Jump to content

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

60வ‌ய‌து கிழ‌வ‌ன் த‌ன‌து த‌ங்கைச்சியின் ம‌க‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்கி விட்டு ல‌ண்ட‌னுக்கு திரும்பி வ‌ந்த‌வ‌ருக்கு ந‌ட‌ந்த‌ நிலையை பாருங்கோ ,

2009ம் ஆண்டு இறுதி க‌ட்ட‌ யுத்த‌தில் த‌ன‌து பெற்றோர‌ சிறு வ‌ய‌திலே இழ‌ந்த‌ பிள்ளைக்கு , ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ அந்த‌ பிள்ளையின் சொந்த‌ மாமா த‌ன‌து த‌ங்கைச்சியின் பிள்ளை என்று கூட‌ பார்க்காம‌ அந்த‌ பிள்ளையின் விருப்ப‌ம் இன்றி அந்த‌ சின்ன‌ பிள்ளையுட‌ன் காம‌ வெறியாட்ட‌ம் ஆடி இருக்கிறார் ,

அந்த‌ கிழ‌டு நான் வ‌சிக்கும் நாட்டில் பென்ச‌ன் எடுத்து கொண்டு ல‌ண்ட‌னில் வ‌சிக்கிறார் , 

அந்த‌ கிழ‌டு எப்ப‌ ல‌ண்ட‌னில் இருந்து இங்கை வ‌ருவார் என்று காத்து இருந்த‌ நாங்க‌ள் , அவ‌ர‌ ம‌ட‌க்கி போட்டு குத்த‌ ந‌ல்ல‌ திட்ட‌ம் போட்ட‌ நாங்க‌ள் , அந்த‌ கிழ‌டு இப்போது நாங்க‌ள் வ‌சிக்கும் நாட்டில் நிக்கிறார் என்று எங்க‌ளுக்கு த‌க‌வ‌ல் கிடைச்ச‌து எங்க‌ளுக்கு தெரிஞ்ச‌ அன்ரி மூல‌ம் , அன்ரி சொன்னா முர‌ட்டு த‌ன‌மாய் ஒன்றும் செய்து போட வேண்டாம் ஆளை பிடிச்சு வெருட்டுங்கோ என்று , 
அன்ரின்ட‌ சொல்லை கேக்கும் ம‌ன‌ நிலையில் நானும் ந‌ண்ப‌னும் இல்லை , கிழ‌ட்டுக்கு ம‌ர‌ண‌ அடி அடிக்கிற‌து என்று முடிவு எடுத்தாச்சு 🤜💪🤛 /

என்ர‌ ந‌ண்ப‌ன் அந்த‌ கிழ‌டை பார்த்து முத‌ல் கேட்ட‌ கேள்வி எங்க‌ட‌ த‌லைவ‌ர் இன் நேர‌ம் உயிருட‌ன் இருந்து இருந்தா இப்ப‌டி அசிங்க‌மான‌ செய‌லை செய்து இருப்பியா என்று , கிழ‌வ‌னிட‌ம் அதுக்கு ப‌தில் இல்லை 

20190516-200243.png

அடுத்த‌ கேள்வி உன்ர‌ வ‌ய‌து என்ன‌ அந்த‌ பிள்ளையின் வ‌ய‌து என்ன‌ என்று , கிழ‌டு அதுக்கும் ப‌தில் சொல்லாம‌ மெள‌வுன‌ம் காத்தார் ,

நான் கேட்டேன் அந்த‌ பிள்ளேன்ட‌ வ‌ய‌தில் உன‌க்கும் ம‌க‌ள் இருக்கு தானே உன்ர‌ பிள்ளையையும் க‌ர்ப்ப‌ம் ஆக்குவியா என்று , எங்க‌ளின் நெத்திய‌டி கேள்விக்கு அந்த‌ கிழ‌டிட‌ம் ஒரு ப‌திலும் இல்லை ,

ந‌ண்ப‌னின்  அடுத்த‌ கேள்வி அந்த‌ பிள்ளைக்கு பெற்றோர் இல்லை ,  அதுக்கு ந‌ல்ல‌ மாப்பிள்ளையை பார்த்து க‌லியாண‌ம் செய்து வைக்க‌ வேண்டிய‌த‌ விட்டு விட்டு அந்த‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கி போட்டு வ‌ந்து இருக்கிறா நீ எல்லாம் என்ன‌ ம‌னித‌ பிற‌ப்பு பே பு........ / 

தான் தெரியாம‌ல் செய்து விட்டேன் என்று கூட‌ சொல்ல‌ வில்லை , எங்க‌ளை கோவ‌த்தோடு பார்த்தார் , ந‌ண்ப‌னும் நானும்  நாக்கை புடுங்கி சாகிர‌ மாதிரி ப‌ல‌ கேள்விக‌ள் கேட்ட‌து கிழ‌டுவுக்கு பிடிக்க‌ல‌ ,

ந‌ண்ப‌ன் ஆவேச‌த்தில் விட்டான் ஒரு அடி அந்த‌ அடியோட‌ கிழ‌டு கீழ‌ விழுந்து போச்சு , எங்க‌ளுக்கு திருப்பி அடிக்க‌  வேக‌மாய் ஒழும்பினார் , நான் விட்டேன் உத‌ அதோட‌ கிழ‌டால் எழும்ப‌ முடியாம‌ல் போச்சு , இனி அடிச்சா   கிழ‌டு தாங்கி பிடிக்காது , மூஞ்சையில் காரி துப்பி போட்டு அந்த‌ இட‌த்த‌ விட்டு மெதுவா ந‌க‌ர்ந்து விட்டோம் , 

