Sign in to follow this  
கிருபன்

கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்

Recommended Posts

கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்

பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக்குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலகின் பல நாடுகளில் இடைநடுவில் சிக்குண்டுள்ள  பிரிட்டிஸ் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரிட்டனின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

18796166-7492231-image-a-9_1569186434957

உலகின் பல நாடுகளில் இடைநடுவில் விடப்பட்டுள்ள 150.000 பயணிகளை பிரிட்டனிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பரேசன் மட்டர்ஹோர்ன் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை உலகநாடுகளை சேர்ந்த ஆறு இலட்சம் பேர் வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கலாம் என  டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

தனது நிறுவனம் கவிழ்ந்தமை மிகவும் கவலைக்குரிய விடயம் என தோமஸ் குக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

தோமஸ் குக் நிறுவனம் மூடப்பட்டதால் சர்வதேச அளவில் 22,000 பேரும்  பிரிட்டனில்  9000 பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தோமஸ்குக் நிறுவனம் வீழ்ச்சியடைந்தமை பணியாட்களிற்கும் சுற்றுலாப்பயணிகளிற்கும் மிகவும் கவலையளிக்கின்ற விடயம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அவர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் மிகவும் சவாலான பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தோமஸ்குக்கின் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக பிரிட்டன் பல விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

thomas-cook-manchester-airport-2.jpg

தோமஸ் குக் நிறுவனத்தினால் விமானநிலைய கட்டணம் செலுத்தப்படாததை தொடர்ந்து நிறுவனத்தின் விமானங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை  பிரிட்டன் விமானநிலையங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://www.virakesari.lk/article/65344

Share this post


Link to post
Share on other sites

தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம் முடங்கியது: 178 வயது கம்பெனியின் 22,000 ஊழியர்களுக்கு நிச்சயமற்ற நிலை

 
தாமஸ் குக்படத்தின் காப்புரிமை Getty Images Image caption மான்செஸ்டர் விமான நிலையத்தில் தாமஸ் குக் பயணிகளுக்கான அறிவிப்பு துண்டறிக்கைகளுடன் விமான நிலையப் பணியாளர்.

உலகின் மிகப் பழமையான சுற்றுலா சேவை நிறுவனமான 'தாமஸ் குக்'கின் சேவையை தொடரச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட கடைசிநேர முயற்சிகள் பலனளிக்காததால் அதன் செயல்பாடு முடங்கியுள்ளது.

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கு சென்றுள்ள சுமார் ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த நிறுவனத்தின் உதவியோடு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரிட்டனை சேர்ந்த ஒன்றரை லட்சம் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் மிகப் பெரிய பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தற்போது நேர்ந்துள்ள அசாதாரணமான சூழ்நிலை 'ஆழ்ந்த வருத்தத்தை' தருவதாக தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பீட்டர் ஃபாங்க்ஹௌசர் தெரிவித்துள்ளார்.

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை Reuters

தனது நிறுவனத்தின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரபல சுற்றுலா சேவை நிறுவனத்தின் முடக்கத்தால் உலகம் முழுவதுமுள்ள அதன் 22,000 ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தாமஸ் குக் என்பவரால் தொடங்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சிறப்பு சேவைகள்

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை AFP

திட்டமிட்டபடி தாமஸ் குக் நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலா சென்றுள்ள 16,000 பயணிகள் இன்று பிரிட்டனுக்கு திரும்ப வேண்டும். அவர்களது பயணத் திட்டத்தில் இந்த சேவை முடக்கம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பிபிசியின் செய்தியாளர் டாம் புரிட்ஜ் கூறுகிறார்.

64 வழித்தடங்களில் சிக்குண்டுள்ள சுமார் 14,000 பயணிகளை மீட்பதற்கு 45 விமானங்களை இயக்குவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஈஸிஜெட், விர்ஜின் ஆகிய விமான சேவை நிறுவனங்களின் விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தாமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

தாமஸ் குக் நிறுவனம் தங்களது வீழ்ச்சியை தடுப்பதற்கு பிரிட்டன் அரசிடம் 250 மில்லியன் பவுண்டுகள் நிதியை கேட்டதாகவும், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டனின் போக்குவரத்து செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தாமஸ் குக் நிறுவனத்திற்கு இந்த நிதி தரப்பட்டிருந்தாலும், அதனால் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குபிடித்திருக்க முடியும் என்றும், அதன் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே வந்திருக்கும் என்றும் தான் அஞ்சுவதாக அவர் கூறினார்.

