Jump to content

சீதனம் வேண்டாம் - சிறுகதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

thaamboolam-muthal-thirumanam-varai_755.

 

மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான்  ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத  தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை.

இது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க மாட்டினம் என்று நண்பி குடுத்த சாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்த வாணிக்குச் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. 80 வீதம் பொருத்தம். இதை விட்டுடாதேங்கோ என்று  பொருத்தம் பார்த்த அய்யர் சொன்ன உடனேயே தொலைபேசி இலக்கம் வாங்கி பெடியனின் தாயுடன் கதைத்துவிட்டாள் வாணி. மகளின் படத்தை அனுப்பச் சொன்னதும் வற்சப்பில் அனுப்பி அது தாய்க்குப் பிடிச்சு பிறக்கு மகனுக்கும் பிடிச்சு பெடியன்ர படத்தையும் அனுப்பி மகள் பார்த்துப் பிடிச்சிருக்கு என்ற பிறகு நேர்ல தாயும் மகனும் வர பையனைப் பார்த்து  வாணிக்கு நின்மதி வந்தது. சிலபேர் படத்தில வடிவாயிருப்பினம். நேர்ல பார்க்க சப் என்று இருக்கும்.

என்ன இருந்தாலும் மூத்த மருமகன் எல்லே. களையாக இருந்தாலும் படிப்பு கொஞ்சம் சுமார் தான். அவசரப்படாதையென்று கணவன் கூறியதை வாணி ஏற்கவில்லை. எங்கட பிள்ளையும் பிஸ்நெஸ் மானேஜ்மென்ட் தானே படிச்சவள். பெடியன்ர பக்கம் பிரச்சனையில்லை. இதையே செய்வம் என்று ஒருவாறு கலியாணக்காட் அடிக்கிற வரையும் வந்தாச்சு. பெடியன் ரெஸ்க்கோவில மனேச்சராய் இருக்கிறான். அது காணும். வேலை வெட்டியில்லாத பெடியளுக்கே எங்கடை ஆட்கள் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக்குடுக்கினம். அதுக்கு இது எவ்வளவோமேல் என்று மனதையும் ஆறுதல்படுத்தி கணவனின் வாயையும் அடைத்து விட்டாள். உங்கை எத்தினை குமர்ப்பிள்ளைகள் முப்பது முப்பத்தைந்து கடந்தும் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள். அப்பிடிப் பார்க்கேக்குள்ள பெடியன் நல்ல பெடியனாத் தெரியிறான் என்று மனதுள் கூறிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.  

அவள் காலையில் பத்து மணிமுதல் பள்ளி ஒன்றில் டின்னர் லேடியாக வேலை செய்வது. பின்னர் மாலை மூன்றுமணிக்கு இந்த வேலை முடிய  ஐந்து மணியிலிருந்து பதினொருமணிவரை சான்விச் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை. கணவனும் அங்கேயே வேலை செய்வதால் இரவுவேலை முடிய கணவனுடனேயே வீட்டுக்கு வருவதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. எதுக்கு இரவிரவா வேலை செய்யிறாய். பின்னேரம் பிள்ளையளுடன் இரன் என்று கணவன் கூறியதையும் கேட்கவில்லை. வீட்டு மோற்கேஜ் இன்னும் ஒண்டரைலட்சம் இருக்கு. அதையும் கட்டி முடிச்சிட்டா நின்மதியாக இருக்கலாம் என்பதும் பிள்ளைகளின் திருமணத்துக்கு எப்பிடியும் ஒரு ஐம்பதாவது வேணும் என்னும் அவளின் கணக்கும் எவ்வளவு சொல்லியும் கணவனுக்குப் புரியாதது கவலைதான்.

