Sign in to follow this  
கிருபன்

நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…

Recommended Posts

நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்…

September 21, 2019

 

IMG_0056.jpg?resize=800%2C451

மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற நிலையில், குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர்.

இந்தப் பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி தொடர்பாக தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் தேவன் பிட்டி மீனவ சங்க கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் போது நிதி நிறுவனம் அரச அனுமதி பெற்ற நிறுவனமா? என்பது தொடர்பாக எவ்வாறு அறிவது என்பது தொடர்பாகவும் பெரும் கடன்களை சரியான விதத்தில் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

குறித்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளவதற்கான சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் பெண் தலைமைத்துவ குடும்பத்தலைவிகளின் கருத்துக்களும் பெறப்பட்டது.

அதன் போது கருத்து தெரிவித்த பெண்கள் அரசாங்கம் இதற்கான மாற்று நிதி கருத்திட்டத்தை கொண்டு வந்தால் மாத்திரமே தாங்கள் கடன் தொல்லைகளில் இருந்து விடு படமுடியும் எனவும் அத்துடன் அரசாங்கமே இனி வரும் நாட்காளில் இலகுவழி மூலம் கடன் வழங்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

IMG_0068.jpg?resize=800%2C451

 
 

Share this post


Link to post
Share on other sites

நல்ல முயற்சி. இந்த கடன் திட்டம் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம். 

அத்துடன், மக்களுக்கு மாற்று வழிகளையும் தெளிவுபடுத்தல் நன்று.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கிழக்கில் 13 சிறுவர் இல்லங்கள் இயங்கவில்லை கொரோனா நெருக்கடியால்,  கிழக்கு மாகாணத்தில் இயங்கிவந்த 52 சிறுவர் இல்லங்களில், 13 இல்லங்கள் மூடப்பட்டுள்ளனவென, சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாத் தெரிவித்தார். இதனால் கிழக்கு மாகாணத்தில் 1,350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது 400 பேரே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். சமகால கொரோனா நெருக்கடி நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் நிலைவரம் தொடர்பாக, அவர் மேலும் கருத்துரைக்கையில், “நாங்கள் சிறுவர் இல்லங்கள் என அவற்றை அழைப்பதில்லை. மாறாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் எனத்தான் அழைக்கின்றோம். “மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 இல்லங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 13 இல்லங்களும் அம்பாறை மாவட்டத்தில் 07 இல்லங்களுமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 52 சிறுவர் இல்லங்கள் இயங்கிவந்தன. ஆனால், இவற்றுள் 13 இல்லங்கள் தற்சமயம் இயங்கவில்லை. “மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 இல்லங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 07 இல்லங்களும் அம்பாறை மாவட்டத்தில் 03இல்லங்களுமாக மொத்தம் 13 சிறுவர் இல்லங்கள் இயங்காமலுள்ளன. அதாவது தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. “இந்த மூடு விழாவால் 1,350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது ஆக 400 சிறுவர்களே வாழ்ந்து வருகின்றனர். ஏனைய 950 பேர், கொரோனா அச்சம், பாடசாலை விடுமுறை காரணமாக வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்” என்றார்.   http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கழககல-13-சறவர-இலலஙகள-இயஙகவலல/73-251426    
    • சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை.  அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது    ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள். மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம்.  கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .    
    • ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை   ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்சி ஆசிரியை ஒருவர் மாதம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 05,  2020 13:40 PM லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு  ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மெயின்புரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவதாகக் கூறி அவருக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடரபான விசாரணைக்கு  உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வித் துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியையின் பெயர் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அதுபற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தற்போது அந்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். தகவல்களின் அடிப்படையில் அவர் ஒருவருக்கு மாதம் ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை. இதுவரை இந்த தகவல் எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் முறைகேடு நடந்தது உண்மை என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படும். இதுபோல வேறு சில ஆசிரியர்களும் முறைகேடாக வேறு பள்ளிகளில் பணியாற்றுகிறார்களா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05134059/Nothing-confirmed-so-far-UP-govt-on-reports-of-teacher.vpf