த‌லைவ‌ர் இல்லாத‌து எம் இன‌த்துக்கு எவ‌ள‌வு இழ‌ப்பு 
காமெறி கூட்ட‌ம் 
க‌ஞ்சா கூட்ட‌ம்
த‌மிழ் கலாச்சார‌ம் சீர் கெட்டு கொண்டு போகுது , 
த‌மிழ் பெண்க‌ளை த‌வ‌றான‌ முறையில் வ‌ழி த‌ட‌த்தின‌ம் , 
இது எல்லாம் த‌லைவ‌ர் இருந்த‌ கால‌த்தில் இல்லை , அந்த‌ மாபெரும் த‌லைவ‌ர‌ ம‌ன‌சில் வைச்சு தான் ல‌ண்ட‌ன் கிழ‌ட்டுக்கு நெத்திய‌டி குடுத்த‌ நாங்க‌ள் , கிழ‌டு இனி வாழ் நாளில் சின்ன‌ பிள்ளைக‌ளோட‌ காம‌ வெறியாட்ட‌ம் ஆட‌ மாட்டார் ஏன் என்றால் நானும் ந‌ண்ப‌னும் கிழ‌டுக்கு குடுத்த‌ அதிர‌டி தாக்குத‌ல கிழ‌டு வாழ் நாளில் ம‌ற‌க்க‌ மாட்டார் /

ப‌திவு பைய‌ன் 26 

Edited by பையன்26
 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 144
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இதில் வரக்கூடிய சிக்கல்கள் யாவை? 1. பொறுப்புக்கூறல்- இந்த டேடாபேசில் கதியால் சண்டை பிடித்தவர், முன்னாள் காதலர், கடன் பிரச்சினை பட்டவர், பிடிக்காத நபரை எல்லாம் போடாமல் தடுப்பது எப்படி? ஏற்கனவே இப்

பையன்26ற்கு வணக்கம்.. 1- நீங்கள் இந்த சம்பவத்தை இங்கே கொண்டு வந்து போட்டநோக்கம் என்ன? சமூகத்தில் இப்படியான மனிதர்கள் இருக்கிறாரகள்.. அவர்கள் இந்த மாதிரி பிழை செய்தால் தண்டனை இது மட்டும் போது

பையா, இதை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. ஆக இந்த நபர் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வேண்டப்பட்டவர். ஒரு பேச்சுக்கு இவர்தான் இதை செய்தார் என்றே வைத்தாலும் - இவருக்கு நீங்கள் வழங்கிய தண்டனை என்ன?

 • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்டவரை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதா?
அந்த பிள்ளைக்கு உறவினர் யாரும் இல்லையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தப்பட்டவரை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதா?
அந்த பிள்ளைக்கு உறவினர் யாரும் இல்லையா?

2009ம் ஆண்டு அந்த‌ பிள்ளையின் பெற்றோர் முள்ளிவாய்க்காளில் இற‌ந்து விட்டின‌ம் , அப்ப‌ அந்த‌ பிள்ளை ஆக‌ சின்ன‌ன் , அந்த‌ பிள்ளையின் தூர‌த்து சொந்த‌க் கார‌ர் தான் அந்த‌ பிள்ளையை த‌ங்க‌ளோடு வைச்சு பார்த்த‌வை வ‌ள‌த்தும் விட்ட‌வை , 
அந்த‌ பிள்ளையை வைச்சு பார்த்த‌ உற‌வின‌ர்க‌ள்  , பிள்ளையின் சொந்த‌ மாமா தானே என்று அவ‌ர் கூப்பிட‌ அவ‌ரோட‌ வேறு இட‌த்துக்கு அனுப்பி வைச்ச‌வை , அங்கை அந்த‌ பிள்ளையின் விரும்ப‌ம் இல்லாம‌ ஏதோ ச‌தி செய்து க‌ர்ப்ப‌ம் ஆக்கி போட்டார் , 
கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கி போட்டு சொல்லாம‌ல் கொள்ளாம‌ ல‌ண்ட‌னுக்கு வ‌ந்துட்டு , 
நாள் போக‌ போக‌ பிள்ளையின் வ‌யிறு பெரிசாக‌ , அந்த‌ பிள்ளையை வ‌ள‌த்த‌ உற‌வின‌ர்க‌ள் கேட்டு இருக்கின‌ம் யார் உன்னை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து என்று , அந்த‌ பிள்ளை உண்மையை சொல்லி விட்டுது ல‌ண்ட‌னில் இருந்து வ‌ந்த‌ மாமா த‌ன‌து விரும்ம‌ம் இல்லாம‌ல் த‌ன‌க்கு இப்ப‌டி செய்து போட்டார் என்று ,

அந்த‌ பிள்ளைக்கு 19வ‌ய‌து தாத்தா , அந்த‌ பிள்ளேன்ட‌ வ‌ய‌தில் அந்த‌ கிழ‌டுக்கும் ஒரு ம‌க‌ள் இருக்கு , கிழ‌டுவின் மூத்த‌ ம‌க‌ளுக்கு வ‌ய‌து கூட‌ இர‌ண்டாவ‌து ம‌க‌ளுக்கு , கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ அவ‌ரின் த‌ங்கைச்சியின் ம‌களின் வ‌ய‌து /

இனி என்ன‌ ச‌ட்ட‌ப் ப‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ என்ன‌ இருக்கு தாத்தா 🤔

 • Sad 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இனி காம உணர்வு வராத மாதிரி செய்திருக்க வேண்டும்.

* பையா சில விடயங்களை கேட்டது மாதிரி எழுத வேண்டும் பொது வெளியில்....

 • Like 3
Link to post
Share on other sites

பையா,

அந்த பெண்ணை இந்த ஆள்தான் இப்படிச் செய்தார் என எப்படி நீங்கள் முழுமூச்சாக நம்புகிறீர்கள்?

இதை உங்களுக்கு சொன்னவர் யார்? அந்த பிள்ளையினை ஊரில் வளர்க்கும் குடும்பத்தினர்? இந்த வேலையை அவர்களில் ஒருவரே ஏன் செய்துவிட்டு இந்த பழியை இவர் மேல் போட்டிருக்க முடியாது?

