Sign in to follow this  
ampanai

கிட்னி ரூ.70,000, கல்லீரல் ரூ.3.5 லட்சம்... வறுமையால் உடல் உறுப்புகளை விற்கும் இரான் மக்கள்!

Recommended Posts

உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் கொழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நண்பர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்தார். ஒவ்வொரு நாட்டின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டபோது, இரான் நாட்டைப் பற்றி இப்படிச் சொன்னார். "சும்மா ரோட்டுல போறவங்க வர்றவங்களாம் நம்மகிட்ட ஏதாவது டொனேஷன் பண்ணுங்கனு பணம் கேக்குறாங்கப்பா" என்றார். "யாருனே தெரியாத ஒருவர்கிட்ட எந்தக் காரணமும் இல்லாமல் பணம் கேக்குறாங்க.

எந்த முன்னேற்றமும் இல்லாத, வறுமையில் உழலும் அப்பாவி மக்கள் நிறைந்த நாடு" என்றும் இரான் பற்றிச் சொன்னார். நம்ப முடியாத தகவலாக இருந்தது. இப்போது, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் இரானின் வறுமை நிலையை உலகுக்கு அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது. ஆம்... எண்ணெய் வளம் நிறைந்த இந்த நாட்டில், இப்போது புதிய வர்த்தகம் ஒன்று கொடிகட்டிப் பறக்கிறது. அதுதான், உடல் உறுப்புகள் விற்பனை.

இரான் பல ஆண்டுகளாக அண்டை நாடான இராக்குடன் போரிட்டு வந்தது. தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு, ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றின் காரணமாக மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். இதற்கிடையே, இரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா இரான் மீது பொருளதாரத் தடைகளை விதித்தது.

 

தற்போது, இரான் சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. சமீபத்தில், சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரானுக்குத் தொடர்புள்ளதாக, சவுதியும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளன.

உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார், அமீரகம் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் செழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீண்டகாலப் போர், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவளித்தல், பொருளாதாரத் தடை காரணமாக எண்ணெய் வளம் இருந்தாலும் முறையான வர்த்தகத்தில் ஈடுபட முடியாத காரணங்களால் இரானில் வறுமையும் கொடிகட்டிப் பறக்கிறது. வறுமையின் உச்சக்கட்டமாக, மக்கள் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
''தலைநகர் தெஹ்ரானில், கிட்னி என்ற பெயரில் தனித்தெருவே உள்ளது. பல வீடுகளின் கதவுகளில் கிட்னி விற்பனைக்குத் தயார் என விலை விவரங்கள் குறிப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.'' என்று ஐ.ஆர்.ஏ.என் என்ற இரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ''ஆண்டுக்கு 1,000 கிட்னிகள் விற்கப்படுகின்றன. 22 வயது முதல் 34 வயதுவரை உள்ள இளைஞர்கள் பணத்துக்காக விரும்பி வந்து தங்கள் உடல் பாகங்களை விற்கின்றனர். கிட்னியின் விலை ரூ.70,000. கல்லீரல் விலை ரூ.3.5 லட்சம் எனப் போட்டி போட்டுக்கொண்டு உடல் உறுப்புகளை விற்கின்றனர். இதற்கெல்லாம் மக்கள் நலனில் அக்கறைகொள்ளாத ஆட்சியாளர்களே காரணம்'' என அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
 
Kidney for sale
 
உடல் உறுப்புகளை விற்பனை செய்வதற்காக வெப்சைட்களும் ஆப்களும்கூட உள்ளன. அதில், பலரும் தங்கள் ரத்தப்பிரிவு, எலும்பு மஜ்ஜை, கல்லீரல், கிட்னி போன்றவற்றை விற்க விளம்பரம் செய்கின்றனர். உடல் உறுப்புகளை விற்பனை செய்து தர புரோக்கர்களும் செயல்படுகின்றனர். மருத்துவமனைகள், டாக்டர்களையும் புரோக்கர்களையும் அணுகுகின்றன. புரோக்கர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு இருதரப்பிடமிருந்தும் கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர். கிட்னி புரோக்கர் ஒருவர், தான் ஒரே மாதத்தில் ரூ.6 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் ஏழை இளைஞர்கள்தான் அவரின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். சிலர் கடன்களை அடைக்கவும் கிட்னிகளை விற்கின்றனர் என இரான் செய்தி நிறுவனமான ஐ.எஸ்.என்-ஏவிடம் தெரிவித்துள்ளார்.
 
