• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • “ வெண்மையில் எத்தனை நிறங்கள்” என்ற பெயரில் திருமதி ரமணி சந்திரன் கூட ஒரு நாவல் எழுதியிருக்கிறார். 
    • கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல்... உன்னையே மீண்டும் நினைக்கிறேன்...
    • இது மாதிரியும் மருத்துவர்கள்... டாக்டர் உள்ள  வரலாமா ? வாங்க வாங்க உட்காருங்க  என்ன பிரச்சனை ? நீங்க எப்படி இருக்கீங்க டாக்டர் ? நல்லா இருக்கேன்...சொல்லுங்க.... ஒண்ணுமில்ல டாக்டர் கழுத்தில இருந்து வலது கை,தோள்பட்டை எல்லாம் ஒரே வலி..நைட் தூங்க முடியல.... எவ்வளவு நாளா இருக்கு ? அது இருக்கும் டாக்டர் நாலஞ்சு மாசத்துக்கு மேலயே இருக்கும்..நெறய ட்ரீட்மென்ட் பார்த்தாச்சு..ஒண்ணும் சரியா வரல.... அப்படியா (பரிசோதனைக்கு பின்) சரி ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திரலாம்.... எக்ஸ்ரே எதுக்கு டாக்டர் MRI எடுத்துரலாமே.... ( இன்ஸூரன்ஸ் வச்சிருக்காராம்...) இல்லங்க அவசியம் இல்ல. தேவையின்னா நானே சொல்லுவேன். இல்ல டாக்டர் MRI ல எல்லாம் தெரியும்னு நெட்ல பார்த்தேன். தேவையில்லைங்க. தேவையின்னா நானே சொல்லுவேன் கவலப்படாதீங்க. இதுக்கு எக்ஸ்ரே போதும். எடுத்துட்டு வாங்க. (சிறிது தயக்கத்துடன்) ஓ.கே டாக்டர். (எக்ஸ்ரே எடுத்தாச்சு) ம்ம்...எலும்புல எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. ரெகுலர் பிஸியோதெரபி,கொஞ்சம் உணவு கட்டுப்பாடு தேவை. அப்புறம் மருந்து எல்லாம் தர்ரேன். மேக்ஸிமம் ஒரு மாசத்தில சரியாயிரும். இல்ல டாக்டர் இதுக்கு ஆயுர்வேதம்,யுனானி தான் பெஸ்ட்னு நெட்ல போட்டுருக்கு. சாரிங்க எனக்கு அதெல்லாம் தெரியாது,நான் அலோபதி டாக்டர். எனக்கு தெரிந்த மருத்துவத்த நான் சொல்லிட்டேன். உங்களுக்கு உடன்பாடில்லன்னா நீங்க அதெல்லாம் ட்ரை பண்ணலாமே... அய்யோ டாக்டர் அதெல்லாம் ட்ரை பண்ணி சரியாகாமத்தான் உங்க கிட்ட வந்தேன். (நெட்ல அப்படி போட்டுருக்கு, இப்படி போட்டுருக்கு என்று நீண்ட வாத பிரதி வாதங்களுக்கு பிறகு டாக்டரின் சிகிச்சைக்கு ஒத்து கொண்டார்) நீங்க எங்க வேல பார்க்கிறீங்க ? நான் அந்த ஏர்லைன்ஸ்ல தான் இருக்கேன். ஊருக்கு போகும்போது என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க டாக்டர். அப்படியா ரொம்ப சந்தோசம். எனக்கு ரொம்ப நாளா ப்ளேன் ஓட்டணும்னு ஆசை. நெட்ல எல்லாம் படிச்சுட்டு வந்துடுறேன். அதெப்படி டாக்டர் ... வெளயாடாதீங்க. நெட்ல படிச்சுட்டு எப்படி ப்ளேன் ஓட்ட முடியும் ? நெட்ல படிச்சுட்டு நீங்க இவ்வளவு ட்ரீட்மென்ட் சொல்றீங்க. அதே மாதிரி நெட்ல படிச்சுட்டு ப்ளேன் ஓட்ட முடியாதா என்ன ? (ஏதோ புரிந்த மாதிரி  சிரித்துக் கொண்டே) சாரி டாக்டர்... என்றார். FB
    • கப்பல் பார்த்த சேவகர்கள் இந்த தமிழ் பேஜ் கூட்டம் ஆக்கும் அந்த பகுதி மக்கள் ஏன் எதிர்ப்பு தெவிக்கினம் என்பது பற்றி விளக்கம் இல்லை . வரவேற்க வேண்டிய திட்டம் வயல் வெளிகளை  தவிர்த்து வடகிழக்கில் இந்த காற்றாலைகள் அமைவது நல்லது. 
    • யாழ்ப்பாணத்தை நோக்கி பச்சை நிறத்தில் நீளமாக பீப்பாய்கள் வருகிறது, ஆபத்து.. ஆபத்து என கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்கள் பற்றியெரிகிறது. யாழ்ப்பாணத்தை சீரழிக்க இரகசிய திட்டம் என அனேகமாக எல்லா இணையத்தளங்களும் அது பற்றி செய்தி வெளியிட்டு விட்டன. ஆனால், அந்த பச்சை பீப்பாய்கள் எப்படி சீரழிக்கப் போகிறது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. பச்சைச் சட்டை போட்டால் அடிப்போம் பாணியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பச்சைப் பீப்பாய்கள் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை அறிய தமிழ்பக்க செய்தியாளர்கள் இன்று அந்த பகுதிக்கு சென்றனர். அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டிருந்தார். சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவனும் அங்கு சென்றிருந்தார். திட்டம் குறித்து, அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். தமது திட்டம் குறித்து நிறுவனத்தினர் அவருக்கு விளக்கமளித்திருந்தனர். அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், 24 பீப்பாய்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது. 3 பீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும். 8 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது. ஒவ்வொரு யுனிட்டும் 12.75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதை அரசு 23 ரூபாவிற்கு பொதுமக்களிற்கு விற்பனை செய்யும். ஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள், பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்த திட்டம் நடந்து வருகிறது. அங்கு பார்வையிட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது, “இந்த திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த திட்டம் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. அதை இதுவரை நிறுவனமோ, அரசாங்கமோ நிவர்த்தி செய்யப்படவில்லை. மக்களின் அச்சம் நீக்கப்பட வேண்டும். அனைத்து அனுமதிகளும் கொழும்பில் பெறப்பட்டுள்ளது. இப்படியான திட்டங்கள் மேற்கொள்ளும்போது, வருமானத்தின் 15 வீதம் அந்த பகுதி உள்ளூராட்சிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் பளை காற்றாலை நிறுவனத்தினால் 2 வீதமான வருமானமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம், இந்த பகுதி மக்களிற்கு என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. குறைந்த விலையான காணிகள் அதிக விலைக்கு நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. காற்றாலையால் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா போன்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது. இவைதான் மக்களை அச்சப்படுத்தியுள்ளது. இவை தொடர்பில் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும்“ என்றார். https://www.pagetamil.com/93218/