முன்பு ஒரு கேஸ் இப்படி நடந்தது. ஒரு வேலைக்கார சிறுமி கற்பம் ஆகிவிட்டார். கேட்டால் முதலாளியை கையை காட்டினார். சுற்றமே சேர்ந்து முதளாலியை திட்டி, அடித்து தீர்த்தது. அவமானம் தாங்காமல் அவரும் தற்கொலை வரை போய் மீண்டார். வெளிநாட்டில் இருந்து மகள் வந்து, தன் தந்தை மீது விழுந்த பழியை நம்பாமல் - தீர விசாரித்ததில் இதற்கெல்லாம் காரணம் அயலில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் என்பதும், அவர் சிறுமியை குடும்பத்தையே கொல்வதாக மிரட்டி வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, முதலாளி மீது பழியை போடவும் வைத்தது தெரிய வந்தது.

இப்படி பல விடயங்களை அலசி ஆராயாமல், ஏவல் பேய் கூரையை பிடுங்குவது போல ஒருவரை நீங்கள் தாக்கியது சரியாக படவில்லை.

இப்படி ரெண்டு அறை ஒரு குத்து விட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. வெளிநாட்டில் நடந்தாலும் சிறுவர் துஸ்பிரயோகம் பாரிய குற்றமே. லண்டன் போலிசில் ஆளை மாட்டிவிட்டால், தண்டனை கிடைப்பதோடு, அவரின் சொத்தில் இருந்து அந்த புள்ளைக்கு நஸ்ட ஈடும் பெறலாம்.

பிரபா இருந்தால் இப்படி நடக்குமா, அப்படி நடக்குமா என கேட்கும் உங்களிடமே திருப்பி கேட்கிறேன், அவர் இருந்தால் இப்படி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகும் நிலையும் வந்திருக்காதுதானே?

 ஒரு அண்ணனாக சொல்கிறேன், உடம்பில் வலு உள்ளது என்பதற்க்கா ஓவராக ஆடாதீர்கள். தீரவிசாரிகாமல் தண்டனை வழங்கிய பலரை வாழ்கை என்ன பாடுபடுத்தியது என்பதை கண்ணால் கண்டவன் நான்:

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

இனி என்ன‌ ச‌ட்ட‌ப் ப‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ என்ன‌ இருக்கு தாத்தா

36 minutes ago, goshan_che said:

வெளிநாட்டில் நடந்தாலும் சிறுவர் துஸ்பிரயோகம் பாரிய குற்றமே. லண்டன் போலிசில் ஆளை மாட்டிவிட்டால், தண்டனை கிடைப்பதோடு, அவரின் சொத்தில் இருந்து அந்த புள்ளைக்கு நஸ்ட ஈடும் பெறலாம்.

சம்பத்தப்பட்டவர் பதில்சொல்லா விட்டாலும், அந்தப் பிள்ளைக்குப் பிறக்கப்போகும்  குழந்தைக்கும் தொடர்பு உண்டா என்பதை டிஎன்னே பரிசோதனைமூலம் அறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கலாமே பையா. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

பையா,

அந்த பெண்ணை இந்த ஆள்தான் இப்படிச் செய்தார் என எப்படி நீங்கள் முழுமூச்சாக நம்புகிறீர்கள்?

இதை உங்களுக்கு சொன்னவர் யார்? அந்த பிள்ளையினை ஊரில் வளர்க்கும் குடும்பத்தினர்? இந்த வேலையை அவர்களில் ஒருவரே ஏன் செய்துவிட்டு இந்த பழியை இவர் மேல் போட்டிருக்க முடியாது?

முன்பு ஒரு கேஸ் இப்படி நடந்தது. ஒரு வேலைக்கார சிறுமி கற்பம் ஆகிவிட்டார். கேட்டால் முதலாளியை கையை காட்டினார். சுற்றமே சேர்ந்து முதளாலியை திட்டி, அடித்து தீர்த்தது. அவமானம் தாங்காமல் அவரும் தற்கொலை வரை போய் மீண்டார். வெளிநாட்டில் இருந்து மகள் வந்து, தன் தந்தை மீது விழுந்த பழியை நம்பாமல் - தீர விசாரித்ததில் இதற்கெல்லாம் காரணம் அயலில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் என்பதும், அவர் சிறுமியை குடும்பத்தையே கொல்வதாக மிரட்டி வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, முதலாளி மீது பழியை போடவும் வைத்தது தெரிய வந்தது.

இப்படி பல விடயங்களை அலசி ஆராயாமல், ஏவல் பேய் கூரையை பிடுங்குவது போல ஒருவரை நீங்கள் தாக்கியது சரியாக படவில்லை.

இப்படி ரெண்டு அறை ஒரு குத்து விட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. வெளிநாட்டில் நடந்தாலும் சிறுவர் துஸ்பிரயோகம் பாரிய குற்றமே. லண்டன் போலிசில் ஆளை மாட்டிவிட்டால், தண்டனை கிடைப்பதோடு, அவரின் சொத்தில் இருந்து அந்த புள்ளைக்கு நஸ்ட ஈடும் பெறலாம்.

பிரபா இருந்தால் இப்படி நடக்குமா, அப்படி நடக்குமா என கேட்கும் உங்களிடமே திருப்பி கேட்கிறேன், அவர் இருந்தால் இப்படி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகும் நிலையும் வந்திருக்காதுதானே?

