Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88.jpg?w=1170&sசினிமா அழகியல் சார்ந்தது. அழகியல் புரிதலுடன் தொடர்புடையது. ஐம்புலன்களையும் ஈர்க்கும் ஒரு விஷயம் நமது அறிவை சென்று அடையாவிட்டால் எஞ்சுவது குழப்பம் மட்டுமே. நன்னெறிகள் ஒற்றைத் தன்மை கொண்டவை. அழகியல் மீது ஒற்றைத் தன்மையை புகுத்தினால் கிடைப்பதோ அபத்தம். குழப்பமும் அபத்தமும் மிகச்சரியான அளவுகளில் சேர்க்கப்பட்டிருந்த படம், சினிமா விரும்பிகளின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆடை.

படத்தின் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் படம் ரசிக்கும்படியாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. படத்தின் முதல் பாதியில் வரும் பகடிகள் – காமினியின் தாய் பெமினிசமா, கம்யூனிசமா என்று தெரியாமல் ஏதோ ஒரு படத்தில் வரும் ஒரு வசனத்தை சொல்லுவது, ஆவேசமடைந்த டீக்கடைக்காரர் ‘பார்த்து பேசு பின்னாளில் நான் பிஎம் ஆகக்கூடும்’ என்பது போன்றவை – பொது ஜனத்தின் மனதை பிரதிபலிப்பதாய் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தின் இரண்டாம் பாகம் காமினி ஆடைகள் இல்லாமல் அந்தப் பெரிய கட்டிடத்தில் இருந்து வெளியே வர வழி இல்லாமல் உதவிக்கு யாரையும் கூப்பிடவும் முடியாமல் சிக்கி தவிக்கும் காட்சிகள் மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டிருந்தது. இந்து ஆங்கில நாளேட்டில் இப்படத்தை விமர்சனம் செய்து எழுதியிருந்தவர் இக்காட்சிகள் துன்பத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் குறியீடு என்று அழகாக விளக்கி எழுதி இருந்தார். அது படத்திற்கு பொருத்தமான பார்வை. காமினியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அமலாபால் படம் முழுவதையும் தனது தோள்களில் நேர்த்தியாக சுமக்கிறார். அவருக்கும் நடிகர் நடிகையரின் திறனை வெளிக்கொணர்ந்த இயக்குனருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். படத்தில் அடிக்கடி அடல்ட் ஜோக்ஸ் வைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாமல் அவை ஆபாசமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டது படக்குழுவின் சித்தாந்த தெளிவை காட்டுகிறது. 

இவ்வளவு தெளிவான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் முடியும் தருவாயில் சொல்வதெல்லாம் சமூக சீர்கேட்டிற்கு காரணம் பெண்கள் அடைந்திருக்கும் சுதந்திரம்தான். அது எல்லையை விட்டு மீறுவது கூடாது; அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இது ஒன்றும் புதிதல்ல. ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு மனநலம் குன்றிய குழந்தை பிறக்கும் என்ற கருத்திற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. தமிழ்சினிமாவில் பொறுப்பற்ற தன்னலம் மிக்க செய்கைகளை செய்யும் பெண்கள் அனைவரும் பெண்ணியம் பேசுவது ஒன்றும் தற்செயல் இல்லை.

ஒரு ஜனரஞ்சகமான படத்தை கொடுக்கும் முனைப்பு படத்தின் பல இடங்களில் வெளிப்படுகிறது. படத்தின் முற்பகுதி முழுவதுமாக பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக நிறைய இளமை ததும்பும் கலாய்ப்பு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதனூடாக மையப் பாத்திரம் காமினியின் குணநலன்களும் அழுத்தந்திருத்தமாக பார்வைக்கு வைக்கப்படுகிறது. இது ஒரு கனமான வலி நிறைந்த படம் இல்லை என்பதை காண்பிப்பதற்காகவே பிற்பகுதியில் மயங்கி விழும் தாய் காப்பாற்றப்படுகிறார்.

பெண்கள் இன்று அடைந்திருக்கும் சுதந்திரம் பல கட்ட போராட்டத்திற்கு பின் பெறப்பட்டது என்பதை முன்னுரையில் நங்கேரியின் கதை மூலமாக மிக ஆழமாக பதிவு செய்கிறார் இயக்குனர்.

