ampanai

சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் - சுமந்திரன்

Recommended Posts

IMAGE-MIX.png
 
(தி.சோபிதன்)

நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் முக்கிய திருப்பு முனை வருகின்ற போது அதில் பாதிப்புக்கள் கூட வரலாம். அல்லது பல புதிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். ஆகையினாலே மிக அவதானமாக முதிர்ச்சியோடு இந்த சூழ்நிலைகளை கையாள வேண்டும்.

அப்படியான மிக முதிர்ச்சியான அனுபவமிக்க தலைமை எங்களிடத்தில் உள்ளது. நாம் அதனை நிதானமாக பொறுப்புடன் முன்னெடுக்கின்றோம். நாம் இராஜ தந்திரமாக செயற்பட வேண்டும்.

எனவே மக்களும் பொறுமையாக எம்முடன் பயணிக்க வேண்டும். குறிப்பாக கல்வி சமூகம் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/65394

Share this post

Link to post
Share on other sites

அதுக்கு.... நீங்கள் சரிப்பட்டு, வரமாட்டீர்கள்.
வேறை வேலை இருந்தால்.... போய் பாருங்கோ.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, ampanai said:

பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம்

இன்னுமொரு ஐம்பது வருசம் போதுமா?

Share this post

Link to post
Share on other sites

2009 இல் இருந்து நீங்க எடுத்த இராச தந்திர முடிவுகள் எல்லாமே போதும். தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்தது போல்.. எந்தத் தீர்வையும் சிங்களத்திடம் இருந்து பெற்றுத் தர வக்கில்லை என்பது தெளிவாகி உள்ளதால்.. நீங்கள் எடுக்க வேண்டிய ஒரே முடிவு..

அரசியலை விட்டு முற்றாக விலகிக் கொள்வதே. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ampanai said:

நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார்.

இந்தியா எப்ப தான் உங்களுக்கு சொல்லும்.

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

சுமந்திரனின் அரசியலை நான் ஆதரிக்கவில்லை. தனது நண்பரான ரணிலை பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்க அவருக்கு இருக்கும் அக்கறையென்பது, தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற முயற்சிப்பதைக் காட்டிலும் மிக அதிகமானது என்று எண்ணுகிறேன். அத்துடன், இந்தியாவின் செயற்திட்டங்களுக்கு அமைவாக இவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்றுவரை செயற்படுவது தமிழர் நலன்களுக்காகவல்லாமல் இந்தியாவின் நலன்களுக்காகவே என்றும் நான் திடமாக நம்புகிறேன்.

இவை இப்படியிருப்பினும், இப்போது தமிழருக்கும், சுமந்திரனின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் முன்னால் உள்ள தெரிவுகள் என்ன? 

ஒருபுறம்      கோத்தாபாயவெனும் சிங்கள பெளத்தவெறிபிடித்த ஒரு போர்க்குற்றவாளி. இன்னொருபுறம் ரணில் எனும் சிங்கள பெளத்த மேற்தட்டுவர்க்க இனவாதி. மூன்றாவதாக, தமிழர்க்கு உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்பதற்காகவே தனது இரண்டாவது ஆயுதப் புரட்சியைத் தொடங்கி தெற்கில் இரத்தக்களரியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்.

இவர்களுள் யாரைக் தமிழர் ஆதரிக்கலாம்?

மிகச் சிக்கலான தெரிவு. ஏனென்றால், இவர்களுள் எவருமே எமக்கு ஒரு தீர்வினைத் தரப்போவதில்லை. ஒருவர் வந்தால் நாடு இன்னொருமுறை கொலைக்கலாச்சாரத்திற்குள்ளும் ராணுவ அடக்குமுறைக்குள்ளும் செல்லும். மற்றையவர் வந்தால் இப்போதிருக்கும் வெளிப்பூச்சான அமைதியும் - உள்ளுக்குள் தொடர்ச்சியான திட்டமிட்ட பெளத்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பும் தொடரும். மூன்றாதவர் பற்றி எமக்கு எதுவும் தெரியாது, ஆனால் தமிழர்க்கெதிரான அவரது கட்சியின் அணுகுமுறை மிகத் தெளிவானது.

இவர்களில் யாரை சுமந்திரனோ அல்லது தமிழர்கள் ஆதரிக்கவேண்டுமென்றால்........இப்போதைக்கு, ரணிலுடன் நிற்பதே நடக்கப்போகும் அடக்குமுறைகளை அனுமானிப்பதன் மூலம் உள்ள ஒரே தெரிவாகிறது.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரஞ்சித் said:

சுமந்திய விடுங்கோ,

உங்களுக்கு பெயர், கடவுச்சொல் திரும்ப கிடைச்சிட்டு போல? சந்தோசம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

சுமந்திய விடுங்கோ,

உங்களுக்கு பெயர், கடவுச்சொல் திரும்ப கிடைச்சிட்டு போல? சந்தோசம்.

ஓமோம், கிடைச்சுடுத்து. இணையவன் உபயத்தில்!!!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

அடுத்து ரணில் ஆட்சி அமைத்தால் ,அமைச்சரவையில் பங்கு கிடைக்கும் ,சுமந்திரன் மற்றும் ஒருசிலர் அமைச்சராகவும் கூடும் அதையும் ராஜதந்திரம் என்பார்கள் ..

Share this post

Link to post
Share on other sites
On 9/24/2019 at 7:11 AM, ampanai said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார்.

வாங்கின காசும் சாப்பிட்ட எலும்புத்துண்டுகளும் நல்லா வேலை செய்யுது!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சரியான முடிவு என்றால் சம்சும் மாவை கோஷ்டி அரசியலை விட்டு ஒதுங்குவதுதான்

Share this post

Link to post
Share on other sites
On 9/24/2019 at 3:44 PM, ஈழப்பிரியன் said:

இந்தியா எப்ப தான் உங்களுக்கு சொல்லும்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே சொல்லியிருக்கும்.

கூட்டமைப்பினர் படம் காட்டிவிட்டு இறுதியில் மக்களுக்கு கூறுவார்கள்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே சொல்லியிருக்கும்.

கூட்டமைப்பினர் படம் காட்டிவிட்டு இறுதியில் மக்களுக்கு கூறுவார்கள்.

சஜித் ஆதரவு என்பது “எப்பவோ முடிந்த காரியம்”. இப்போ நடப்பது “வெறும் செப்படி வித்தை”. 😂

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.