 ஒரு அண்ணனாக சொல்கிறேன், உடம்பில் வலு உள்ளது என்பதற்க்கா ஓவராக ஆடாதீர்கள். தீரவிசாரிகாமல் தண்டனை வழங்கிய பலரை வாழ்கை என்ன பாடுபடுத்தியது என்பதை கண்ணால் கண்டவன் நான்:

பிரோ , நான் எழுதின‌த‌ நீங்க‌ள் ச‌ரியாய் வாசித்து இருந்தா உங்க‌ளுக்கு புரிந்து இருக்கும் , 
நாங்க‌ள் நேரா கேட்ட‌ கேள்விக்கு அந்த‌ கிழ‌டு ஏதாவ‌து ப‌தில் சொல்லிச்சா , அவ‌ரின் மூத்த‌ ம‌க‌ளுக்கு தெரியும் த‌ன‌து அப்பா ஊரில் போய் செய்த‌ அசிங்க‌மான‌ செய‌லை ,

என்ர‌ ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் தான் அந்த‌ கிழ‌டின் மூத்த‌ ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்த‌வ‌ர் , பிரோ நீங்க‌ள் கூட‌ எழுதுறீங்க‌ள் , நான் எழுதின‌துக்கும் நீங்க‌ள் எழுதுவ‌துக்கும் ஒரு ச‌ம்ம‌ந்த‌மும் இல்லை /

நாங்க‌ இருண்ட‌ உல‌கில் வாழ‌ வில்லை உங்க‌ளை போல் வெளிச்ச‌மான‌ உல‌கில் தான் வாழுகிறோம் ,

எத‌ செய்தாலும் ச‌ரியாய் தான் செய்வோம் சுத‌ப்பும் ப‌ழ‌க்க‌ம் இல்லை ,

அந்த‌ கிழ‌டு அவ‌ரின் த‌ங்கைச்சியின் ம‌க‌ளான‌ 19 வ‌ய‌து சின்ன‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து நூற்றுக்கு நூறு உறுதி /

பெற்றோர‌ இழ‌ந்த‌ பிள்ளைக்கு போய் அப்ப‌டி செய்தா பூ மாலையா போடுவின‌ம் , 

அவ‌ர் செய்த‌ இந்த‌ பெரிய‌ அசிங்க‌மான‌ செய‌லை பார்த்து ப‌ல‌ர் காரி துப்பியும் விட்டின‌ம்  😉😠/
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

என்ர‌ ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் தான் அந்த‌ கிழ‌டின் மூத்த‌ ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்த‌வ‌ர்

 என்ரை கடவுளே! ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கொடுமைகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

சம்பத்தப்பட்டவர் பதில்சொல்லா விட்டாலும், அந்தப் பிள்ளைக்குப் பிறக்கப்போகும்  குழந்தைக்கும் தொடர்பு உண்டா என்பதை டிஎன்னே பரிசோதனைமூலம் அறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கலாமே பையா. 

அந்த‌ பிள்ளையை வ‌ள‌த்த‌ உற‌வின‌ர்க‌ள் இனி என்ன‌ முடிவு எடுக்க‌ போகின‌ம் என்ப‌து தெரியாது அண்ணா , மூன்று மாச‌த்தை தாண்டினா க‌ர்ப்ப‌த்த‌ க‌ரைக்க‌ முடியாது என்று எங்கையோ வாசித்த‌ ஞாவ‌க‌ம் , பிள்ளை பிற‌ந்தா உண்மையை அர‌சாங்க‌த்துக்கு அந்த‌ உற‌வின‌ர்க‌ள் சொல்லித் தான் ஆக‌னும் , 

அந்த‌ கிழ‌டுக்கு 60வ‌ய‌து , கிழ‌டின் த‌ங்கைச்சியின் ம‌க‌ளுக்கு 19வ‌ய‌து , பெற்றோர் இல்லா பிள்ளையை ந‌ல்ல‌ மாப்பிளையை பார்த்து க‌லியாண‌ம் செய்து வைக்க‌ வேண்டிய‌து விட்டு விட்டு அந்த‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கி இருக்கு என்றால் இந்த‌ கிழ‌டு எப்ப‌டி ப‌ட்ட‌ ஊத்தையாய் இருக்கும் / 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

 என்ரை கடவுளே! ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கொடுமைகள்.

எழுத‌ இன்னும் ப‌ல‌ இருக்கு தாத்தா , அத‌ எல்லாம் த‌விர்த்து இருக்கிறேன் , 

Link to post
Share on other sites
59 minutes ago, Paanch said:

சம்பத்தப்பட்டவர் பதில்சொல்லா விட்டாலும், அந்தப் பிள்ளைக்குப் பிறக்கப்போகும்  குழந்தைக்கும் தொடர்பு உண்டா என்பதை டிஎன்னே பரிசோதனைமூலம் அறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கலாமே பையா. 

கருவை கலைத்திருப்பார்கள் எனவே நினைக்கிறேன். இல்லை எனில் நீங்கள் சொல்வது போல செய்வதுதான் சாலவும் சிறந்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பையன்26 said:

பிரோ , நான் எழுதின‌த‌ நீங்க‌ள் ச‌ரியாய் வாசித்து இருந்தா உங்க‌ளுக்கு புரிந்து இருக்கும் , 
நாங்க‌ள் நேரா கேட்ட‌ கேள்விக்கு அந்த‌ கிழ‌டு ஏதாவ‌து ப‌தில் சொல்லிச்சா , அவ‌ரின் மூத்த‌ ம‌க‌ளுக்கு தெரியும் த‌ன‌து அப்பா ஊரில் போய் செய்த‌ அசிங்க‌மான‌ செய‌லை ,

என்ர‌ ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் தான் அந்த‌ கிழ‌டின் மூத்த‌ ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்த‌வ‌ர் , பிரோ நீங்க‌ள் கூட‌ எழுதுறீங்க‌ள் , நான் எழுதின‌துக்கும் நீங்க‌ள் எழுதுவ‌துக்கும் ஒரு ச‌ம்ம‌ந்த‌மும் இல்லை /

நாங்க‌ இருண்ட‌ உல‌கில் வாழ‌ வில்லை உங்க‌ளை போல் வெளிச்ச‌மான‌ உல‌கில் தான் வாழுகிறோம் ,

