Sign in to follow this  
goshan_che

எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்!

Recommended Posts

எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்!

Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST]

மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

எங்கு இருக்கிறது

மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

எத்தனை வருடம்

இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.

என்ன எல்லாம் கிடைத்தது

இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது.

குறிப்பு என்ன

இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அறிக்கை

இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயற்கையை வழிபாடு

அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை!

https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html 

Share this post


Link to post
Share on other sites

இயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே:cool:

Share this post


Link to post
Share on other sites

சைவம் ஒன்று இருக்கும் பொழுது பிரச்சினை இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வரும்பொழுதுதான் பிரச்சினைகள் துவங்குது.....!   😁

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, குமாரசாமி said:

இயற்கையை வழிபடும் மதம் எண்டால் சைவமதம் தானே:cool:

இல்லை. சிவனை வழிபடுவதுதான் சைவம். அபொர்ஜினிகள், செவ்விந்தியர்கள், நியூசிலாந்தின் மையோரிகள், அந்தமான் பழங்குடிகள், அமேசன் பழங்குடிகள், பபுவாநியுகினி பழங்குடிகள் இவ்வாறு பலரும் இயற்கை வழிபாட்டாளர்கள். ஆனால் சைவம் இல்லை.

இயற்கை வழிபாடு எந்த சைவ சித்தாந்தம்?

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, goshan_che said:

இல்லை. சிவனை வழிபடுவதுதான் சைவம். அபொர்ஜினிகள், செவ்விந்தியர்கள், நியூசிலாந்தின் மையோரிகள், அந்தமான் பழங்குடிகள், அமேசன் பழங்குடிகள், பபுவாநியுகினி பழங்குடிகள் இவ்வாறு பலரும் இயற்கை வழிபாட்டாளர்கள். ஆனால் சைவம் இல்லை.

இயற்கை வழிபாடு எந்த சைவ சித்தாந்தம்?

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, குமாரசாமி said:

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

இதில் எனக்கும் சந்தோசமே. நாம் இறையியல் என்ற தத்துவத்தை கொண்டிருந்தோம் என்பதில் எனக்கு ஒரு எதிர்கருத்தும் இல்லை. அது இந்து, சைவ சமயம் என்று சொல்வதில்தான் எனக்கு உடன்பாடில்லை. பெளத்தத்திற்கும் பின் அல்லது அதே காலத்தில் அல்லது சற்று முன்பாக எம்மிடம் பரவிய சமயமே சைவம்.

பெரியாரிசம் என்று ஏதுமில்லை. பகுத்தறிவு (ரேசனலிசம்) என்பது பெரியார் உருவாக்கியதல்ல. மனிதன் முதலில் சிந்திக்க தொடங்கிய போதே பகுத்தறியும் மனமும் வேலை செய்ய தொடங்கி விட்டது. பெரியார் அதை எம்மத்தியில் பிரபலப்படுத்தினார். அவ்வளவே.

எம்மை சுற்றி நடப்பவற்றிக்கு இறை எனும் ஒரு பெரும்சக்தி காரணமா என ஆராய்வதும் கூட ஒருவகையில் பகுத்தறிவே.

ஆதி குடிகள் பல இந்த ஆராய்சியில் ஈடுபட்டதை வரலாறு காட்டுகிறது. நாமும் அதற்கு விலக்கல்ல.

நாம் நிறுவனமயபட்டு, பொய்யாண புராண இதிகாச கட்டுகதைகளை, சிலைகளை நம்பாமல், இயற்கையை வழிபட்டு (வழிபாடு என்பதை விட, இயற்கையை மதித்து, போசித்து, காத்து) வளர்ந்த ஒரு மக்கட்கூட்டம் எனும் வகையில், நாம் அப்போதே பகுத்தறிவாளர்களாய் இருந்துள்ளோம் என்பதில் எனக்கும் மட்டில்லா பெருமிதம்தான்.

இருக்க (நெடுக நிண்டா கால் நோக்கும்).

