சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • -க. அகரன் எதிர்வரும் காலங்களில் இளைஞர் - யுவதிகளை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்த ஈழவர் ஜனநாயக முண்ணனியின் தலைவர் க. துஷ்யந்தன், அவர்களை அரசியல் ரீதியாக  ஒன்றிணைத்து, தமிழ் - சிங்கள மக்களிடையே சகோதர ஒற்றுமையை உருவாக்கி, தமக்கு இருக்கின்ற அடிப்படை, தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார். வவுனியாவில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடனான சந்திப்பின் போது, விரிவாக பேசியிருந்ததாகவும் அதற்கு பசில் சாதகமான பதில்களை தமக்கு வழங்கியிருந்தாரெனவும் தெரிவித்தார்.  கோட்டாபயவுக்கு தமிழ் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்களென்று எண்ணியிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் அது நடைபெறவில்லையெனவும் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசியல் வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்த அவர், எதிர்கால செயற்பாட்டின் மூலம் தான், மக்களின் மனங்களை அவரால் வெல்லமுடியுமெனவும் கூறினார். இன்று அமைந்திருக்கின்ற இந்தப் புதிய அரசாங்கம், தமிழர்களின் பிரச்சினைகளில் கூடிய கவனம் செலுத்துமென நம்புவதாகவும், துஷ்யந்தன் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக அநல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையெனவும் இதனாலேயே நல்லாட்சி அரசாங்கத்துக்கு தாம் ஆதரவை வழங்கவில்லையெனவும், அவர் கூறினார். http://www.tamilmirror.lk/வன்னி/இளைஞர்-யுவதிகளை-ஒன்றிணைத்து-தேசிய-பிரச்சினைகளுக்குத்-தீர்வு-காண்போம்/72-241196
  • -செ.கீதாஞ்சன் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரைக்கேட்டாலே தாம் அச்சம் கொள்வதாகத் தெரிவித்த முல்லைதீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, அவரால் தரப்படும் காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான மரண அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் கூறினார். முல்லைத்தீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவின் கடந்த கால செயற்பாடுகளை எண்ணி தற்போது அச்சத்துடன் இருப்பதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் குறித்து சர்வதேசம், புதிய ஜனாதிபதியுடனும் தம்முடனும் பேசி, ஓர் உண்மையானத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, யுத்தக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் தொடர்புடையவர் என்பதால், அவரிடமும் தாம் ஒரு வேண்டுகோளை விடுப்பதாகத் தெரிவித்த அவர், அவரிடம் தான் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் முழுத் தகவல்களும் இருக்கின்றனவெனவும் கூறினார். தமது உறவுகளை அவரால் மாத்திரமே கண்டுபிடித்துத் தர முடியுமெனத் தெரிவித்த அவர், அத்தகைய ஓர் உணர்வுடனே இருப்பதாகவும் அதே வேளையில் மறுபுறத்தில் தாம் கடத்தப்படுவோமோ, கொல்லப்படுவோமா போன்ற அச்ச நிலையும் தமக்கு இருப்பதாகவும் கூறினார். தாம் அவருக்கெதிராக ஆயுதம் ஏதும் ஏந்திப் போராடவில்லையெனத் தெரிவித்த அவர், அவர்களிடம் கொடுத்த தமது உயிர்களையே தாம் அவரிடம் கோரி நிற்பதாகவும் கூறினார். http://www.tamilmirror.lk/வன்னி/கடடவல-தரபபடம-அறககய-ஏறகமடடம/72-241189
  • ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்திவருகின்றது. இந்த நவீன முறையின் நன்மைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு கோடை காலத்தில் தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவற்றை தவிர்க்க தமிழக அரசு நிர்வாகம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க பொதுமக்களின் முயற்சிகள் ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொதுகட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், விளையாட்டு திடல்கள் , பூங்காக்கள் என மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிய முறையில் ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனி , அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன மழைநீர் சேகரிப்பு முறையை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது சென்னை மாநகராட்சி. பாலிஸ்டெரையன் எனும் மக்காத தடிமனான இந்த கலன்களில் நான்கு பக்கமும் சிறு துளைகள் இருக்கும். நான்கு அடி உயரம் மற்றும் இரண்டரை அடி அகலம் கொண்ட கலன்களை மக்காத துணியை கொண்டு மூடி பின்னர் பூமிக்கு பத்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி இறக்கப்படும். அதன் மேலே கூழாங்கற்கள் , ஜல்லி கற்கள், மணல் போன்றவைகள் கொண்டு நிரப்பப்படும். பெய்கின்ற மழைநீர் , இதுபோன்ற இயற்கை வடிகட்டி அடுக்குகள் வழியாக வடிகட்டப்பட்டு நேரடியாக நிலத்திற்குள் சென்று சுத்தமான தண்ணீராக சேகரிக்கப்படும். அறுபது டன் எடையைக் கூட சாதாரணமாக தாங்கும் தன்மைக் கொண்ட இந்த கலன்களை கொண்டு பிரதான சாலைகளுக்கு அடியில் கூட மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடியும் என்கிறார் இத்திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ள சிவராம். தற்போது நடைமுறையில் உள்ள உறைகிணறு சேமிப்பு முறையில் மழைநீர் ஒரு வழியாக மட்டுமே நிலத்திற்கு செல்லும் ஆனால் இந்த கலன்களில் நான்கு பக்கமும் துளைகள் உள்ளதால் பூமியின் அடியில் நான்கு பக்கங்கள் வழியாகவும் மழைநீர் செல்லும் என்பதால் கணிசமாக மழைநீரை நிலத்தடியில் சேகரிக்க வழிவகை செய்கிறது. இதுபோன்ற நவீன கலன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் தற்போதைக்கு ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறும் சிவராம், அறுபதாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த மழைநீர் சேகரிப்பு கலன்களின் ஆயுட்காலம் குறைந்தது 50 ஆண்டுகள் என்கிறார். முதற்கட்டமாக சென்னையில், இரண்டாயிரம் இடங்களில் இதுபோன்று அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அடுத்த ஆண்டுகளில் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் சாலைகளிலும் கூட இத்திட்டம் அமைக்கப்படவுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் பெய்த சிறு அளவு மழைக்கே சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்றால் நீண்ட காலம் பயன் தரக்கூடிய இது போன்ற தொலைநோக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நகரம் முழுவதும் நடைமுறைப்படுத்தினால் கணிசமான நிலத்தடி நீர் வளத்தை எதிகாலத் தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...! https://www.polimernews.com/dnews/89337/ஜெர்மன்-முறையில்-மழை-நீர்சேகரிப்பு..!-சென்னையில்பணிகள்-தீவிரம்
  • விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏர்பஸ் நிறுவனம், துபாய் ஏர்ஷோ விமான கண்காட்சியில், 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. புகழ்பெற்ற துபாய் ஏர்ஷோ துபாயில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இதில், உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர்பஸ் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த  எமிரேட்ஸ் விமான நிறுவனம், 50 ஏ350 ரக விமானங்களை 16 பில்லியன் டாலர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதேபோல, ஏர் அரேபியா நிறுவனம் 120  ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் போட்டியில் போயிங்கைவிட ஏர்பஸ் முந்தியுள்ளது. அதேசமயம், வரும் வியாழக்கிழமை வரை துபாய் ஏர்ஷோ நடைபெற உள்ள நிலையில், புதிய ஆர்டர்களை பெறமுடியும் என போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன. https://www.polimernews.com/dnews/89370/30-பில்லியன்-டாலர்கள்மதிப்பிலான-விமான-ஆர்டரைபெற்ற-ஏர்பஸ்