அதன் தொடர்ச்சியாகவே இந்நாள் நங்கேரி கூறுகிறார், “நீ ஆடையாவது மண்ணாவது என்று வெளியே வருவாய் என்று நினைத்தேன். ஆனால் நீ அவ்வளவு மோசமில்லை.” இந்த இடத்தில் வெளிப்படுகிறது கதாசிரியரின் பெண்ணிய பார்வை. ஒருவகையில் அவர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள விரும்பாத பழமைவாதியாகவே இருக்கிறார். பெண்ணியத்திற்கும் சமூக சீர்கேட்டிற்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக அழுத்தமாக நம்புகிறார். இதற்கு காரணம் பெண்ணியம் என்பது ஊடகங்கள் பொது ஜனத்திற்கு காட்டுவதுதான் என்ற புரிதல். அதாவது பெண்ணியத்தில் நம்பிக்கை உள்ள பெண்கள் மணம் புரிந்து கொள்ளமாட்டார்கள்; குடிப்பார்கள்; நிறைய ஆண்களுடன் நட்பு வைத்திருப்பார்கள்; அந்தரங்கத்திற்கும் பொதுவெளிக்கும் உள்ள வேறுபாட்டை கடைப்பிடிக்க மாட்டார்கள்; ஆண்கள் செய்யும் வேலைகளைச் செய்து காட்டி தங்களது திறமையை நிரூபிக்க விரும்புபவர்கள்; எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் உறவுகளில் வாழ்பவர்கள்; எப்போதும் தங்களின் ஆதிக்கத்தை அடுத்தவர்கள் மேல் திணிப்பவர்கள்; வீட்டில் பெரியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் என்பதாகச் சில கருத்தியல்கள் பெண்ணியத்தின் மேல் தொடர்ந்து பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் நமக்கு படத்தில் காட்டுகிறார் இயக்குனர். 

ஆனால் இவர் புரிந்துகொள்ள விரும்பாத ஒரு விஷயம் பெண்ணியத்தின் வகைபாடுகள். பெண்கள் அனைவரும் அடிமைப்படுத்தப்பட்டதில் சகோதரிகள் என்ற தட்டையான கட்டமைப்பின் பாதிப்புகள் தான் இந்த குழம்பிய குட்டை.

வரலாற்று நங்கேரியின் போராட்டம் பெண்உரிமை மட்டுமல்லாது அவளது சாதி விடுதலை சார்ந்த போராட்டமும் கூட. ஆனால் காமினியோ ஒடுக்கப்பட்ட சாதி என்ற தொடர் மத்தின் வெளியே நிற்கிறாள். அவள் அதிகப்படியான ஆடைகளால் போர்த்தப்பட்டு மூச்சுத்திணறி வெளியேவர நினைப்பவள். தற்கால நங்கேரி விளிம்புநிலை வாழ்க்கையில் இருந்து வெளிவர அதிகார கயிற்றினைப் பற்ற நினைப்பவள். காமினி ஒடுக்குமுறை பற்றிய சிறிய புரிதல் கூட இல்லாதவள். இவர்கள் இருவரும் இணைவது சாத்தியமா என்று சிந்தித்தால் இயக்குனரின் பார்வை சாத்தியம் என்பதாகவே காட்டுகிறது. அதாவது காமினிகள் தங்களது சுதந்திரத்தை ஒடுக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தினால் சாத்தியம் என்பதாக படம் முடிகிறது. நம் முன்னே இரண்டு கேள்விகள் இருக்கிறது: 1. காமினிகள் முன்வருவார்களா? 2. நங்கேரிகள் காமினிகளை நம்புவார்களா? 

அது ஒருபுறம் இருக்கட்டும். நமது குட்டை எதனால் குழம்பியது என்று பார்ப்போம். இளைஞர்களால் ரசிக்கக்கூடிய ஒரு படம்; முற்போக்கான கருத்தை முன்வைக்க விழையும் ஒரு படம்; அதேநேரம் சமூக ஒழுங்கைச் சீர் குலைக்காத ஒரு படம்; சமுதாயத்திற்கு ஒரு கருத்தைச் சொல்லும் படம்; இன்றைய முதலாளித்துவ அரசியல் மனோபாவத்தை பகடி செய்யும் ஒரு படம்; பொதுவெளியில் ஆபாசம் என்று கருதுபவை பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களில் மிக இயல்பாக எடுத்துக்கொள்ளப் படுபவை. அவற்றை மூடி மறைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைக்கும் ஒரு படம்; விளிம்புநிலை மக்களை விலக்காத ஒரு படம் என்று ஒரே நேரத்தில் பல கம்பிகள் மேல் நடக்க முயற்சித்திருக்கிறார் கதாசிரியர். சமூகம் வகுத்திருக்கும் சட்டகத்தினுள் இருந்துகொண்டே புரட்சிகள் செய்வது என்பது பொதுவாக சாத்தியமில்லை.