 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • என்ன அக்கா திரும்ப திருப்ப அதையே எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? நான் கேட்பது ... நீங்கள் அளித்த பதிலில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா? 1 மாப்பிள்ளையின் தாயார்  2 மணப்பெண்   3 மணப்பெண்ணின் தாயார் ( உங்கள் கதையில் வாணி)  எனது கேள்வி இந்த திருமணத்துக்கு பல வருடம் முன்பு ... மணப்பெண் பிறக்கும் முன்பு  மணப்பெண்னின் தாயாருக்கு நடந்த (வாணிக்கு நடந்த) திருமணத்தில் வந்த பணம் எங்கு போனது?  அது வாணியின் பெற்றோருக்கு கிட்டியதா?          மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான்  ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத  தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை. இது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க மாட்டினம் என்று நண்பி குடுத்த சாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்த வாணிக்குச் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. 80 வீதம் பொருத்தம். இதை விட்டுடாதேங்கோ என்று  பொருத்தம் பார்த்த அய்யர் சொன்ன உடனேயே தொலைபேசி இலக்கம் வாங்கி பெடியனின் தாயுடன் கதைத்துவிட்டாள் வாணி. மகளின் படத்தை அனுப்பச் சொன்னதும் வற்சப்பில் அனுப்பி அது தாய்க்குப் பிடிச்சு பிறக்கு மகனுக்கும் பிடிச்சு பெடியன்ர படத்தையும் அனுப்பி மகள் பார்த்துப் பிடிச்சிருக்கு என்ற பிறகு நேர்ல தாயும் மகனும் வர பையனைப் பார்த்து  வாணிக்கு நின்மதி வந்தது. சிலபேர் படத்தில வடிவாயிருப்பினம். நேர்ல பார்க்க சப் என்று இருக்கும். என்ன இருந்தாலும் மூத்த மருமகன் எல்லே. களையாக இருந்தாலும் படிப்பு கொஞ்சம் சுமார் தான். அவசரப்படாதையென்று கணவன் கூறியதை வாணி ஏற்கவில்லை. எங்கட பிள்ளையும் பிஸ்நெஸ் மானேஜ்மென்ட் தானே படிச்சவள். பெடியன்ர பக்கம் பிரச்சனையில்லை. இதையே செய்வம் என்று ஒருவாறு கலியாணக்காட் அடிக்கிற வரையும் வந்தாச்சு. பெடியன் ரெஸ்க்கோவில மனேச்சராய் இருக்கிறான். அது காணும். வேலை வெட்டியில்லாத பெடியளுக்கே எங்கடை ஆட்கள் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக்குடுக்கினம். அதுக்கு இது எவ்வளவோமேல் என்று மனதையும் ஆறுதல்படுத்தி கணவனின் வாயையும் அடைத்து விட்டாள். உங்கை எத்தினை குமர்ப்பிள்ளைகள் முப்பது முப்பத்தைந்து கடந்தும் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள். அப்பிடிப் பார்க்கேக்குள்ள பெடியன் நல்ல பெடியனாத் தெரியிறான் என்று மனதுள் கூறிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.  
    • பணக்கரவர்க்கம் மிடில் கிளாஸ் குடிகளின் இரத்தத்தை குழல் வைத்து  உறிஞ்சு குடித்த்துக்கொண்டே இருக்கும்  இவர்களின் கட்டுப்பாட்டில்  வங்கி  அரசியல்வாதிகள் மீடியா இருக்கும். மீடியா மூலம் குழப்பவாதங்களை பரப்பி கொண்டே இருப்பார்கள்  அரசியல்வாதிகள் மூலம் தமக்கு சாதகமானவற்றை அமுலாக்குவார்கள்  வங்கிகள் மூலம் நாட்டு வருமானத்தை வடித்துக்கொண்டு இருப்பார்கள்  இன்றைய நிலையில் நிழலி வர்கள் பிரதமர் ஆனாலும் கீழே இருக்கும் படத்தில்  பெரிதக மாற்றம் செய்ய முடியாது. மேலைநாடுகளில் வெள்ளை இனத்தவரில்  (டிஸ்அபிலிட்டி) வலதுகுறைந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது  இவர்களை பராமரிக்க எல்லா அரசுகளுக்கும் பாரிய செலவு ஆகிறது அதுபோல வயதானவர்களின்  எண்ணிக்கையும் கூடிக்கொண்டு இருக்கிறது ........ பணக்கார வர்க்கம் இவர்களை வைத்து எப்படி  வியாபாரம் செய்வது என்று யோசித்து பல வியாபாரங்களை இவர்கள் மூலம் செய்கிறார்கள்  அதன்மூலம் அரசு பணத்தின் ஒரு பகுதியை தமதாக்கி கொள்கிறார்கள். பின்பு பத்திரிகைகள் மூலம் வரிகள் கூடுவதுக்கு சோம்பேறிகள் காரணம் என்று மிடில் கிளாஸை  கோபம் ஊட்டுவார்கள் கனடா பணக்காரர்களின் வங்கி கணக்கு மட்டும் எப்போதும் கூடிக்கொண்டே  இருக்கும் ............ அமெரிக்கா கனடாவை பொறுத்தவரை மிடில் கிளாஸ்தான் அரசு சக்கரத்தை சுழற்றுவது. கட்சி மாறும்  ஆட்சி மாறும்  காட்சி மாறும்  உழைத்து பில் கட்டிக்கொண்டு இருப்பது என்பது ஒருபோதும் மாறாது.     
    • இந்தப் பேச்செல்லாம் தேர்தல் முடியுமட்டும் அதன் பின்பு அடுத்த தேர்தல் வர நினைவு வரலாம். சொன்னதை வரைவாக்கிப்போடும் நடைமுறைப்படுத்த எங்களை தெரியுங்கோ என்று கேப்பினம் பாருங்கோ.
    • நீங்கள் மலேசியாவின் அரசியல் சாசனத்தை அறியவில்லை இல்லையா? மலேசிய பூமி புத்திரர்களை பற்றி அவர்கள் அரசியல் சாசனத்தில் படித்து பாருங்கள்.