நீங்கள் கேள்விகளை கண்டு மெல்ல நழுவும் ரகமில்லை. ஆனால் மலையளவு மறுக்க முடியாத ஆதாரங்களை வைத்த பின்பும், உங்கள் கொள்கையை சீர்தூக்கி பார்த்து, முன்னர் எடுத்த முடிவை மாற்றுவதில் நீங்கள் பின்னடிக்கிறீர்கள். அப்படி செய்வது அவமானம், இவர் சொல்லி நான் என்ன என் கருத்தை மாற்றுவது என நினைக்கிறீர்களோ தெரியாது.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

அல்லாவை தவிர ஒருவரும் கடவுளில்லை என முஸ்லீம்கள் கூறுகின்றார்கள்

“There is not God but Allah”, in Arabic, “La ilaha ill-Allah”,

 

 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, colomban said:

அல்லாவை தவிர ஒருவரும் கடவுளில்லை என முஸ்லீம்கள் கூறுகின்றார்கள்

“There is not God but Allah”, in Arabic, “La ilaha ill-Allah”,

 

 

அது மட்டுமா? முகமதூர் ரசூலல்லாஹ் எனவும் சொல்கிறாரகள். அதாவது அல்லாஹ்வின் கடைசி தூதர் நபி (ஸல்) மட்டுமாம்!

அளவற்ற ஆற்றல் உள்ளவர் ஏன் நேரடியாக கதைக்காமல் தூதர் வைக்கிறார்? 😂

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

எது எப்படியோ பாப்பனியமும் பெரியாரிஸ்டும் இல்லாமல் தமிழ் என்று கீழடியில் இருப்பதையிட்டு பெரிய சந்தோசம்..😎
நிற்க.....
 என்னை கனக்க கேள்வி கேட்டால் விட்டுட்டு ஓடுவது என்ரை நடைமுறையில் ஒன்று.:cool:

கீழடி தொல்பொருட்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க 19/20 நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் அதில் இல்லை என்று சந்தோசம் என்று கூறுமளவுக்கு உங்கள் நிலமை  இருக்கும் போது  கேள்விகளை கண்டு பயந்து ஓடுவது சகஜம் தானே. 

நான் நினைக்கிறேன் மதங்கள் அற்று வாழ் என்ற தமிழர் தொன்மையை தான் பெரியாரும் வலியுறுத்தி உள்ளாரோ. 

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, goshan_che said:

இதில் எனக்கும் சந்தோசமே. நாம் இறையியல் என்ற தத்துவத்தை கொண்டிருந்தோம் என்பதில் எனக்கு ஒரு எதிர்கருத்தும் இல்லை. அது இந்து, சைவ சமயம் என்று சொல்வதில்தான் எனக்கு உடன்பாடில்லை. பெளத்தத்திற்கும் பின் அல்லது அதே காலத்தில் அல்லது சற்று முன்பாக எம்மிடம் பரவிய சமயமே சைவம்.

பெரியாரிசம் என்று ஏதுமில்லை. பகுத்தறிவு (ரேசனலிசம்) என்பது பெரியார் உருவாக்கியதல்ல. மனிதன் முதலில் சிந்திக்க தொடங்கிய போதே பகுத்தறியும் மனமும் வேலை செய்ய தொடங்கி விட்டது. பெரியார் அதை எம்மத்தியில் பிரபலப்படுத்தினார். அவ்வளவே.

எம்மை சுற்றி நடப்பவற்றிக்கு இறை எனும் ஒரு பெரும்சக்தி காரணமா என ஆராய்வதும் கூட ஒருவகையில் பகுத்தறிவே.

ஆதி குடிகள் பல இந்த ஆராய்சியில் ஈடுபட்டதை வரலாறு காட்டுகிறது. நாமும் அதற்கு விலக்கல்ல.

நாம் நிறுவனமயபட்டு, பொய்யாண புராண இதிகாச கட்டுகதைகளை, சிலைகளை நம்பாமல், இயற்கையை வழிபட்டு (வழிபாடு என்பதை விட, இயற்கையை மதித்து, போசித்து, காத்து) வளர்ந்த ஒரு மக்கட்கூட்டம் எனும் வகையில், நாம் அப்போதே பகுத்தறிவாளர்களாய் இருந்துள்ளோம் என்பதில் எனக்கும் மட்டில்லா பெருமிதம்தான்.

இருக்க (நெடுக நிண்டா கால் நோக்கும்).