ஜனரஞ்சகமான ஒரு படத்தை யார் மனதையும் புண்படுத்தாமல் எடுக்கலாம். உதாரணமாக நானும் ரவுடி தான் படத்தை சொல்லலாம். அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த படம் யார் மனதையும் புண்படுத்தவில்லை. சமூகத்திற்கு கருத்து சொல்லும் ஒரு படத்தை நகைச்சுவை உணர்வோடு எடுக்கலாம். ஆனால் இவ்விரண்டு வகையான படங்களிலும் தான் எடுக்க விழையும் படம் எது என்ற தெளிவு கதாசிரியருக்கு அல்லது இயக்குனருக்கு இருக்க வேண்டும். அப்படி இருக்குமானால் கோர்வையான ஒரு கதை கிடைக்கும். இல்லாது போனால் வெறும் கலங்கிய குட்டைதான். படத்தில் நிர்வாண அம்சத்தை மையப்படுத்தி பிற நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளது.

நடிகர்களை முன்னிலைப்படுத்தி படங்களை எடுப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதில்லை. பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவையே. நண்பன் போன்ற படங்களில் நடிகர் விஜய் பிரதானமாக தெரிந்தாலும் அதில் அவர் முன்னிலை படுத்தப்பட்ட ஒரு மைய பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதை நம்மால் காண முடியும். பஞ்சவன் பாரிவேந்தனை தீர்க்கமான கருத்துக்களும் கொள்கைகளும் இயக்கும். இதற்கு நேர் எதிராக அறம் போன்ற படத்தை பார்க்கலாம். படம் துவங்கும் பொழுது விளிம்புநிலை மக்களின் வாழ்வை காண்பிப்பது போல் துவங்கி முடியும் பொழுது அனைத்து வித சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மக்களை ஆட்டுவிக்கும் அதிகாரம் படைத்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி தான் நினைத்தது போல மக்களுக்கு பணியாற்றும் சுதந்திரம் இல்லாதவராக இருக்கிறார் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொடி பிடிக்கும். இதுதான் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் நடிப்பதற்கும், ஒரு நடிகருக்காக ஒரு கதை உருவாக்கப்படுவதற்குமான வித்தியாசம். சில கதாசிரியர்கள் ஒரு நடிகருக்காக ஒரு கதையை உருவாக்கினாலும் அது அப்பட்டமாய் தெரியாத வண்ணம் கோர்வையான சம்பவங்களின் மூலம் அழகானதொரு படைப்பை பார்வையாளர்களுக்கு அளிக்கிறார்கள். பலசமயம் அது அறம், ஆடை போன்று குழப்பத்தில் சென்று முடிகிறது.

ஆடை படத்தைப் பற்றிய பல விமர்சனங்களில் ஒன்று அதில் ஒரு கோர்வையான கதை இல்லாதது என்பது. அது பற்றி பரவலாக பேசப்பட்டு இருந்தபோதிலும் அதே விஷயத்தை மீண்டும் இங்கு பேச காரணம் அது பெண்களின் சுதந்திரத்தின் மேல் எழுப்பும் சந்தேகங்களும் தற்சார்பை விரும்பும் பெண்களை ஆதரிப்பது போல் அவர்களுக்கு அறிவுரை கூறும் பிற்போக்கு வாதமும் தான். இதை சொல்லும் பொழுதே நம் முன் ஒரு கேள்வி நிற்கிறது. காமினி போன்ற பெண்கள் செய்வது சரியா என்பது. அதன் கூடவே வரும் பெண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தாக்கம். இதை சற்று தலைகீழாக யோசித்துப் பார்க்கலாம். காமினி போன்ற பொறுப்பற்ற சுயநலமான செயல்களில் ஈடுபடும் ஆண்களை என்ன சொல்லி இந்த சமுதாயம் வசை பாடுகிறது? ஆண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதத்தை நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா? மாறாக பணத்திமிரில் செய்கிறான் அல்லது அந்த ஆண் நாம் விரும்பாத ஒரு சாதியை, மதத்தை அல்லது மொழியை சார்ந்தவராக இருந்தால் இவர்களின் ஆட்டம் அதிகமாகிறது என்பதுதான் மிகைப் படியான கண்டனமாக இருக்கும். இரு பாலருக்குமான வாசவுகளிலும் நாம் மிக கச்சிதமாக மறந்துவிடுவது இதுபோன்ற விஷமமான விளையாட்டுகளை ஊக்குவிற்பவர்களை. அதில் முக்கிய பங்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளை ரசிக்கும் சமூகமாகிய நமக்கும் உண்டு. நம்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பெண்களுக்கு கொடுத்த சுதந்திரம் என்று கிடைத்தவர் மேல் பழி போடுவது கறந்த பாலினும் சுத்தமான அயோக்கியத்தனம். 

