Sign in to follow this  
ampanai

புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் 

Recommended Posts

புலம்பெயர் வாழ்வும் திருமணங்களும் 

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயமாகின்றது என்று கேட்டு வளர்ந்தவர்கள் பலர். இனப்படுகொலையில் இருந்து தம்மை பாதுகாக்க புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழுகபவர்கள் எம்மில் ஐந்து இலட்ச்சத்திற்கும் மேல். அதிலும் கனடா நாட்டில் வாழுபவர்கள் அதிகம்.  

புதிய தேசம், புதிய மொழிகள், புதிய அனுபவங்கள். இருந்தாலும் எம்மில் பலருக்கும் சில பழமைவாத முறைகளை புலம்பெயர் நாடுகளிலும் தொடர ஆசை. முதலில் மொழியை, பின்னர் கல்வியை மற்றும் தொழில்வாய்ப்புக்களை கற்று முன்னேற அதிகம் எண்ணுவோம். அதில் கணிசமான வெற்றியும் கொண்ட சமூகம் எமது சமூகம். 

வெற்றியை அளவிடும் ஒரு சமூக அளவுகோலாக அந்தந்த சமூக குற்றச்செயல்களும் பார்க்கப்படுகின்றன. அதில் திருமணம் சார்ந்த குற்றங்களும் உண்டு. வந்த நாட்டில் மொழியை கற்கின்றோம், அதற்காக இலவச வகுப்புக்களும் உள்ளன. பலரும் திருமணம் சார்ந்த சட்டங்களை படிக்க தவறுகிறார்கள். 

கனடா போன்ற நாட்டில் திருமணம் என்பது ஒரு உறவு சம்பந்தப்பட்ட இரு மனங்களில் ஒன்றுகூடல் அல்ல. அது ஒரு வியாபார நிறுவனமும் கூட. அதாவது பன்னிரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தால், திருமணம் செய்யவில்லை என்றாலும் கூட, இணைந்த ஒரு பாலார்களும் ஒரு நிதி மற்றும் சமூக நிறுவனத்தை ஆரம்பித்து அது சட்ட வரையறைக்குள் வந்து விட்டது என பார்க்கலாம். 

உதாரணத்திற்கு, நபர் அ மற்றும் நபர் ஆ ஒன்றாக வாழ்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது பிரிய முடிவெடுத்து விட்டார்கள். 
1)  நபர் அ, வாழ்வை ஆரம்பிக்கும் பொழுது கொண்டுவந்த செல்வம் 0. நபர் ஆ கொண்டுவந்தது 10000. இப்பொழுது அவர்கள் சொத்து 20000. சட்டப்படி ஆளுக்கு அரைவாசி, 10000

2) நபர் அ சொந்த வீட்டில் இருக்கின்றார். அப்பொழுது அந்த வீட்டின் சொத்து 10000. இப்பொழுது வீட்டின் சொத்து 20000. வீடு பிரிக்கப்படும்பொழுது நபர் அ அரைவாசி 10000 கட்டி வீட்டை முழுமையாக்கலாம் இல்லை வீடு விற்க்கப்படலாம்.

3) நபர் ஆ ஏற்கனவே 20வருடம் வேலைசெய்து உள்ளார். அவரின் ஓய்வூதீய தொகை இந்த இரண்டு ஆண்டில் 2000. நபர் அ அதில் 1000க்கு உரிமை கோரலாம். 

4) நபர் ஆ அதிகம் உழைப்பவர். நபர் அ வுடன் அவர்களின்  ஒரு பிள்ளை வாழ்கின்றது. நபர் ஆ மாதம் அவரின் வருமானத்தில், வரிகள் போக, ஒரு நாற்பது வீதம் அளவில் செலுத்தவேண்டும். அதை விட பிரத்தியேக தேவைகளுக்கு பணம் செலுத்தவேண்டும். உதாரணம் நீச்சல் வகுப்பு. 

