Sign in to follow this  
கிருபன்

இராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு

Recommended Posts

இராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு

September 20, 2019

-மயூரப்பிரியன்

IMG_2498.jpg?resize=552%2C259

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா   வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை  இன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர்  மேற்கொள்ளும் பாதுகாப்பு  மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநருக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட ஆளுநர் வடமாகாணத்தில் அதனை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை வடமாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆளுநர்   இராணுவத்தின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினால் விடுவிக்க முடியாத காணிகளை இனங்கண்டு அவற்றையும் அறிவிக்கவேண்டும் என்றும் ஆளுநர் இராணுவத்தளபதியிடம் கேட்டுக்கொண்டார்

இதன்போது கருத்துதெரிவித்த இராணுவத்தளபதி, இராணுவத்தின் பாதுகாப்பு தேவைகளுக்காக வைத்திருக்க முடியுமான காணிகள் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்னும் விடுவிக்க முடியுமான காணிகள் இருப்பின் அவற்றையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.  #இராணுவதளபதி  #ஆளுநர்  ,சந்திப்பு #சவேந்திர சில்வா

IMG_2499.jpg?w=552

 

http://globaltamilnews.net/2019/130855/

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
13 hours ago, கிருபன் said:

இதன்போது கருத்துதெரிவித்த இராணுவத்தளபதி, இராணுவத்தின் பாதுகாப்பு தேவைகளுக்காக வைத்திருக்க முடியுமான காணிகள் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்னும் விடுவிக்க முடியுமான காணிகள் இருப்பின் அவற்றையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த சுண்டகாய் இராணுவத்தின் பாதுகாப்புக்காக தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்க இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

உலகில் தமிழர்கள் ஒரு பலமான நாட்டின் பின்புறத்தில் தடவிக் கொடுத்திருந்தால்.. இன்று.. தமிழர் தாயகம் பிறந்திருக்கும். உந்த இராணுவம் சின்னாபின்னமாகி இருக்கும்.

ஆனால் அதனை சிங்களவர்கள் செய்து கொண்டது மட்டுமன்றி..  தமது இனக்கொலை இராணுவத்தைக் கொண்டு.. தமிழர்களின் தன்மானத்தை இழிவுபடுத்திக் கொண்டு தொடர்ந்து தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து நிற்க யாருமே அனுமதிக்கக் கூடாது.

இவர்களின் இந்த ஆக்கிரமிப்புப் பற்றி சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்ல வேண்டுமே தவிர.. இந்த இனக்கொலை சிங்கள இராணுவத்தோடு.. சமரசத்துக்கு செல்பவர்கள் தமிழ் மக்களுக்கானவர்கள் கிடையாது. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

இராணுவ தளபதி – ஆளுநர், இருவருமே போர்க்குற்றவாளி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள். தங்கள் கொள்கையை, தமிழின அழிப்பை, முன்னெடுக்க நடாத்தப்படும் அரசியல் - இராணுவ நாடகத்தில் வெளியிடப்படும் உளவியல் தாக்க செய்தி இது. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஹிஸ்புல்லா பொதுஜன பெரமுனவுடன் வெளிப்படையாக கூட்டணி வைக்க முயன்ற போது சில பிக்குகள் எதிர்த்ததால் தான் கோத்தபாய அவரை தனி வேட்பாளராக களமிறக்கினார் என முன்பு வாசித்தேன். இன்றும் பிக்குகள் அவரை தடுத்ததாக வாசித்தேன். 
    • Sham Varathan Sham Varathan  மக்கள் உணர்வுகளை மதிக்கின்றாரா டக்ளஸ்? மக்கள் உணர்வுகளை மிதிக்கிறாரா சம்பந்தன் ? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் என்னை நம்பவேண்டும் , நான் செய்விப்பேன் என்று கோட்டாபாயவுக்காக தமிழர்கள் மத்தியில் மக்கள் ஆணையை கோரினார் டக்ளஸ் தேவானந்தா . ஆனால் வழமைபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் உசுப்பேற்றலுக்கும், ரிஷாட் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அள்ளி வீசிய எச்சிலைக்கும் ஆசைப்பட்ட தமிழர்கள் தாங்கள் எங்கு நிற்கின்றோம் , பெரும்பான்மை மக்களின் மனநிலை என்னவென்று அறியாமல் குருட்டு நம்பிக்கையில் சஜித் பிரேமதாசா வெற்றி பெறுவார் என்று டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை நிராகரித்தார்கள் . கூட்டமைப்பின் தலைமை சம்பந்தர் அற்ப சலுகைக்காக கோட்டாபாயவிடம் மண்டியிட மாட்டோம் , அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம் என்று மக்களை முட்டாளாக்கி , இரத்தத்தை சூடாக்கி, வெள்ளை வேன் வரும் என்று பூச்சாண்டி காட்டி சஜித் பிரேமதாசாவிற்காக கடுமையாக உழைத்தார்கள். இவர்களின் நரி தந்திரமும் , கபட நாடகமும் புரிந்து கொள்ள முடியாத அப்பாவி மக்கள் கூட்டமைப்பு கைகாட்டியபடி ஆட்டு மந்தைகள் போல் சஜித்துக்கு வாக்களித்து இன்று தனிமைப்படுத்தப்பட்டு நடுவீதியில் நிற்கிறார்கள். மக்களை நடுவீதியில் விட்டு விட்டு பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பகைமை தீயை வளர்த்து விட்டு , தாங்கள் மக்களிடம் கோரிய ஆணைக்கு எதிராக தமிழ் தேசியத்தையும் , சமஷ்டி, சுயநிர்ணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு தங்களையும் , தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக , யாரை கொலைகாரன் , கொள்ளைக்காரன் என்று சொன்னார்களோ அதே கோட்டாபாயாவிடம் அமைச்சர் பதவிக்காக மண்டியிட தயாராகியுள்ளார்கள். இதே நேரம் தனக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதற்காக டக்ளஸ் தேவானந்தா தனக்கு கிடைக்கவிருந்த அமைச்சர் பதவியை தூக்கி வீசியுள்ளார். இங்கு மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது இவை அனைத்தும் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டமைப்பின் நாடகம் என்று. இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு வாராவிட்டால் பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று சொன்ன சுமந்திரன் எந்த முகத்துடன் அமைச்சர் பதவியை கோருவார்? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுத்தால் அரசியல் தீர்வு பாதிக்கும் என்ற சம்மந்தன் எவ்வாறு அமைச்சர் ஆவார்? இங்கே யார் மக்களுக்கானவர்கள் என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.      
    • தமிழ் மக்களின் மனோ நிலை மாறிவிட்டது என்பது இவர்களுக்கு புரிந்து விட்டது...... அப்படி இவர் பெறுவதானல் வடக்கின் மீள் நிர்மாணம், மீள் குடியேற்றம் சம்பந்தமான அமைச்சை பெறுவது நன்று....... வடக்கின் அடாவடி மினிஸ்ட்டருக்கு விட்டு குடிக்காமல்.