ஆப்பிரிக்க அமெரிக்க அறிஞர் எழுத்தாளர் பெல் ஊக்ஸ் சொல்லுவார் “பெண்ணியம் என்பது அனைத்து விதமான ஒடுக்குமுறைக்கும் எதிரானது” என்று. அப்படி இருப்பது ஒன்று மட்டுமே விடுதலையை நோக்கி இட்டுச்செல்லும் பாதையாக இருக்க முடியும். ஒடுக்குமுறையையும் அக்கறையின்மையையும் சுயநலத்தையும் பரப்பும் எதுவும் விடுதலைப் போராட்டம் ஆகாது. அப்படி முன்னிறுத்தப்பட்டால் அது விசாரிக்கப்பட வேண்டிய உள்நோக்கம் கொண்டது. 

இப்போது நாம் முதலில் பார்த்த இரண்டு கேள்விகளுக்கு வருவோம். முதல் கேள்வி காமினி நங்கேரிக்கு உதவிட முன் வருவாளா என்பது. படம் நமக்கு முன் வருவாள் என்பதையே காட்டுகிறது. அதேபோல நங்கேரியும் காமினியை நம்புவார் என்று முடிகிறது. அதை தனிப்பட்ட இருவரின் முடிவாக விட்டுவிடுவோம்.

அத்தோடு நில்லாமல் படம் ஒரு படி மேலே சென்று காமினி தனது தனிப்பட்ட வாழ்க்கைமுறையை விட்டுக் கொடுக்காமல் தான் செய்யும் வேலையை சற்று மாற்றிக் கொண்டாள் என்று பார்க்கிறோம். சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை தனது உணர்வுகளை, பாதுகாப்பை பணயம் வைத்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுபவராக காமினி தன்னை மாற்றிக் கொள்கிறார். வாய்ப்பு கேட்டு செல்லும் பாடலாசிரியரின் வீட்டில் இருந்து வெளியேறும் காமினி அழுது கொண்டே வருகிறார். உள்ளே என்ன நடந்தது என்பதை நம்மால் உணர முடியும். 

தவறை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் பொறுப்பை காமினி போன்று தற்சார்புடன் வாழும் பெண்கள் மட்டும் ஏன் ஏற்க வேண்டும்? அவருக்கு கணவன் குழந்தைகள் போன்ற சுமைகள் இல்லாததாலா?

 

