Jump to content

9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைக்கபட்ட வீதியை காணவில்லை.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..?

Gamp-udu1.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நாட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா்.

குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபதி, பிரதமரின் படத்துடன் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் படமும் பொறிக்கப்பட்டே பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுவருகின்றன.

குறித்த பிரதேசத்திற்குரிய கம்பரலிய வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/13608

டிஸ்கி :

kir.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

Link to comment
Share on other sites

42 minutes ago, MEERA said:

அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

(அரசியல்) கடவுளுக்கு தட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கும் !

பலகையில் அபிவிருத்தி யுத்தம் என்று போடப்பட்டுள்ளது. வீதி போட்டவன் அபிவிருத்தி எண்டதை மறந்திடான். எங்கடை பூந்தோட்டம் சித்திரவதை முகம் புகழ் சித்தர் என்னவும் செய்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

தமிழர் பகுதியில் மட்டும் கொங்றீட் வீதிகள் மாற்று இனத்தாரின் வீதிகள் இந்த திட்டத்தில் காப்பட் வீதிகளாக மாறுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி சம்பந்தமான வேலைகளில் மக்கள் விழிப்போடு இருந்தால் களவு குறையும், வேலையும் நன்றாக நடக்கும்.
கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி செயற்பாடுகளின்போது கண்காணிப்பு குழுக்களை உருவாக்கி கண்காணிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

முன்னர் வவுனியாவில், வடக்கில் கப்பம் பெற்று கொலைகளுக்கு தரகுப் பணம் பெற்று சொகுசா வாழ்ந்த சித்தார்த்தன் இப்போது இந்தியன் வீசும் பிச்சைக் காசையும் எலும்புத் துண்டுகளையும் வைத்து எப்படி சொகுசாக வாழ்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியெல்லாம் தார்பீப்பாவை காணேல்லை.....பவுண்டேசன் கல்லை காணேல்லை....குறுணி கல்லை காணேல்லை எண்டுவாங்கள். இப்ப றோட்டையே காணேல்லை எண்டுறாங்கள். நல்லாய் முன்னேறிட்டாங்கள்.😂

ஆனால் சிவராத்திரிக்கு சிவராத்திரி ஊரிலை கனவீடுகளிலை படலை காணாமல் போறது வேறை விசயம்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

Link to comment
Share on other sites

On 9/21/2019 at 2:50 PM, MEERA said:

*** எம்பியின் நிதியில் யாழில் ஓர் கோயிலின் வீதி அமைக்கப்படுகிறது, கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்டது 18 மில்லியன்கள் ( ஒரு கோடி 80 இலட்சம்) ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி 40 மில்லியன்கள் ( 4 கோடி) அப்போ மிச்சம் 22 மில்லியன்களுக்கு ( 2 கோடி 20 இலட்சம்) என்ன நடக்கும்?????

கேள்விக்கோரலில் தெரிவிக்கப்படுவது அரசு எதிர்பார்க்கும் செலவு. பல காரணங்களால் இறுதியில் உண்மையான செலவு பல மடங்காகலாம். ஒதுக்கப்பட்ட நிதி இறுதி செலவை கருத்தில் கொள்கிறது. செலவு செய்யப்படாத தொகையை அரசு கொடுக்காமல் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும்.

On 9/22/2019 at 4:16 AM, தனிக்காட்டு ராஜா said:

தமிழர் பகுதியில் மட்டும் கொங்றீட் வீதிகள் மாற்று இனத்தாரின் வீதிகள் இந்த திட்டத்தில் காப்பட் வீதிகளாக மாறுகிறது 

காப்பட் வீதிகள் இயற்கை கற்களலும் தாராலும் வேறு வேதியங்களாலும் அமைக்கப்படுகின்றன. தென்பகுதியில் உள்ள இயற்கை கற்கள் கரும்கற்பாறைகளில் இருந்து பெறப்படுகின்றன. இவை மழைக்கு இளகாது. வடக்கின் இயற்கை கற்கள் சுண்ணாம்பு கற்கள். மழைக்கு இந்த கற்கள் இளகி வீதிகளை உடைத்து விடுகின்றன. சுண்ணாம்பு கற்களில் வேறு வேதிகள் கலந்து உயர்வெப்பத்தில்   உருவாகும் சீமேந்தில் தயாரிக்கப்படும் கொங்றீட் வீதிகள் மழைக்கு இளகாத உறுதியான வீதிகள். இவற்றிற்கான செலவும் காப்பட் வீதிகளிலும் பார்க்க அதிகம்.

