பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா!
-
Tell a friend
-
Topics
-
2
By உடையார்
தொடங்கப்பட்டது -
0
By உடையார்
தொடங்கப்பட்டது -
17
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
4 மீனவர் கொலை – இலங்கைத் தூதுவரை அழைத்து கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா 43 Views இலங்கைக் கடற்பரப்பை ஒட்டி தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிடம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது இந்தியா. புதுடில்லியில் இந்தியாவிற்கான இலங்கைப் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை தெரிவித்த அதேசமயம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு தமது அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகும் இலங்கை கடற்படையினரின் டோராவும் மோதியதில் மூன்று இந்திய மீன்வர்கள் மற்றும் அவர்களுடன் தொழில் செய்த இலங்கை அகதி மீனவர் ஒருவர் என நால்வர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து கடும்எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புதுடில்லிக்கான இலங்கையின் பதில் தூதுவரும் புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சின் சவுத் புளொக்குக்கு அழைக்கப்பட்டார். அவரிடமும் இச்சம்பவத்துக்குக்கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இதேநேரம் “உயிரிழப்புகள் தொடர்பில் எங்கள் வேதனயை வெளியிட்டுள்ளோம். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் கையாளவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இரு நாடுகளிற்கும் இடையில் இந்த விவகாரம் குறித்து காணப்படும் புரிந்துணர்வை பின்பற்ற வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம் பெறுவதைத் தவிர்ப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்” என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/?p=39999 மீனவர் உயிர் பறிக்கும் செயலை ஏற்க முடியாது – 4 மீனவர் மரணத்துக்கு சுமந்திரன் கண்டனம் 33 Views இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியதால் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வரினதும் உயிரிழப்புக்கும் வன்மையான கண்டனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக் கடல் எல்லைப்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு ட்ரோலர் படகில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை எல்லையிலேயே தடுக்கு மாறும், ஊடுருவும் மீனவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்து மாறும் நாம் தொடர்ந்தும் கோரும் அதேநேரம் வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர் பறிக்கும் செயலை ஏற்கமாட்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள் கின்றோம். கடந்த 18ஆம் திகதி இரவு காணாமல்போன இந்திய மீனவர்களின் படகுடன் இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியிருக்கலாம் என்ற சந்தேகமும், காணாமல்போன இந்திய மீனவர் படகில் இருந்த மீனவர்கள் நால்வருக்கும் என்ன நடந்தது என்ற அச்சமும் 18ஆம் திகதி இரவு 11 மணி முதலே நிலவிய வேளை நேற்று மாலை இருவரினது சடலங்களும், இன்று மற்றைய இருவரினது சடலங்களும் இலங்கைக் கடற் படையினரால் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் சடலங்களாக மீட்கப்பட்ட நால்வருக்கும் எமது அஞ்சலியைத் தெரிவிக்கும் அதேநேரம் இந்தச்சம்பவம் தொடர்பில் உறுதியான தகவலைக் கடற்படையினர் விரைவில் கண்டறியவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். இதேநேரம் உயிரைக் காக்க இந்தியாவுக்குத் தப்பியோடிய யாழ்ப்பாணம் இளைஞர் ஒரு வரும் தனது வாழ்வாதாரத்தைக் கருதி இந்திய உறவுகளுடன் தொழிலுக்கு வந்த வேளை பரிதாபமாக உயிரிழந்தமை எமது உறவுகளின் அவலத்தை எடுத்தியம்புகின்றது. உறவுகளை இழந்து தவிக்கும் தாய்த் தமிழகச் சொந்தங்க ளுக்கும் எமது மீனவரின் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார். https://www.ilakku.org/?p=39995
-
By உடையார் · பதியப்பட்டது
சிறீலங்காவுக்கு தடுப்பு மருந்து உதவி – இந்தியா – சீனா போட்டி 47 Views கோவிட்-19 இற்கான தடுப்பு மருந்துகளை சிறீலங்காவுக்கு வழங்குவதில் இந்தியா மற்றும் சீனாவக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என சீனாவுக்கான சிறீலங்கா தூதுவர் பாலித கோகொனா தெரிவித்துள்ளார். அதேசமயம், சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்வந்துள்ளார். முன்னனி பணியாளர்களின் பாவனைக்காக இந்த மருந்துகள் வழங்கப்படவுள்ளதாக சிறீலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசெலா குணவர்த்தனா தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=40027 -
By உடையார் · பதியப்பட்டது
மேச்சல் தரை விவகாரம் -பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதி மன்றம் உத்தரவு 17 Views மட்டக்களப்பு,மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும்,மேய்ச்சல் தரையினை பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 18ஆம் திகதி பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மேய்ச்சல் தரையில் பண்ணையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட அதிகாரிகள் மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்,பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையை பாவிப்பதை தடைசெய்யக்கூடாது என்று மன்று வலியுறுத்தியதையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதாக அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தார். தற்போது மேய்ச்சல் தரை அபகரிப்பட்டதாக தெரிவிக்கப்படும் பகுதியை தவிர அப்பகுதியில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என்பதற்கும் அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார். இந்நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என பணிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரத்தினவேல் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://www.ilakku.org/?p=40031 -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
உங்களது பதிலுக்கு நன்றிகள் Tulpen அண்ணா.. நீங்கள் கூறுவது உண்மைதான், அரசியல்வாதிகளை கட்டாயம் இணைக்க வேண்டியதில்லை, ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களையும் உள்வாங்கவேண்டிய தேவை ஏற்படும் என்றுதான் நினைக்கிறேன்.. மேலும், இப்பொழுது கூட புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் வாழ்பவர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்கள் குழுக்கள், பழைய பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள், பாடசாலை மட்டத்தில் உள்ள குழுக்கள் என தனித்தனியாக சிலவற்றை செய்கிறார்கள், ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே.. ஆனாலும் தனித்தனியாக இயங்குவதை ஒன்றினைத்து செயற்பட ஏன் முடியாதுள்ளது? என்னைப்பொறுத்தவரையில் எங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்ற, உதவாத செயற்பாடுகளும், பரந்த நோக்கற்ற மனபாங்கும் தானே காரணங்கள் என கூறலாம்.. இவற்றை இல்லாதெழிக்க இன்னமும் எத்தனை காலங்கள் போகுமோ தெரியாது.. எங்களது வரலாற்றைப்பற்றிய எல்லா விடயங்களும் பதியப்படுகிறது/பதியப்படவேண்டும், ஆனாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றக்கொள்ளாமல் இன்னமும் இருப்பதுதான் வேதனைக்குரியது.. -
By விளங்க நினைப்பவன் · Posted
இவர் சிறையில் இருந்து தோட்ட வேலை செய்தாலும் நடைபயிற்சி செய்திருக்கிறார். அது போதாது என்று யோகாசனம், உடற்பயிற்சி, கடும் உணவு கட்டுப்பாடு என்று இருந்தவரையே கொரோனா விடவில்லை. வாரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை நடத்துவிட்டு நடைபயிற்ச்சி செய்கிறேன் என்கின்ற நம்மவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் 😟
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.