Jump to content

நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி  புற்று நோயால்  மரணம்

முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில்  மரணமடைந்துள்ளார் .

vlcsnap-2019-09-21-11h48m43s817_1600x900

நீண்டகாலமாக புற்றுநோயால்   பாதிக்கப்பட்டு  கொழும்பு மஹரகம  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் .

கொழும்பு மேதாலங்கார  கீர்த்தி என்ற  பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக  தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த  ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை  அமைத்து   அங்கு தங்கியிருந்து  பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டுவந்தார் .

IMG_4573_1575x1050.jpg

இதன்காரணமாக முல்லைத்தீவு பொலிஸாரால் பௌத்த பிக்கு மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தரப்பினருக்கு எதிராக சமாதான சீர்குலைவு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 

IMG_6786_1600x1067.JPG

அதாவது பிள்ளையார் ஆலய தரப்புக்கு பிக்குவால் இடையூறு ஏற்படுத்தக்கூடாது இரு தரப்பும் சமாதானமுறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் . புதியகட்டுமானங்களை மேற்கொள்ளும் போது உள்ளூர் திணைக்களங்கள் பெறப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது . இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் பௌத்த பிக்குசார்ப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும்  நிலையில் பௌத்த பிக்கு இன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/65264

Link to comment
Share on other sites

இந்தப் பூவுலகில் நீ வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தது மூத்த பிள்ளையாரா?  புத்தர் பெருமானா.?

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

இந்தப் பூவுலகில் நீ வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தது மூத்த பிள்ளையாரா?  புத்தர் பெருமானா.?

 அந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இந்தப் பூவுலகில் நீ வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தது மூத்த பிள்ளையாரா?  புத்தர் பெருமானா.?

கேன்சர் செல்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களவா்களுக்கு சொந்தமான பௌத்த நாடு..! சட்டத்தரணி சுகாஸை எச்சாித்த பிக்குகள். சுகாஸ் பொலிஸில் முறைப்பாடு..

200-Sugaseeeeeeeeeeeeeee.jpg

இலங்கை சிங்கள மக்களுக்கு சொந்தமான நாடு, பௌத்த சமயத்திற்கே இங்கு முன்னுாிமை. நீதிமன்றத்தின் உத்தரவு செல்லுபடியாகாது.

நாங்கள் திட்டமிட்ட இடத்திலேயே தகனக் கிரியைகளை முன்னெடுப்போம் என்று சட்டத்தரணிகளிடம் பௌத்த பிக்கு ஒருவர் கடும் தொனியில் தெரிவித்தார் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்தார். தம்மைத் தாக்கிய பௌத்த பிக்குவைக் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்படுத்துமாறு

சட்டத்தரணி சுகாஷ், முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.அதன்பின்னர் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

https://jaffnazone.com/news/13662

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எண்டொரு நாடாம்.அங்கை பல்லினமக்கள் வாழ்கின்றார்கள்  எண்டு பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறாங்களாம். புத்தகம் எழுதினவன்ரை  தலையிலை கல்லை தூக்கி போட....

Link to comment
Share on other sites

நீராவியடி விவகாரம் - ஜ.ம.மு அமைப்பின் செயலாளர் ஜனகன் கடும் கண்டனம் 

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

jangan_photo_2.jpg

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில். 

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த மதகுருவின்  பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த இடத்தில் தகனம் செய்ய தடை விதித்ததுடன், அதற்கான வேறு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அந்த தீர்ப்பை அவமதித்து அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவதத்தில் இரண்டு முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது சட்டத்தை மீறியுள்ளார்கள். நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்கள். நீதிமன்ற தீர்ப்பை செயற்படுத்த வேண்டிய காவல்துறையினர் நடைபெற்ற சம்பவத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அல்லது கண்டும் காணாமலும் இருந்துள்ளனர். இவை எதிர்காலத்தில் இன்னும் மோசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கு தூண்டு கோலாக அமையப்போகிறது.  

இவ்வாறன சம்பவங்கள் தொடரும் படசத்தில் தமிழர்கள்  பொறுமையாக இருப்பார்களா? மீண்டும் அவர்கள் கடந்த கால சம்பவங்களை நோக்கி தள்ளப்படுவார்கள். இது ஆரோக்கியமானதல்ல. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. நீதிமன்றமும், நீதித்துறையும் வழங்கும் தீர்ப்புகளை இனி மக்கள் எந்த வகையில் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வது? 

இந்த சம்பவத்தின் மூலம் இரண்டாவது விடயமாக இந்து மக்களின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரதூரமான விடயம். இவ்வாறான பெரும்பான்மையினத்தவரின் அடாவடியான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விடயத்தை அரசாங்கம் சாதரண விடயமாக பார்க்குமானால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புகளுள்ளன. 

சட்டத்தை காப்பாற்றவேண்டியவர்கள் இவ்வாறன சம்பவங்களுக்கு துணை போயுள்ளார்கள். இது மிகப்பெரியளவிலான கண்டனத்துக்கான விடயம்.

நடைபெற்ற சம்பவத்துக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில், குறிப்பாக வன்னியில் வாழும் தமிழ் மக்கள் மீது பாரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

சிங்கள தலைவர்கள் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறன சம்பவங்களை இனி வன்னி மண்ணிலும், தமிழர் பகுதிகளிலும் நடைபெற அனுமதிக்க முடியாது. உரிய தரப்பினரும், அரசாங்கமும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எம்  மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/65411

Link to comment
Share on other sites

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; நாளை கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கும் சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் (24) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. 

protest1.jpg

சட்டதரணிகள் மற்றும் தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

நாளையத்தினம் காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் உள்ள வைத்தியசாலையிலிருந்து நீதிமன்ற வீதியூடாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது. 

இதில் உணர்வுள்ள அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/65404

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.