நீங்கள் கேள்விகளை கண்டு மெல்ல நழுவும் ரகமில்லை. ஆனால் மலையளவு மறுக்க முடியாத ஆதாரங்களை வைத்த பின்பும், உங்கள் கொள்கையை சீர்தூக்கி பார்த்து, முன்னர் எடுத்த முடிவை மாற்றுவதில் நீங்கள் பின்னடிக்கிறீர்கள். அப்படி செய்வது அவமானம், இவர் சொல்லி நான் என்ன என் கருத்தை மாற்றுவது என நினைக்கிறீர்களோ தெரியாது.

எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருவர் இப்பிடிச்சொல்லுறார். :cool:

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

கீழடி தொல்பொருட்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க 19/20 நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் அதில் இல்லை என்று சந்தோசம் என்று கூறுமளவுக்கு உங்கள் நிலமை  இருக்கும் போது  கேள்விகளை கண்டு பயந்து ஓடுவது சகஜம் தானே. 

நான் நினைக்கிறேன் மதங்கள் அற்று வாழ் என்ற தமிழர் தொன்மையை தான் பெரியாரும் வலியுறுத்தி உள்ளாரோ. 

நான் அங்கை கீழடியிலை ஐயர்மார்ரை மந்திர தந்திரங்களும் பெரியாரை போலை ஆக்களின்ரை காட்டுமிராண்டி கொள்கைகளும்  இல்லையெண்டு சொல்ல வந்தனான்.

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருவர் இப்பிடிச்சொல்லுறார். :cool:

 

பலதடவை சொன்னதுதான். மீளவும் சுருக்கமாக. இந்த பதிவாளர் திருவிளையாடல், கந்தன்கருணை போன்ற படங்களை தமிழ் வரலாற்று ஆவணங்கள் என ஊண்டி படித்திருப்பார் போலும் 😂.

1. நக்கீரனை மட்டுமில்லை - இன்னும் பல தமிழ் அறிஞர்களை, தமிழ் குறுநில மரபுகளை,  மூதாதைகளை, கண்ணகியை, ஓளவையை கபளீகரம் செய்து எம்மை சிறுக சிறுக ஆக்கிரமித்ததே இந்து சமயம் (சைவம், வைஸ்ணவம் எக்செட்றா). இதை பற்றி முன்னைய திரியில் விளக்கமாக எழுதினேன். நீங்கள் பிறகு வரவே இல்லை.

2. வள்ளுவனுக்கும் இந்து சமயதுக்கும் என்ன தொடர்பு? 

3. பக்தி இலக்கியம் இந்த ஆக்கிரமிப்பின் பின், ஆக்கிரமிப்புக்கு வலுச்சேர்க எழுந்த ஆக்கிரமிப்பாளரின் பிரச்சார இலக்கியம். மூவர் தமிழும், நாலாயிரதிவ்ய பிரபந்தமும் இவ்வகையே. இவற்றை ரசிக்கலாம். ஆனால் இவை எம்மினத்தின் வரலாற்றை சொல்லும் ஆவணங்கள் அல்ல.

4. கம்பராமாயணம் வால்மீகி ராமாயணம் என்ற வடமொழிக் கதையின், தமிழ் ரீமேக். இதை கம்பரே சொல்லித்தான் தொடங்குகிறார். ஆகவே இதிலும் எம் வரலாறு இல்லை.

5. இது உங்களிடம் நான் முன்பே கேட்ட விடை வராத கேள்விகளில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் அல்லது அகழ்வாராச்சி சான்றில் “சிவன்” என்ற பதம் முதலில் எங்கே தோன்றிற்று? உங்கள் முகப்புத்தக நண்பரிடம் கேட்டும் சொல்லலாம்.

பிகு: அவரின் நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக இப்போதே சொல்லிவிடுகிரேன், கேள்விக்கான பதில் தமிழ்த் கடவுள் படங்கள் எதிலும் இல்லை 😂

