சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு  ஐதேக எதிர்ப்பு Nov 19, 2019 | 1:56by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ”  நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு அளிக்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும், பொதுத் தேர்தலை பெப்ரவரி 15 அல்லது அதற்குப் பின்னர் நடத்துவதற்கு உடன்பட்டால், ஐதேக நாடாளுமன்றக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும். தேர்தலுக்கான நாள் குறித்து அடுத்த சில நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார். இதன்போது நாங்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம் என்ற தகவலை அவரிடம் கூறுவார். முன்னதாக 24 மணிநேரத்துக்குள் பிரதமர் பதவி விலகுவார் என்று கூறியிருந்த போதிலும், இதில் தாமதம் ஏற்படக் கூடும். ஏனெனில், சிறிலங்கா அதிபரைச் சந்திப்பதற்கான நேரம் இதுவரை பிரதமருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பெரும்பானலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பம் வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக, பதவிகளை விட்டு விலகி எதிர்க்கட்சியில் அமர நாங்கள் முடிவு செய்து விட்டோம். ஐதேக பிளவுபடப் போகிறது என்பது வெறும் வதந்தி தான். அதேவேளை, தேர்தலுக்குப் பின்னர் ஐதேக ஆதரவாளர்கள் துன்புறுத்தல்களையும், தாக்குதல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விடயம் சிறிலங்கா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். அதேவேளை, ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை. எனினும், அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. http://www.puthinappalakai.net/2019/11/19/news/41298
  • மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா Nov 19, 2019 | 1:59by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “தமது ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வன்முறை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல் போன்ற சிறிலங்காவின் கடப்பாடுகளை உறுதிப்படுத்த சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஆசியாவின் பழமையான ஜனநாயகத்திற்கு ஏற்ற, ஒரு சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான அதிபர் தேர்தலின் மூலம் சிறிலங்கா  தனது ஜனநாயகத்தின் வலிமையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளது. அமைதியான தேர்தலை ஊக்குவித்ததற்காக சிறிலங்கா  தேர்தல் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களை நாங்கள் பாராட்டுகிறோம். சிறிலங்கா ஒரு மதிப்புமிக்க பங்குதாரராக உள்ளது. அனைத்து நாடுகளும் வளரக் கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வளர்ப்பது, நல்லாட்சியை ஆழப்படுத்துவது மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன்  இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். http://www.puthinappalakai.net/2019/11/19/news/41300
  • வணக்கம் வாத்தியார்.......! காதல் திராட்சை  கொடியிலே  கள்ளோடு ஆடும் கனியிலே  ஊறும் இன்பக் கடலிலே  உன்னோடு நானும் ஆடவா  ஆசை கைகள் அழைப்பிலே  அஞ்சாமல் சேரும் அணைப்பிலே  வாழை மேனி வாடுமே  அம்மம்மா போதும் போதுமே    அப்போது நெஞ்சம்  ஆறுமே   எப்போதுமே கொண்டாடுமே ......! ---பார்வை ஒன்றே போதுமே----
  • வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்த நாட்டில் வடக்கு மற்று கிழக்குக்கும் தெற்கும் இடையில்இருக்கும் பாரிய இடைவெளியினை குறைப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன் என ஜனநாயக மக்கள்முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.   அவர் மேலும் குறிப்பிடும் போது..  தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அடிப்படையில் பெருபான்மை மக்களின்ஆணித்தரமான ஆணையினைப் பெற்ற ஜனாதிபதிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கும் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்களுக்குமான இடைவெளியினை குறைத்து தன்னுடைய வரலாற்றுச் சாதனையாகச் செயற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். போர் முடிவுக்கு கொண்டுவந்த பிறகும்கூட இந்த இடைவெளியினை அன்றைய அரசு காலத்தில் நிரப்ப முடியவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது.  இன்று வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்கு வழங்கி இல்லாது போனது அந்த மக்கள் போர் முடிந்த பிறகு இருந்த சூழ்நிலையினால் ஏற்பட்ட அவநம்பிக்கையை மட்டுமே காட்டுகிறது. ஆகவே ஒரு நாட்டின் தலைவராக இந்த மக்களின் அவநம்பிக்கையினை இல்லாமல் செய்வதற்கு பெருபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும் உதவும் என்று நம்புகிறோம்.  இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் தலைமைகளின் கோரிக்கைகளுக்கு உட்படாமல் தமது சொந்த முடிவில் தங்கள் அவநம்பிக்கையின் வெளிப்பாட்டையே வாக்குகளாக வழங்கிஉள்ளார்கள் என்பதை ஆட்சி அமைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  அதேவேளை மீண்டும் தமிழ் பேசும்மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைமைகளை புதிய அரசின் பக்கம் முழுமையாக உள்வாங்கப்பட்டால் மக்களின் அவநம்பிக்கை தொடரும் என்பதையும் அதனால் நாம் இலங்கையர் என்ற எண்ணம் தமிழ் பேசும்மக்கள் மத்தியில் உருவாவது மந்தம் அடையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  இதே சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்தளத்தினூடாக இந்த புதிய ஜனாதிபதி மீதோ அல்லது அமையப்போகும் அரசாங்கத்தின் மீதோ வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அச்சமோ அவநம்பிக்கையோ அடைய வேண்டிய அவசியமில்லை எனக்குறிப்பிட்டதை வரவேற்க வேண்டும். இளைய தலைமுறை இரண்டு பக்கத்திலும் முற்போக்குடன் சிந்திப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.  மேலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையினை இந்த தேர்தலில் வலிமையாகக்காட்டியுள்ளார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய வெற்றியாகப் பார்க்குமானால் அதற்கானபதிலையும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர்குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/69254
  • Australia Medical Aid Foundation (AMAF) donated drill system to Teaching hospital Jaffna. Dr Ketheeswaran, President AMAF visited and handed over the equipment.