எத‌ செய்தாலும் ச‌ரியாய் தான் செய்வோம் சுத‌ப்பும் ப‌ழ‌க்க‌ம் இல்லை ,

அந்த‌ கிழ‌டு அவ‌ரின் த‌ங்கைச்சியின் ம‌க‌ளான‌ 19 வ‌ய‌து சின்ன‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து நூற்றுக்கு நூறு உறுதி /

பெற்றோர‌ இழ‌ந்த‌ பிள்ளைக்கு போய் அப்ப‌டி செய்தா பூ மாலையா போடுவின‌ம் , 

அவ‌ர் செய்த‌ இந்த‌ பெரிய‌ அசிங்க‌மான‌ செய‌லை பார்த்து ப‌ல‌ர் காரி துப்பியும் விட்டின‌ம்  😉😠/
 
பொலிஸும் நானே. இருபகுதிக்கான வக்கீலும் நானே, நீதிபதியும் நானே, தண்டனை கொடுப்பவனும் நானே.  நான் சொன்னால் அது குற்றம் தானே. எல்லோரும் அதை நம்பவேண்டும். ஆதாரம் கேட்ககூடாது. நான் சொன்னால் அது தானே ஆதாரம். நல்ல காலம் பையா உங்களது 15 ம் நூற்றாண்டு கற்பனை சாம்ராஜயத்தில் நாம் வாழவில்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

பொலிஸும் நானே. இருபகுதிக்கான வக்கீலும் நானே, நீதிபதியும் நானே, தண்டனை கொடுப்பவனும் நானே.  நான் சொன்னால் அது குற்றம் தானே. எல்லோரும் அதை நம்பவேண்டும். ஆதாரம் கேட்ககூடாது. நான் சொன்னால் அது தானே ஆதாரம். நல்ல காலம் பையா உங்களது 15 ம் நூற்றாண்டு கற்பனை சாம்ராஜயத்தில் நாம் வாழவில்லை. 

இப்ப‌ உங்க‌ட‌ பிர‌ச்ச‌னை என்ன‌ அத‌ சொல்லுங்கோ முத‌ல் , பிற‌க்கு விவாத‌ம் செய்வோம் யார் செய்த‌து ச‌ரி யார் செய்த‌து பிழை என்று , க‌ற்ப‌னையா அது உங்க‌ட‌ வாழ்க்கையில் இருக்க‌லாம் எங்க‌ட‌ வாழ்க்கையில் இல்லை , நாங்க‌ள் ப‌ய‌ணிக்கும் பாத‌ வேறு நீங்க‌ள் ப‌ய‌ணிக்கும் பாத‌ வேறு , ஊரில் சிங்க‌ள‌ காவ‌ல்துறையே சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா வேண்டி குடுக்கிறார்க‌ள் , அவ‌ர்க‌ள் இட‌த்திலா போய் இத‌ சொல்ல‌னும் 😂😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

tulpen

நான் ஆதார‌த்தோடு கோஷான் செ வுக்கு ப‌தில் அளித்து இருக்கிறேன் , நீங்கள் தேவை இல்லாம‌ குத்தி முறிய‌ வேண்டாம் / 

ஊரில் என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஆபாச‌ பெண்க‌ளுட‌ன் இருக்க‌ விரும்பின‌வ‌ருக்கு குடுத்த‌ த‌ண்ட‌னையை எழுத‌ , அதிலும் தேவை இல்லாம‌ வ‌ந்து புல‌ம்பி கொண்டு இருந்தீர் , இப்ப‌ இதுக்கை வ‌ந்து அதே பானிய‌ திருப்ப‌ எழுதுறீங்க‌ள்  😉

Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

பிரோ , நான் எழுதின‌த‌ நீங்க‌ள் ச‌ரியாய் வாசித்து இருந்தா உங்க‌ளுக்கு புரிந்து இருக்கும் , 
நாங்க‌ள் நேரா கேட்ட‌ கேள்விக்கு அந்த‌ கிழ‌டு ஏதாவ‌து ப‌தில் சொல்லிச்சா , அவ‌ரின் மூத்த‌ ம‌க‌ளுக்கு தெரியும் த‌ன‌து அப்பா ஊரில் போய் செய்த‌ அசிங்க‌மான‌ செய‌லை ,

என்ர‌ ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் தான் அந்த‌ கிழ‌டின் மூத்த‌ ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்த‌வ‌ர் , பிரோ நீங்க‌ள் கூட‌ எழுதுறீங்க‌ள் , நான் எழுதின‌துக்கும் நீங்க‌ள் எழுதுவ‌துக்கும் ஒரு ச‌ம்ம‌ந்த‌மும் இல்லை /

நாங்க‌ இருண்ட‌ உல‌கில் வாழ‌ வில்லை உங்க‌ளை போல் வெளிச்ச‌மான‌ உல‌கில் தான் வாழுகிறோம் ,

எத‌ செய்தாலும் ச‌ரியாய் தான் செய்வோம் சுத‌ப்பும் ப‌ழ‌க்க‌ம் இல்லை ,

அந்த‌ கிழ‌டு அவ‌ரின் த‌ங்கைச்சியின் ம‌க‌ளான‌ 19 வ‌ய‌து சின்ன‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து நூற்றுக்கு நூறு உறுதி /

பெற்றோர‌ இழ‌ந்த‌ பிள்ளைக்கு போய் அப்ப‌டி செய்தா பூ மாலையா போடுவின‌ம் , 

அவ‌ர் செய்த‌ இந்த‌ பெரிய‌ அசிங்க‌மான‌ செய‌லை பார்த்து ப‌ல‌ர் காரி துப்பியும் விட்டின‌ம்  😉😠/
 