https://solvanam.com/2019/09/14/ஆடை-குழம்பிய-குட்டையில்/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அடுத்த தேர்தலுக்கு உதவக்கூடிய ஆக்கம். தமிழ்தேசிய கட்சிகளின் சார்பில் இந்த ஆக்கத்தை தயாரித்த ரஞ்சித்துக்கு நன்றிகள் பல 🙏
  • என்னத்தை சொல்ல..! இந்த மாதிரி 'மெண்டல்கள்' இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்..! 😡    
  • தெரு ஓவியமும், சமூக இயக்கங்களும், சமூக மாற்றமும் – (பகுதி 04)    65 Views தெரு ஓவியமும், சமூக இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களைப் போலல்லாது, ஓவியர்கள் சமூக பிரதிபலிப்பிலும், அதன் தனிக்குறியீட்டிலும் (Signification) பாரிய பங்களிப்புச் செய்கின்றார்கள். சமூக இயக்கங்களைச் சேர்ந்த ஓவியர்கள் தாங்கள் சரியென்று நம்பிய சமூக நோக்கிற்காக மற்றவர்களை நம்பவைத்து பற்றுறுதியூட்டுவதற்கு தங்களது தூரிகையை பயன்படுத்துகின்றார்கள். சமூக நோக்கை அடைவதற்காக அந்த சமூக நோக்கு சார்ந்த காட்சி மொழியை (Visual language) அறிமுகப்படுத்தி, அவற்றிற்கான பொது வெளியைக் கட்டமைத்து மக்கள் தங்களை கூட்டாக அடையாளப்படுத்துவதற்குரிய வழிவகைகளை உருவாக்குகின்றார்கள் (E.J.Mecaughan – 2012). வட அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் உருவெடுத்த சமூக இயக்கங்களின் பின்னணியில் அவ்வியக்கங்களுக்கான காட்சி மொழியைக் கட்டமைத்த ஓவியர்களின் பங்களிப்பு காத்திரமானது. 1960 இலிருந்து 1990 வரைக்கும் சனநாயக உரிமைகளை வலியுறுத்தி முன்வைத்த இவ்வியக்கங்களின் காட்சி மொழிச் சொல்லாடல், இன்றும் பொருத்தமாய் இருப்பதை மறுப்பதற்கில்லை (Ibid). 1990களில் எழுந்த Alberts Mehucci (1996) குறிப்பிடுகின்ற ‘கலாச்சார திறனாய்வின் மீள்வாசிப்பு’, சமூகவியல் – அரசியல் தளம் சார்ந்து அவசியமாகின்றது. சமூக நோக்குக் கொண்ட ஓவியர்களினால் படைக்கப்படும், பகிரப்பட்ட தினசரித்தன்மையின் பிரதிபலிப்பு (representation of shared everydayness) சமூக இயக்கங்களுக்கான கருவிகளாக அமையும். சமூக இயக்கமாதலில் கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்குவது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அவசியமானதும் கூட. யதார்த்தத்தின் தினசரித்தன்மையிலிருந்து கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளை மக்கள் வாழ்வியலிலிருந்து பிரிக்க முடியாது. இயக்கமாதலை மையப்படுத்திய ஓவியர்களின் படைப்புக்கள் சமூக – அரசியல் தளத்திலிருந்து வாசிக்கப்பட்டு அர்த்தம் பெறப்பட வேண்டும். குறிப்பாக அவர்கள் போராடும் நோக்கினை முன்வைத்து, எதிர்க்கும் கட்டமைப்பை கருத்தில் கொண்டு வாசிக்கப்படுதல் இயக்கமாதலுக்கான அர்த்தத்தை தெளிவுபடுத்துகின்றது. ‘கலாச்சாரம் என்பது அரசியல்’, (Alvarez, Dagninio & Escobar 1998) மக்களின் அடக்குமுறைத் தினசரித்தன்மையும், உரிமைக்கான கோரிக்கைகளாக எழும் ஓவியங்களும், மாற்று சமுதாயக் கட்டமைப்பை முன்வைக்கின்றன. ஏற்கனவே இருக்கின்ற கட்டமைப்பை சிக்கலுக்குட்படுத்தி முன்வைக்கப்படுகின்ற மாற்றுச் சமுதாயக் கட்டமைப்பு, மேலாண்மைக் கட்டமைப்பு வரைவிலக்கணத்தை மீள் வாசிப்புக்குட்படுத்துகின்றது. மேலாண்மை அல்லது ஏகாதிபத்திய அதிகார வரைவிலக்கணத்திற்கும் மாற்று அல்லது பதிலீடான எதிர்ப்பியங்கல் அதிகார வரைவிலக்கணத்திற்கும் இடையேயான முரண்நகை ஒரு கொதிநிலையை உருவாக்குகின்றது. இந்த கொதிநிலையிலிருந்து தான் இயக்கமாதலுக்கான வலுச்சேர்க்கும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. Becker (1985) தன்னுடைய ஆய்வில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஓவியம் ஓர் தனித்து செய்யக்கூடிய கலை அல்ல, கூட்டான செயற்றிட்டம். இவ்வாறான செயற்றிட்டம், சில விடயங்களை சவாலுக்குட்படுத்தி சில செல்நெறிகளை கட்டுடைப்புச் செய்தது. அதற்கு உதாரணமாக ‘அதீத கற்பிதம்’ (Surrealism) என்ற சிந்தனைப் பள்ளியூடாக வெளிவந்த மாற்றத்தைக் குறிப்பிடலாம். இச்சிந்தனைப் பள்ளியூடு வெளிவந்த சிந்தனைக் கட்டமைப்பு ஏறக்குறைய அனைத்து அழகுகக்கலைத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது எனக் கூறினால் மிகையாகாது. உதாரணமாக, கவிதை, ஓவியம், சினிமா, சிற்பம், புகைப்படக்கலை இன்னும் பிறவற்றின் மீது அந்த செல்வாக்கு நீடித்தது. 