• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • மீண்டும் புதினக் கதையுடன் வந்தமைக்கு நன்றி 😀
  • ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  
  • ஆராவது பதில் எழுதுவார்கள் நானும் கொப்பி செய்து போடுவம்  என்று பார்த்தால் ஒருத்தரும் முச்சு விடீனமில்லை. இந்தக் காலத்தில அதுதான் இன்னும் முக்கியமாக கிடக்கு 😊😎 குமாரசாமி உள்பெட்டிக்குள்ளால விடை எழுதி அனுப்புவாரோ ????🤔
  • நிட்சயமாய் வட இந்தியக் கலப்பு மட்டுமல்ல வேறு சாயல்களும் இருந்தாலும் ஆடை வடிவமைப்பு வட இந்தியர்களது என்று கூற முடியாது. பெண்களின் நடனம் மற்றும் மயில் நடனங்களின் வீடியோ இல்லை. அவர்கள் ஆட்டங்களில்  பரதத்தின் சாயல் இருப்பதாய் நான் கூறவில்லை. ஆனால் கூத்து வடிவங்கள் நிட்சயமாய் காணப்படுகின்றன. தைமாதத்தில் கரோவில் நடைபெற்ற மரபுத் திங்கள் நிகழ்வில் மட்டக்களப்புப் பல்கலைக்கழகப் பேராசியராக இருந்த பாலசுகுமார் அவர்கள்  ஒரு அரை மணிநேர நடன நிகழ்வை நடன மாணவர்களை வைத்து நடத்திக்காட்டினார். அதில் மாணவிகள் ஆடிய அசைவுகள் எனக்கு கம்போடியா நடனத்தை நினைவுபடுத்தின. முக்கியமாக அவர்கள் தலையில் அணிந்திருந்த கிரீடம் போன்ற அமைப்பு அங்கிருந்த அனைவரையும் கவர்ந்திருந்தது. பார்வைக்கும் அந்நிகழ்வு நன்றாகவே இருந்தாலும் பாரிய குறை ஒன்றும் இருந்தது. ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க நடன ஆசிரியையும் அந்த இளைய மாணவிகளுடன் சேர்ந்து நடன நிகழ்வைத் செய்தமை தான் அது. அன்று மாலையே நான் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களிடம் உரையாடியபோது அந்தக் கீரிடம் எமது இல்லையே. அதை தாய்லந்து, கம்போடிய நடனங்களில் பார்த்துள்ளேன் என்றேன்.  கூத்து இப்போதெல்லாம் அழிந்துவருவதால் காலத்துக்கேற்ப அதை மாற்றியமைத்து தான் புதுமை ஒன்றைச் செய்ததாககே கூறினார். புதுமை செய்வது மிக நல்லதுதான் அதற்காக எம்மிடம் இல்லாததுபோல் ஏன் அவர்களினதை நாம் எமதாக்க வேண்டும் என்றேன். தான் கவனத்தில் எடுக்கிறேன் என்கிறார். நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் எல்லோருக்கும் எல்லோரும் புரியாது. நான் கூத்து நடைகளை என் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவதால் எனக்கு அதில் ஆர்வம் உள்ளதனால் அதிகமாகக் கவனித்தேன். மற்றவர்கள் அது ஆடும்போது எப்படி அழகாக இருந்தது என்றுமட்டும் பார்த்து ரசித்துவிட்டு அத்துடன் மறந்தும் விடுவார்கள். கம்போடியா நடனங்களில் சேலை சட்டை வரவேண்டிய காரணம் என்ன ??  நீங்கள் அந்த நடனங்களை நேரில் பார்த்தீர்கள் என்றால் அது நன்கு புரியும்.
  • நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்துகொண்டு நித்தம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்துவருகிறார் சாமியார் நித்யானந்தா. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “20 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கைலாசத்தைக் கட்டியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள. வாடிகனைப் போல இந்து மதத்துக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் தரப்போவது இல்லை. சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டன. என்னுடைய மரணத்துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்குச் சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன். இதேவேளை, தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு செல்லப்போவதில்லை. தமிழக ஊடகங்களைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். நான் இறந்துவிட்டால் எனது உடலை பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும். இதுவே எனது கடைசி ஆசை” என்று அவர் கூறியுள்ளார். http://athavannews.com/நான்-இறந்துவிட்டேன்-எனத/