இன்றைய உலகில், கனடா போன்ற நாடுகளில் பலரும் திருமணம் செய்வதில்லை. சிலர், இந்த பன்னிரண்டு மாத காலம் தொடராமல் இடையில் ஒரு முறிவை ஏற்படுத்துவார்கள். இன்றும் சிலர், ஒரு வர்த்தக உடன்படிக்கைக்கு வந்தே திருமணம் செய்வார்கள். 

தொடரலாம்.       
 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

புதிதாய் நாட்டிற்கு வருபவர்கள் மொழி கற்கும்பொழுது, அங்கே காவல்துறை அதிகாரியையும் காணும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது பலரும் அதிக கவனத்தை  அந்த நிகழ்வில் செலுத்துவதில்லை. தேவை வரும்பொழுது மட்டுமே தேடிப்போவதும் அப்பொழுது தவறுகளை செய்வதும் பொதுவாக திட்டாமிடாதவர்கள் செய்யும் தவறு. 

சில இடங்களில் பொதுவாக தென் கிழக்கு நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு சம உரிமை இல்லாதவர்கள் என்ற கருத்து உள்ளது. அதனால். பெண்கள் உரிமை பற்றியும், அவர்கள் ஆண்கள் துணை இன்றி வாழ முடியும் என்ற ஆலோசனையும் வழங்கப்படலாம். ஆனாலும், பலருக்கும் இந்த சிந்தனை பற்றிய தேவை அப்பொழுது பெரிதாக இருக்காது. காரணம் ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் கடந்து சென்று இருக்காது. 

பொருளாதார தேவைகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளரும். ஆசைகளும் தேவைகளும் ; அவசியம் இல்லாத வாங்கலும் நடக்கும். நாளடைவில் கடன் சுமை கூடி அது கல்லானும் துணை புல்லானாலும் துணை என்பதில் இருந்து தடம் புரள ஆரம்பிக்கும். ஒருவர் மட்டும் சிக்கனம் என்ற பொருளாதார கொள்கையை அமுல்படுத்த முடியாத நிலை உருவாகும்.   

புதிய பழைய நண்பர்கள் மதீப்பீட்டுக்களை செய்ய ஆரம்பிப்பார்கள். வீடு இன்றும் வாங்கவில்லையா?  மகிழூந்து புதிதாக வாங்கவில்லையா?  விடுமுறைக்கு போர போராவிற்கு போகவில்லையா என கேட்ப்பார்கள். இதுவும் ஒரு வித 'ஆலோசனை ' தான். 

இந்த பிரச்சனைகளுக்குள் மூன்றாம் தரப்பினர் புகுந்து விட்டால் நிலைமை கை மீறி போகும்  நிலைமை இலகுவில் உருவாகிவிடும். ஆரம்பத்தில் இலவச ஆலோசனைகள் தரப்படும். பின்னர் அது பிரிவு, விவாகரத்து என வந்துவிட்டால், சட்டத்தரணிகள்,  இரவுபகலாய் உழைத்தது எல்லாவற்றையும் சுரண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நிலைக்குள் சென்றுவிட்ட பலராலும் மீள முடிவதில்லை. மன நோயாளிகாக மாறுபவர்களும் உண்டு. வேலைகளை இழந்து போதைக்கு அடிமைபடுபவர்களும் உண்டு, தற்கொலை செய்ப்பவர்களும் உண்டு 😞 

நாம் எதற்ககாக புலம்பெயர்ந்தோம், எதற்காக ஓன்றிணைந்தோம், எதை சாதிக்க விரும்பினோம் என்ற குறிக்கோளை நாளும் மறக்காமல் இருந்தால் வாழ்க்கை மகிச்சியாக இருக்கும்.   விட்டுக்கொடுத்து வாழுதல் என்பது ஒரு தாரக மந்திரம். 