1970 களில் புதுச் செல்நெறிச் சொல்லாக Audre Breton போன்ற செல்வாக்கு மிக்க தலைவரால் முன்னெடுக்கப்பட்டது. அழகுக்கலையில் புரட்சியைத் தோற்றுவித்து புதிய பாங்கு மூலம் அழகுக்கலை செய்வதை அறியப்படுத்தும் போது ஏற்கனவே இருந்த செல்நெறியை சவாலுக்குட்படுத்தி, கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இவ்வாறாக எழுந்த சிந்தனைப்பள்ளிப் புரட்சி அழகுக்கலைக்கப்பால் அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியது. இந்த எழுச்சியின் நீட்சி காலனித்துவத்திற்கு எதிரான போராக மாற்றமடைந்தது (I.Mathieu 2019). இது தவிர வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகள் சமூக மாற்றத்திற்காக சமூக இயக்கமாகின என்பது வரலாறு கற்றுத்தரும் பாடம். Bordieu (1996), ஓவியர்களின் ஆக்கபூர்வமான சுதந்திரம் பற்றிக் குறிப்பிடுகையில், ஓவியர்களுக்கு தங்களுடைய வெளிப்படுத்தும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான தார்மீகக் கடமை இருக்கின்றது. இச் சுதந்திரம் கூட்டு முயற்சியினூடு முன்னெடுக்கப்பட்டால்தான், அதன் இலக்கினை அடைய முடியும் (L.Mathieu 2018). சிறீலங்கா போன்ற கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மறுக்கப்படும் சூழலில், இன்றும் குறிப்பாக அரசால் தணிக்கைக்குட்படுத்தப்படும் நிலையில், தற்பாதுகாப்பு என்பது கூட்டாக இயக்கமாதலில் தான் தங்கியிருக்கின்றது. அரச அடக்குமுறைக்கெதிரான அல்லது அதிகார பலத்தை சிக்கலுக்குட்படுத்தும் வகையிலான ஆக்கபூர்வ வெளிப்பாட்டுச் சுதந்திரம் அரசினால் மறுக்கப்படும் சூழலில் ஓவியர்கள் பல்வேறு நுணுக்கங்களை தமது முறையியலில் உள்வாங்கத் தலைப்படுகின்றனர். ஓவியர்களின் யதார்த்தத்தை வரைவிலக்கணப்படுத்துவதற்கும், அரசு யதார்த்தத்தை வரைவிலக்கணப்படுத்துவதற்குமிடையே முரண் உண்டாகும் தளத்தில் மேற்கூறப்பட்ட சிக்கல் எழ வாய்ப்பிருக்கின்றது. அவ்வாறானதொரு சூழலில் தான் வடக்கு – கிழக்கில் வாழுகின்ற ஓவியர்களின் நிலைமை அமைந்திருக்கின்றது. ஓவியங்கள் மூலதனமாக மாற்றப்படுகின்ற சூழலில், பணப்பெறுமதியற்ற ஓவியங்களையும், முற்றிலும் சமூக மாற்றத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஓவியர்களையும் கட்டமைப்பது என்பதே ஒரு புரட்சி. மேற்கூறப்பட்ட கட்டமைப்பு பிரதான செல்நெறிப் போக்கிலிருந்து மாறுபட்டதும், ஏன் முரண்பட்டதும் கூட. இதற்கான வலுச்சேர்த்தல் ஒத்த நோக்குடைய குழுக்களுக்கூடாக பரவவிடப்பட்டு பின்னர் பிரதான நோக்காக, பிரதான சமூகவியல் – அரசியல் நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும். சிறீலங்கா அரசின் நீண்ட காலத்திட்டத்திற்குள், தீவை ஒரே படித்தான (Xay G – homogenuous culture) கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இம்முயற்சியில் ஏனைய கலாச்சாரப் பிரதிநிதித்துவத் தன்மையின் பல்வகைத் தன்மை ஓரங்கட்டப்படுகின்றது. மெக்சிகோவில் இனங்களின் கூட்டு அடையாளத் தன்மையை தக்க வைப்பதற்கும், மீள உயிர்ப்பிப்பதற்கும் ஓவியத்தைப் பயன்படுத்தினார்கள். இவை கலாச்சார எதிர்ப்பு (counter–cultural) இயக்கங்களாக பரிணமித்தது. இவ்வாறான படைப்புக்களில் கலாச்சாரக் குறியீடுகள் முக்கியம் பெற்றன. ஒரு இனத்திற்குரிய கலாச்சாரக் குறியீடுகளை மீளவலியுறுத்துவதன் மூலம் கூட்டு அடையாளத்தை ஆழப்படுத்தி வலிமை பெறச் செய்தல் இன்றியமையாதது. இவ்வாறான ஏகாதிபத்திய எதிர்ப்பு (counter–hegemonic) செல்நெறியை உருவாக்குவதன் மூலம் இன பிரதிநிதித்துவப்படுத்தலைக் காட்சிப்படுத்தலாம். 