Sign in to follow this  
கிருபன்

கேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Recommended Posts

கேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கேப்பாபுலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

004.jpg

இந்த சந்திப்பின் போது இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத கேப்பாபுலவு மக்களின் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்கள் தங்களது காணிகளை அடையாளங்காண்பதற்காக இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபுலவில் காணிகளை இனங்கண்டு அவை இராணுவத்திற்கு தேவையானதாக அமையின் அவற்றுக்கு இதே வளம் கொண்ட மாற்றுக்காணிகளையும் வாழ்வாதரமும் வழங்க முன்வருவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்போது அப்பகுதி மக்கள் தமக்கு அவர்களது பூர்வீக காணிகளே வேண்டும் என்று தெரிவித்தனர். அவ்வாறெனில் முதலில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை அடையாளப்படுத்த இராணுவ முகாமிற்குள் குறித்த மக்களை ஒரே நாளில் மூன்று பிரிவுகளாக செல்வதற்கான அனுமதியினை வழங்குமாறு ஆளுநர் முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரியிடம் தெரிவித்தார். இதன்போது இராணுவ உயர்அதிகாரியும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

003.jpg

இந்த சந்திப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் , வடமாகாண காணி ஆணையாளர் , காணி உத்தியோத்தர்கள் , நில அளவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி உள்ளிட்ட கேப்பாபிலவு மக்கள் கலந்துகொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/65259