பையா, இதை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. ஆக இந்த நபர் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வேண்டப்பட்டவர். ஒரு பேச்சுக்கு இவர்தான் இதை செய்தார் என்றே வைத்தாலும் - இவருக்கு நீங்கள் வழங்கிய தண்டனை என்ன? ரெண்டு அறை, ஒரு உதை? ஒரு சின்னப்பிள்ளையை வன்புணர்ந்தவருக்கு இதுவா , இவ்வளவா தண்டனை? இனி இந்த நபர் என்ன செய்வார்? அடுத்த முறை ஒரு சிறுமியை வன்புணரும் போது கற்பம் ஆகாதவாறு கவனம் எடுப்பார். இந்த நபர் ஊரில், வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு சின்ன பிள்ளைக்கும் ஆபத்தானவர். நாளைகே பேத்தி இருந்தால் அவள் மீதும் கைவைக்க கூடிய ஆள். இவரை யூகே போலிசில் பிடித்து கொடுத்து. இப்போ நடந்த விசயத்துக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். பிள்ளையின் கரு கலைக்கப்படவில்லை எனில் - இலகுவாக டிஎன்ஏ மூலம் குற்றத்தை நிறுவலாம். அப்படி நிறுவி -

1.பிள்ளைக்கும், பிறக்கும் பிள்ளைக்கும் இந்த நபரின் சொத்து, இதர வருவுகளில் இருந்து கணிசமான தொகையை பெற்றுக் கொடுக்கலாம். 

2. இந்த நபரை குறைந்த பட்சம் 15 வருடம் உள்ளே தள்ளலாம். அதன் மூலம் ஏனைய குழந்தைகளை பாதுகாக்கலாம்.

3. இந்த நபரின் குற்றத்தை இலங்கைக்கு அறிவித்து இவர் இலங்கைக்கு போகாமல் ஆக்கலாம் (விசா மறுப்பு). இதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுமிகளை பாதுகாக்கலாம்.

4. இவரின் பெயரை sex offenders registry இல் போட்டு, வெளியே வந்தபின்னும் சிறுமிகளை நெருங்கா வண்ணம் செய்யலாம்.

இப்படி எவ்வளவோ செய்ய கூடியதாய் இருந்தும் - இவரை நீங்கள் ரெண்டு தட்டு தட்டி தப்ப விட்டது நியாயமா?

இப்படி செய்வதால் உங்கள் நண்பருக்கு அல்லது அவரின் மனைவிக்கு ஏற்பட்ட அல்லது ஏற்பட இருக்கும் நிதி செலவீனங்கள், மன உளைச்சல் தவிர்க்கப் பட்டதல்லவா? அதுக்காககவா இவரை நீங்கள் பொலீசில் பிடித்து கொடுக்கவில்லை?

என்னை பொறுத்தவரை நீங்கள் மேலே செய்த செயல் குற்றவாளியை தப்ப வைக்கும் தந்திரம் போலவே படுகிறது.

இந்த நபரை பற்றி பொலீசில் முறையிடுங்கள். மனித நேயம் உள்ள யாரும் அதையே செய்வர். இல்லாமல் இவர் நாளைக்கு எந்த பிள்ளை மீதாவது கைவைத்தால் - அதற்கு நீங்களும் பொறுப்பாவீர்கள்.

கடுமையான வார்தைகளுக்கு மன்னிக்கவும் - அலசப்படும் விடயம் அவ்வளவு பாரதூரமானது.

 • Like 3
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு அண்ணனாக சொல்கிறேன், உடம்பில் வலு உள்ளது என்பதற்க்கா ஓவராக ஆடாதீர்கள். தீரவிசாரிகாமல் தண்டனை வழங்கிய பலரை வாழ்கை என்ன பாடுபடுத்தியது என்பதை கண்ணால் கண்டவன் நான்:

நானும் ச‌ண்டையை விரும்பும் ஆள் கிடையாது பிரோ , என்ர‌ ந‌ண்ப‌ன் க‌த்தி எடுக்க‌ அவ‌னை த‌டுத்து என்ர‌ வீட்டுக்கை வைச்சு புத்திம‌தி சொல்லி குடுத்த‌ நான் க‌ட‌ந்த‌ கால‌த்தில்  , 

என‌க்கு இந்த‌ கிழ‌டு செய்த‌ வேலை கோவ‌த்தை வ‌ர‌ வைச்ச‌து ,உங்க‌ட‌ ம‌ன‌ நிலை எப்ப‌டி என்று என‌க்கு தெரியாது , என்ன‌ பொருத்த‌ ம‌ட்டில் கிழ‌டு செய்த‌து பெரிய‌ குற்ற‌ம் , 
பெற்றோர் இல்லா பிள்ளையை சின்ன‌ வ‌ய‌தில் க‌ர்ப்ப‌ம் ஆக்கினா யாருக்கு தான் கோவ‌ம் வ‌ராது , நீங்க‌ள் நினைக்குமா போல‌ நாங்க‌ள் ர‌வுடிக‌ள் கிடையாது , நாங்க‌ளும் எங்க‌ட‌ பாடும் , ஒன்ன‌ செய்ய‌ நினைச்சா , ச‌ரியா செய்து முடிப்போம் , என்ன‌ பொருத்த‌ ம‌ட்டில் கிழ‌டுக்கு  நாங்க‌ள் குடுத்த‌ த‌ன்ட‌னை மிக‌ ச‌ரி , வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்றால் போல‌ அவ‌ர் செய்யிர‌ எல்லா அசிங்க‌மான‌ செய‌ல்க‌ளை வேடிக்கை பார்க்க‌ முடியாது , இனி அந்த‌ கிழ‌டு சின்ன‌ பிள்ளைக‌ளோட‌ உட‌ல் உற‌வு செய்ய‌ நினைக்காது / பெண்டாட்டி பிள்ளைக‌ள் ல‌ண்ட‌னில் இருக்க‌ ஊரில் போய் இப்ப‌டி அசிங்க‌மான‌ செய‌லை செய்து இருக்கு / அந்த‌ ஆண்ட‌வ‌ர் தான் அந்த‌ சின்ன‌ பிள்ளைக்கு துனை நிக்க‌னும் பிரோ 🙏🙏🙏🙏🙏