1968களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஓவியர்கள் கண்ட கனவின் எதிரொலி இன்றும் விளைவுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எனக்குத் தெரிந்த ஒரு சில ஈழத்து ஓவியர்களில் அ.மார்க், ரமணி, ஆசை ராசையா இன்னும் பலர் பிரதிநிதித்துவப்படுத்த முயன்ற தினசரித்தன்மையும், அடக்குமுறைக்கெதிராக ஓவிய மொழியில் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலும் மீள் வாசிப்புச் செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. தெரு ஓவியமும் சமூக மாற்றமும் ஆசிய பிராந்திய ஓவிய செல்நெறியை ஆராய்ந்த (Caroline Turner 2005) குறிப்பிடுகையில், பொதுவான செல்நெறியாக ஓவிய வெளியில் சர்வதேச மேலாண்மைத்துவத்தை (hierarchical internationalism) எதிர்க்கின்ற மனநிலை உருவாகியிருப்பதுடன், மேற்கத்தைய கலாச்சார மேலாண்மைத்துவத்திற்கு எதிரான போக்கும் இருந்ததாக குறிப்பிடுகின்றார் (Ibid). தேச-அரசுகளின் (nation – state) எழுச்சியோடு தேசிய அடையாளத்தைப் பிரதிபலித்துப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியங்கள் எழுச்சி பெற்றன. தேசிய அடையாள தனித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஓவியர்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்பட்டது. அது ஒரு நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் நிகழ்ந்தது (Jen Webb 2005). சிறீலங்காவைப் பொறுத்தவரையில், சிறீலங்கா தேசக் கட்டுமானத்திற்கு ‘43 குழுமம்’ (43 Group) ஓவியர்களின் குழு ஆற்றிய பங்களிப்பு நிராகரிக்கப்பட முடியாதது. இவர்களுடைய பயணம் காலனித்துவத்திற்கு எதிராக ஆரம்பித்து, 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் செல்நெறியாக இருந்த, குறிப்பாக பிரான்ஸிய நவீனத்துவ ஓவிய மரபை ஒட்டி சிறீலங்கா நவீனத்துவ ஓவிய மரபைத் தோற்றுவித்தது இவர்களின் பங்களிப்பாகும்.( Jagath Weerasinghe 2005). 43 குழுமத்தை விட அதே காலங்களில் ‘தூய மேற்கத்தைய கலப்பில்லாத தூய சிறீலங்கா’ ஓவிய சொல்லாடலை உருவாக்க வேண்டும் எனக் கோரி, தேசிய வாதத்தை மையமாகக் கொண்டு, 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் வெவ்வேறு ஓவியப் போக்குகள் சொல்லாடல்களாக அறிமுகப்படுத்தப்பட்டன (Ibid). 1960களில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த எச்.எ.கருணாரட்ண மதச் சார்புத்தன்மையை குறிப்பாக பௌத்த மதச் சார்புத்தன்மையை ஓவியத்திற்குள் உள்வாங்கினார் (Ibid). இவரை விட ஓவியரான ஆனந்த சமரக்கோனின் (1911 – 62) ஓவியப்படைப்புக்களும் சிறீலங்கா தேச-அரச கட்டுமானத்திற்கு பெரிதும் பங்காற்றின. 20ஆம் நூற்றாண்டில் சிறீலங்காவின் ஓவியப் போக்கு குறிப்பாக இளவயது ஓவியர்களின் வருகையோடு மீள் எழுச்சி பெற்றது. இவர்களில் பெரும்பாலோனாரின் ஓவியர் என்கின்ற தனிநபரை அரசியல் நபராக அடையாளங்காண முற்பட்டனர் (Artist as a political individual). மேற்கூறப்பட்ட இளவயது ஓவியர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து ஓவிய உலகிற்கு அறிமுகமானவர்கள். அவர்களின் தனியான, கூட்டான அடக்குமுறை, வன்முறை, அனுபவங்கள் ஓவியப் படைப்பில் பிரதிபலித்தன. சமுதாய நீரோட்டத்தில் தாங்கள் அங்கீகரிக்கப்படுவதற்காக ஓவியத்தை அவர்கள் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறான படைப்புக்கள் ‘காலத்தன்மையை’ மையமாகக் கொண்டிருந்தன. இப்போதைய யதார்த்தம் என்பது எல்லா ஓவியங்களிலும் பிரதிபலித்தது (Ibid). சிறீலங்காவில் 1990களில் முதன்மை பெற்ற ஓவியர்களில் பெரும்பாலானவர்கள் தென்பகுதியில் 1970 களில், 1980 களில், 1990 களில் நடைபெற்ற கிளர்ச்சிகளினால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். தங்களுடைய கூட்டு அடையாளத்தை திடப்படுத்துவதற்கு ஓவியத்தைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். த.