மேற்குலக  நாட்டில் பிறந்து வாழ்பவர்கள் இந்த சிக்கல்களுக்குள் மாட்டுப்படுவது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாம். காரணம், அவர்கள் இதில் நன்றாகவே பட்டு கொஞ்சம் தெளிந்தவர்களாக இருப்பார்கள். சூடு கண்டால்  பூனை அடுப்பங்கரையை நாடாது தானே. 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

-----

இன்றைய உலகில், கனடா போன்ற நாடுகளில் பலரும் திருமணம் செய்வதில்லை. சிலர், இந்த பன்னிரண்டு மாத காலம் தொடராமல் இடையில் ஒரு முறிவை ஏற்படுத்துவார்கள். இன்றும் சிலர், ஒரு வர்த்தக உடன்படிக்கைக்கு வந்தே திருமணம் செய்வார்கள். 

தொடரலாம்.       

அம்பனை.... வர்த்தக திருமண முறையை...
இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்க நாட்டவர்கள் தான் மேற் கொள்வார்கள்.
அதில்..... 
எங்களுடைய 
நாடும்?
இருக்கா?
இருந்தது  என்றால், ஓம். என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 

Share this post


Link to post
Share on other sites

துன்புறுத்தல் : ஆங்கிலத்தில் ' அபியூஷ் ' (abuse) என்ற வார்த்தை. 

பல்வேறு கலாச்சாரங்களை கொண்டவர்கள் கனடா போன்ற நாட்டில் குடிபுகுந்து தம்மையும் இந்த நாட்டையும் வளமாக்க வருபவர்கள் சில மூட்டை முடிச்சுக்களுடன் வருபவர்கள். பலராலும் அதை உரிய இடத்தில் இறக்கி வைக்க முடிவதில்லை. 

உதாரணத்திற்கு, பொதுவாக பல கலாச்சாரங்களில் குரலை உயர்த்தி கதைப்பது வழமை. இதை இந்த நாட்டில் பல தலைமுறையாக வாழ்பவர்கள் இதை ஒரு துன்புறுத்தலாக பார்க்க கூடும். அத்துடன் மட்டுமல்லாது, காவல் துறைக்கும் ஒரு அழைப்பை போட்டு இந்த வீட்டிற்குள் ஒரு வெடிப்பை ஏற்படுத்திக்கூட விடலாம். வரும் காவல் துறையும் இருவரையும் பிரித்து கேள்விகளை கேட்டு, 'இலவச ஆலோசனைகளையும்'  தந்து வைப்பார்கள். 

வங்கி கணக்குகள் கூட புதிதாய் புலம்பெயர்ந்து வந்து வாழ்க்கை நடத்துபவர்கள் ஒற்றை கணக்கை வைத்திருப்பார்கள். நாளடைவில், ஆளுக்கு தனி கணக்கு ஆகிவிடும். ஆனால், அதுவே சிறப்பு என்பது பலரின், கணக்கும். காரணம், என்னதான் குடும்பம் என்னறாலும் கொஞ்சம் சுய தேவைகளுக்கு மதிப்பும் கொடுக்கவேண்டும்.    

பொதுவாக ஒருவர் இன்னொருவருக்கு 'அடிப்பது' குற்றம். கையை இல்லை காலை தூக்கினாலும் குற்றம். இதை " பூச்சிய பொறுமை " என ஆங்கிலத்தில் ஜீரோ டொலரன்ஸ்' (zero tolerance) என்பார்கள். இவைபோன்றவற்றை அறிந்தும் மற்றும் நடைமுறையில் கையாள்வதும் நவீன வாழ்வின் வெற்றிக்கு அத்தியாவசியம். 