Edited by பையன்26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

பையா, இதை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. ஆக இந்த நபர் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வேண்டப்பட்டவர். ஒரு பேச்சுக்கு இவர்தான் இதை செய்தார் என்றே வைத்தாலும் - இவருக்கு நீங்கள் வழங்கிய தண்டனை என்ன? ரெண்டு அறை, ஒரு உதை? ஒரு சின்னப்பிள்ளையை வன்புணர்ந்தவருக்கு இதுவா , இவ்வளவா தண்டனை? இனி இந்த நபர் என்ன செய்வார்? அடுத்த முறை ஒரு சிறுமியை வன்புணரும் போது கற்பம் ஆகாதவாறு கவனம் எடுப்பார். இந்த நபர் ஊரில், வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு சின்ன பிள்ளைக்கும் ஆபத்தானவர். நாளைகே பேத்தி இருந்தால் அவள் மீதும் கைவைக்க கூடிய ஆள். இவரை யூகே போலிசில் பிடித்து கொடுத்து. இப்போ நடந்த விசயத்துக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். பிள்ளையின் கரு கலைக்கப்படவில்லை எனில் - இலகுவாக டிஎன்ஏ மூலம் குற்றத்தை நிறுவலாம். அப்படி நிறுவி -

1.பிள்ளைக்கும், பிறக்கும் பிள்ளைக்கும் இந்த நபரின் சொத்து, இதர வருவுகளில் இருந்து கணிசமான தொகையை பெற்றுக் கொடுக்கலாம். 

2. இந்த நபரை குறைந்த பட்சம் 15 வருடம் உள்ளே தள்ளலாம். அதன் மூலம் ஏனைய குழந்தைகளை பாதுகாக்கலாம்.

3. இந்த நபரின் குற்றத்தை இலங்கைக்கு அறிவித்து இவர் இலங்கைக்கு போகாமல் ஆக்கலாம் (விசா மறுப்பு). இதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுமிகளை பாதுகாக்கலாம்.

4. இவரின் பெயரை sex offenders registry இல் போட்டு, வெளியே வந்தபின்னும் சிறுமிகளை நெருங்கா வண்ணம் செய்யலாம்.

இப்படி எவ்வளவோ செய்ய கூடியதாய் இருந்தும் - இவரை நீங்கள் ரெண்டு தட்டு தட்டி தப்ப விட்டது நியாயமா?

இப்படி செய்வதால் உங்கள் நண்பருக்கு அல்லது அவரின் மனைவிக்கு ஏற்பட்ட அல்லது ஏற்பட இருக்கும் நிதி செலவீனங்கள், மன உளைச்சல் தவிர்க்கப் பட்டதல்லவா? அதுக்காககவா இவரை நீங்கள் பொலீசில் பிடித்து கொடுக்கவில்லை?

என்னை பொறுத்தவரை நீங்கள் மேலே செய்த செயல் குற்றவாளியை தப்ப வைக்கும் தந்திரம் போலவே படுகிறது.

இந்த நபரை பற்றி பொலீசில் முறையிடுங்கள். மனித நேயம் உள்ள யாரும் அதையே செய்வர். இல்லாமல் இவர் நாளைக்கு எந்த பிள்ளை மீதாவது கைவைத்தால் - அதற்கு நீங்களும் பொறுப்பாவீர்கள்.

கடுமையான வார்தைகளுக்கு மன்னிக்கவும் - அலசப்படும் விடயம் அவ்வளவு பாரதூரமானது.

பிரோ பெத்த‌ ம‌க‌ளே தேப்ப‌ன் செய்த‌ செய‌லை அருவ‌ருப்போடு வெறுக்குது , 

பிரோ அந்த‌ கிழ‌டு கூட‌ பிற‌ந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்கி இருக்கு , உற‌வின‌ர்க‌ள் இனி இத‌ பெரிசு ஆக்குவின‌ம் என்று நினைக்க‌ல‌ , அது தான் பெய‌ர் விப‌ர‌ம் போட்டோ ஒன்றையும் நான் யாழில் இணைக்க‌ வில்லை , 

எங்க‌ள் இன‌த்தில் இப்ப‌டி ப‌ட்ட‌ பிராடுக‌ள் இருக்கிறார்க‌ள் என்று நினைக்கும் போது வேத‌னை தான் வ‌ருது / 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

tulpen

நான் ஆதார‌த்தோடு கோஷான் செ வுக்கு ப‌தில் அளித்து இருக்கிறேன் , நீங்கள் தேவை இல்லாம‌ குத்தி முறிய‌ வேண்டாம் / 

ஊரில் என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஆபாச‌ பெண்க‌ளுட‌ன் இருக்க‌ விரும்பின‌வ‌ருக்கு குடுத்த‌ த‌ண்ட‌னையை எழுத‌ , அதிலும் தேவை இல்லாம‌ வ‌ந்து புல‌ம்பி கொண்டு இருந்தீர் , இப்ப‌ இதுக்கை வ‌ந்து அதே பானிய‌ திருப்ப‌ எழுதுறீங்க‌ள்  😉

குற்றம் செய்தவரின் குற்றத்தை திறமையாக புலனாய்வு  செய்து தகுந்த ஆதாரங்களுடன் அவர்களின் குற்றத்தை நிருபித்து உரிய தண்டனை வாங்கிக் கொடுத்தேன்  என்று நீங்கள் எழுதியிருந்தால் உலகமே உங்களை பாராட்டும். அது விடுத்து நீங்கள்  கூறுவதையே ஆதாரமாக கொண்டு அவருக்கு நீங்களே தண்டனை வழங்கியதாக பீற்றிக்கொள்வது எந்த நியாயமும. அற்றது என்பது நியாயமாக சிந்திக்கும் எவருக்கும் தெரியும். ஒரு பொது தளத்தில் உங்கள் வாக்குமூலத்தை வைத்து தண்டனை கொடுத்தேன் என்று நீங்கள் கூறும் போது  அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் உரிமை உள்ளது. டென்மார்க் நாடு கல்வியில் உயர்தரத்தில்ல உள்ள நாடு என்று கேள்விப்பட்டேன். 