மிகப் பெரிய அளவிலான கடன்களும், தவறான வணிக கொள்கைகளுமே தாமஸ் குக் நிறுவனத்தின் முடக்க நிலைக்கான காரணமாக உள்ளதாக க்ராண்ட் கூறினார்.

இந்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதா?

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியதுபடத்தின் காப்புரிமை Reuters

தாமஸ் குக் நிறுவனத்தின் இந்திய, சீன, ஜெர்மானிய மற்றும் நார்டிக் துணை நிறுவனங்களின் வர்த்தகம் வழக்கம் போல தொடரும்.

மேற்குறிப்பிட்டுள்ள துணை நிறுவனங்களுக்கும் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அதன் தாய் நிறுவனத்திற்கும் சட்டரீதியாக நேரடி தொடர்பு இல்லை என்பதால் அவற்றின் வர்த்தக செயல்பாடு உடனடியக பாதிக்கப்படவில்லை.

இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள தாமஸ் குக்கின் துணை நிறுவனங்கள் தங்களது விமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தாய் நிறுவனத்தையே சார்ந்துள்ளதால், அவற்றின் வர்த்தக நடவடிக்கை பாதிப்படையாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒருவேளை அந்த முயற்சி பலனளிக்காதபட்சத்தில் கூடுதலாக மூன்றரை முதல் நான்கரை லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகக் கூடும்.

https://www.bbc.com/tamil/global-49797083

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • October 21, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn   இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.   முதற்கட்டமாகச் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்து தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயர்ப் பலகை உள்ளிட்ட விமான நிலையத்திலுள்ள அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன், இரண்டாவதாகத் தமிழ் மொழிக்கும், மூன்றாவதாக ஆங்கில மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கமான விடயமாகும். இந்த நிலையில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்காது, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கியமை பிழையானது என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பெரும்பான்மை சமூகமான சிங்களர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்ட தரப்புக்கு சமூக வலைத்தள பதிவாளர்கள் சிலர் பதிலடி வழங்கியுள்ளனர். இலங்கை அரசியலமைப்பின் மொழி தொடர்பான சரத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கான நியாயத்தை தெளிவூட்டியுள்ளனர். ´´சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்” என அரசியலமைப்பின் மொழி சார் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்த விடயத்தை அரசியலமைப்பின் சிங்கள பிரதியை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசியலமைப்புக்கு அமையச் சிங்கள மொழி அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என இலங்கை அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது. அரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், இலங்கை தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் சீன மொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் சில வலைத்தள பதிவாளர்கள் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக மன்னார், காத்தான்குடி போன்ற பகுதிகளில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கி பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டன. அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சீன மற்றும் அரபு மொழிகள் நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பின்னணியிலேயே தற்போது சில தரப்பினர் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (பிபிசி தமிழ்) http://globaltamilnews.net/2019/132170/
    • தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகளில் நியாயம் உள்ளது - ஜே.வி.பி. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி  இதனைக் குறிப்பிட்டார்.  வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்  ஆகவே அதனை எமக்கு தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவு வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கை தனி அலகாக அங்கீகரிக்க முடியாது.  எனினும் தமிழர் தரப்பு முன்வைத்த  பல கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. வடக்கின் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமாது.இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது அதனை நாமும் எதிர்கின்றோம்.  மேலும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/67307
    • "யுத்த நிலைமைகள் தொடர்ந்திருந்த முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் நாட்டின் இனங்களுக்கிடையில் சந்தேகமும், அச்ச உணர்வுமே மேலோங்கி இருந்தன. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகவே போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் படிமுறையாகவே ஆயுதப் போராட்டம் கிளர்ந்திருந்தது. அந்த அரசியல் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்த ஆட்சியாளர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டதாகக் கொண்டாடினார்கள். இன்னும் கொண்டாடுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலிலும் கூட அந்தக் கொண்டாட்டத்தையே பிரசாரப் பொருளாகக் கொண்டிருக்கின்றார்கள்" சிங்களத்திடம் வேறு எதுவுமே இல்லை, முதலீடாக மக்கள் முன்னிலையில் வைப்பதற்கு 😞 
    • "அடுத்த மாதம் இந்த தேர்தலின் முடிவு  இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கும்." அமெரிக்க - இந்திய ஆதரவுடன் கோத்தா வென்று, சீனாவுடன் கைகோத்து, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தின் போக்கை தீர்மானிப்பார். இதை ஏன் உன்னிப்பாக பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை 🤣