நான் பெரிது நீ பெரிது என எண்ணாமல் நாம் என்ற எண்ணம் வேண்டும். திருமண வாழ்க்கை என்பதும் ஒரு போர் தான். சின்ன சின்ன  சண்டைகளில்   தோல்விகளை காணலாம். ஆனால், இறுதியில் போரில் வெல்ல வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் மங்களம், சுபம். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிரிந்து வாழுதலும் விவாகரத்தும் 

திருமணம் செய்யும் பொழுது வாழும் நகரத்தில் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அப்பொழுது அதை உறுதிப்படுத்தும் ஒரு பத்திரமும் தரப்படுகின்றது. சேர்ந்து வாழும்பொழுது, இரு மனங்களும் இணைந்து வாழ்வில்  மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் கனவுகளை நனவாக்கும் பாதையில் பயணிப்பார்கள். 

இவர்கள் ஒன்றாக வாழ்வதை அரசும் வருடாந்த வருமான வரி பத்திர தாக்கலில் அரசு  உறுதிப்படுத்துகின்றது. சேர்ந்து வாழுவதால் அவர்களும் வரி சலுகையையும் பெறுகிறார்கள்.   

சேர்ப்பித்து இரு மனங்கள் பிரிந்து வாழ முடிவெடுக்கும் பொழுது, இதே வரித்தாக்கல் அதை உறுதிப்படுத்தும் ஒரு மூலமாக இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக பிரிந்து வாழும்பொழுது எந்த கேள்வியும் இல்லாமல் பிரியலாம். ஆனால், அதற்கு இரு நபர்களும் கை ஒப்பம் இட்டு மீண்டும் பதிந்த நகராட்சியில் பதியவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி விவாகரத்து என அமையாது. 

சட்டப்படி விவாகரத்து இல்லாமால் நபர் ஆ முதலில் இறந்துவிட்டால் அவரது சொத்துக்கள் நபர் அ விற்கு செல்லும். ஆனால், நபர் ஆ ஒரு உயிலை எழுதி இருந்தால், அதன் படி அவரின் சொத்து பிரிக்கப்படும். 

ஆனால், பலரும் உயிலை எழுதுவதும் இல்லை நிலைமைக்கு ஏற்ப அதனை மாற்றி எழுதுவதும் இல்லை. 

சிலர் சட்டப்படி விவாகரத்து எடுத்து மீண்டும் திருமணம் செய்வார்கள். நபர் அ அவ்வாறானவர். அவருக்கு பிள்ளைகள் நபர் ஆ ஊடாக உள்ளன. நபர் அ மறுமணம் செய்த நபர் இ விற்கும் ஏற்கனவே பிள்ளைகள் உள்ளன. நபர் அ மரணம் அடைந்து விட்டார், உயிலும் இல்லை. அவரின் சொத்துக்கள் நபர் இ விற்கு செல்லும். நபர் இ அதை நபர் அ  வின் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் விடும் உரிமையும் உண்டு.   ஆகவே உயில் எழுதுவது பொதுவாக வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம். 

Share this post


Link to post
Share on other sites

குற்றவியல் வழக்கு 

நபர் அ நபர் ஆ மீது குற்றவியல் வழக்கை ஆரம்பித்தால் அந்த வாழ்க்கை ஒரு மிகவும் சிக்கலை சந்தித்திவிட்டதாகி விடும். வழக்கை திருப்பி வாங்க நபர் அ மீது வற்புத்தல்கள் வரலாம். ஆனால், இலவச சட்டஆலோசனை, சட்டத்தரணி மற்றும் இலவசங்கள் தரப்படும். இந்த குற்றவியல் வழக்கை வெல்ல வேண்டிய ஒரு அவசியம் அரச சட்டத்தரணிக்கு இருக்கலாம். அவர், வழக்கையும் அந்த சமூகத்தையும் பார்த்து நபர் அ  வின் பாதுகாப்பு பற்றியும் ஒரு அறிக்கை சமர்பிற்க்கலாம். அதன் அடிப்படையில் நபர் அ விற்கு ஒரு பாதுகாப்பான இடம் காவல்துறையால் தரப்படலாம். நபர் ஆ கைது செய்யப்படலாம் அவரை யாராவது ஒருவர் பிணை எடுக்கும் தேவை வரலாம். அத்துடன் நபர் அ வுடன் எந்த நேரடி மற்றும் மறைமுக தொடர்புகளை ஏற்படுத்த கூடாது என காவல்துறை கூறும். 