39 minutes ago, ஏராளன் said:

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

அமெரிக்காவிலும் இதுவே நடைமுறை.  என்ன வேலை நடக்கிறது?, யார் வேலை செய்கிறார்கள்? யாருடன் தொடர்பு கொள்வது? போன்ற விடயங்களை பெயர்ப் பலகை வளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

கேள்விக்கோரலில் தெரிவிக்கப்படுவது அரசு எதிர்பார்க்கும் செலவு. பல காரணங்களால் இறுதியில் உண்மையான செலவு பல மடங்காகலாம். ஒதுக்கப்பட்ட நிதி இறுதி செலவை கருத்தில் கொள்கிறது. செலவு செய்யப்படாத தொகையை அரசு கொடுக்காமல் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும்.

உங்களுக்கு சிறீலங்காவின் நிலமை தெரியவில்லை. தனியார் திட்டங்களை விட அரச திட்டங்களிலேயே வெட்டு கொத்துகள் அதிகம் இலாபமும் அதிகம். நான் குறிப்பிட்ட திட்டத்திற்கு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்தது 18m ஆனால் மத்திய அரசிற்கு அனுப்பியது 40m திட்டம். அரச திறைசேரியிலிருந்து குறிப்பிட்ட ஒப்பந்தகாரருக்கு 40m வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

சிறிலங்காவில் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களுக்கு கேள்விக்கோரல்களை பெற்று தெரிவு செய்த அனுபவத்தை வைத்தே எனது கருத்து அமைந்து இருந்தது. மத்திய அரசு குறிப்பிட்ட ஒப்பந்தகாரரின் செலவுகள் பற்றிய ஆவணங்களை ஆராயாமல் 40m கொடுத்தால் அது பாரிய ஊழல். சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்கு போகும் சாத்தியம் அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 11:14 PM, Jude said:

காப்பட் வீதிகள் இயற்கை கற்களலும் தாராலும் வேறு வேதியங்களாலும் அமைக்கப்படுகின்றன. தென்பகுதியில் உள்ள இயற்கை கற்கள் கரும்கற்பாறைகளில் இருந்து பெறப்படுகின்றன. இவை மழைக்கு இளகாது. வடக்கின் இயற்கை கற்கள் சுண்ணாம்பு கற்கள். மழைக்கு இந்த கற்கள் இளகி வீதிகளை உடைத்து விடுகின்றன. சுண்ணாம்பு கற்களில் வேறு வேதிகள் கலந்து உயர்வெப்பத்தில்   உருவாகும் சீமேந்தில் தயாரிக்கப்படும் கொங்றீட் வீதிகள் மழைக்கு இளகாத உறுதியான வீதிகள். இவற்றிற்கான செலவும் காப்பட் வீதிகளிலும் பார்க்க அதிகம்.

 செலவு அதிகமாக இருக்கலாம் ஆனால் உறுதியானவையாக இருக்க வேண்டும் அதாவது கொங்றீட் வீதிகள் மலையக பிரதேசங்களுக்கு சரிவரும் காரணம் நிலச்சரிவுக்கு உடையமால் இருக்கும் ( உடையலாம் ஏற்படும் நிலச்சரிவை பொறுத்து) ஆனால் இங்கே 6 இஞ்சி உயரம் இரு பக்கத்திலும் தான் இருக்கிறது நடுப்பகுதியில் வெறும் 2 இஞ்சிதான் நாள் போனபிறகு உள்ளே இருக்கும் இரும்பு தட்டு வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது இது எங்கள் ஊரில் நடந்தது போனவாரம் கூட ஓர் பாதையை பிரதேச தவிசாளருக்கு அறிவித்து அதை ஒழுங்கான முறையில் இடச்சொன்னோம்  நடுவில் கிளறிய மண்ணை கூட வேறு இடங்களுக்கு கொடுக்காமல் காசாக்கும் ஒப்பந்தக்காரர்கள் என்ன செய்வது சேவையிலும் உழைக்க வேண்டும் ஒப்பந்தக்காரர்கள் அரசியல் வாதிகள் கடைக்காரர்கள் இன்னும் பலர் உள்ளிருக்கிறார்கள் ஒவ்வொரு பாதைக்கும் 

Link to comment
Share on other sites

On 9/29/2019 at 10:48 PM, ஏராளன் said:

இந்த செய்தி சம்பந்தமா ஒரு விபரம் கிடைத்தது.

சரவணபவன் பா.உ வின் இன்றைய பேச்சின்போது புரிந்து கொண்டது என்னவென்றால் வேலை தொடங்க முதலே பெயர்ப் பலகை போடவேண்டும் என்றும் வேலை முடிந்த பின்னரல்ல என்றும் கூறினார். தென்பகுதியில் இதுதான் நடைமுறை என்றும் கூறினார்.

சித்தார்தனுக்கு விழுந்த அடில சரவணபவன் ஏன் வாய்திறக்கிறார்?
கூட்டுக் களவாணிகள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.