Jump to content
Sign in to follow this  
தமிழ் சிறி

பதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!

Recommended Posts

%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg

பதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே இன்று காலை ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதி தற்போது பற்றம் நிறைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான தமிழ் மக்களும் குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்காரணமாக முல்லைத்தீவு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/பதற்றத்திற்கு-மத்தியில-2/

Share this post


Link to post
Share on other sites

ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல்  தகனம் 

2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 02:41

 

 

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல்  கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/ஆலய-வளாகத்தில்-தேரரின்-பூதவுடல்-தகனம்/72-239103

Share this post


Link to post
Share on other sites

நீராவியடி ஆலயம் அருகே பிக்குவின் உடல் தகனம் – காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு

mullai-bikku-body-fire-4-300x169.jpg

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோயால் மரணமான கொலம்பகே மேதாலங்கார தேரரின் சடலம் நேற்று அதிகாலை நீராவியடிக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

ஆலய வளாகப் பகுதியில் தேரரின் தகனம் செய்யவோ சிறிலங்கா கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு தடைவிதிக்கக் கோரி, ஆலய நிர்வாகம் சார்பில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பதில் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இரண்டு தரப்புகளையும் முன்னிலையாகி, தீர்வைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதுவரை பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ கூடாது என்று தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணைகளின் பின்னர், ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரேயுள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்குப் பின்புறமாக, கடற்கரைப் பகுதியில் நீதிமன்றம் அடையாளப்படுத்தும் இடத்திலேயே சடலத்தை எரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு உரிமை கோரவோ அங்கு நினைவுச் சின்னம் அமைக்கவோ முடியாது என்றும் நீதிவான் கட்டளை வழங்கினார்.

இந்த நிலையில், நீதிமன்றக் கட்டளை எழுத்து மூலம் வழங்கப்படுவதற்கு முன்னர், நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பல நூறு சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புடன், பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் இணைந்து, பிக்குவின் சடலத்தை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, ஆலயத்துக்கு அருகேயுள்ள கேணி அமைந்துள்ள இடத்தில் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது.

இதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதும், அங்கு குவிக்கப்பட்டிருந்த கலகம் அடக்கும் காவல்துறையினரின் உதவியுடன், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள், தாம் திட்டமிட்டபடி, தேரரின் உடலை தகனம் செய்தனர்.

ஆலய வளாகப் பகுதியில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

mullai-bikku-body-fire-1.jpgmullai-bikku-body-fire-2.jpgmullai-bikku-body-fire-3.jpgmullai-bikku-body-fire-5.jpgmullai-bikku-body-fire-4.jpg

http://www.puthinappalakai.net/2019/09/23/news/40176

Share this post


Link to post
Share on other sites

புத்த மதம் தான் இலங்கையில் சட்டம்.நீதீமன்றம் அல்ல.   

இதை மீண்டும் தமிழருக்கும் உலகிற்கும் உரக்க சொல்லப்பட்டுள்ளது. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

×
×
  • Create New...