சனாதனன்  குறிப்பிடும் போது காலனித்துவ எதிர்கொள்ளல், ஓவியர் என்ற புதிய அடையாளத்தை அறிமுகம் செய்தது. இது சுய விழிப்புணர்வுடன் கூடிய உதிரிய அடையாளத்தையும் ஓவியர் சார் நாட்டு அடையாளத்தையும் கொண்டதாக அமைந்திருந்தது. இவ் ஓவியர்கள் தேசிய இறையாண்மையைப் பிரதிபலிப்பதில் முக்கிய பங்குதாரர்களாக விளங்கினார்கள். ஓவியர்களின் தனி உதிரியான சுய அடையாளம் தனித்த ஓவியர் சார்ந்தது மட்டுமல்ல மாறாக தேச – கட்டுமான கூட்டு அடையாளம் சார்ந்தது. 1980களில், தமிழ் தேசிய எழுச்சியோடு அழகுக்கலையில் புதிய தேடல் ஆரம்பமாகியது த.சனாதனன் குறிப்பிடுகின்றார். யதார்த்தத்தைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியங்களின் போக்கு யாழில் 80களில் எழுந்தது. பெண் ஓவியர்களின் எழுச்சியும் இந்தக் காலங்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது (Ibid). இக்காலக்கட்டத்தில் அ.மார்க்கை வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்த்தேச பிரதிநிதித்துவம் ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியது. தமிழ் அடையாளப் பண்புகளோடு படைப்புக்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் ‘ஓவியப் படைப்புக்கள் ஓவியப்படைப்புக்களுக்காக அல்லாமல் சமூக நீதிக் கோரிக்கைகளை பிரதிபலிப்பனவாகவும், போரையும், அதன் காரணிகளையும், விளைவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவனவாகவும் அமைந்தன. சிறீலங்கா அரசின் தேசியவாதக் கடும்போக்கு, சனநாயக ஓவிய வெளியை சுருக்கிக் கொண்டு வந்துள்ளது. தெற்கில் ஓரளவிற்கேனும் அவ்வெளி தக்க வைக்கப்பட்டாலும் வடக்கு – கிழக்கில் அவ்வெளி இல்லையென்றே கூறலாம். வடக்கு – கிழக்கில் சமுதாய மாற்றம் பற்றிய சொல்லாடல்கள், அரசுக்கு எதிரான சொல்லாடல்களாக திரிவுபடுத்தப்பட்டு மாற்றம் வேண்டுவோரும், மாற்றம் விரும்பிகளும் தேசத்திற்கு எதிரானவர்களாகவும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவும் பிரதிபலிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர் அல்லது இல்லாமல் செய்யப்படுகின்றனர். 2014 Brunei Gallery லண்டனில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் சிறீலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிங்கள ஓவியர்களின் படைப்புக்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டது சிறீலங்காவின் ஒத்த கலாச்சார முன்னெடுப்புச் செயற்றிட்டத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். சிறீலங்காவின் ஒத்த கலாச்சாரக் கட்டமைப்புக்கு எதிராக 2009இற்குப் பின்னர் சர்வதேச அளவில் அடக்குமுறைத் தினசரித்தன்மையை காட்சிப்படுத்தக்கூடிய ஓவியப் படைப்புக்கள் ஊக்கப்படுத்தப்பட்டதா என்பது ஐயமாகிய நிலையில், அச்சர்வதேச ஓவிய வெளியை தூர நோக்குக் கொண்டு கைப்பற்ற வேண்டிய தேவை இளம் ஓவியர்களுக்கு உண்டு.  20ஆம் திருத்தச் சட்டம், சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் சிறீலங்காவில் தாராளவாத சனநாயவாதிகளுக்கு உள்ள அச்சம் சிறீலங்கா சர்வதிகாரத்தை நோக்கி நகருவது என்பது. வடக்கு – கிழக்கில் சிங்கள அரசு முன்னெடுத்த சர்வதிகாரத்தை தெற்கிலே ஒரு போதும் கட்டவிழ்த்து விடப்போவதில்லை, இருந்த போதும், சனநாயக வெளி சுருங்கப்போகின்றது என்ற அபாயம் முன்னறிவிக்கப்பட்டாலும், இராணுவ மயமாக்கம் தடுக்கப்படப்போவதில்லை. இவற்றினால் ஏற்படும் அதிருப்தியினால் தெற்கில் அரசியல் எதிர்ப்பு சலனம் ஏற்படலாம். அவ்வாறான வெளியை வடக்கு – கிழக்கில் ‘ஈழத் தமிழ்த்தன்மையை’ வலுப்படுத்துவதற்கு ஓவியப்படைப்புக்களை நாசூக்காகவும், தந்திரோபாயமாகவும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டுச் சாணக்கியம் தங்கியுள்ளது. அடக்குமுறைச் சூழல் வீரியம் பெறத்தான் எழுச்சியும் அதிகமாய் வீரியம் பெறும். -எழில்-   https://www.ilakku.org/தெரு-ஓவியமும்-சமூக-இயக்க/
  • அடுக்கு மல்லிகை முதல் நீக்கின் குடும்பம் / வீடு நடு நீக்கின் நீளம் / காகம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.