Jump to content

கிட்னி ரூ.70,000, கல்லீரல் ரூ.3.5 லட்சம்... வறுமையால் உடல் உறுப்புகளை விற்கும் இரான் மக்கள்!


Recommended Posts

உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் கொழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நண்பர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்தார். ஒவ்வொரு நாட்டின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டபோது, இரான் நாட்டைப் பற்றி இப்படிச் சொன்னார். "சும்மா ரோட்டுல போறவங்க வர்றவங்களாம் நம்மகிட்ட ஏதாவது டொனேஷன் பண்ணுங்கனு பணம் கேக்குறாங்கப்பா" என்றார். "யாருனே தெரியாத ஒருவர்கிட்ட எந்தக் காரணமும் இல்லாமல் பணம் கேக்குறாங்க.

எந்த முன்னேற்றமும் இல்லாத, வறுமையில் உழலும் அப்பாவி மக்கள் நிறைந்த நாடு" என்றும் இரான் பற்றிச் சொன்னார். நம்ப முடியாத தகவலாக இருந்தது. இப்போது, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் இரானின் வறுமை நிலையை உலகுக்கு அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது. ஆம்... எண்ணெய் வளம் நிறைந்த இந்த நாட்டில், இப்போது புதிய வர்த்தகம் ஒன்று கொடிகட்டிப் பறக்கிறது. அதுதான், உடல் உறுப்புகள் விற்பனை.

இரான் பல ஆண்டுகளாக அண்டை நாடான இராக்குடன் போரிட்டு வந்தது. தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு, ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றின் காரணமாக மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். இதற்கிடையே, இரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா இரான் மீது பொருளதாரத் தடைகளை விதித்தது.

 

தற்போது, இரான் சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. சமீபத்தில், சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரானுக்குத் தொடர்புள்ளதாக, சவுதியும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளன.

உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார், அமீரகம் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் செழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீண்டகாலப் போர், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவளித்தல், பொருளாதாரத் தடை காரணமாக எண்ணெய் வளம் இருந்தாலும் முறையான வர்த்தகத்தில் ஈடுபட முடியாத காரணங்களால் இரானில் வறுமையும் கொடிகட்டிப் பறக்கிறது. வறுமையின் உச்சக்கட்டமாக, மக்கள் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
''தலைநகர் தெஹ்ரானில், கிட்னி என்ற பெயரில் தனித்தெருவே உள்ளது. பல வீடுகளின் கதவுகளில் கிட்னி விற்பனைக்குத் தயார் என விலை விவரங்கள் குறிப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.'' என்று ஐ.ஆர்.ஏ.என் என்ற இரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ''ஆண்டுக்கு 1,000 கிட்னிகள் விற்கப்படுகின்றன. 22 வயது முதல் 34 வயதுவரை உள்ள இளைஞர்கள் பணத்துக்காக விரும்பி வந்து தங்கள் உடல் பாகங்களை விற்கின்றனர். கிட்னியின் விலை ரூ.70,000. கல்லீரல் விலை ரூ.3.5 லட்சம் எனப் போட்டி போட்டுக்கொண்டு உடல் உறுப்புகளை விற்கின்றனர். இதற்கெல்லாம் மக்கள் நலனில் அக்கறைகொள்ளாத ஆட்சியாளர்களே காரணம்'' என அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
 
Kidney for sale
 
உடல் உறுப்புகளை விற்பனை செய்வதற்காக வெப்சைட்களும் ஆப்களும்கூட உள்ளன. அதில், பலரும் தங்கள் ரத்தப்பிரிவு, எலும்பு மஜ்ஜை, கல்லீரல், கிட்னி போன்றவற்றை விற்க விளம்பரம் செய்கின்றனர். உடல் உறுப்புகளை விற்பனை செய்து தர புரோக்கர்களும் செயல்படுகின்றனர். மருத்துவமனைகள், டாக்டர்களையும் புரோக்கர்களையும் அணுகுகின்றன. புரோக்கர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு இருதரப்பிடமிருந்தும் கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர். கிட்னி புரோக்கர் ஒருவர், தான் ஒரே மாதத்தில் ரூ.6 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் ஏழை இளைஞர்கள்தான் அவரின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். சிலர் கடன்களை அடைக்கவும் கிட்னிகளை விற்கின்றனர் என இரான் செய்தி நிறுவனமான ஐ.எஸ்.என்-ஏவிடம் தெரிவித்துள்ளார்.
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.