Sign in to follow this  
கிருபன்

முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விஷேட பிரார்த்தனை

Recommended Posts

முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விஷேட பிரார்த்தனை

முள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

poli.jpg

இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களைக் காவு கொண்ட முள்ளி வாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று மாலை 6.30மணி முதல் இன்று அதிகாலை 5மணிவரையும் இவ்விசேட பிரார்த்தனை எழுப்புதலின் துதி ஆராதனைப் பெருவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

IMG-948afc8456bb77dcaffe4e1a9339cc34-V.j

ஆரம்ப நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் விசேட பிரதிநிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். 

IMG-9f2f9ee3f0836bb3376443ade97a9077-V.j

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். எஸ். சிவமோகன், முள்ளிவாய்க்கல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போதகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/65268

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயபப்டுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பாக நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்திருந்தோம். எனினும் இது தொடர்பில் ராஜபக்ஷ அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் எமது மக்களை சொல்லணா துன்பத்திற்குள்ளாகி வருகின்றது. இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு இராணுவ சோதனைச் சாவடிகளும் ரோந்து நடவடிக்கைகளும் இராணுவ நடமாட்டமும் வடக்கில் தலைதூக்கியுள்ளது. இது எமது மக்களை அச்சத்திற்குள்ளும் யுத்த மனோபாவத்திற்குள்ளும் வைத்திருப்பதற்காகவா என எண்ணத்தோன்றுகின்றது. தற்போது கொரோனா தொற்றை காரணம் காட்டி வடக்கில் மேலும் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்படவேண்டிய சிவில் நிர்வாக செயற்பாடுகளை இராணுவத்திற்கு வழங்கி வடக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கவே இந்த அரசு முற்படுவதாக தோன்றுகின்ற அதேவேளை இலங்கை முகம்கொடுக்கவுள்ள தேர்தலில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருந்து தென்னிலங்கையில் தம்மை ஒரு வீரனாக காட்டவே இந்த ஜனாதிபதியும் பிரதமரும் எண்ணுகின்றனர். தமிழர்களை தொடர்ச்சியாக அடக்குவதனால் தமது வெற்றியை இலகுவாக்கலாம் என எண்ணக்கோட்டை கட்டும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை எதிர்வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பது திண்ணம். இராணுவ பிரசன்னம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு அமையவே காணப்பட வேண்டும். எனினும் சர்வதேச ஒழுக்க நெறியை மீறி செயற்படும் இவ் அரசு தமிழ் மக்களை அடக்கி சாதிக்க நினைப்பவைகளை ஈடேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்றும் தடையாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/83042
    • அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு பௌத்த முறைப்படி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை நேற்றுக்காலை கொழும்பிலிருந்து எடுத்துச் சென்ற ஹெலிக்கொப்டர் கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது, ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்திலிருந்து லபுக்கலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துல, தலவாக்கலை வழியாக சி.எல்.எவ். வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சி.எல்.எவ். வளாகத்திலிருந்து ஹட்டன், டிக்கோயா, வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல், 4 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/83044
    • அழகான, மனதை கொள்ளைகொள்ளும் படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.  நான் ஒரு தரம் சுவீடனிற்கு வந்திருக்கிறேன்,வாவிகளும்,மரங்களும் அழகான ஒரு நாடு. 4நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன், துக்கமான சம்பவம் ஒன்றிற்கு வந்தமையால் இடங்கள் பார்க்கவில்லை, ஆனாலும், பார்த்தளவில், கண்ணுக்குஎட்டியவரை, வாவிகளும்,மரங்களும் நிறைந்திருந்தது. ஆனால், சுவிஸ்லாந்து இன்னமும் அழகாக தெரிகிறது. அவுஸ்ரேலியாவிலிருந்து ஐரேப்பா ... மிகவும் நீண்ட பயணம்...
    • (ந.தனுஜா) கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்குக் கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் சுயமாக முன்வந்து வெளிப்படுத்த வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்குக் கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை சுயமாக முன்வந்து வெளிப்படுத்துவதனூடாக கொவிட் - 19 தொற்றுநோயைக் கையாள்வதிலான பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான தலைமைத்துவத்தினை இலங்கை ஏற்படுத்திக்கொள்வமற்கான சந்தர்ப்பத்தினை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதன்படி இற்றைப்படுத்தப்பட்ட செலவின விபரங்களுடனான கிடைக்கப்பெற்ற நன்கொடைகள், அன்பளிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கொண்ட இணையத்தளப் பக்கமொன்றை நிறுவுதல், கொள்முதல் செயன்முறையின் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றின் போது நேரந்தாழ்த்தாத இற்றைப்படுத்தப்பட்ட அனைத்து அரசாங்க கேள்விப்பத்திர அறிவித்தல்களையும் தொடர்புபட்ட ஆவணங்களையும் தொழில்நுட்ப மதிப்பீடுகளையும் தீர்மானங்களையும் வெளியிடுவதற்காக இலத்திரனியல் கொள்முதல் தளத்தைப் பேணல், தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு அமைவாகவும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கவும் சகல பொது அதிகாரசபைகளிலும் கடுமையாகப் பதிவு முகாமைத்துவ நணைமுறைகளுக்கான தேவையை மீள வலுப்படுத்தும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடல் ஆகியவற்றை நிதியமைச்சு உடனடியாக செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. மேலும் வெற்றிகரமான கொவிட் - 19 நிதிக்கொள்கை கையாளுகையில் நிதி வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல், பொதுப்பொறுப்புக்களைப் பாதுகாத்தல், நிறுவன சட்ட வலிதுடைத்தன்மையைப் பேணல் என்பவற்றை சர்வதேச நாணயம் முன்னிறுத்தியிருப்பதாகவும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்தோடு தற்போதைய நெருக்கடி நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டியிருப்பதுடன், அனைத்துத் தகவல்களையும் மக்களுடன் பகிர்ந்துகொள்வது அவர்கள் அதனடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையுடன் செயற்படவும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/83055