Jump to content

காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள்

பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த பல ஆயி­ரக்­க­ணக்­கான பாடசாலை மாண­வர்கள் கால­நிலை மாற்­றத்தைத் தடுக்க அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி முன்­னெ­டுத்த போராட்டம் நேற்று  உல­கெங்கும் தொடங்­கி­யது.

அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் பல மாண­வர்கள் இந்தப் புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் கலந்து கொள்­கின்­றனர்.

5568.jpg

நியூ­யோர்க்கில் நடை­பெறும் புவி வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதிர் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பேர­ணியில் கலந்­து­கொள்ள கிட்­டத்­தட்ட 10 இலட்சம் பாடசாலை மாண­வர்கள் தங்கள் வகுப்­பு­களை புறக்­க­ணிக்க உள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

உல­கெங்­கிலும் நடை­பெறும் இந்தப் பாடசாலை புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் பல மில்­லியன் மாண­வர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

சுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார்.

3500__1_.jpg

சமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார்.

முன்­ன­தாக, 2017இல் கையெ­ழுத்­தி­டப்­பட்ட பரிஸ் கால­நிலை ஒப்­பந்­தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்­கிய கால­கட்­டத்தில் நில­விய வெப்­ப­நி­லை­யை­விட இரண்டு பாகை செல்­ஸியஸ் (2.0C) வெப்­பத்­துக்கு மிகாமல், புவி வெப்­ப­ம­ய­மா­தலைக் கட்டுப்படுத்த 200இற்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

 

https://www.virakesari.lk/article/65248

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 10:04 AM, கிருபன் said:

சுவீடனைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக அர­சுகள் நட­வ­டிக்­கை எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் பாரா­ளு­மன்றம் முன் வாரம்தோறும் இதற்­காக போராட்டம் நடத்தி வந்தார்.

3500__1_.jpg

சமூக வலைத்­த­ளங்கள் மூலம் கடந்த சில மாதங்­க­ளா­கவே இந்தப் போராட்டம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டுக்­கான நோபல் அமைதிப் பரி­சுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்ளார்.

 பள்ளிப்படிப்பை விட்டு  சிறுவர்கள் போராட்டம் செய்ய தகுதியானவர்களா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவநிலை மாற்றம் குறித்து கிரேட்டா தன்பெர்க்: “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” அரசியல்வாதிகளை அதிர வைத்த மாணவி

 
கிரேடா தன்பெர்க்படத்தின் காப்புரிமை Getty Images Image caption கிரேட்டா தன்பெர்க்

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்.

 

பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார்.

நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா.

 

சரி யார் இந்த கிரேட்டா?

கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி 'பள்ளிகள் புறக்கணிப்பு' எனும் கோஷத்துடன் போராடி வருகிறார்.

ஆவேச கேள்விகளால் உலகத் தலைவர்களை அதிர வைத்த பெண்: யார் இவர்?படத்தின் காப்புரிமை Getty Images

இவருடைய செயலால் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதும் மாணவர்கள் போராட தொடங்கிவிட்டனர். திசையெங்கும் பரவிய இந்த பள்ளிகள் புறக்கணிப்பு போராட்டம் அண்மையில் சென்னையில்கூட நடந்தது.

விமானத்தில் பறப்பதையே அறம் சார்ந்த விஷயமாக மாற்றியதில் க்ரேட்டாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதாவது விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று 'பறத்தல் அவமானம்' என இவர் பிரசாரம் செய்து வருகிறார்.

ஐ.நா உரை

பருவநிலை மாற்றம்: "உங்களுக்கு எவ்வளவு தைரியம்?" அரசியல்வாதிகளை நோக்கி தைரியமாக கேள்விக் கேட்ட கிரேட்டா தன்பெர்க்படத்தின் காப்புரிமை Getty Images

அவர் ஆற்றிய உரை,

“இவை அனைத்தும் தவறு.

நான் இங்கே இருந்திருக்கக் கூடாது.

இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.

ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்.

ஆனாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்திதான்.

மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.

மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது.

அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.

ஆனால், பணம் குறித்து... நித்தியமான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்

உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

எதிர்கால தலைமுறையினரின் விழிகள் உங்கள் மீதுதான் உள்ளன.

எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,

நான் இப்போது சொல்கிறேன், "நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்"

உரையை காண:

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

https://www.bbc.com/tamil/global-49806427

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 பள்ளிப்படிப்பை விட்டு  சிறுவர்கள் போராட்டம் செய்ய தகுதியானவர்களா?
 

இவர்களை மாணவர்களாக பார்க்காமல் நாளைய தலைவர்களாக பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்களை மாணவர்களாக பார்க்காமல் நாளைய தலைவர்களாக பாருங்கள்.

அப்ப இவிங்களையும் நாளைய நாட்டு தலைவர்களாக பார்க்கலாமா சார்?

Bildergebnis für சிறுவர் வேலை

Bildergebnis für சிறுவர் வேலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அப்ப இவிங்களையும் நாளைய நாட்டு தலைவர்களாக பார்க்கலாமா சார்?

சரி
எம் ஜி ஆரை எப்படி பார்த்தோம்.

ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தூங்க இடமில்லாமல் கடைத்தெருவில் வாழ்ந்தார்.

அதே மனிதன் மாபெரும் தலைராகி இறந்தும் வாழ்கிறார்.

அமெரிக்காவில் செருப்பு தைத்த குடும்பம் ஜனாதிபதி ஆகலையா?

இப்படி எதுவும் நடக்கலாம்.

ரீகடை வைத்திருந்த பன்னீர்.

Link to comment
Share on other sites

கிரேட்டா தன்பெர்க் நம்ம ஊரிலும் இருக்கிறார்: ’குளத்தை சுத்தம் செய்தால் நான் உங்களிடம் பேசுவேன்’

திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியை சேர்ந்த நதியா என்னும் 7ஆம் வகுப்பு மாணவி தனது தந்தையிடம் 8 மாதம் பேசாமல் இருந்துள்ளார்.

அவரை பேச வைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட அவரின் தந்தைக்கு தனது பள்ளிக்கு அருகாமையில் உள்ள குளத்தை சுத்தம் செய்து தருமாறு அன்பு கட்டளையிட்டுள்ளார் நதியா.

நதியாவின் தந்தை சிவக்குமார் இதனால் தனி ஒரு ஆளாக அந்த குளத்தை சுத்தம் செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-49832376

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இந்தமாதிரி எண்ணமெல்லாம் தோன்றாது. அந்தப்பிள்ளை நதியா  நதிபோல ஊருக்கு உபகாரமாய் இருக்கு. தந்தையும் பாராட்டுக்கு உரியவரே.   நீடுழி வாழவேண்டும்.....!   🌻

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.