ஒருவாறு இரண்டு நகைச் சீட்டுப் போட்டுப் போட்டு ஏற்கனவே கொஞ்ச  நகைகள் வாங்கி வைத்திருக்கிறாள். மக்களின் சம்பளமும் இவள் கட்டுப்பாட்டில் தான். அந்தவரை பிள்ளைகளை தான் நன்றாக வளர்த்திருப்பதாக இறுமாப்பு இவளுக்கு. கலியாணக் காட் தெரிவு செய்யவே நாலு நாட்கள். சிம்பிளாய் இருக்கட்டும் என்று பார்த்தால் மகள் தெரிவு செய்த ஒரு காட் இரண்டு பவுன்ஸ் முடியுது. ஒருதடவை  சொல்லிப் பார்த்தபின் விட்டுவிட்டாள். சரி ஒருதடவை தானே திருமணம். தங்கள் விருப்பத்துக்குச் செய்யட்டுமன் என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள். சின்ன ஒரு மண்டபத்தில் செய்யலாம். ஒரு இரண்டாயிரத்துள் முடிக்கலாமென்று பார்த்தால் மாப்பிள்ளையின் தாய்  தங்களுக்கு ஒரு ஐநூறு பேராவது வருவினம். கொஞ்சம் நல்ல கோலா எடுங்கோ எண்டதில் பெடியனும் பெட்டையும் அலைந்து திரிந்து எடுத்த கோல் ஏழாயிரம். என்ன இவ்வளவு அதிகமா இருக்கே என்றதற்கு இரண்டு நாட்களுக்கு இது மலிவு அம்மா என்று மகள் சொன்னதைக் கேட்டு நெஞ்சே அடைத்துவிட்டது வாணிக்கு. எதுக்கம்மா இரண்டு நாட்கள் என்றதற்கு அதுதான் இப்ப பாசன். முதல் கிழமை பதிவுத் திருமணம் முடிய எல்லாருக்கும் பார்ட்டி எங்கட விருப்பப்படி.. அடுத்த கிழமை அய்யரோட எங்கட கல்சர்ப்படி உங்கடை ஆசைக்கு வெட்டிங் அம்மா என்று மகள் கொஞ்சலாகக் கூறியதில் எதுவும் சொல்லமுடியாமல் தலையை மட்டும் ஆட்டவேண்டியதாகிவிட்டிது.  எங்களுக்கும் ஒரு ஐநூறு சனமாவது வரும்தான். பதினைந்து வருடங்களாக இங்க குடுத்ததுகளை  வாங்கத்தானே வேணும் என்பதாய் மனதை சமாதானம் செய்து கொண்டாள். ஏன் அவள் உந்த எடுப்பு எடுக்கிறாள் என்று கணவர் சினக்க அந்தாளையும் ஒருவாறு சமாதானம் செய்தாயிற்று.

இன்று மூன்றாவது நாளாக சேலை எடுப்பதற்காய் அலைந்தாயிற்று. ஆயிரம் பவுண்ட்ஸ் சேலைவரை பார்த்தும் மகளுக்குப் பிடிக்கவில்லை என்பது சினத்தைத்தான் வரவழைத்தது என்றாலும் எதுவும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருக்க மட்டும் தான் முடிந்தது. மண்டப அலங்காரம், வீடியோ, உணவு, கேக் அது இது என்று எல்லாம் பாத்துப்பார்த்தது ஓடர் செய்து முடிய கிட்டத்தட்ட முப்பதினாயிரம் பவுன்சுக்குக் கிட்ட முடிய வாணிக்கு மலைப்பாகத்தான் இருந்தது.

 கலியாணம் பேசி முடிஞ்சு இரண்டு பக்கத்தாரும் இருந்து கதைத்தபோது  சீதனம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். கலியானச் செலவையும் நாங்கள் அரைவாசி பொறுக்கிறம் என்று வாயால் சொன்னதோடு சரி. அதுக்குப் பிறகு மறந்துபோய்த் தன்னும் எதுவுமே அவர்கள் கதைக்கவில்லை. செலவுக்கணக்கை அவைக்குக் காட்டுவமோ அப்பா என்று மனிசனிட்டைக் கேட்டதுக்கு சும்மா பேசாமல்விடு என்றதில் இவளும் அதுபற்றி மகளிடம் கூடக்  கதைக்கவில்லை. என்ன இருந்தாலும் வீட்டில் முதல் திருமணம் என்பதும் ஐநூறு பேர்ல நானூற்றைம்பது பேராவது கட்டாயம் வருவினம். எப்பிடியும் ஒரு இருபதாயிரம் சேரும். ஒரு ஐயாயிரத்தை எடுத்துக்கொண்டு மகளின்ர பேர்ல போட்டுவிடுவம். பிறகு அவை வீடு வாங்க உதவும் என்று மனதில் எண்ணியபடியே கலியாண வேலையில் மூழ்கிப் போனாள்.