எப்போதுமே பையனாக இருக்க ஆசைப்படாதீர்கள். 

“ஆளும் வளரணும் அறிவும் வளரணும்   அதுதாண்டா வளர்ததி”

 என்ற நம்ம வாத்தியார் எம். ஜி. ஆர் பாடலைக் கேட்டருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்களது  ஊரில்

இருட்டடி  என்று சொல்வார்கள்

வரவேற்கத்தக்கது

ஆனால்  வெளியில் சொல்லப்படாது ராசா..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அடுத்த‌வ‌ர்க‌ள் என்னை புக‌ழ‌ வேனும் என்று விரும்பி ஒன்றையும் செய்வ‌து இல்லை , ம‌ன‌சுக்கு எது ச‌ரி என்று ப‌டுதோ அத‌ செய்வேன் , நீங்க‌ள் எழுவ‌த‌ வாசிக்க‌ என‌க்கு எம் போராட்ட‌ நினைவு தான் வ‌ருது , ( ச‌மாதான‌ம் என்ற‌ ஒன்றை சொல்லி க‌ட‌சியில் எம் போராட்ட‌ம் க‌ண் முன்னே அழிக்க‌ ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் க‌ண் மூடி வேடிக்கை பார்க்க‌ எம் இன‌ம் க‌ண் முன்னே அழிஞ்சு போன‌து தான் நினைவுக்கு வ‌ருது ) 

இல‌ங்கை நாடு எப்ப‌டி ப‌ட்ட‌து என்று கூட‌ தெரியாம‌ நீங்க‌ள் ச‌ட்ட‌த்தை ப‌ற்றி எழுதி என்ன‌ ப‌ல‌ன் கிடைக்க‌ போகுது ,

( உங்க‌ளால் முடிஞ்சால் முத‌ல் சிங்க‌ள‌ காவ‌ல்துறை த‌மிழ் ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா வேண்டி குடுப்ப‌தை ச‌ட்ட‌த்தின் மூல‌ம் த‌டுங்கோ ம‌ற்றும் த‌மிழ் பெண்க‌ளை த‌வ‌றான‌ வ‌ழியில் ப‌ய‌ண் ப‌டுத்தும் ஆட்க‌ளுக்கும் த‌ண்ட‌னை வேண்டி குடுங்கோ பிற‌க்கு உங்க‌ளுக்கு புக‌ழ நானே சூடூறேன் உற‌வே 😉 /

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

எங்களது  ஊரில்

இருட்டடி  என்று சொல்வார்கள்

வரவேற்கத்தக்கது

ஆனால்  வெளியில் சொல்லப்படாது ராசா..

அப்படி கண்டவனெல்லாம்  இருட்டடி கொடுக்கும் கலாச்சாரம் உள்ள நாடுகளை விட சட்டப்படி விசாரித்து தண்டனை கொடுக்கும் நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் குற்றச்செயல்கள் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம. என்பதை எப்போதாவது தாங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா? 

உங்களைப்போல  கேள்வி கேட்கக்கூடியவர்கள்

இங்கு வந்துவிட்டதால் இருக்கலாம்

Link to post
Share on other sites

பையா,

நீங்கள் இந்தாளுக்கு கொடுத்தது எல்லாம் தண்டனையே இல்லை. வெறும் கண்துடைப்பு.

அடுத்த முறை ஆணுறை பாவிக்கவேண்டும் என்ற அறிவைத்தவிர இது வேறு எதையும் அவருக்கு புகட்டி இராது.

 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

அப்படி கண்டவனெல்லாம்  இருட்டடி கொடுக்கும் கலாச்சாரம் உள்ள நாடுகளை விட சட்டப்படி விசாரித்து தண்டனை கொடுக்கும் நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் குற்றச்செயல்கள் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம. என்பதை எப்போதாவது தாங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா? 

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை

  anuradhapura-courtஇருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளன.

1996ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள், திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் கிராமத்தில், சிறிலங்கா இராணுவத்தினரால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 24 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூதூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தெகிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பின்னர் போர்ச்சூழலைக் காரணம் காட்டி, இந்த வழக்கு சந்தேக நபர்களின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், இரண்டு பேர் மரணமாகிவிட்டனர்.

anuradhapura-court

ஏனையவர்களான கோப்ரல்கள், நிசாந்த, அஜித் சிசிரகுமார, கபில தர்சன, அபேசிங்க, உபசேன, அபேரத்ன ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஜூன் மாதமே, அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீளத் தொடங்கப்பட்டது.

இதன்போது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பலரும் சாட்சியங்களை அளித்ததுடன், சந்தேக நபர்களை அடையாளம்காட்டியும் இருந்தனர்.

எனினும், சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி, அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவ கோப்ரல்களையும், எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

முன்னதாக, இறுதிவாதத்தின் போது,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசசட்டவாளர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Paanch
Link to post
Share on other sites
28 minutes ago, விசுகு said:

எங்களது  ஊரில்

இருட்டடி  என்று சொல்வார்கள்

வரவேற்கத்தக்கது

ஆனால்  வெளியில் சொல்லப்படாது ராசா..

வித்யா கொலை நேரம் தமிழ்மாறன் நடந்து கொண்ட விததுக்கும், இங்கே பையனும் அவரது நண்பரும், நண்பரின் மாமனாரை சட்டதின் பிடியில் இருந்து தப்ப வைத்ததுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. அதை எதிர்த்த நீங்கள், இதை எப்படி வரவேற்கிரீர்கள்?

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.