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

product-250x250.jpeg

எடுபுடி ஆட்சியில்..  அவையள் JCB  வைத்து மண்ணள்ளி போட வேண்டியது .. ஆரண்ட புண்ணியமோ தப்பி போட்டுது..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர் ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்‌ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தில் நீங்கள் எந்த பொத்தானை வேண்டுமானாலும் அழுத்துங்கள். ஆனால் உங்கள் வாக்கு பா.ஜனதாவுக்குத்தான் விழும். அதற்கேற்றவாறு நாங்கள் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டோம்' என்று கூறினார். இந்த வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜனனாயக் ஜன்டா கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளது. மேலும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் தன்வரும் கண்டனம் தெரிவித்து உள்ளார். https://www.bbc.com/tamil/india-50118613
    • படத்தின் காப்புரிமை Getty Images தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 சென்டி மீட்டர் மழையும், பெரிய நாயக்கன் பாளையத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. கோயம்புத்தூர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிரது. இதனால், இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அணையின் நீர்மட்டம் 126 அடியாக உயர்ந்தள்ளது. அணைக்கு நீர் வரத்து 3,169 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஆயிரத்து நானூறு கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.8 அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2,350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இரவுக்குள் நிரம்பிவிடுமா பவானி சாகர்? நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஐந்து நாட்களுக்கு முன்பு 96 அடியாக இருந்த பவானி சாகர் அணையின் உயரம் தற்போது 101.21ஆக உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 13,211 கன அடியாக உள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணை இரவுக்குள் நிரம்பிவிடுமென எதிர்பார்க்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தூவானம் அணை தேனியில் உள்ள தூவானம் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுவருகிறது. அம்மாவட்டத்தில் உள்ள சுருளி அருவில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்துவருகிறது. திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் கன மழையால், கோதையாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குற்றாலத்தில் உள்ள பெரிய அருவி (மெயின் ஃபால்ஸ்), ஐந்தருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images இந்நிலையில், அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், "வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வட தமிழகம் - தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியிலும் வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தவிர, அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக, பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழையோ, மிக கன மழையோ பெய்துள்ளது." என்று தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் பகுதிகளில் 21, 22 தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-50124453
    • October 21, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn   இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.   முதற்கட்டமாகச் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்து தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயர்ப் பலகை உள்ளிட்ட விமான நிலையத்திலுள்ள அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன், இரண்டாவதாகத் தமிழ் மொழிக்கும், மூன்றாவதாக ஆங்கில மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கமான விடயமாகும். இந்த நிலையில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்காது, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கியமை பிழையானது என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பெரும்பான்மை சமூகமான சிங்களர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்ட தரப்புக்கு சமூக வலைத்தள பதிவாளர்கள் சிலர் பதிலடி வழங்கியுள்ளனர். இலங்கை அரசியலமைப்பின் மொழி தொடர்பான சரத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கான நியாயத்தை தெளிவூட்டியுள்ளனர். ´´சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்” என அரசியலமைப்பின் மொழி சார் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்த விடயத்தை அரசியலமைப்பின் சிங்கள பிரதியை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசியலமைப்புக்கு அமையச் சிங்கள மொழி அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என இலங்கை அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது. அரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், இலங்கை தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் சீன மொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் சில வலைத்தள பதிவாளர்கள் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக மன்னார், காத்தான்குடி போன்ற பகுதிகளில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கி பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டன. அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சீன மற்றும் அரபு மொழிகள் நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பின்னணியிலேயே தற்போது சில தரப்பினர் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (பிபிசி தமிழ்) http://globaltamilnews.net/2019/132170/
    • தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகளில் நியாயம் உள்ளது - ஜே.வி.பி. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி  இதனைக் குறிப்பிட்டார்.  வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்  ஆகவே அதனை எமக்கு தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவு வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கை தனி அலகாக அங்கீகரிக்க முடியாது.  எனினும் தமிழர் தரப்பு முன்வைத்த  பல கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. வடக்கின் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமாது.இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது அதனை நாமும் எதிர்கின்றோம்.  மேலும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/67307
    • "யுத்த நிலைமைகள் தொடர்ந்திருந்த முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் நாட்டின் இனங்களுக்கிடையில் சந்தேகமும், அச்ச உணர்வுமே மேலோங்கி இருந்தன. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகவே போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் படிமுறையாகவே ஆயுதப் போராட்டம் கிளர்ந்திருந்தது. அந்த அரசியல் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்த ஆட்சியாளர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டதாகக் கொண்டாடினார்கள். இன்னும் கொண்டாடுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலிலும் கூட அந்தக் கொண்டாட்டத்தையே பிரசாரப் பொருளாகக் கொண்டிருக்கின்றார்கள்" சிங்களத்திடம் வேறு எதுவுமே இல்லை, முதலீடாக மக்கள் முன்னிலையில் வைப்பதற்கு 😞