அப்பப்பா ஒரு கலியாணத்தை நடத்தி முடிக்க எவ்வளவைச் செய்யவேண்டி இருக்கு. முந்தியெல்லாம் ஒரு அய்யரே வந்து எல்லாவற்றையும் செய்திட்டுப் போவார். இப்ப ஐயர்மாருக்கு ஒரு சிண் வேறை. இரண்டு பேருக்கும் தட்சணை தனித்தனி. அதுக்காக அய்யர் இல்லாமல் கலியாணம் செய்ய ஏலுமே என்றும் மனத்தைத் தேற்றி மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி முடியத்தான் வாணிக்கு பெரிய நின்மதி ஏற்பட்டது.

கிட்டத்தட்ட சொன்ன எல்லாருமே வந்திருந்து மணமக்களை வாழ்த்தியது அதைவிட பெரிய நின்மதி. சாப்பிட்டு முடியவே சிலர் வேலைக்குப் போகவேணும் என்று இவளிடம் என்வலப்பைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டினம். நிண்டு படம் எடுத்துவிட்டுப் போங்கோ என்று இவள் சொன்னாலும் இன்னும் வீடியோக்காரர் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியா வைத்துப் படம் எடுத்து முடியவில்லை. சனங்கள் வேற சாப்பிட்டு முடிய தாமே வரிசையில் நிற்கவாரம்பிக்க இவள் ஆக்கள் வெயிற் பண்ணீனம். கேக்கை வெட்டிப்போட்டு பிறகு ஆட்கள்போனப்பிறகு இவையை வைத்து எடுங்கோவன் என்றதையும் வீடடியோக்காரர் கேட்கவில்லை.

ஒருவாறு எல்லாரும் மணமக்களுடன் நின்று படம் எடுத்து முடிய வாணியின் குடும்பம் சகோதரர்கள் என்று ஒரு ஐந்து மணிக்கு திருமண வீடு நிறைவுக்குவர மணவறையில் பக்கத்தில் பரிசுகள் பணம் வைத்தபடி கொண்டுவரும் காட்டுகள் என்பவற்றைப் போடுவதற்கு அழகிய வேலைப்பாட்டுடன் வைக்கப்பட்டிருந்த மொய்ப் பெட்டிக்குக் காவலாக வாணி தனது மகனைக் காவலுக்கு வைத்திருந்தாள். ஆனால் இப்போது பார்க்க மாப்பிள்ளையின் தாயார் அப்பெட்டிக்குப் பக்கத்தில் போய் இவள் மகனிடம் எதோ சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் தான் இருந்த கதிரையில் வைக்க சுள் என்று கோபம் தலைக்கு எற இவள் செய்வதறியாது திகைத்து நிக்கிறாள்.

கணவனைத் தேடிப்பிடித்து நீங்கள் போலிக் கேளுங்கோ அப்பா என்று சொல்ல எனக்கு ஏலாது. கொஞ்சம் அமைதியாய் இரு. அவையிண்ட ஆட்களும் தானே காசு குடுத்திருப்பினம். அதை எடுத்துப்போட்டு எங்கடையைக் குடுத்துவிடுவினம். எல்லாத்துக்கும் முன்னதுறதுதான் உன்ர வேலை என்று சொல்ல அவளுக்கும் அது நியாயமாகப் பட தன்னை எண்ணி வெட்கம் ஏற்பட்டது அவளுக்கு.  

திருமணம் முடிந்து ஒருவாரம் மாப்பிளை வீட்டிலேயே மக்களும் தங்கிவிட இவள் மகளைப் பார்க்கும் ஆவலில் போன் செய்து என்னம்மா இண்டைக்காவது நீங்கள் வாறியளோ என்று கேட்க இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று மகள் கூற எத்தனை நாட்கள் வளர்த்து ஆளாக்கியும் கணவன் வந்ததும் எப்படி பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் என்று தவிப்போடு கணவனிடம் சொல்ல, அவள் மட்டும் இல்லை நீயும் அப்பிடித்தானே என்று கணவனின் கூற்றில் உண்மை இருக்க வேறு வழியின்றி இரண்டு  நாட்கள் மக்களின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

காலையில் மலர்ந்த முகத்துடன் மகளைக் கண்டதும் எல்லா ஆதங்கங்களும் ஓடி ஒழிய கட்டி அணைத்தவளிடம் அம்மா இதை முதலில் பிடியுங்கோ. மாமி இதை உங்களிடம் குடுக்கச் சொல்லித் தந்தவ. பிறகு நான் மறந்திடுவன் என்று கூறி மகள் குடுத்த என்வலப்பை திறந்து பார்த்தவள், அதற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர்  என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகதை. யதார்தமானதும் கூட.

ஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.

இப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.

16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, suvy said:

நல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......!  😁

அண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.

36 minutes ago, goshan_che said:

நல்லகதை. யதார்தமானதும் கூட.

ஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.

இப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.

16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.

மன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா? ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.

மன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா? ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது. 

சுமே அன்ரி,

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை ... தற்காலத்தில் இப்படியும்  நடக்கலாம் . உண்மையில்  திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். ? மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள். 

கடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சுமே அன்ரி,

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச் 😂


நீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

கதை அருமை ... தற்காலத்தில் இப்படியும்  நடக்கலாம் . உண்மையில்  திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். ? மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.
 

 இரு பகுதியினரும் கலந்து பேசி மணமக்களுக்குக் கொடுக்கலாம் அல்லது பெண்ணின் பக்கம் வந்ததை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தமதை தாமே வைத்திருக்கலாம்.மணமகனின் தாயின் செயல்தான் பண்பற்றது. திருமணச் செலவில் பாதியையும் கொடுக்காது சேர்ந்த பணம் எல்லாவற்றையும் தாமே எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.?

11 hours ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள். 

கடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன். 😁

 நேற்று யாழ்கள நட்பு ஒருவர் தொலைபேசியில் கதைக்கும்போது  நான் எழுதியது பற்றி விளங்காமல் கதை த்தார். நான் நினைத்தேன் சிலவேளை நான் எழுதியது மற்றவர்களுக்கு விளங்கவில்லையா என்று. 😀வேறு ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:


நீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.😀

இதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.😂

அதுக்கென்ன 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்கள் உறவினர்கள் யாரோ வீட்டில் நடந்ததை இங்கே எடுத்து விட்டிருக்கிறியள்.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது 
எமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும் 
அதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள் 
இந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால் 
அந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை. 
சீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து 
முன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.

இனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான் 
பணத்தின்  உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள் 
பேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால்  மகிழ்ச்சி 
ஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர் 
யுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன். 
சொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் .....  அதல்லாம் மனிதர்களுக்குத்தானே 
இருக்கும் என்றுவிட்டு போய்விடுவதுண்டு. 
எல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது 
இயற்கை புரிந்து தனக்கும்  உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும். 

வாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே உங்கள் உறவினர்கள் யாரோ வீட்டில் நடந்ததை இங்கே எடுத்து விட்டிருக்கிறியள்.
பாராட்டுக்கள்.

ஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்

 

7 hours ago, Maruthankerny said:

இது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது 
எமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும் 
அதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள் 
இந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால் 
அந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை. 
சீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து 
முன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.

இனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான் 
பணத்தின்  உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள் 
பேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால்  மகிழ்ச்சி 
ஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர் 
யுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன். 
சொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் .....  அதல்லாம் மனிதர்களுக்குத்தானே 
இருக்கும் என்றுவிட்டு போய்விடுவதுண்டு. 
எல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது 
இயற்கை புரிந்து தனக்கும்  உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும். 

வாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்? 

 மாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல...கதை...சுமே..!

நான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..!

இந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்!

அதைப் போலவே உங்கள் கதையும்..!

சிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..!

இந்தக் காலத்தில்....எல்லாவற்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது! முடியுமால்...எழுத்தில் வாங்குவது...இன்னும் நல்லது!

தொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....!

இங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று  (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக  விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......!  

சகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......!     😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகதை  சுமே

கதையல்ல  நிஐம் தான்

 

புத்தி  சொல்வதும்

தீர்ப்பு  சொல்வதும் சுலபம்

அந்தந்த இடத்திலிருக்கும் போது

எல்லோரும்  வேண்டும்

அதிலும்  பிள்ளை வாழப்போகுமிடம்  என்பதால் 

கண்கணைக்கூட  கட்டுப்படுத்த  வேண்டி  வரும்  என்பதை  அழகாக  சொல்லியுள்ளீர்கள்

இதற்கெல்லாம்  அடிப்படைக்காரணம்

பற்றாக்குறையும் பகட்டு  விழாக்களும் தான்

விரலுக்கேற்ற  வீக்கம்  என்பதை  மனதிலிருத்தி  வாழ்ந்தால்  எல்லாம் சுபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

நல்ல...கதை...சுமே..!

நான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..!

இந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்!

அதைப் போலவே உங்கள் கதையும்..!

சிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..!

இந்தக் காலத்தில்....எல்லாவற்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது! முடியுமால்...எழுத்தில் வாங்குவது...இன்னும் நல்லது!

தொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்! 

 

 

நன்றி புங்கை. இது கொஞ்சம் சென்சிரிவான விடயம். பெண்ணின் வீட்டார் திருமணம் முடியும் மட்டும் வயித்தில நெருப்பைக்கட்டியது போல் தான் இருப்பார்கள். எதிர்த்து ஏதும் கதைதத்தால் கலியாணம் குழம்பிவிடுமோ என்ற பீதி இருந்துகொண்டே தான் இருக்கும்.

2 hours ago, suvy said:

உங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....!

இங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று  (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக  விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......!  

சகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......!     😁 

அது மட்டும் இல்லை அண்ணா. திருமணம் முடிய மூன்றாம் நாள் ஸ்பெயினில் ரிசெப்சன். என் மகளின் நட்பில் ஒன்று கடந்த வாரம் நூறு பேரை அதற்கு அழைத்திருந்தார்கள். உந்த விசர்க் கூத்துக்கு எல்லாம் ஏன்  போகிறீர்கள் என்று நல்ல எச்சுக் கொடுத்தேன்.   

50 minutes ago, விசுகு said:

நல்லகதை  சுமே

கதையல்ல  நிஐம் தான்

 

புத்தி  சொல்வதும்

தீர்ப்பு  சொல்வதும் சுலபம்

அந்தந்த இடத்திலிருக்கும் போது

எல்லோரும்  வேண்டும்

அதிலும்  பிள்ளை வாழப்போகுமிடம்  என்பதால் 

கண்கணைக்கூட  கட்டுப்படுத்த  வேண்டி  வரும்  என்பதை  அழகாக  சொல்லியுள்ளீர்கள்

இதற்கெல்லாம்  அடிப்படைக்காரணம்

பற்றாக்குறையும் பகட்டு  விழாக்களும் தான்

விரலுக்கேற்ற  வீக்கம்  என்பதை  மனதிலிருத்தி  வாழ்ந்தால்  எல்லாம் சுபம்

உண்மைதான் அண்ணா. ஒரு திருமணம் பேசிச் செய்து முடிப்பது மிக்க கடினமான வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

சரி அப்ப கூச்சப்படாமல் பச்சையை திருப்ப எடுத்துக்கொள்ளுங்கள். நான் கோபிக்க மாட்டேன்.😎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 9/29/2019 at 9:29 PM, குமாரசாமி said:

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

வ‌ண‌க்க‌ம் ஜ‌யா :,, இங்கை ஒருவ‌ர் ? உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் ? கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் ? உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் """ க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் ? யோசிச்சு பாருங்கோ அது யாரா இருக்கும் என்று ?

Link to comment
Share on other sites

On 9/27/2019 at 4:34 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்

 

 மாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.

தற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர்  என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள். 

 

இப்ப தான் விளங்கிச்சு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாட்களில் எம்மவர் மத்தியில் இப்படி எத்தனையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான் அவதானித்தவரை பெண்ணும் மாப்பிள்ளையும் (காதலித்து திருமணம் செய்பவர்கள்) தாமே திட்டமிட்டு தமது பொருளாதார தேவைக்கேற்ப அழைக்கும் எண்ணிக்கையையும் செலவுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒழுங் கமைப்பதை காணக்கூடியதாய் உள்ளது. சுமே மிக அழகாக கதை சொல்லியுள்ளார். அதிகம் எழுத நேரமின்மையால் எழுத முடியவில்லை. திருமணத்தில் சேரும்பணம் புதுமணத் தம்பதிகளுக்கு  சேருவது சிறந்தது என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.