பப் பெற்றது. ஊடகங்களும் சமூக இயக்கங்களும் அரசைக் குற்றம்சாட்டும் தன்னம்பிக்கையைப் பெற்றார்கள். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது. மனித உரிமை கமிஷன், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையம் போன்றவை வலுப்படுத்தப்பட்டன. ராஜபக்ஷவை எதிர்கொள்ள மக்களின் அரசியல் பொருளாதாரக் கவலைகளுக்கு முகம்கொடுக்கும் ஒரு வலுவான கூட்டணி தேவை. ஆனால் இம்மாதிரி ஒரு கூட்டணியை உருவாக்க, மூன்றாவது சக்தியாக உருவாக நினைக்கும் ஜனதா விமுக்தி பெரமுன அதற்கு உதவாது. தன்னுடைய தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ எனக் கருதி, தம் கட்சி வேட்பாளரின் வெற்றியையே தடுக்க நினைக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையும் அதற்கு உதவாது. தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன? இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பிராந்திய ரீதியாக பிளவுகள் தென்படுகின்றன. தமிழர்களும் முஸ்லிம்களும் பெருமளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்; ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுதளமாகவும் மலையகத் தமிழர்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ள மத்திய இலங்கை; கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகியவை சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கின்றன. ஆனால், மற்ற பகுகதிகளில் உள்ள பெரும்பான்மையினர் கோட்டாபயவுக்கு வாக்களித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம் கோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன்? அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன? மக்கள் வாக்களித்திருக்கும் விதத்தைவைத்துப் பார்த்தால், நாடு இனம் - தேசியவாதத்தின் அடிப்படையில் பிளவுபட்டிருப்பதுபோல தோன்றும். ஆனால், ஒவ்வொரு பிராந்தியத்தின் அரசியலையும் உற்றுநோக்கி, ஆழமாகப் பார்க்கும்போது வேறுவிதமான புரிதல் கிடைக்கும். வடக்கில் உள்ள தொகுதிகளில் வாக்காளித்தோர் சதவீதம் கடந்த முறையைவிட அதிகமாக இருந்தது. இத்தனைக்கும் எந்த வேட்பாளரும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்லவில்லை. மற்றொரு பக்கம் தமிழ் தேசியக் குழுக்கள் சில தேர்தலைப் புறக்கணிக்கும்படி அறிக்கை விடுத்திருந்தன. சஜித் பிரேமதாஸவுக்கு பெருமளவில் வாக்களித்திருப்பதன் மூலம், தேசிய அரசியலுடன் செயல்பட்டு, அதற்கு ஒரு வடிவம் தரும் ஒரு காலத்திற்குள் இப்பகுதிகள் நுழைந்திருக்கின்றன. அதேபோல, சிங்களர்கள் பெரும்பான்மையாகத் திரண்டு, ஒரு பெரும்பான்மைவாத அரசுக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால், உண்மையில், கீழ்த்தட்டு, மத்திய தர வர்க்க மக்கள் பொருளாதார ரீதியாக அடைந்த பாதிப்பு, இளைஞர்களின் நிராசை ஆகியவையே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்குகளைக் கிடைக்கச் செய்திருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜனநாயகமும் சக வாழ்வும் தற்போது இலங்கை புதிய அரசியல் பாதையில் செல்லத் துவங்கியிருக்கிறது. இந்த நிலையில், எஞ்சியிருக்கும் ஜனநாயக வெளியைப் பயன்படுத்துவது மீதமுள்ள அரசியல் சக்திகளின் வேலை. விரைவிலேயே நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர்கள் ஒன்றிணைய வேண்டும். ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வருவதை விரும்பாத இஸ்லாமிய, தமிழ் சிறுபான்மைக் கட்சிகள், இடதுசாரிகளுடன் இணைந்து மூன்றாவது முன்னணியைக் கட்டமைக்க நினைத்த ஜேவிபி, சமூக இயக்கங்கள் ஆகியவை தன் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளவிருக்கும் சர்வாதிகார அரசிடமிருந்து இந்த ஜனநாயக வெளியை காப்பாற்ற வேண்டும். ஜனநாயக ரீதியிலான சர்வாதிகாரம் என்பதும் தற்போது உலகளாவிய போக்காக இருக்கிறது. அம்மாதிரியான ஆட்சியாளர்களோடு உலகின் மிகப் பெரிய அரசுகள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்கின்றன. ஆசியாவிலேயே முதல் முறையாக 1931ல் எல்லோருக்கும் வாக்குரிமை அளித்த நாடு இலங்கைதான். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை பெரும் உறுதியையும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், இலங்கையில் உள்ள எல்லா சமூகத்தினரும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் இது சாத்தியம். அதற்கு முதற்கட்டமாக இரு தரப்பினரும் சக வாழ்வு வாழ்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். பிளவுபடுத்தும் பாதைகளை விட்டுவிட்டு, பல இன உறவுகளை மீண்டும் உருவாக்கம் செய்வதைத்தான் உலகம் முழுவதும் உள்ள தங்கள் நண்பர்களிடமிருந்து இலங்கை மக்கள் தற்போது கற்றுக்கொள்ள வேண்டும். அகிலன் கதிர்காமர் அரசியல் பொருளியலாளர்; யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர். தமிழாக்கம்: முரளிதரன் காசிவிஸ்வநாதன். https://www.bbc.com/tamil/sri-lanka-50469953