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஏற்றுக தீபம் போற்றுக தீபம்.......!   😁
    • வணக்கம் வாத்தியார்.........! ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்ராத்திரி வாசலில் கோலமிடும்வானம் இரவுக்குப் பாலமிடும்பாடும் பறவைகள் தாளமிடும்பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!வானம் எனக்கொரு போதிமரம்நாளும் எனக்கது சேதி தரும்ஒருநாள் உலகம் நீதி பெறும்திருநாள் நிகழும் தேதிவரும்கேள்விகளால் வேள்விகளைநான் செய்வேன்...........! ---இது ஒரு பொன்மாலைப் பொழுது---
    • கீழடியில் விலங்கின் எலும்பு கண்டெடுப்பு திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட விலங்கின் எலும்பு. திருப்புவனம் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பிப்.19-ம் தேதி 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. கரோனா ஊரடங்கால் மார்ச் 24-ல் அகழாய்வு பணியை தொல்லியல் துறை நிறுத்தியது. ஊரடங்கு தளர்வால் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ல் முதல் முறையாக மணலூரிலும் பணி தொடங்கியது. மே 27-ல் கொந்தகையில் பணி தொடங்கியது மே 28-ல் பெய்த பலத்த மழையால் அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. தண்ணீர் வற்றிய நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் பணிகள் தொடங்கின. மணலூரில் தோண்டிய ஒரு குழியில் சுடு மண்ணால் ஆன உலையும், கீழடியில் விலங்கின் எலும்பும் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்பு ஏற்கெனவே கிடைத்த எலும்புத் துண்டுகளை விட பெரிதாக உள்ளது. முழு ஆய்வுக்குப் பிறகே அது எந்த விலங்கின் எலும்பு என்பது தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். https://www.hindutamil.in/news/tamilnadu/557936-animal-fossil-found-in-keezhadi-excavation.html  
    • தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஓரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டி உள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 5- வது நாளாக தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,388 பேர் பாதிப்புபதிவாகி உள்ளது. தண்டையார்பேட்டை- 2,261, தேனாம்பேட்டை - 2,136 கோடம்பாக்கம்- 2,123 திருவிக நகர் - 1,855, அண்ணாநகர்- 1660, அடையாறு- 1042, வளசரவாக்கம்- 9, திருவொற்றியூர்- 670, சோழிங்கநல்லூர்- 339, மணலி- 259, மாதவரம் - 490, அம்பத்தூர்- 289 பெருங்குடி- 334, ஆலந்தூர்- 289 சென்னையில் செப்டம்பர் மாத இறுதியில்தான் பாதிப்புகளும் இறப்புகளும் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தான் பாதிப்புகள் குறையும் என எம்.ஜி.ஆர். பல்கலைகழக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் அனைத்தும் சென்னையில் வழங்கப்படவில்லை. நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுப் போக்குவரத்து இயக்கப்படவில்லை. சென்னையில் செப்டம்பர் மாத இறுதியில்தான் பாதிப்புகளும் இறப்புகளும் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக ஆய்வில் சென்னையில் ஜூலை 15-ஆம் தேதி 1,05,244 பாதிப்புகளும் 1654 இறப்புகளும் ஏற்படக்கூடும் என  கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இது வரை ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்து எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக ஆய்வில்   கணிக்கப்பட்டதைப் போலவே நடந்து உள்ளன. பல்கலைக்கழகம் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் அதன் கணிப்புகள் அரசாங்கத்தால் தீவிர கண்காணிப்பு மற்றும் தயார்நிலைக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வில் சென்னையில் மே 25-ஆம் தேதி  11119 பாதிப்புகளும் 83 இறப்புகள் ஏற்படும் என கணிக்கபப்ட்டது. அன்று 11131 பாதிப்புகளும் 83 இறப்புகளும் பதிவாகி இருந்தன.  மே 30ஆம் தேதி 14415 பாதிப்புகளும் 119 இறப்புகளும் நேரிடும் என கணிக்கப்பட்டது. அந்த தேதில் சென்னையில் 13980 பாதிப்புகள் மற்றும் 119 இறப்புகள் ஏற்பட்டன. ஜூன் 1ஆம் தேதி 15991 பாதிப்புகள் மற்றும் 137 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அன்று 15770 பாதிப்புகளும் 138 இறப்புகளும் ஏற்பட்டன. ஜூன் 2ஆம் தேதி 16842 பாதிப்புகள் ஏற்படும் என்றும் 146 இறப்புகள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டது. அன்று சென்னையில் 16585 பாதிப்புகள் மற்றும் 150 இறப்புகள் ஏற்பட்டன. ஜூன் 3-ஆம் தேதி 17738 பாதிப்புகள் மற்றும் 156 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அந்த தேதியில் 17598 பாதிப்புகள் மற்றும் 153 இறப்புகள் ஏற்பட்டன.  ஜூன் 4ஆம் தேதியில் சென்னையில் 18681 பாதிப்புகள் மற்றும் 166 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அந்த தேதியில் சென்னையில் 18693 பாதிப்புகள் மற்றும் 167 இறப்புகள் ஏற்பட்டன. அடுத்த பத்து நாட்களில் ஜூன் 15-ஆம் தேதி பாதிப்புகள் 32977 மற்றும் 324 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜூன் 30-ஆம் தேதியில் இது இரு மடங்காகி 7,1024 பாதிப்புகள் மற்ற 748 இறப்புகள் சென்னையில் நேரிடலாம். இதே தேதியில் தமிழகத்தில் 1,32,242 பாதிப்புகளும் 769  இறப்புகளும் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி சென்னையில் 74714 பாதிப்புகள் மற்றும் 790 இறப்புகள் ஏற்படக்கூடும். ஜூலை 15-ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து  150244 என பாதிப்புகளும் 1654 என இறப்புகளும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மூத்த விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன் விஞ்ஞானிகள் தெய்வங்களும் இல்லை, இது யூக வேலையும் அல்ல. கடந்த இரண்டு மாதங்களாக அவர்களின் கணிப்புகள் உண்மையாக இருந்ததால், பல சமூக காரணிகள் இருப்பதால் வரும் மாதங்களில் அது இன்னும் தவறாக போகலாம் என்று நாம் கூற முடியாது. ஆனால் இவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அறிகுறிகள் என கூறினார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05124232/Tamil-Nadu-varsity-predicts-15-lakh-Covid-cases-in.vpf   தமிழ் நாட்டு மக்களே கனவமாக இருங்கள்