நபர் அ பெண்ணாகவும் பிள்ளைகளுடன் இருந்தால் நபர் ஆ வினை வீட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படலாம். மனைவிற்கும் பிள்ளைகளுக்கும்   தொடர்ந்து வருமானத்திற்கு ஏற்ப வாழ்வாதார கொடுப்பனவுகளை செலுத்த நிர்ப்பந்திப்படுவார். 

குற்றவியல் வழக்கில் 'அடித்தார் ' மற்றும் 'பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் ' என்ற கூற்றை தெரிவித்தால் குற்றங்கள் பாரதூரமானதாக இருக்கும். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றத்தின் அடிப்படையில் அவர் ஒரு குற்றவியல் கோப்பில் பெயர் இடப்படும். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அவர் மேற்கொண்டு ஒரு வேலையை எடுப்பதில் இது  பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதைவிட பாதிக்கப்பட்டவர்  ' மன ரீதியான உளைச்சல்களை தந்தார்' ; 'பண  ரீதியான உளைச்சல்களை தந்தார்' எனவும் கூறலாம், அதற்கான ஆலேசனைகளும் தரப்படலாம். 

வழக்கு இரு ஆண்டுகள் சென்று நீதிமன்றம் செல்லலாம். வழக்கிற்கு பெரிய தொகையை குற்றவியல்  சட்டத்தரணிகள் கேட்பதுண்டு. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை என தீர்க்கப்பட்டால் அதை நீதியாக ஏற்கவே வேண்டும். நிரப்பராதி என தீர்க்கப்பட்டால் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சந்தர்ப்பம் தரப்பட்டாதாக பார்த்து வாழலாம்.  

Share this post


Link to post
Share on other sites
On 9/21/2019 at 4:51 AM, தமிழ் சிறி said:

அம்பனை.... வர்த்தக திருமண முறையை...
இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்க நாட்டவர்கள் தான் மேற் கொள்வார்கள்.
அதில்..... 
எங்களுடைய 
நாடும்?
இருக்கா?
இருந்தது  என்றால், ஓம். என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 

தமிழ்சிறி திருமண மேடைக்கு வந்து சீதன பணக்கொடுப்பனவு பிரச்சனையால் நிறுத்தப்பட்ட   திருமணங்கள் எமது நாட்டில் உண்டு. ஆகவே வர்த்தக திருமண உடன்படிக்கைகள் நமது நாட்டிலும் உண்டு என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். 

Share this post


Link to post
Share on other sites

உயிலும் நன்கொடையும் 

பொதுவாக நன்கொடையாக கிடைக்கும் சொத்துக்கள் ஒரு குடும்பம் புலம்பெயர் தேசத்தில் பிரியும் பொழுது அது நூறு வீதம் அதற்கு உரித்தானவர்க்கே கிடைக்கும். 

நபர் அ ஒரு வீட்டை நன்கொடையாக பெறுகிறார். பத்து வருடங்கள் அந்த வீட்டில் வசித்து பின்னர் பிரிக்கிறார். இந்த பத்து வருடத்தில் எவ்வளவு பணம் அதிகரித்ததோ அதில் ஐம்பது வீதம் நபர் ஆக்கு செல்லும். நபர் அ  ஒரு குடியிருந்த, ஆனால் சொந்தமில்லாத வீட்டிக்கும் இது பொருந்தும். 

அதுபோன்று வீடல்லதா சொத்துக்களையும் நன்கொடையாக பெறலாம். நகைகள், கோடைகால வீடுகள் மற்றும் வேறு பெறுமதிமிக்க பொருட்கள்.   

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this