IPL தொடருக்காக பதிவுசெய்துள்ள இலங்கையின் 39 வீரர்கள்!
By
A.Pradhap
-
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் பதிவுகள் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மொத்தமாக 971 வீரர்கள் இதற்காக பதிவுசெய்துள்ளனர்.
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 19ம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக வீரர்கள் பதிவுகள் இடம்பெற்ற நிலையில், நவம்பர் 30ம் திகதி வீரர்கள் பதிவுக்கான முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஒட்டுமொத்தமாக 971 வீரர்கள் அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடருக்காக பதிவுசெய்துள்ளனர். இதில், 713 இந்திய வீரர்கள் மற்றும் 258 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான அதிகமான வீரர்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 73 இடங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. இதற்கான போட்டியில் சர்வதேசத்தில் அறிமுகமான 215 வீரர்களும், 754 புதுமுக வீரர்களும் போட்டியிடவுள்ளனர்.
தேசிய அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள் (19 வீரர்கள்)
அறிமுகமாகாத இந்திய வீரர்கள் (634 வீரர்கள்)
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, தேசிய அணிக்காக விளையாடாத இந்திய வீரர்கள் (60)
தேசிய அணிக்காக விளையாடிய சர்வதேச வீரர்கள் (196)
தேசிய அணிக்காக அறிமுகமாகாத சர்வதேச வீரர்கள் (60)
இணை உறுப்பு நாட்டு வீரர்கள் (2)
சர்வதேச வீரர்களை பொருத்தவரை, அவுஸ்திரேலியாவில் இருந்து 55 வீரர்கள் பதிவுசெய்துள்ளதுடன், தென்னாபிரிக்காவில் இருந்து 54 வீரர்களும், இலங்கையில் இருந்து 39 வீரர்களும் அதிகபட்சமாக பதிவுசெய்துள்ளனர்.
இதேவேளை, ஒட்டுமொத்தமாக பதிவுசெய்துள்ள 971 வீரர்களில் இருந்து தங்களுக்கு அணிகளுக்கு தேவையான இறுதிப்பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு எதிர்வரும் 9ம் திகதிக்குள் அணிகள் அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக பதிவுசெய்யப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை (நாடுகள் ரீதியாக)
ஆப்கானிஸ்தான் – 19
அவுஸ்திரேலியா – 55
பங்களாதேஷ் – 6
இங்கிலாந்து – 22
நெதர்லாந்து – 1
நியூசிலாந்து – 24
தென்னாபிரிக்கா – 54
அமெரிக்கா – 1
மேற்கிந்திய தீவுகள் – 34
ஜிம்பாப்வே – 3
http://www.thepapare.com/39-sri-lanka-players-registered-ipl-auction-2020-tamil/
ஒரு சில குடும்பங்கள் அல்லது வறுமையில் வாடும் குடும்பங்களின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கணிப்பிடலாகாது.
சமூக நடப்புகளை நிதானமாக ஆராய்ந்து விட்டு நிதானமாக பதில் எழுதவும்.✍️