-
Topics
-
Posts
-
மேற்கத்திய நாடுகள் பிரான்ஸ் போன்றவை மற்றய சக்தி பிறப்பாக்கிகளை விட காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன வன்னியர் சொல்வது போல் வடகிழக்கில் மக்கள் அற்ற வெளிகளில் அமைக்கப்படுவதால் சத்தம் போன்ற பயம்கள் தேவையற்ற ஒன்று அனல் மின் மூலம் வெளி விடப்படும் காபனீர் ஓட்ஸைட் போன்ற தொல்லைகள் காற்றாலைகளில் இல்லை இந்தியாவில் உள்ள முறை எனக்கு தெரியாது இங்கு ஒரு வரையறைக்கு மேல் பலமான காத்து வீசினால் தானாகவே அதன் இயக்கம் நிறுத்துகின்ற முறை உள்ளது . உங்கள் கேள்வி நியாயமே அதுக்கு தமிழர் விடயத்தில் நடைப்பிணமாக இருக்கும் சம்பந்தரை ஏன் கூப்பிடுகிறீர்கள் ?
-
“தலைக்கவசம் போட்டு வெங்காயம் விக்கிறான்… என்னத்த சொல்ல” Seeman News - இந்திய அளவில் வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. நாடாளுமன்றம் வரை இது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அது குறித்து கறாரான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்துப் பேசிய சீமான், “நம் நாட்டின் அரசு அனைவருக்கும் வாகனத்தையும் அலைபேசியையும் கொடுப்பதற்குத் திட்டம் வைத்துள்ளது. ஆனால் நீரையும் சோறையும் எல்லோருக்கும் வழங்குவதற்கு அதனிடம் திட்டம் கிடையாது. வெங்காயத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்த காரணத்தினால்தான் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சொல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கே வெங்காயம் இல்லாத போது அதை எப்படி ஏற்றுமதி செய்யலாம். இது ஒரு அடிப்படை அறிவு இல்லையா? சில இடங்களில் பார்க்கிறோம், வெங்காயத்தை தலைக்கவசம் போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். தலைக்கவசம் இல்லையென்றால், அடித்து நொறுக்கிவிட்டு எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற பயம்தான். அதேபோல, செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று விளம்பரம் வைக்கிறார்கள். இதுவெல்லாம் காலக் கொடுமை…” என்றார். முன்னதாக வெங்காய விலை உயர்வு பற்றி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பியபோது, “நான் அதிகம் வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவர். எனக்கு அதன் நிலை குறித்து பெரிதாக தெரியாது,” என்றார். அதற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம், “நிதி அமைச்சர் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றால் என்ன அவகோடா பழம்தான் சாப்பிடுவாரா?,” என கேலிக் கேள்வியெழுப்பினார். https://www.ndtv.com/tamil/seeman-takes-on-onion-price-rise-2145570
-
India vs West Indies : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை வான்கிடே மைதானத்தில் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வெற்றி பெறும் அணியை தொடரைக் கைப்பற்றும். © AFP இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி, 20 ஓவர் போட்டிகளில் அந்த இடத்திற்கு செல்ல தவறி விட்டது. இந்திய அணி 20 ஓவர் போட்டிகளில் 5-வது இடத்தில் இருக்கிறது. கடைசி 6 20 ஓவர் போட்டிகளில் இந்தியா 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்க அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்தது. வங்க தேசத்திற்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது இந்தியா. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. தொடரை வெல்லும் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. https://sports.ndtv.com/tamil/india-vs-west-indies-2019/3rd-t20i-live-score-ind-vs-wi-live-match-updates-2147257?pfrom=home-topscroll
-
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொருத்தமான நீர் நிலைகளில் இறால் வளர்ப்பு மற்றும் நண்டுப் பண்ணை போன்றவற்றுக்கான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான உத்தரவுகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, கடலரிப்பு, துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளை பயன்படுத்துவதில் நிலவி வருகின்ற நடைமுறை ரீதியான சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்களை இதன்போது மன்னார் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் எடுத்துக் கூறப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர், நேரடியாக மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்து சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் நியாயமான தீர்வுகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/70865
-
By தனிக்காட்டு ராஜா · Posted
அனல் மின் நிலையங்கள் என்றானுகள் இப்ப காற்றாலை மின் நிலையங்களா ஒரே குழப்பமா இருக்கு
-