• ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது. இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது.  கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது. காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது. இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது. இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை. தமிழ் அரசியல் தரப்புகளைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்கின்ற அளவிலேயே முகநூல் பதிவுகள் உள்ளன. இந்த உண்மைகளைக்கூட எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளனர் என்பது கேள்விக்குரியதே.  இவை ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் முதுமையின் பாதிப்புகளைக் கடுமையாக அனுபவித்துக் கொண்டிருப்பதால்; அவரை உதாசீனம் செய்து கூட்டமைப்பை ஒரு கூத்தாடி அமைப்பாக மாற்றி, தமிழினத்தையே கேவலப்படுத்துகின்ற நடவடிக்கைகள் நடந்தாகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை கூட்டமைப்பிடம் கையளித்திருப்பது சரியா? என்பதைத் தமிழ் மக்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இதை நாம் கூறுவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான காழ்ப்புணர்வன்று. மாறாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் கொடுக்கக்கூடாது என்று தமிழ் மக்கள் கூற, இல்லை கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியது கூட்டமைப்பின் தலைமை. இதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு வழங்கும் போதெல்லாம் நிபந்தனை விதித்து தமிழ் அரசியல்கைதிகளை விடுவியுங்கள் என்றால், இல்லை நிபந் தனை விதிக்க முடியாது என்றார்கள். இன்று நிலைமை என்னவாயிற்று. இந்த நிலைமை ஏற்படும் என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் அறிந்திருக்கையில், கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகள் மட்டும் அதை உணராமல் இருந்தது எதற்காக என்ற கேள்விக்குப் பதில் தரமுடியுமா? ஒரு நாட்டின் அரசியல் மாற்றங்களை மதிப்பிட முடியாதவர்களைத் தமிழினம் தலைமை யாகக் கொள்ளுமாயின் அது இன்னமும் ஈனப்படுவதற்கேயன்றி வேறில்லை. இறுதியாக அடுத்த தீபாவளிக்குத் தீர்வு என்று நான்கு தீபாவளிகள் உச்சரித்த இரா. சம்பந்தர் இனி என்ன சொல்லப் போகிறார். தீபாவளிக்குத் தீர்வு என்று அவர் அடிக்கடி கூறியதற்காக அவரை தீபாவளி சம்பந்தர் என்று அழைக்க முடியுமா என்ன? ஆக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன் முதுமையை உணர்ந்து தக்க தலைவரை அறிமுகப்படுத்துவதே அவர் தமிழ் இனத்துக் குச் செய்யும் உதவியாகும். http://valampurii.lk/valampurii/content.php?id=19875&ctype=news
  • புத்தகம் பற்றிய உங்கள் பார்வையை யும் எழுங்கள் ஆகா ஓகோ என்று இல்லை ஆனால் எங்களின் பிரச்சினையை வேறு ஒரு பார்வையில் எடுத்து சென்றிருக்கார்..
  • போர் முடிந்தபின் அபிவிருத்தி என்று பார்க்கும்போது போர் செய்து நாட்டை காப்பாற்றினவரையே வின்சண்டன் சேர்ச்சிலை ஓய்வெடுக்க அனுப்பியவர்கள் பிரிட்டன் மக்கள் இலங்கையில் கோத்தா இனவாத சக்கரத்தில் நாடு நல்லா இருக்கும்டோய் .
  • "இரண்டாவது விவகாரம் தமிழர்களின் பிரச்சினை.  தமிழர்களின் கிளர்ச்சி மீண்டும் மூளக்கூடியதாக இலங்கையை இரு பிரத்தியேகமான இனத்துவ அரசாக மாற்றிவிடக்கூடாது என்று ராஜபக்சாக்களுக்கு சொல்லப்படவேண்டும்.அவ்வாறான நிலைமை தோன்றினால், அது இரு நாடுகளுக்குமே பாதகமாயமையும்"  இந்த அச்சில் வைத்துத்தான் உங்களுக்கான (இந்தியாவிற்கான) அழிவை சீனா செய்துவருகின்றது.   இந்த அணுகுமுறையில் இந்திய வெளிவிவகார கொள்கை மாறும்வரை, சீனாவை / சிங்களத்தை ஒன்றும் செய்யமுடியாது. 
  • ட்ரம்பின் ஆதரவாளரும் அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவருமான கோர்டான் சான்ட்லேன் இன்று சாட்சியம் அளித்தார். மக்கள் யாவரும் கேட்ககூடிய இந்த விசாரணையில் அவரின் சாட்சி ட்ரம்பின் மீள் தெரிவை சவாலாக்கி உள்ளது.       PS: சரியான முறையில் அணுகினால் கோத்தாவை சுற்றியுள்ள ஒருவரை அவர் செய்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரத்துடன் உலகறிய வைக்கலாம்.